பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 22, 2008

இட்லிவடையில் இருந்து கற்றதும் பெற்றதும்... ராம்கி

இது ரஜினி ராம்கி இல்லை, வேற ராம்கி. முன்பு சைடு பாரில் டாப்-5 பாடல்கள் என்ற பெட்டி வரும். இவர் உபயம் தான். இப்ப அவரும் என்னை போல பிஸியாயிட்டார் :-)

இட்லிவடைக்கு 5 வது பிறந்த நாள் வாழ்துக்கள்...

நான் இட்லிவடையில் இருந்து கற்றதும் பெற்றதும்...

1. வலைப்பதிவு என்றால் என்ன என்று தெரிந்து கொண்டது,
2. முகத்தை மறைத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு எல்லாரையும் வம்பிளுப்பது எப்படி.என்று தெரிந்து கொண்டது
3. கட் பேஸ்ட் பண்ணினாலும் சுவாரஸ்யமாக பன்ச் வைப்பது எப்படி என்று வியந்த்தது
4. வலைப்பதிவு ஆனந்த விகடன் வரை செல்லச்செய்தது எப்படி என்று வியந்த்தது
5. தமிழிலில் தட்டச்சு பற்றி அறிந்தது
6. அரசியல் நெடியும் நக்கல் பொடியும் தூவி காமடி பதிவாய் மாற்றுவது இவ்வளவு ஏன் பல தலைப்புச் செய்திகளை தெரிந்து கொண்டதே இட்லி வடையில் இருந்து தான்.

நான் முதலில் இட்லி வடை பற்றி கேள்விப்பட்டது ஆனந்த் விகடன் மூலமாக.. அன்றைக்கு வர ஆரம்பித்தது.. இன்றுவரை தினமும் பார்க்கிறேன்..

என்னை ரொம்ப கவர்ந்தது இந்த பதிவு தான்.


அடிக்கடி கேட்கப்படாத கேள்விகள்


ஒரு நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை.. (?!!!)

கடந்த சில நாட்களாக பதிவு வருகை குறைவும், இட்லிவடை பற்றி நிறைய வதந்திகளும் கொஞ்சம் கவலை அடைய செய்தது உண்மை..

அப்பப்போ நான் சாட்டில் உரையாடுவது உண்டு..

ஐந்து ஆண்டுகள்... வலை பதிவு உலகம்...

சாதனை தான்... தொடர வாழ்த்துக்கள்...

உங்கள் குரூப் போட்டோ எல்லாம் வேண்டாம்..
இட்லிவடை இட்லிவடையாகவே இருந்துட்டு போங்கள்...

ராம்ஜி. .

மக்களே ஒரு உண்மை சொல்லுகிறேன் ராம்கி கொஞ்சம் பொய் சொல்லுவார்

1 Comment:

யோசிப்பவர் said...

//நான் இட்லிவடையில் இருந்து கற்றதும் பெற்றதும்...
//
மக்களே! நல்லாப் பாருங்க. குரூப்புல இருந்த, இருக்கிற, இருக்கப் போகிற ஒவ்வொருத்தரா பதிவு எழுதி, போட ஆரம்பிச்சுட்டாங்க!!