பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 17, 2008

பதினான்கு திமுக எம்.பி.கள் ராஜிநாமா

திமுக எம்.பிக்கள் 14 பேர் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் கொடுத்துள்ளனர். இதில் மத்திய மந்திரிகளும் அடங்கும்.

தயாநிதி மாறன் இன்னும் ராஜிநாமா கடிதத்தை கொடுக்கவில்லை. தனியாக பிரஸ் மீட் வைத்து கொடுப்பார் என்று நினைக்கிறேன்.

இந்த ராஜிநாமா நாடகம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கான கண்டனம் என்றால் பரவாயில்லை, ஆனால் விடுதலைப் புலிகளுக்கு சப்போர்ட் செய்வதற்கான ஆயுத்தம் என்றால் அது கண்டனத்திற்குரியது. இவ்வளவு நாள் இல்லாத பாசம் தீடீர் என்று வந்ததற்கு காரணம் என்ன ? விடுதலைப் புலிகள் மீது சமீபத்தில் தாக்குதல் என்று மீடியாக்களில் வந்தது என்று குறிப்பிடத்தக்கது.

12 Comments:

அக்னி பார்வை said...

உலகம் ஒரு நாடக மேடை..அதில் நம் எல்லோரும் நடிகர்கள்..சிலர் மிக நன்றாய் நடிப்பதை பார்த்து நாம் பொறாமை கொள்ள கூடாது..

இப்படி பதிவு போடதேல், அவா உங்களுக்கு பூநூல் சாத்திட போரா...

:))

வடிவேலு said...

அடேய்! அப்ப நீ அவங்களுக்கு எதிரானவனா?

அக்னி பார்வை said...

ஈழ மக்கள் முக்கியம் என்றால் எப்பொழுதோ கோபம் வந்திருக்கும், அவர்களுக்கு முக்கியம் பிரபாக்கரன் தானே.அதான் இப்பொழுது கோபம் வருகிறது..

ராஜிவ் நினைதது சரிதான்.. ஈழ மக்களின் வாழ்வுக்கு இரண்டு எதிரிகள். ஒன்ரு சிங்களம் இன்னொன்று விடுதலைபுலிகல், இப்பொழுது மூன்றவதாக..இந்திய தமிழ்கள்.
அங்கு அமைதி வர எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டர்கள்,தப்பி தமிழகம் வந்தாலும் அகதி முகமில் பொட்டு கொல்லுவர்கள்..இன்று துடிக்கும் இந்த இதயங்கல் ஆளுக்கு ஒரு ருபாஇ போட்டு அந்த அகதிகள் முகமை சீர்படுதியிருக்கலாமே, அதற்க்கு இந்திய அரசிடம் போராடியிருக்கலாமே..இன்ரு தான் ஈழ தமிழர்கலின் இர்த்தம் சிவப்பென்று தெரிந்ததோ...

ஐய்யையொ ஓவரா பேசிட்டேனே..என்னை உயிரோடு விடமாட்டாங்களே..!!!!!

இட்லிவடை காப்பத்து...இன்னும் ரெண்டு நாள்ல பின்னூட்டம் போடல்ன்ன.. நான் சிவலோகம் பதவி அடைந்தேன் முடிவு பண்ணிக்கோ

அச்சமில்லை...

Ravi said...

Correct-a sonnenga IV! Ivvalavu naaL enga pochu indha akkarai? Try to read an article in this Wednesday's JV by Congress MP. Correct-a solli irukkaaru. JJ's stance is more clear. Read it here : http://www.hindu.com/2008/10/16/stories/2008101660900100.htm

Either DMK's stunt is to please LTTE or an attempt to pull itself out of the Congress coalition since its almost clear that it will not win next year!

கொடும்பாவி-Kodumpavi said...

திமுக எம்பிக்கள் வரும் 28ம் தேதி வரை பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் பங்கேற்பர்
- முதல்வர் கருணாநிதி

இதுக்கு என்னங்க அர்த்தம்?
கடிதாசி இன்னும் பிரதமருக்கு போகலையே? நல்ல நாடகமடா இது.!

Anonymous said...

அக்னி பார்வை,
சரிதான் கூறியிருக்கிறீர்கள்.
இட்லிவடை,அக்னி பார்வை,இதையும் பார்வையிடுங்கள்
http://www.theneeweb.de/html/161008-4.html

பூச்சாண்டியார் said...

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. 29-ஆம் தேதி இவர்கள் கூத்து என்னவென்று தெரிந்துவிடும்..

இட்லி வடை ரசிகன் said...

108 துரத்துபவர்கள் கொண்ட இட்லி வடைக்கு ஒரு ‘ஓ..ஓஓஓஓஓ..' போடுங்க எல்லாரும்...

வாழ்த்துக்கள் தலிவா

Anonymous said...

ராம சேது ப்ராஜக்டில் கருணாநிதி அன்ட் கோவிற்கு எந்த பிரச்சினையும் வராமல் மத்திய அரசாங்கம் பார்த்துக்கொண்டால், ராஜினாமாக்கள் வாபஸ் பெறப்படும்.

சப்ப மேட்டரு.

அமுதப்ரியன் said...

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

Anonymous said...

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தினமும் கொன்று வருகிறது. அப்போதெல்லாம் ராஜினாமா நாடகம் ஆடாதவர்கள், இப்போது ஆடுவது ஏன்?

தமிழ்நாட்டு தமிழர்களின் உயிரைவிட, விடுதலைப்புலிகளின் உயிர் எதனால் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றாக மாறியது?

Anonymous said...

விடுதலைப் புலிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை ராணுவமாக வைத்து தமிழ்நாட்டைப் பிரித்து தனித் தமிழ் நாடு பெறவும் அதனை சர்வாதிகார நாடாக மாற்றி தானும் தன் வாரிசுகளுமே அதனை ஆளும் வகைக்கு கருணாநிதி வழி பண்ணுகிறார்