பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 07, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 11-08-08

இந்த வாரம் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்...

அன்புள்ள இட்லிவடை,

சீக்கிரம் பதில் போட முடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.
தமிழ் வலைப்பதிவுலகில் 5 வருடங்கள் குப்பை கொட்டியதற்கு என் வாழ்த்துகள் :) தமிழிணைய 'மூத்த' வலைப்பதிவர்களை இட்லிவடை வலைப்பதிவில் எழுதச் சொல்லி ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல நீ சுய விளம்பரம் தேடிக் கொண்டதையும் நான் கவனித்தேன் :) நீயே முகமிலி, உன்னைத் துதி பாட கி.அ.அ.அனானி என்று இன்னொரு முகமிலியா? நல்ல கூத்து :)

முரசொலியில் விகடன் சீனிவாச 'ஐயர்' அர்ச்சனைனை பார்த்தேன். முன்பு ஒரு முறை விவேக் ஆனந்த விகடனில் கலைஞரை பற்றி புகழ்ந்து எழுதிய கவிதைக்கு முரசொலியில் கலைஞர் பதில் கவிதை எழுதினார் அது உனக்கு ஞாபகம் இருக்கா ?


.....
அவற்றில் ஒன்றை ஆனந்த விகடன் இதழினிலே
அருமைத் தம்பி விவேக்கின் எழுத்தைப் படித்து அறிந்து கொண்டேன்-
கலைஞர் ஒருவர் வேறொரு கலைஞரை வெகுவாகப் புகழ்ந்து
கட்டுரை தீட்டியுள்ளார்; கற்கண்டாய் இனிக்கிறது!
...
...
...
தொடர்ந்து இன்னும் பல படங்கள் அளிக்குமாறு
வேண்டியுள்ளார் விவேக் எனும்போது; அதனை
வெளியிட்டுள்ள விகடனையும் வாழ்த்துகின்றேன்,
விசாலமான மனம் வேண்டும்-

விற்பன்னர்களை ஊக்குவிக்கும் உளம் வேண்டும்-


விசாலமான உள்ளம் கொண்ட சீனிவாச அய்யர்வாள் கலைஞர் பார்வையில் இப்படி சறுக்கியதை 'காலத்தின் கோலம்' என்று தான் சொல்ல வேண்டும்

ஏனோ எனக்கு பழைசு எல்லாம் ஞாபகம் வருது. கலைஞருக்கும் நல்ல ஞாபக சக்தி உண்டு ஆனா இந்த மேட்டர் ஞாபகம் வருமா என்று தெரியலை.

சரி அதைவிடு, இப்ப எல்லாம் அடிக்கடி தண்டவாளத்தில் விரிசல் என்று பேப்பரில் படிக்கிறோமே அதற்கு காரணம் என்ன தெரியுமா ? சரியான தரக்கட்டுப்பாடு இல்லாத தான் இதற்கு காரணமாம். முன்பு ரோடு போடுவதில் தான் ஊழல் என்று பார்த்தால் இப்ப ரயில் தண்டவாளத்திலுமா, என்ன கொடுமை இட்லிவடை இது ?

பிரணாப் முகர்ஜி சென்னை வந்து கலைஞரை சந்தித்த போது இந்த உரையாடல் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது

கலைஞர் : முகர்ஜி ராஜினாமா கடிதங்கள் தயாராக இருக்கு
பிரணாப் முகர்ஜி: டெல்லியில ஆட்சி இன்னும் 4 மாதம் தான், நீங்க ராஜினாமா செய்தாலும், காபந்து அரசாங்கம் நடைபெறும். ஆனா தமிழ்நாட்டிலே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாப்பஸ் என்று ஆரம்பித்தால்....
கலைஞர்: ஐயோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க
பிரணாப்: உங்க ஆட்சி இன்னும் இரண்டரை வருஷம் இருக்கு அதனால அந்த ராஜினாமா கடிதங்களை எல்லாம் ஒன்றாகத் தைத்து அதன் பின்பக்கங்களை கவிதை எழுத வைத்துக்கொள்ளுங்கள்.
கலைஞர்: அன்னை சோனியா வாழ்க, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க, CIT நகர் வீட்டுக்கு வந்து கவிதை எழுத சொன்ன பிரணாப் முகர்ஜி வாழ்க

