பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 06, 2008

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்ச்னை என்ன ? தலைவர்கள் கருத்து

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்ச்னை குறித்து தலைவர்கள் கருத்து...

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
காமராஜர் ஆட்சி நடந்தால் மதுரையில், ‘காதலில் விழுந்தவர்கள்’ எழுந்திருக்க முடியவில்லை என்ற கூக்கூரல் வராது. யார் வேண்டுமானாலும், எந்த படம் வேண்டுமானாலும் ரிலீஸ் செய்து கொள்ளலாம். இது ஜனநாயக நாடு. மதுரையில் விழுந்தவர்கள் எழுந்திருக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் 2 நாட்களாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
காமராஜர் ஆட்சியில் மனோகரா, பராசக்தி படங்களை தடை செய்திருக்க முடியாதா? நாடோடி மன்னன் படத்தை ஊருக்குள் விடாமல் செய்திருக்க முடியாதா? ஜனநாயக நாட்டில் எப்படிப்பட்ட இடர்பாடுள்ள கருத்தையும் சொல்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, ‘மதுரை பக்கம் வராதே, வந்தால் ஆய், ஊய்’ என்று சொல்வது காமராஜர் ஆட்சி அல்ல.
காமராஜர் ஆட்சி என்றால் எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். காங்கிரசால் மட்டுமே தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும். காமராஜர் ஆட்சி நடப்பதாக காங்கிரசைச் சேர்ந்த சிலரே கூறி வருகிறார்கள். இதை முதல்வர் கருணாநிதி கூட நம்ப மாட்டார். ஜால்ரா அடிப்பதற்கும் ஒரு அளவு உண்டு.



என்.வரதராஜன்
மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் திரையரங்க உரிமையாளர்கள் மிரட்டப்படுவதால், சன் பிச்சர்ஸ் தயாரித்த ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தை திரையிட முடியவில்லை. இதுகுறித்து சன் பிச்சர்ஸ் நிறுவனம், அரசுக்கு புகார் அளித்துள்ளது. திரைப்படம் தயாரிப்பதும், வெளியிடுவதும் பண்பாட்டு-ஜனநாயக உரிமைகளில் ஒன்று. இதனை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமைகளில் ஒன்று.
ஆனால், இவ்வுரிமையை அப்பட்டமாக மறுக்கும் வகையில் படத்தை வெளியிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களை மிரட்டியுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் பாதுகாப்பு கோரியுள்ளளது. அதை பரிசீலித்து பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக, பட நிறுவனம் அளித்த புகார் ‘வேண்டுமென்றே அரசின் மீது பழி சுமத்துவதற்காக கொடுக்கப்பட்டது’ என்று முதல்வர் கூறியிருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கையை தடுப்பதற்கு பயன்படாது.
எனவே, ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தை மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிட பாதுகாப்பு செய்திட வேண்டிய கடமை தமிழக அரசுக்கே உள்ளது என்பதை மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
["சன் பிக்சர்ஸ்'' நிறுவனம் தயாரித்த படத்தை வெளியிடுவது குறித்து பிரச்சினைகள் முடிவுற்று, அந்தப்படம் அனைத்து இடங்களிலும் திரையிடப்பட்டு விட்டதாக அவர்கள் பத்திரிகைகளிலேயே செய்திகளும் வந்த பிறகு, இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.வரதராஜன் கண்டன அறிக்கை விடுத்துள்ளாரே?

பட்டியலில் தங்கள் கட்சியின் பெயர் விடுபட்டு விடக்கூடாதே என்பதற்காக அந்த அறிக்கை விடப்பட்டிருக்கலாம்.
கேள்வி பதில் அறிக்கையில் கலைஞர்]


தா.பாண்டியன்
மதுரையில் சன் பிக்சர்ஸ் திரைப்படத்தை திரையிடக் கூடாது என திரையரங்குகளுக்கு மிரட்டல் வருவதாக சன் டிவி நிர்வாகம் பேக்ஸ் மூலம் புகார் அளித்திருப்பதை, வேண்டுமென்றே கொடுத்த புகார் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறாரே?
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட தியேட்டர் அதிபர்களை கேட்டாலே இதற்கு பதில் கிடைக்கும். மதுரையில் நடக்கும் விஷயங்களை நான் சொல்லித்தான் மக்கள் அறியவேண்டும் என்ற நிலை இல்லை. மக்களே அறிவார்கள்.


