பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 16, 2008

ஊழியர்கள் வேலை நீக்கம்: ஜெட் ஏர்வேய்ஸ்நிறுவனத்துக்கு ராஜ்தாக்கரே மிரட்டல்

ஜெட் ஏர்வேய்ஸ் தனியார் விமான நிறுவனத்துக்கு பெட்ரோல் விலை உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் வருமான இழப்பு ஏற்பட்டது. இத னால் 1900 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்வதாக அறிவித்து உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மராட்டிய நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்து முறையிட்டனர்.

இதையடுத்து ராஜ்தாக்கரே ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களையும் மீண்டும் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் மும்பை மற்றும் மராட்டியத்தில் ஜெட் ஏர்வேய்ஸ் விமானங்களை பறக்க விட மாட்டோம்'' என்று கூறியுள்ளார். இதையடுத்து மும்பையில் உள்ள ஜெட் ஏர்வேய்ஸ் அலுவலகம் மற்றும் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கலவர தடுப்பு பிரிவு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி பிரபுல்பட்டேல் ஊழியர்கள் வேலை இழப்பு தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுடனும் பேச போவதாக கூறி உள்ளார்.

சில சமயம் ஏதாவது பிரச்சனை என்றால் நாம் ரவுடிகளை நாடுவோம்...

4 Comments:

பூச்சாண்டியார் said...

//
வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களையும் மீண்டும் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் மும்பை மற்றும் மராட்டியத்தில் ஜெட் ஏர்வேய்ஸ் விமானங்களை பறக்க விட மாட்டோம்'' என்று கூறியுள்ளார்.
//

சாலை மறியல் மாதிரி வானத்துல மறியல் பண்ணுவாங்களோ???

Anonymous said...

//சாலை மறியல் மாதிரி வானத்துல மறியல் பண்ணுவாங்களோ??//

ஆமாம்யா செய்ஞ்சாலும் செய்வாங்க ஏன அவங்ககிட்டதானே வானரப்படை இருக்கு!!!!

அச்சுப்பிச்சு said...

தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் அழகிரியா? மஹராஷ்டிரத்துக்கு ஒரு ’நல்லவர்’ வேண்டாமா?

Raj said...

//அச்சுப்பிச்சு said...
தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் அழகிரியா? மஹராஷ்டிரத்துக்கு ஒரு ’நல்லவர்’ வேண்டாமா?
//

ராஜ் தாக்கரே இவ்வாறு மிரட்டுவது தவறு என்றாலும், அவர் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் நலத்தில் அக்கறையோடு உள்ளார். அழகிரியை விட அவர் எவ்வளவோ மேல்.