பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 20, 2008

தமிழில் பேசிய கலைஞர் - தயாநிதி மாறன்


நேற்று கலைஞர், தயாநிதி மாறன் சந்திப்பிற்கு பிறகு கலைஞர் அளித்த பேட்டி

கேள்வி:- பதவி விலகல் கடிதங்கள் எல்லாம் உங்களிடம் தரப்பட்டு விட்டன. வாங்கிய கடிதங்கள் எப்போது அனுப்பப்படும்?

பதில்:- இரண்டு வார காலம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு 28-ந் தேதி வரையில் காலம் இருக்கிறது. அதுவரை அந்த கடிதங்கள் என்னிடம் தான் இருக்கும்.

கேள்வி:- தயாநிதி மாறன் உங்களை சந்தித்தாரே? எப்படி பேசினார்?

பதில்:- தமிழில் தான் பேசினார்.

கேள்வி:- தயாநிதி மாறன் பதவி விலகல் கடிதத்தை கொடுத்து விட்டாரா?

பதில்:- கொடுத்து விட்டார்.

கேள்வி:- தமிழர் நலம் கருதி இரண்டு பேரும் ஒன்று சேருகிறீர்களா?

பதில்:- தமிழர்களுக்காக எல்லா கட்சிகளும் ஒன்று சேருகின்றன. ஒன்று சேராத இரண்டு மூன்று கட்சிகள் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன.

கேள்வி:- இந்த சந்திப்பு உங்களுக்கு எப்படி இருந்தது?

பதில்:- எல்லா சந்திப்பும் எனக்கு ஒன்று தான். எந்த நிந்திப்பும் கிடையாது.

பின்னர் வெளியில் வந்த தயாநிதிமாறன் நிருபர்களிடம் கூறியது...

தமிழக முதல்-அமைச்சர் டாக்டர் கலைஞரை சந்தித்து என்னுடைய எம்.பி. பதவி ராஜினாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டு கொடுத்திருக்கிறேன். சக தி.மு.க. எம்.பி.க்கள் போல, இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து வேண்டும் என்பதற்காக இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறேன்.

பிரதமர் மன்மோகன் சிங் இந்த பிரச்சினையில் நல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்னும் தீவிரமான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

வேறு ஏதாவது பேசினீர்களா?

வேறு ஏதாவது பிரச்சினை குறித்து பேசினீர்களா? என்று நிருபர் கேட்டதற்கு, ``நல்லதையே பேசுவோம்'' என்றார். முரசொலி மாறன் பெயரில் பேரவை தொடங்கப் போகிறீர்களா? என்று கேட்டதற்கு, ``நீங்களாக யூகிக்க வேண்டாம்'' என்றார்.

பி.கு: திமுக மக்களவை உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதங்கள் தந்த்தை வெள்ளிக்கிழமை இரவு அறிவாலயத்தில் நிருபர்களிடம் முதல்வர் தெரிவித்தபோது, தயாநிதி மாறன் பற்றியும் கேட்கப்பட்டது. "நல்லதைப் பேசுவோம்' என்று அவர் பதில் கூறினார்.

இந்த 'நல்லதைப் பேசுவோம்' டையலாக் எவ்வளவு பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை, ஆனால் கலைஞர் 'கவனி'த்துக்கொள்வார்.

5 Comments:

Kalaikovan said...

தானும் ஒரு தி.மு.க எம்.பி என்பதை
இன்னொரு முறை காட்டியுள்ளார்.
என்ன செய்வது ....
மாறன் இறந்த சில தினங்களிலே
தாத்தாவால் கூட்டணி பேச
டெல்லி அனுப்பட்ட இந்த பேரன் ...
இன்று தத்தாவிடமே
அவகாசம் கேட்க வேண்டியுள்ளது .

என்ன செய்ய
நாமும் நல்லதையே பேசுவோம்

பூச்சாண்டியார் said...

நாமும் 'நல்லதை பேசுவோம்'.. ;)

அச்சுப்பிச்சு said...

நான் ஆங்கிலத்தில் பேசுகிறேனே! Blood is thicker than water; my blood is more thicker than my sibling's (sister's) blood! ஏதாவது புரிகிறதா?

R A J A said...

நல்லதையே பேசுவோம்

Sathish! said...

// கேள்வி:- தயாநிதி மாறன் உங்களை சந்தித்தாரே? எப்படி பேசினார்?

பதில்:- தமிழில் தான் பேசினார். //

superu pa :)