பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 24, 2008

உண்மையைச் சொல்லிவிடுகிறேன் - ஹரன்பிரசன்னா

பிரசன்னா சில உண்மைகளை சொல்லியிருக்கிறார் :-)

உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இட்லிவடை யார்யார் என்று எனக்குத் தெரியும். அதன் சுட்டி இங்கே

சரி சரி, சும்மா ஒரு காமெடி செஞ்சு பார்த்தேன். மேல படிங்க.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு பதிவின் பின்னூட்டத்தில் பெயரிலி, கிருபா இட்லிவடையாக இருப்பாரோ என்கிற தொனி வர எழுதியிருந்தார். என்னடா எல்லாரும் இட்லிவடை என்று பேசிக்கொள்கிறார்களே என நினைத்து, அப்போதுதான் முதன்முதலாக இட்லிவடையைப் படித்தேன். அப்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது மட்டுமே இட்லிவடையை வாசித்தேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இட்லிவடையை தொடர்ச்சியாகப் படிக்கிறேன்.

இட்லிவடையின் டைமிங் நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்தது. சில சமயம் அசர வைத்திருக்கிறார். சில சமயம் இந்த டைமிங் சொதப்புவதும் உண்டு என்றாலும், பெரும்பாலும் அவரது நகைச்சுவை ரசிக்கத்தக்கதாகவே இருந்து வந்திருக்கிறது.

கிருபா இட்லிவடையாக இருக்குமோ என நினைத்துத்தான் நான் இட்லிவடையைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் வரும் அரசியல் கருத்துகளையும் கிருபா எழுதுவாரா என்கிற சந்தேகம் வர, அடுத்தடுத்து நான் இட்லிவடை என்று பலரையும் சந்தேகப்பட்டேன். என் லிஸ்ட்டில் கிருபா, பத்ரி, பாஸ்டன் பாலாஜி, தேசிகன், பாரா, ரஜினி ராம்கி எனப் பலரும் வந்து போனார்கள். இப்படி நான் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்த ஒரு நேரத்தில், கிருபா என்னிடம் நாந்தான் இட்லிவடையா எனக்கேட்டுவைத்தார். அட இப்படியும் ஒரு சந்தேகம் இருக்கா என ஆச்சரியப்பட்டு போனேன். நான் யாரையெல்லாம் சந்தேகப்பட்டேனோ எல்லோரும் என்னை சந்தேகப்பட்டிருக்கிறார்கள் எனபதும் எனக்குத் தெரிந்தது. இணையத்தில் ஒரு வலைப்பதிவு தொடங்கக்கூட நாலு பேரிடம் உதவி கேட்கும் என்னால் இட்லிவடையை நடத்தமுடியும் என்று நிறைய பேர் நினைப்பது குறித்து எனக்கே பெருமை தாங்கவில்லை. :)

பின்பு இட்லிவடையிடம் அடிக்கடி சாட் செய்ய ஆரம்பித்தேன். சாட்டில் அவரும் நாந்தான் இட்லிவடையாக இருக்குமோ என சந்தேகப்படுவதாகக்கூறி தனது கொழுப்பைக் காண்பித்தார். இட்லிவடை பலர் சேர்ந்த குழு என்கிறார்கள். நான் சாட் செய்யும்போது பல விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். ஆனால் எதுவுமே வெளியில் கசிந்ததில்லை. பலபேர் சேர்ந்த குழு என்றால் இது எபப்டி சாத்தியம் என்பது தெரியவில்லை. ஒருவேளை சாட்டில் ஒருவர் மட்டுமே வருவாரோ என்னவோ.

இட்லிவடையால் எனக்குத் தனிப்பட்ட முறையில் நேர்ந்த துன்பங்களும் அதிகம். மனுஷ்யபுத்திரன் நாந்தான் இட்லிவடையா என்று கேட்டார். அவருக்கு இணைய பதிவுகள் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் லக்கிலுக்கும் நாந்தான் இட்லிவடை என்று ஆதாரங்களே காட்டிவிட்டார். மாயவரத்தானும் நாந்தான் இட்லிவடை என்றார். அட ராமா என்று நான் அசந்தே போய்விட்டேன். எல்லாருக்கும் ஒவ்வொரு காரணம். எல்லாமே தற்செயலாக நிகழ்ந்தவை.

