பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 22, 2008

உருக்கமான ஒரு நிகழ்ச்சி

'உதவும் இதயம் ஒருநாளும் ஓயாது' பதிவை படித்திருப்பீர்கள். நேற்று மகனின் இதயம் பொருத்தப்பட்ட சிறுமியை மடியில் உட்கார வைத்து கண்ணீர் விட்ட ஹிதேந்திரனின் தாய் சென்னையில் ஒரு நெகிழ்வான சந்திப்பு....


டாக்டர் தம்பதி அசோகன்-புஷ்பாஞ்சலிக்கு பாராட்டு விழா சென்னையில் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. `ரோட்டரி இண்டர்நேஷனல் மாவட்ட 3230' சார்பில் நடந்த இந்த விழாவில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு டாக்டர் தம்பதியை பாராட்டிப் பேசினார்.

ஹிதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகன்...

தந்தையாக எனது மகனுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்யத் தவறிவிட்டேன். எனது பைக்கை அவன் ஓட்டுவதற்கு அனுமதி அளித்திருக்கக்கூடாது. இருந்தாலும், பைக் எடுத்து ஓட்டாதே என்று பலமுறை அவனிடம் சொன்னேன். அதையும் மீறி அவன் பைக்கை எடுத்துச் சென்றதால் அவனை இழந்துவிட்டோம். எனவே, சிறுவர்களை பைக் ஓட்டுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டார்.


டாக்டர் தம்பதி அசோகன்-புஷ்பாஞ்சலி, அவர்களது மகன் ஹிதேந்திரன் இருதயம் பொருத்தப்பட்ட சிறுமி அபிராமி, சிறுமியின் பெற்றோர் ஆகியோரை விழாவுக்கு வந்திருந்த அனைவரும் நெகிழ்வுடன் பார்த்தனர். பலரும் டாக்டர் தம்பதியை நேரில் சென்று வாழ்த்தினார்கள். அம்மா மஞ்சுளாவின் மடியில் இருந்த அபிராமி, சிறிது நேரம் கழித்து ஹிதேந்திரனின் தாய் புஷ்பாஞ்சலியின் அருகில் வந்தார். மகனின் இருதயம் பொருத்தப்பட்ட அந்தச் சிறுமியை மடியில் உட்கார வைத்ததும் புஷ்பாஞ்சலி கண்கலங்கிவிட்டார். மகனின் இருதயத்துடன் மறுபிறவி எடுத்துள்ள சிறுமி அபிராமியை அரவணைத்தபடி அவர் அமர்ந்திருந்ததைப் பார்த்த அனைவரும் கண்கலங்கிவிட்டனர்.

சிறுமி அபிராமி, டாக்டர் தம்பதிக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்துவதற்காக மேடைக்கு வந்தாள். அவளைப் பார்த்ததும் டாக்டர் அசோகன் வாரி அணைத்து உச்சிமுகர்ந்து முத்தமிட்டார். டாக்டர் புஷ்பாஞ்சலியும் கன்னத்தைப் பிடித்து முத்தமிட்டார். இந்தக் காட்சியைப் பார்த்ததும் கவர்னர் பர்னாலா உள்பட விழாவுக்கு வந்திருந்த அனைவரும் கண்கலங்கிவிட்டார்கள். விழா தொடங்கியதில் இருந்து முடியும் வரை உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

3 Comments:

KaveriGanesh said...

inthe news padikum othe en kankal kalankukirathu.

kaveri ganesh

Anonymous said...

Intha news padikkum pothe alugaiya control panna mudiyavillai.Nenju vimmi vimmi vedichurumpola irukku. Petravargallukku eppadi irukkum.

Tender Heart.

Charles said...

There is no words to write comments for this page. It is touching hearts. Long live Mr & Mrs Dr.