பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 03, 2008

டாடா பை பை

'மேற்குவங்க மாநிலத்தில் நானோ கார் தொழிற்சாலை அமைக்கப்போவதில்லை' என டாடா நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இன்று இறுதியாக மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை ரத்தன் டாடா சந்தித்து பேசினார்.

டாடாவின் பேட்டியிலிருந்து....

நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்கு, தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்காலத்திலும் இது தொடரும் வாய்ப்பு உள்ளது. போலீஸ் பாதுகாப்புடனேயே ஓர் தொழிற்சாலையை நடத்துவது என்பது இயலாத காரியம்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு பின்னரும், கார் தொழிற்சாலையை இங்கு அமைக்க விரும்பவில்லை. எனவே, நானோ கார் தொழிற்சாலையை இங்கு அமைக்கும் திட்டம் வாபஸ் பெறப்படுகிறது.

கார் தொழிற்சாலை அமைக்க வரும்படி மூன்று, நான்கு மாநிலங்களில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. எந்த மாநிலத்தில் அமைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்து விரைவில் அறிவிப்போம்.


சில வாரங்களுக்கு இதை பற்றி வந்த துக்ளக் தலையங்கம்...

தன் வினை தன்னைச் சுடும் !
"ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை; இயந்திரங்களைப் பாதுகாப்பதும் ஒரு பிரச்சனையாகிவிட்டது; இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால், இங்கு தொழிற்சாலை நடத்த முடியாது; நாங்கள் ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதால், இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று யாராவது நினைத்தால், அது தவறு. எங்களிடம் பணியாற்றுபவர்களைப் பாதுகாப்பதற்காக, தேவைப்பட்டால் நாங்கள் இந்தத் தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு எடுத்துச்செல்வோம்' – என்று டாடா க்ரூப்பின் சேர்மன் ரத்தன் டாடா கூறியிருக்கிறார்.

அவர் இப்படிப் பேசுகிற அளவிற்கு மேற்கு வங்கத்தில், டாடாவின் சிறிய கார் தொழிற்சாலைக்குப் பிரச்சனைகள் உண்டாக்கப்பட்டு வருகின்றன. எதிர்ப்பு என்கிற பெயரில் அவ்வப்போது வன்முறை அவிழ்த்துவிடப்படுகிறபோது, ஒரு தொழிற்சாலையை எப்படி நடத்துவது? டாடாவின் மலிவு விலை கார் தொழிற்சாலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா பானர்ஜி நடத்தி வருகிற ஆர்ப்பாட்டங்கள் சுமார் இரண்டு வருடங்களாக, டாடா தொழிற்சாலையை ஹிம்சித்து வருகின்றன.

இதுபற்றி, நாம் விவரமாக "துக்ளக்' 3.1.07 இதழ் தலையங்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறோம். விவசாய நிலங்கள் எதுவுமே தொழிற்சாலை அமைப்பதற்குப் பயன்படுத்தக்கூடாது என்பது நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய நிலை அல்ல. தொழிலதிபரிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதற்காக நிலத்தைக் கையகப்படுத்தி, விவசாயிகளை பலி கொடுக்காமல் – அரசு, நிலத்தைக் கையகப்படுத்துகிறபோது, அது வெளிப்படைத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். கண்மூடித்தனமாக இல்லாமல் சாதக பாதகங்கள் அனைத்தையும் கவனித்து, நிலத்தை கையகப்படுத்துதல் நடக்க வேண்டும். நில உரிமையாளர்களுக்கு அன்றைய மார்க்கெட் நிலவரத்தை ஒட்டிய விலை அளிக்கப்பட வேண்டும்; அதிலும் தவணைகளுக்கு இடம் இருக்கக்கூடாது.