முதல்வர் 'எம்.பிக்கள் ராஜினாமா' விஷயத்தில் அடித்த பல்டியினால், அவரது தீவிர வலையுலகத் தொண்டரடிப்பொடிகளே மனமுடைந்து தங்கள் ஆற்றாமையை கொட்டியிருப்பதையும் கேள்விப்பட்டேன்.

இரண்டு நாளா சாட்டில் ஒரே தொல்லை, ஒபாமா பற்றி எல்லோரும் எழுதிவிட்டார்கள், ஏன் ஓபாமா பற்றி நீ எதுவும் எழுதவில்லை ?
என் நிறத்தில் உள்ள ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் ஆனதில் மகிழ்ச்சி இருந்தாலும், ஒபாமாவை வைத்து நம்ம ஊர்ல மீடியாவும், டிவிட்டர்லயும் வலைப்பதிவுகளிலும் 'படிச்சவங்களும்' அடித்த லூட்டியைத் தாங்கவே முடியல. என்னவோ இந்த பூவுலகையே உய்விக்க வந்த விவேகானந்தர் கணக்கா அவரை ஏற்றி விட்டார்களே ? அப்புறம் என்னவோ Change we can, audacity of hope என்று ஒபாமா இங்கிலீஷ்ல பெரிய பெரிய வார்த்தையா பேசினது எனக்குப் புரியல.

ஒபாமைவை ஆதரிக்காதவங்க எல்லாம் லிபரல் மனநிலை இல்லாதவங்க, நிறத்தை வைத்து பாகுபாடு பார்க்கிறவங்க என்று கூட பேச்சு அடிபட்டது. என்னத்தை சொல்ல? ஒபாமாவின் வெற்றிக்கு இரவு பகலாக பாடுபட்ட கேம்பெயின் அணியில் நான்கில் மூன்று பங்கு வெள்ளையர்கள். ஒபாமாவைத் தேர்ந்தெடுத்த விசயத்தில் அமெரிக்க ஜனநாயகத்தையும், அமெரிக்கர்களின் முற்போக்கையும் பாராட்ட வேண்டும். நம்ம முதல்வர் மாதிரி ஒபாமாவும் நல்ல பேச்சாளர் :) 'மாற்றம் வரும்' என்று கூறி ஆட்சிக்கு வந்திருக்கும் ஒபாமா நல்ல மாற்றங்களை கொண்டு வந்து சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அரசியல் ஒரு சாக்கடை அது நாற்றம் அடிக்கும் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அதை சில நாட்கள் முன் சிரஞ்சீவிக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். என்ன குழப்பமா இருக்கா ? சமீபத்தில 'பிரஜா அங்கித' யாத்ரா சென்று கொண்டிருந்த சிரஞ்சீவி மீது தெலுங்கானா ராஷ் டிரிய சமிதி (TRS) தொ(கு)ண்டர்கள் முட்டைகளை வீச, ஒன்று சரியாக அவர் முகத்தில் பட்டதாம். மாஜி சினிமா ஹீரோ என்பதால் அவர் அதை கண்டுக்கல, முட்டை முகப்பொலிவுக்கு நல்லது. அவரது ஜாதக
த்தைப் பார்த்த சோதிடர்கள் சிலர், சிரஞ்சீவிக்கு இப்போது நல்ல நேரம் என்றும் எதிரிகள் வீசும் முட்டைகள் தேர்தலின்போது லட்சோபலட்சம் வாக்குகளாக மாறும் என்றும் கூறுகிறார்கள். அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கி இந்த தாக்குதலுக்கு அகிம்சா (காந்திகிரி) முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்களாம். ஆனா நம்ம கேப்டனோட தொண்டரடிப்பொடிகளோ ஒரு காமெடி நடிகரிடம் தாதாகிரி செய்து அவரை சூப்பர் ஸ்டாரா ஆக்கிட்டாங்க.