விஜயகாந்த் பேட்டி
இது ஜனநாயக நாடு. மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேரு போன்ற தலைவர்கள் போராடி வாங்கி தந்த சுதந்திரம் இப்போது இல்லாதது போல உள்ளது. இன்று மதுரையில் ஒரு தனிநபரின் அராஜகத்தால், காதலில் விழுந்தேன் படத்தை திரையிட முடியவில்லை என்பது எந்த அளவுக்கு கொடுமையான நிலை. முறைப்படி சென்சார் போர்டுக்கு சென்று வந்த திரைப்படத்தை திரையிடுவதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். அவர் கூறியது தற்போது என்ன ஆனது?
‘காதலில் விழுந்தேன் படம் 4, 5, 6 வாரங்கள் ஓடுமா? இந்தப் படத்தை திரையிட்டுக் கொள்ளுங்கள், ஆனால், இதற்கு பிறகு வேறு படங்களை திரையிட முடியாமல் தொல்லை கொடுப்போம்’ என்று திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டுகிறார்கள். இதனால், தங்கள் தொழில் பாதிக்கும் என்று ‘காதலில் விழுந்தேன்’ படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் பயப்படுகின்றனர். தமிழக முதல்வரை அனுபவம் உள்ளவர் என்று கூறுகின்றனர். ஆனால், சுதந்திர நாட்டில் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை இருப்பது, அசிங்கம்தானே. ஒரு தனிநபர் சட்டத்தை கையில் எடுப்பது எவ்வளவு பெரிய அசிங்கம். இது யாருக்கு அசிங்கம்? அராஜகம் செய்ததால் இருக்க முடியும் என்று வருகிற தலைமுறையை எண்ண வைத்து விடும். எனவே, தொழில்கள் சுதந்திரமாக நடக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விஜய டி.ராஜேந்தர் அறிக்கை
காதலில் விழுந்தேன் திரைப்படத்தை திரையிட விடாமல் யாரும் தடுக்கக் கூடாது. மாவட்ட கலெக்டர், காவல் துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். இதைப் போன்றே, எந்த ஒரு படத்தையும் திரையிடுவதற்கு எல்லோருக்கும் சுதந்திரம் வேண்டும். இதை தடை செய்வது கண்டிக்கத்தக்கது. நம் நாட்டில் கருத்து சுதந்திரம், தொழில் சுதந்திரம் உள்ளது. யாராக இருந்தாலும் தொழில் சுதந்திரத்தை தடுக்கக் கூடாது.