பேங்காக் ரமேஷ் என்கிற பெயரில் ஒரு மடல் (உளியின் ஓசை தொடர்பாக) வந்திருந்தது. அது அடுத்த நாள் இட்லிவடையில் பிரசுரமாகியிருந்தது. உடனே மாயவரத்தான் நாந்தான் இட்லிவடை என நினைத்துவிட்டார். பின்புதான் எனக்கே தெரியும், மாயவரத்தாந்தான் பேங்காக் ரமேஷ் என்று! அவரிடம் சொன்னபோது ரொம்ப கொஞ்சமாக என்னை நம்பினார்!

இட்லிவடையின் பதிவுகளுக்கு வரும் முதல் கமெண்ட் என்னுடையது என்பதால் நான் இட்லிவடையாக இருக்கலாம் என்பது லக்கிலுக்கின் முடிவு. இலைக்காரன் எஃபெக்டாக இருக்கலாம் என நினைத்து இனிமேல் விளக்கம் கொடுக்கக்கூடாது என அப்படியே விட்டுவிட்டேன்.

இப்போது அந்த சஸ்பென்ஸ் உடையப்போகிறது. அப்போது என்னைப்போய் சந்தேகப்பட்ட நண்பர்களெல்லாம் சிரித்துக்கொள்வார்கள். நினைத்துப்பார்த்தால் ஒரு ஜாலியாகத்தான் இருக்கிறது.

இட்லிவடையின் பதிவுகள் வலதுசாரித் தன்மை கொண்டவை என்கிறார்கள். இடதுசாரிகளை விமர்சித்து, அடிப்படை வாதங்களை விமர்சித்து, முற்போக்கை விமர்சித்து எழுதினால் எப்படியும் ஹிந்து ஆதரவு முத்திரை வந்துவிடும். இட்லிவடைக்கும் அதே முத்திரைதான் கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தில் தமிழ் வலைப்பதிவில் இட்லிவடை செய்திருக்கும் பங்கு மிகவும் முக்கியமானது. முற்போக்கு என்கிற முத்திரைக்காக எழுதாமல், இணைய வாழ் இலங்கைப் பதிவர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக போலியாக எழுதாமல் மனதில் பட்டதை எழுதியதற்காக இட்லிவடை என்றும் பாராட்டிற்குரியது.

இட்லிவடை யாரென்று வெளியில் தெரிந்துவிட்டால், அதன்பின்பு இட்லிவடையை மூடிவிடுவதே நல்லது. அப்போது இந்த தளம் வெளிக்கொண்டுவரும் களம் இல்லாமல் போகும். இது ஒரு பெரிய இழப்பே. ஆனாலும் இட்லிவடையில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை நானும் அறிய ஆவலாக இருப்பதால் சீக்கிரம் அவர்களின் புகைப்படத்தை வெளியிடக் கேட்டுக்கொள்கிறேன்.

ஐந்து வருடங்களைச் சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துகள்.

நன்றி,
ஹரன்பிரசன்னா

(இட்லிவடையை புகழ்ந்து எழுதவேண்டிய என் தலைஎழுத்தை நொந்துகொண்டே இதை அனுப்புகிறேன்.)

பிரசன்னா நீங்க இவ்வளவு அப்பாவியா ?
மேலே இப்படி எழுதியிருக்கீங்க

கிருபா இட்லிவடையாக இருக்குமோ என நினைத்துத்தான் நான் இட்லிவடையைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் வரும் அரசியல் கருத்துகளையும் கிருபா எழுதுவாரா என்கிற சந்தேகம் வர, அடுத்தடுத்து நான் இட்லிவடை என்று பலரையும் சந்தேகப்பட்டேன்.


பத்ரி பதிவில் கிருபாவின் கமெண்டை பாருங்க இங்கே இவருக்கா அரசியல் தெரியாது ?

3 Comments:

லக்கிலுக் said...

//ஆனால் லக்கிலுக்கும் நாந்தான் இட்லிவடை என்று ஆதாரங்களே காட்டிவிட்டார்.//

அப்படிங்களா? எங்கே ஆதாரத்தை காட்டினேன்? :-(

எனக்கே தெரியவில்லையே?

ஹரன்பிரசன்னா said...

லக்கி, ஆதாரம் என்றில்லை, ஹிண்டு என்று நீங்கள் சொல்லியிருந்த ஹிண்ட்டுகளின் பட்டியல் இங்கே: http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_7345.html#comment-3725029327712055045

இன்னும் ரெண்டு நாளில் தெரிந்துவிடும். யாரந்த இட்லிவடை என்று.

வருங்கால முதல்வர் said...

இங்கே பாருங்க யாருன்னு தெரியும்