பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 05, 2008

இந்த மாத சிறந்த கட்டுரை - அக்டோபர் 2008


இது புதிய பகுதி. பிடித்திருந்தால் அடுத்த மாதம் தொடர்கிறேன்.

மிருதங்க கலைஞர் உமையாள்புரம் K.சிவராமன் முன்பு ஆறாம்திணைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார்.

மிருதங்க வாசிப்பாளராக மட்டுமல்லாமல், இந்தத் துறையில் புதிதாக ஏதேனும் ஆய்வுகள் செய்திருக்கிறீர்களா?

பதில்: ஆமாம் நிறையப் பண்ணியிருக்கிறேன். முந்தியெல்லாம் மிருதங்கத்தைச் சாதாரணமான துணி உறையில் வைத்துக் கட்டிக் கொண்டு போவார்கள். நான்தான் ரெக்ஸினில் வாட்டர் புரூஃப் உறைகளைப் பண்ணிக் கொடுத்தேன். அதைப் பண்ணிக் கொடுத்து 29 வருடங்கள் ஆகிவிட்டது. பைபர் கிளாஸில் மிருதங்கம் பண்ணினேன். சாதாரணமாக மிருதங்கம் பலா மரத்தில்தான் மிருதங்கம் பண்ணுவார்கள். சந்தன மரம் போன்ற பலவகை மரங்களில் பண்ண முடியும் என்றாலும், எல்லா காலங்களிலும் எளிதாகக் கிடைக்கக் கூடிய பலா மரத்தில்தான் பண்ணுவார்கள். இப்போதெல்லாம் நல்ல பலா மரங்கள் கிடைப்பதில்லை என்பதால் நான் பைபர் கிளாசில் அறிமுகப்படுத்தினேன். அப்புறம் மிருதங்கத்தில் மூட்டு அடிக்கும் போது பிழைகள் சுருதி சம்பந்தமாக ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்காக மெக்கானிக்கல் ஜிக் ஒன்றைப் பண்ணினேன். மிருதங்கத்துக்குப் பைபர்கிளாஸ் பாக்ஸ் பண்ணினேன்...


என்று கூறியுள்ளார்.

இந்த பதிலில் உமையாள்புரம் K.சிவராமன் தான் அதை செய்தாரா அல்லது ஏதோ ஒரு முகம் தெரியாத ஆசாரி அதை செய்தாரா ?
(ஷாஜகான் தாஜ் மஹாலை கட்டினாரா அல்லது கொத்தனாரா ? ராமர் பாலத்தை ராமர் கட்டினாரா? அல்லது குரங்குகள் காட்டியதா என்பது போல தான் இந்த கேள்விகளும்.)


இசைக்கருவிகளை செய்பவர்கள் (அல்லது அதை பழுது பார்ப்பவர்களை) பற்றி அதிகம் பத்திரிக்கைகளில் வருவதில்லை. கல்கியில் கும்பகோணம் ஸ்பெஷல், அமுதசுரபி சிறப்பு மலர், தீபாவளி மலர்களில் எப்பவாவது இது போல கட்டுரைகள் வரும்.

விதிவிலக்காக 'சேதுபதி அருணாசலம்' அவர்கள் அக்டோபர் மாதம் வார்த்தை இதழில் 'இசையைச் செதுக்கும் சிற்பிகள்' என்ற கட்டுரையை எழுதியுள்ளார். படித்தவற்றையும் தன் அனுபவத்தையும் கலந்து எழுதிய அருமையான கட்டுரை. கிடைத்தால் படித்துப்பாருங்கள்.

5 Comments:

srinivasan said...

Please can you reproduce that article"isayai sedukkum chirpigal" by Sethupathi Arunachalam

IdlyVadai said...

ஸ்ரீநிவாசன் என்னிடம் புத்தகம் தான் இருக்கிறது அதை டைப் அடித்து போட எனக்கு நேரம் இல்லை. எனக்கு யாராவது அனுப்பினால் போடுகிறேன். இல்லை வார்த்தையை வாங்கி படியுங்கள் :-)

யோசிப்பவர் said...

//இல்லை வார்த்தையை வாங்கி படியுங்கள் //
மார்கெட்டிங்கா?! நடத்துங்க!!:-)

Anonymous said...

ethu entha maathaa eranthaa kaaturai..

Anonymous said...

Pidikkalainna mattum vidavaa poreenga...:(

eppadiyum Ctrl+C ...Ctrl+V thaan