சன் பிக்சர்ஸ் அறிக்கை
சன் பிக்சர்ஸின் ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தை மதுரை-ராமநாதபுரம் ஏரியாக்களில் திரையிட முடியாமல், திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்படுவது குறித்து சன் பிக்சர்ஸ் அளித்த புகாருக்கு பதிலாக, தமிழக அரசு விளக்க அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதில், தணிக்கை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட படங்களை வெளியிட எந்த தடையும் இல்லை என்று அரசு பொத்தாம் பொதுவாக கூறியிருப்பது, தனது பொறுப்பிலிருந்து அரசு விலகி கொள்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியது. தமிழக அரசின் அந்த அறிக்கைக்கு பதிலளித்து சன் பிக்சர்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு, முதல்வர் பதிலளித்துள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டருக்கும், மாவட்ட எஸ்.பி.க்கும் நேற்றே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். அதற்காக சன் பிக்சர்ஸ் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வர் அத்துடன் விடாமல், ‘சன் பிக்சர்ஸ் நேரில் சென்று புகார் தராமல் உள்துறை செயலாளருக்குபேக்ஸ் அனுப்பியிருப்பது ஏதாவது குதர்க்கம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்’ என்று குறிப்பிட்டு, ‘மதுரையில் எந்த ஒரு திரையரங்கு உரிமையாளரோ, விநியோகஸ்தரோ தங்களை யாராவது மிரட்டினார்கள் என்றோ, எச்சரித்தார்கள் என்றோ புகாரோ, கோரிக்கைகளோ யாரிடமும் கூறவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற மாவட்டங்களைபோல் இன்றி, மதுரையில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுவது முதல்வருக்கு தெரியாததல்ல. சில குறிப்பிட்ட நபர்களுக்கு அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக புகார் தந்தால், அதை காவல் துறை ஏற்பதில்லை, மாறாக புகார் தந்தவர்களையே மிரட்டுவதும் மதுரையில் நடப்பது எல்லோரும் அறிந்த விவகாரம்.
ராயல் கேபிள் விஷன் மீது மதுரை போலீஸ் கமிஷனரிடமும் காவல் நிலையத்திலும் சன் டிவி ஏற்கனவே புகார்கள் கொடுத்தபோது, அந்த கவர்களைக்கூட பிரிக்காமல் அவை திருப்பி அனுப்பப்பட்டன. இப்படி திருப்பி அனுப்பப்பட்டதற்காக மதுரை காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மே கண்டனம் தெரிவித்திருக்கிறது என்பதை சுட்டுக்காட்ட விரும்புகிறோம்.
சன் டிவி நிர்வாகம் கொடுத்த ஒரு புகார் மீதுகூட மதுரை காவல் துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தை தங்கள் திரையரங்குகளில் வெளியிட சம்மதம் தெரிவித்து ஒப்பந்தம் போட்டவர்கள் கடைசி நேரத்தில் மிரட்டப்பட்டதும் தாங்கள் திரைப்படத்தை வெளியிட இயலாமையை பட உரிமையாளருக்கு தெரிவித்து, அதன் பிறகே உள்துறை செயலாளருக்கு பேக்ஸ் மூலம் புகார் அனுப்பி, படத்தை மதுரை - ராமநாதபுரம் ஏரியாவில் வெளியிட பாதுகாப்பு கோரப்பட்டது.
வேண்டுமென்றே புகார் கூறுவதற்காக, அரசியல் விளம்பரம் தேடிக் கொள்ளவும், திரையுலகத்தினரிடையே பரிதாபத்தை சம்பாதிக்கவும் ஏதோ ஒரு புகாரை எழுதி, அதையும் உள்துறை செயலாளரிடம் நேரில் கொடுக்காமல் பேக்ஸ் மூலம் அனுப்பிவிட்டு, ஏன் எங்களை அழைத்து விசாரிக்கவில்லை, ஆகா! கடமை தவறிவிட்டது இந்த அரசு என்றெல்லாம் சன் பிக்சர்ஸ் அறிக்கையில் எழுதி கொண்டிருப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் புகாரை, வேண்டுமென்றே கொடுத்த புகாரென முதல்வரே அறிவித்தால் உரிய நியாயம் எப்படி கிடைக்கும்? அதிகாரிகள் எப்படி செயல்படுவார்கள்? தந்தி மூலம் அனுப்பப்படும் புகாரையே நீதிமன்றங்கள் ஏற்று, அதையே வழக்காக விசாரிக்கும் காலமிது.
மேலும், சன் டிவிக்கு எதிராக ஒரு நாளிதழ் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரை ஏற்று, உடனடியாக புகார் கொடுத்தவரை அழைத்து விசாரித்து, அவர் கூறியதன் அடிப்படையில் சன் டி.வி.க்கு நோட்டீஸ் அனுப்பி, அதன் ஆசிரியரை அழைத்து விசாரிக்க எடுத்த முயற்சிகள் இதில் ஏன் எடுக்கப்படவில்லை?
சன் பிக்சர்ஸ் அரசியல் விளம்பரம் தேடிகொள்ள எந்த அவசியமும் இல்லாத நிலையில், முதல்வர் இப்படி குற்றம் சாட்டியிருப்பது ஏன் என்று புரியவில்லை. நாங்கள் இப்போதும் முதல்வரை வேண்டுவதெல்லாம் இதுதான். ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தை மதுரை- ராமநாதபுரம் மாவட்டங்களில் வெளியிட இயலாதது குறித்து, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் முறையிடப்பட்டுள்ளது. அந்த படத்தை திரையிட ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள் கையப்பமிட்ட ஒப்பந்த பத்திரங்களும் தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் காட்டப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் தந்த விளக்கத்தில் அரசு கேபிள் டிவிக்கு சன் குழுமத்தின் இணைப்பு தரப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார். ஸ்டார், சோனி, ஜீ (தஞ்சை தவிர) குழுமங்கள் இணைப்பும் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தரப்படாதபோது, சன் டிவியை மட்டும் மீண்டும், மீண்டும் குறிப்பிட்டு குற்றம் சொல்வது ஏனென்று எங்களுக்கு புரியவில்லை. இதன் தொடர்பான வழக்கு, தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள போது, ‘காதலில் விழுந்தேன்’ திரைப்பட வெளியீட்டோடு இதனை இணைப்பது ஏன் என்றும் எங்களுக்கு விளங்கவில்லை.
கடந்த ஓராண்டுக்கு மேலாக சன் டிவி நிறுவனத்தையும், அதனுடன் தொடர்புள்ளவர்களையும் குறி வைத்து தாக்கும் சிலரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாங்கள் எங்கள் தொழிலை நடத்திட வழி வகை செய்யுமாறு முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.