இன்று சிரஞ்சீவி ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில்
சிரஞ்சீவி: "நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு ஏற்ற நேரம் இதுதான். தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதற்கு உங்களைப் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலுக்கு வந்து ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும்''

ரஜினி பதில்: "கண்டிப்பாக நான் 60 வயதில் அரசியலில் குதிப்பேன். அதுதான் நான் அரசியலில் குதிப்பதற்கு சரியான நேரம். அப்போதுதான் எனக்கு சந்தர்ப்ப சூழ்நிலை சரியாக இருக்கும்"

இந்த டிசம்பர் ரஜினிக்கு 58 வயது. ஆக எந்திரம் முடிந்தவுடன் தந்திரமாக அரசியலுக்கு வருவார் என்று சொல்லுகிறார். வாங்க வாங்க...

இப்ப பெண்கள் சப்ஜக்ட். மனிதர்களின் உள்ளங்கைகளில் பலவகையான பேக்டீரியாக்கள் இருப்பதாக கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது மொத்தம் 4700 வகை பேக்டீரியாக்கள் இருப்பதையும், ஒரு சாம்பிள் உள்ளங்கையில் கிட்டத்தட்ட 150 வகை இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சுருக்காங்க. அதுவும், பெண்களின் கைகளில் பேக்டீரியாக்கள் அதிகமாம். நாம் தான் பெண்கள் ரொம்ப சுத்தமா இருக்கிறவங்க என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் ;-) இங்க கேலிக்குறி போடலைன்னா என் பக்தைகள் எனக்குப் படையல் வைக்கறதை நிறுத்திடுவாங்க! ஆனா பெண்களோட மனது சுத்தமானது :). கர்பூரத்தை கையில் அடித்து சத்தியம் செய்கிறேன். ( அட்லீஸ்ட் கையில் இருக்கும் பேக்டீரியாக்கள் செத்து தொலையும் ). இங்க ஸ்மைலி போட்டுக்கறேன்!

"சமீபத்தில் கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ஏதோ விடுதலைப் போராட்ட வீரர்கள் போல் வரவேற்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக போராடும் இவர்கள் இங்கு போராடுவதை விட்டுவிட்டு இலங்கையில் போய் போராட வேண்டியது தானே?" என்று நான் கேட்கவில்லை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேட்கிறார்.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்று கேட்டோம். (இப்போதும் சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேற விஷயம்) ஆனால் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் திமுக அமைச்சரவையில் காங்கிரசுக்கு பங்கு வேண்டாம் என்கிறார். கேட்டாலும் உடனே குடுத்துவிடுவார்களா என்ன ?


இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும், நடிகர் ரஜினிக்கு இருக்கும் மன உறுதியும் தைரியமும் கூட கருணாநிதிக்குக் கிடையாது எனவும் சமீபத்தில் ராமதாஸ் கூறியதைக் கேட்டவுடன் ஆச்சரியமாக இருந்தது. "சிங்கள அரசின் பேடித்தனத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார் ரஜினி. முதல் முறையாக அவரது நட்சத்திர அந்தஸ்து ஒரு மிகச் சரியான காரணத்துக்காகப் பயன்பட்டிருப்பதில் மகிழ்ச்சியே" என்றெல்லாம் ரஜினி புகழ் பாடியவுடன் மருத்துவர் ஐயா ரஜினி ரசிகர் மன்றத்தில் உறுப்பினர் ஆகி விட்டாரோ என்ற சந்தேகம் வருவதோடு, குழப்பம் அதிகமாகி தலையை வேறு சுற்றுகிறது. தலை சுற்றலுக்கு நல்ல நாட்டு மருந்து ஏதாவது இருந்தால் வாங்கி அனுப்பவும்...


இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்ச்களை பார்த்தியா ? வாட்ஸன் மேல வேண்டுமென்று மோதியதால் கம்பீருக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் தடை விதிச்சிருக்காங்க. உடனே ஆணவம் பிடிச்ச BCCIக்கு கோபம் வந்து ICCக்கு காரசாரமா ஒரு புகார் கடிதம் எழுதியிருக்கு. ICCயின் ரெவன்யூவில் 60% இந்தியாவிலிருந்து வருகிறது என்பதற்காக BCCI இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் சதர்லேண்ட் ஒரு குட்டு குட்டியிருக்கிறார். அவர் குட்டு சரி என்று தான் நான் நினைக்கிறேன்.

கும்ப்ளே ரிடையராகி விட்டார், கங்குலியும் நாலாவது டெஸ்ட்டுடன் ரிடையர். நம்ம சச்சின் தனது 40வது டெஸ்ட் சதத்தை அடித்து மார்க்கண்டேயன் மாதிரி இன்னும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரும் ரிடையரான பிறகு, நம்ம அணியின் நிலைமையை நினைச்சா பயமா இருக்கு. ( சிலரை திருப்தி படுத்த இந்த மாதிரி எழுத வேண்டியிருக்கு என்ன செய்ய )

சூப்பர் ஸ்டார் தனது ரசிகர்களை சமீபத்தில் நேரில் சந்தித்தபோது, 'கடமையைச் செய், பலனை எதிர்பார்' என்ற விதத்தில் பேசியதால் பகவத்கீதைக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார் என்றும் கடவுள் வேதத்தை மாற்ற ரஜினி யார் என்றும் சில இந்து அமைப்புகளும் யாதவ அமைப்பொன்றும் மலிவான பப்ளிசிட்டிக்காக அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சகிப்புத்தன்மை என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைமையில் இவர்கள் இருப்பதைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது.

ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறாராமே, உண்மையா ? ரம்பா பள்ளி ஒன்று தொடங்கப்போவதாக செய்தி வாசித்தேன். பிள்ளைகளின் படிப்பு ? 'கோவிந்தா கோவிந்தா'

இன்னொரு முக்கிய விசயம். ரியல் எஸ்டேட் விலை 15-20% குறைந்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். ஏதாவது நிலம் வாங்கும் எண்ணம் இருந்தால் வாங்கிப் போடவும். நான் ஏன் உன்னிடம் சொல்லவில்லை என்று என் மீது பின்னால் பழி போடாதே.. நிலத்தை அரசியல் செல்வாக்குள்ள கேடிகள் அபேஸ் பண்ணாமல் இருக்க 'பாடிகார்ட் முனீஸ்வரன் பிராப்பர்டி' என்று போர்ட் எழுதி வைக்க மறக்காதே

ராஜா மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைக்கு கலைஞர் இப்படி பதில் சொல்லுகிறார்

மத்திய அமைச்சர் ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி இன்று மத்திய அமைச்சரவையில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பொறுப்பில் இருப்பது ஒரு சிலருக்குத்தான் பிடிக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே விசாரணை கோரியுள்ளது


தயாநிதியின் அம்மா பிராமணப் பெண் என்பதால் இப்படி யோசிக்கிறார் போல நீ என்ன நினைக்கிற ?

இப்படிக்கு
'நாட்டு மருந்தை' குடித்துக்கொண்டிருக்கும்
முனி - பாடி காட் முனி ( Bond - James Bond மாதிரி சொல்லிப் பார்த்தேன் :-)

7 Comments:

enRenRum-anbudan.BALA said...