இம்மாதிரி சில வழிமுறைகள் செயல்படுத்தப்படலாமே தவிர, விவசாய நிலங்கள் எதையும், தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று பிடிவாதம் பிடிப்பது, தொழில் வளர்ச்சியைத் தடுத்து, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கும். சொல்லப்போனால், நல்ல விலை கிடைத்தால், நிலத்தைத் தந்துவிட, இன்று பல விவசாயிகள் தாங்களாகவே முன்வருவார்கள். அரசியல் ஆதாயத்திற்காக, மம்தா பானர்ஜி போன்ற சிலர், விவசாயிகளைப் பயன்படுத்தி, அவர்களைத் தூண்டிவிட்டு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று இறங்குவதால்தான், பிரச்சனைகள் உருவாகின்றன. வன்முறை அவிழ்த்துவிடப்படுகிறது.

ஒரு தொழிற்சாலை உருவாவதையோ, ஒரு முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படுவதையோ, அரசியல் லாபத்திற்காக ஒரு எதிர்க்கட்சி எதிர்ப்பது என்பதும் – அரசியல் நஷ்டம் ஏற்பட்டுவிடுமே என்று பயந்து, ஆளும் தரப்பும் இந்த அச்சுறுத்தலுக்குப் பணிந்துவிடுவதும், நம் நாட்டில் ஆங்காங்கே, அவ்வப்போது
நடந்துகொண்டிருக்கிற விரும்பத்தகாத விஷயம். இந்தப் போக்கிற்கு, மேற்கு வங்க நிகழ்ச்சிகள் சரியான உதாரணம்.

டாடா உண்மையிலேயே வெளியேற நேர்ந்தால், அதனால் ஏற்படுகிற நிரந்தர நஷ்டம் அவர்களுக்கு அல்ல – மேற்கு வங்கத்திற்குத்தான். அதன் முழுப்பெருமையும்
மம்தா பானர்ஜியைத்தான் சாரும். மற்றொரு கோணத்தில் பார்த்தால் – இடதுசாரிகள் மற்ற இடங்களில் செய்வதைத்தான், மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் செய்கிறார். "ஹிம்சிப்பது இடதுசாரிகள், ஹிம்சையை அனுபவிப்பது மற்றவர்கள்' என்ற நிலை வழக்கமானது. மேற்கு வங்கத்திலோ, ஹிம்சை அரசி மம்தா பானர்ஜி; அனுபவிப்பது இடதுசாரி அரசு. தன்வினை தன்னைச் சுடும். இத்தனை காலம் இடதுசாரிகள் நடத்தி வந்த அரசியல், இன்று அவர்களைச் சுடுகிறது.

3 Comments:

IdlyVadai said...

* இந்த முடிவு கம்யூனிஸ்டுகளுக்கு விழுந்த பெரிய அறை. சீனாவின் கைத்தடிகளுக்கு இது தேவைதான்.

* மற்ற கார்பரேட் கம்பெனிகள் டாடாவின் தயவில் ஓசியில் பாடம் கற்றுக்கொண்டார்கள்.

டாடாவிற்கும், மம்தாவுற்கும் வாழ்த்துகள் !!

bala said...

இட்லி வடை அய்யா,

கம்யூனிஸ்ட் முண்டங்களுக்கு சளைக்காம 25 வருடங்கள் ஓட்டு போட்ட பெங்காலிகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.இந்த கழுதைகளுக்கு டாடா ஃபேக்டரி தேவையா?அயோக்யன் லெனின்,கொலைகார வெறியர்களான ஸ்டாலின்,மாவோ போன்றவர்களின் கருத்துக்கள்/பேச்சுக்கள் அடங்கிய புத்தகத்தை படித்து திருப்தி பட்டுக் கொள்ளவேண்டியது தானே?பெங்காலி மூஞ்சிகளுக்கு கார் ஃபேக்டரி என்ன,ஒரு ஃபேக்டரியுமே தேவையில்லை.

பாலா

ஸ்ரீராம் முரளி said...

பண்ண நாசம் போதாதாம், இன்னும் அந்த மாநிலத்த சீரழிக்கணுமாம் 'தோழர்களுக்கு'