கலைஞர் அறிக்கை
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்தை வெளியிடுவது குறித்து, தமிழக அரசின் சார்பில் ஒரு விளக்கம் தரப்பட்டது. அதற்குப் பிறகும், அரசின் அறிக்கை வேடிக்கையாகவும் வியப்பாகவும் உள்ளது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதில் அறிக்கை கொடுத்துள்ளார்களே?
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிட இருந்த படத்தை, திரையிடக்கூடாது என்று மிரட்டி யவர்கள் யார்? மிரட்டியதற்கு என்ன ஆதாரம் என்று அவர்கள் தெரிவிக்க வேண்டும். உள்துறைச் செயலாளருக்கு புகார் செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கை விட்டுக்கொ ண்டிருந்தால் போ தாது. தேவை உள்ளவர்கள்தான் புகாரை நேரில் எடுத்துச்சென்று, விளக்கங்களையும் ஆதாரங்களையும் தரவேண்டும். மதுரையில் மிரட்டியிருந்தால், அங்கே உள்ள காவல்துறை அதிகாரிகளிடமோ, கலெக்டரிடமோ நேரில் அல்லவா புகார் சொல்லவேண்டும்?
அதை விட்டுவிட்டு, ஏதோ ஒரு புகாரை எழுதி அனுப்பி விட்டு, அரசு கடமை தவறி விட்டது என்று அறிக்கை எழுதிக்கொண்டு இருப்பது பிரச்னையைத் தீர்ப்பதற்காக அல்ல, ஏதாவது குதர்க்கம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான். மதுரையில் எந்த திரையரங்க உரிமையாளரும் இதுவரை தங்களை யாராவது மிரட்டினார்கள் என்றோ, தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்றோ புகார் கூறவில்லை.
அரசின் மீது வீண்பழி சுமத்துவதை, திட்டவட்டமாக மறுப்பதாக, அரசு அறிக்கையில் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்று சன் நிறுவனத்தினர் சொல்லியிருக்கிறார் கள். அவர்களுக்கு எல்லாமே வேடிக்கையும் விந்தையும்தான். அரசின் மீது அவர்கள் வீண்பழி சுமத்துவதாக, அரசு அறிக்கையில் சொல்லவே இல்லை.
Ôஉரிய பாதுகாப்பு வழங்குகிறோம்; நீங்கள் திரையிடுங்கள்Õ என அரசு கூறவில்லை என்றும், சன் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிட உரிமை உண்டு என்று அரசு கூறியிருப்பதிலிருந்தே, அதிகாரிகள் அதற்கான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றுதான் பொருள்


மாறம் பிரதர்சுக்கு ஞாநி கடிதம்

மாறன் பிரதர்சுக்கு:

உங்க சன்.டி.வி. தயாரிச்ச நாக்கமூக்கா நான்சென்ஸை மதுரையில ரிலீசாக வுடாம, உங்க பங்காளி அழகிரி மிரட்டித் தடுத்துட்டாருன்னு புலம்பிகிட்டே இருக்கீங்களே. அவுரு அப்பிடி செஞ்சிருந்தார்னா அது எப்பிடி தப்பாவும்? குடும்பக் கலாசாரத்தைத்தானே அவரும் பின்பற்றினதா அர்த்தம்?

உங்கப்பா சொன்னதைக் கேக்காம, எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு உங்க தாத்தா துரத்தினாரே, அந்த 1972 சமயத்துல, `உலகம் சுற்றும் வாலிபன்'னு ஒரு படத்தை எம்.ஜி. ஆர் எடுத்து வுட்டாரு. அப்பலாம் நீங்க ஸ்கூல்ல இருந்திருப்பீங்க. ஸ்டாலின் மாணவர் அணியில இருந்தார். அழகிரி என்ன பண்ணிகிட்டிருந்தார்னு தெரியல.

உங்க தாத்தாவோட பல கைத்தடிகள்ல ஒருத்தர் மதுரை முத்து. அவுரு மதுரையில படம் ரிலீசானா நான் புடவை கட்டி வளையல் போட்டுக்கறேன்னு சவால்லாம் விட்டாரு. தமிழ்நாடு பூரா படத்துக்கு போஸ்டர் ஒட்ட விடல; பல தியேட்டர்காரங்களையும் விநியோகஸ்தர்களையும் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாதுன்னு உங்க தாத்தா ஆளுங்க மிரட்டிக் கெடுபிடிசெய்யறாங்கனு, அவரோட 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆர் அப்ப குற்றஞ்சாட்டினாரு. ஆனா அவர் படம் ரிலீசாகி ஓஹோன்னு எல்லா ஊர்லயும் ஓடிச்சு.

அழகிரியும் மதுரை முத்து இல்ல; நீங்களும் எம்.ஜி.ஆர்.இல்ல. அதான் இப்ப உங்க பிரச்னை.

