பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 15, 2008

மென்ஹோல் - மூன்ஹோல்

இரண்டு செய்திகள் - ஓட்டை எங்கே இருக்கு என்று உங்களுக்கே புரியும்....

முதல் செய்தி:

இந்தியாவின் முதலாவது ஆள் இல்லாத நிலவு விண்கலமான சந்திராயன்-1 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் ஏவுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி காலை 6.20 மணிக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திராயன் நிலவுக்கு பயணிக்கவுள்ளது.

இரண்டாம் செய்தி
சாக்கடை அடைப்புகளை நேரடியாக மனிதர்களை விட்டு அகற்றும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.( சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த நாராயணன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநலன் கருதி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்து இந்த தீர்ப்பு வந்துள்ளது )

சந்திராயன் இன்னும் சில நாட்களில் சந்திரனில் இறங்கு எங்கெல்லாம் ஹோல் இருக்கிறது என்று படம் அனுப்பும், பாராட்ட வேண்டிய விஷயம். அப்படியே அறிவியல் அறிஞர்கள் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படும்போது சாலைகளில் உள்ள `மென்ஹோல்' மூலம் இறங்கி பராமரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஏதாவது சாக்கடராயன் அனுப்பினால் இன்னும் சந்தோஷமாக இருக்கும்.

2 Comments:

வெண்பூ said...

இன்னொண்ணை விட்டுட்டீங்களே இ.வ. 150 அடி ஆழ ஹோல்ல விழுந்த குழந்தையை மீட்க 5 நாள் ஆகுது.. ஆயிரம் கோடி செலவழிச்சி சந்திரன்ல எங்க ஹோல் இருக்குன்னு தேடிட்டு இருக்கோம் :(

R A J A said...

Please look at this link (Photo)

http://www.flickr.com/photos/balaphoto/828828426/in/photostream/