முனி நல்ல ஃபார்மல இருக்காரு போலத் தெரியுது :) இது முனி கடிதம் மாதிரி தெரியல, நாரதர் லெட்டர் மாதிரியில்ல இருக்கு ;-)

//நம்ம சச்சின் தனது 40வது டெஸ்ட் சதத்தை அடித்து மார்க்கண்டேயன் மாதிரி இன்னும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரும் ரிடையரான பிறகு, நம்ம அணியின் நிலைமையை நினைச்சா பயமா இருக்கு. ( சிலரை திருப்தி படுத்த இந்த மாதிரி எழுத வேண்டியிருக்கு என்ன செய்ய )
//
யோவ், என்னய மாதிரி ஆட்களைத் தானே முனி கலாய்க்கிறாரு, கிரிக்கெட்டைப் பத்தி முனியை விட எனக்கு நிறைய தெரியும் :)

IdlyVadai said...

சச்சினை சப்போர்ட் செய்யும் போதே உங்க வயது வயதும் முதிர்ச்சியும் தெரிகிறது.

இதே மாதிரி வலைப்பதிவிலும் ரிடையார் ஆனா எவ்வளவு நல்லா இருக்கும். நான் உங்களை சொல்லலை :-)

இலவசக்கொத்தனார் said...

ஜூப்பரு!!

எதுக்கும் முனிக்குப் பூணல் இருக்கான்னு பார்க்கச் சொல்லு. இல்லைன்னா ஒண்ணு போட்டுக்கச் சொல்லு. அப்போதான் திட்ட வசதியா இருக்கும்.

//ஒபாமாவை வைத்து நம்ம ஊர்ல மீடியாவும், டிவிட்டர்லயும் வலைப்பதிவுகளிலும் 'படிச்சவங்களும்' அடித்த லூட்டியைத் தாங்கவே முடியல. //

:))

//ஒபாமைவை ஆதரிக்காதவங்க எல்லாம் லிபரல் மனநிலை இல்லாதவங்க, நிறத்தை வைத்து பாகுபாடு பார்க்கிறவங்க என்று கூட பேச்சு அடிபட்டது.//

அட்டட்றா நாக்க முக்க நாக்க முக்க!! :))

Maniz said...

so you are back to form!!!!
கலக்கல்!!!!!

enRenRum-anbudan.BALA said...

கொத்ஸ்,
அப்ப முனி உங்க கட்சி போல இருக்கு, அவருக்கும் சேஞ்ச் ஹோப் மேல நம்பிக்கை இல்ல ;-) ஜாலி தான் போங்க, அப்டியே Dynobuoy கிட்ட சொல்லுங்க, சந்தோஷப்படுவாரு :)

IV,
முதல்வரை விட எனக்கு வயசு கம்மி தான், நான் ஏன்யா ரிடையர் ஆகணும் ? :)

கொடும்பாவி-Kodumpavi said...

நாட்ல நிறைய விஷயங்கள் இருக்கு முனி பார்த்துக்குட்டுதான் இருக்காரு. இட்லி வடை எழுதினாத்தான் நான் பதில் போடுவேன்னு ஒக்காந்துகிட்டு இருக்காம ஏன் நீ கடிதாசி போடலன்னு உரிமையோட இட்லி வடைய கேட்டு கடுதாசி போடலாம். முனி நீங்க ரொம்ப நல்லவர். (நீங்க சாமி அதனால எந்த குறியும் போடல) இட்லி வடையும் நல்லவர்(!). (நீங்க ஆசாமி அதனால் ஆச்சரியக்குறி). முனி பூணல் போட்டிருக்காரா இல்லையான்னு முரசொலி ஆராய்ச்சி அலுவலகத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

ப்ரியா said...

//இங்க கேலிக்குறி போடலைன்னா என் பக்தைகள் எனக்குப் படையல் வைக்கறதை நிறுத்திடுவாங்க!
//
ரொம்ப பயப்படுறவங்க தான்.....:-)