தம்பி தயாநிதி மத்திய மந்திரியா இருந்தப்ப, ராஜ் டி.வி.யில செய்தி ஒளிபரப்பக் கூடாதுன்னு அவர் இலாகாதானே நிறுத்திச்சு? காரணம் கேட்டப்ப, சில லட்ச ரூபா பெறுமானம் உடைய லைசன்ஸ் தொகையை அந்த டி.வி. தாமதமா கட்டினாங்க; அதனால் லைசன்சே ரத்துன்னு சொல்லிட்டீங்க. அதே சமயத்துல அரசாங்கத்தை 500 கோடி ரூபாய் ஏமாத்தி, அதுக்காக கோர்ட்டுல 150 கோடி ரூபாய் அபராதம் கட்டற தண்டனை வாங்கின ரிலையன்ஸ் கம்பெனியோட செல்போன் லைசன்ஸை ரத்து பண்ணுவீங்களான்னு நிருபர்கள் கேட்டாங்க. இதுக்கெல்லாம் போய் லைசன்ஸை ரத்து செய்ய முடியாதுன்னு தம்பி சொன்னது ஞாபகம் இருக்குங்களா ?

தேர்தல் முடிஞ்சப்பறமும் விஜய் டி.வி.யில `மக்கள் யார் பக்கம்` நிகழ்ச்சி வெற்றிகரமா நடந்துகிட்டிருந்தப்ப, ஸ்டார் டி.வி. அதிகாரிகளைக் கூப்பிட்டு, `ஒண்ணு இதை ஸ்டாப் பண்ணுங்க; இல்லாட்டி மொத்தமா ஸ்டாரையே மூடிடுவோம்னு' தம்பியோட அமைச்சகத்துலருந்து சொன்னதுயார்ன்னு ஞாபகம் இருக்குங்களா?

அரசியல்ல இதெல்லாம் சகஜம் இல்லீங்களா? அதுவும் குடும்ப அரசியல்ல? அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.

ஒரு யோசனை சொல்றேன். மத்தவங்க எடுக்கற படத்தைலாம் சன் டி.வி. வாங்குது இல்லே? சன் டி.வி. எடுக்கற படத்தை மட்டும் ஜெயா டி.வி.க்கு வித்துடுங்க. அவங்க அதை, மதுரைக்கு மட்டும், இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, திரைக்கு வரவே முடியாத படத்தை டி.வி.யில காட்டி சாதனை பண்ணிடுவாங்க. அழகிரியால அதை நிறுத்த முடியாது இல்லீங்களா?





காதலில் விழுந்தேன் படத்தின் விளம்பரம் இரண்டு நிமிஷத்துக்கு ஒரு முறை சன் டிவியில் வருவதால் இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தாலும் கிடைக்கலாம்.

4 Comments:

Anonymous said...

tata sky was threatened by the then minister - missing in gnani's article

Anonymous said...

idly check the kalaingar tv website

http://www.kalaignartv.co.in/

got a flash news abt kalaingar tv vijayadasami programs.

Anonymous said...

where all these people went when PMK threatened not to release BABA? There are hues and cries that rajini didnt do anything against PMK and surrendered to JJ.
He could have created a huge fuss about that issue that time but he didnt. He let his ego go down (yes he had ego that time) and solved the problem quickly (padam thaniya paduthukichu athu vera vishayam..thats due to very weak screenplay) but blaming rajini's guts for all those issues are ridiculous. First buisness is buisness. Any others responsibility ends when he signs off that film's schedule but it is not the case with superstar. Thats why he is the only superstar.

I see the hogenakkal issue in the same way. Previously it was JJ and now it is karnataka veriyans.

For this dud movie kathalil vizhunthen, everybody making hue and cry and none of these guys came and talked when BABA and KUSELAN are in trouble. Same case when VIRUMANDI is also in trouble, none of these people opened their month. Kamal met jaya and solved the issue. Kamal also follewed the footsepts of rajini when such problem got created.

Anonymous said...

காதலில் விழுந்தேனுக்கு குரல் கொடுக்கும் கம்யுனிஸ்ட்கள்தான்
தஸ்லீமாவை துரத்தியவர்கள்.
இப்போது திமுகவிற்கு எதிரணியில்
இருப்பதால் கூச்சல் போடுகிறார்கள்.
கூட்டணியில் திமுகவுடன் இருந்திருந்தால் வாயைத் திறக்க
மாட்டார்கள்.

திமுக,அதிமுக-இரண்டும் ஆட்சியில்
இருக்கும் போது இது போன்ற
அராஜகங்கள் வாடிக்கை.