பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 23, 2008

இணைய உலக சூப்பர் ஸ்டார் இட்லி வடையா? - முனீஸ்வரி கடிதம்

முனீஸ்வரி வேறயாரும் இல்லை, உஷா மேடம் தான் :-)

அன்பின் இட்லி வடை,
முனீஸ்வரி எளுதி கொள்வது. (இந்த உபாய குசேலனு, நீலாம்பரி எல்லாம் நமக்கு பளக்கம் இல்லே ) பொறந்த நாளு வாழ்த்துகள் கண்ணுங்களா! நம்ம தோஸ்து ஒருத்தரு, காலங்கார்த்தால ஒரு மெயிலு போட்டு இருந்தாரு. இது மேரி, நம்ம இட்லி வடைக்கு பொறந்த நாளு., வலையுல எலக்கண படி, நாலு பேரு கிட்ட, வாள்த்து வாங்கி போட போறாரு. ஒன் மெயில் ஐடி அவுரு தெரியாதாம், ஒன்னையும் எளுத சொன்னாருக்கா, அப்படின்னாரு. அதுக்கு இன்னான்னு தொடங்கிட்டேன்.

இன்னாத்தான் காப்பி பேஸ்ட் போட்டாலும் மை டியர் பாடிகார்ட் மூனீஸ்வரன் தான் என் பேவரெட்டு. ஆனா ஒரு விஷ்யம், ஒடனே மூனீஸ்கிட்ட பதில் கேட்டு வாங்கிப் போடு அப்பதான் நல்லா இருக்கும். காப்பி, பேஸ்ட் மேட்டர் எல்லாம் என்னிய மேரி, நோகாம நோம்பு கும்பிடுவங்களுக்கு சரி, ஆனா இப்ப எல்லாம் இட்லி வடை டல் அடிக்கிறாமாத்ரி கீதே! இன்னா மேட்டரூ? மூனீஸ்க்கு எளுதர கடுதாசுக்கூட டல்லு அடிக்குது? சுள்ளுன்னு இருக்க தேவலே? எலக்கியம், எலக்கியவாதிங்க, பதிவு அரசியலு, விசயகாந்து, கனிமொளின்னு கலந்து கட்டி, நக்கலு நையாண்டின்னு அடிச்சி ஆடி எம்மா நாளு ஆச்சு?

சென்னைக்கு போற சொல்ல எல்லாம், ஆராவது நாந்தான் இட்லி வடைன்னு நீங்க நெனைக்கீறீங்களான்னு கேப்பாங்க. இதுவர மூணு பேரு கேட்டுட்டாங்க. இதுல இன்னா டமாஸ்ன்னா, அந்த மூணு பேரையும் நா இட்லி வடை லிஸ்டுல சேக்கவேயில்லே. ஒருவேள அவனுங்கதான் இட்லி வடையா? இன்னாமோ எனிக்கு எதுக்கு அது எல்லாம்? கெழக்கா இருந்தா என்ன? மேக்கா இருந்தா என்ன? படிக்க நல்லா கீது! கண்ட்ன்யூ!

பழைய கதை, டாப்பு டென் எல்லாம் நெனப்பு வந்து ரொம்ப பீலீங்கா பூட்சுபா. பழைய ஆளுங்க, எத்தினி பேரு டாடா காட்டிட்டு பூட்டாங்க? நென்ச்சா பேஜாராகீது! அது ஒரு காலம், இன்னாமா போஸ்ட் போடுவாங்க. ஹும்!

எனிக்கும் இதே மாசம்தான் பொறந்த நாளு. நுனிப்புல் ஆரம்பிச்சி, மூணு வர்சம் ஆச்சு. எனிக்கும் இதேமேரி கேக்க இஸ்டம்தான். கமலகாசன் நெனப்பு
வந்துடுச்சு. கமலு படம் ரீலீசு ஆனதும், பெர்ய மனுஷாளுங்கள இட்டாந்து, பட்த போட்டு காமிப்பாரு. அல்லாரும் இதுதா படம், இன்னாமா எடுத்து இருக்காரு. அடுத்த ஆஸ்காரூ அவுருக்குதான்னு ஒணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டு போவாங்க. அப்பால படம் ஊத்திக்கும் அது வேற விஸ்யம். அது மேரி, கூப்பிட்டு கேட்டா அல்லாரும் நல்லாகீதுன்னுதான் சொல்லுவாங்க. நுனிப்புல் மேரி, இனிப்பான புல் ஒலகத்துல கெடையாதுன்னு சொல்லி வெச்சாங்கன்னா வெய்யி, படிக்கிறவங்க கமுக்கமா சிரிச்சிக்கினு போவாங்கன்னு பெய்மா கீது. இணைய சூப்பர் ஸ்டார் (புலிய) பார்த்து இன்னாத்துக்கு சூடு போட்டுக்கணும்? இன்னா நா சொல்றது? சரி சரி, வந்த எட்த்துல ஏந்சொந்தகதை எதுக்கு?

வர்ட்டா? இன்றும் போல் என்றும் வாள்க!
இப்படிக்கு,
முனீஸ்வரி

ஐயோ என்னால நம்பவே முடியலை :-)

11 Comments:

rajaharichandra said...

இது எந்த ஊரு பாசைங்க ஒண்ணுமே புரியல. சரி அது யாரு??? மேரி, மேரி, மேரின்னு பல இடங்கள்ல இடருது

rajaharichandra said...

இது எந்த ஊரு பாசைங்க ஒண்ணுமே புரியல. சரி அது யாரு??? மேரி, மேரி, மேரின்னு பல இடங்கள்ல இடருது

ramachandranusha(உஷா) said...

மொத்தம் ஆறு "மேரி" வந்துடுச்சுபா. மன்னிச்சிக்க.
அருஞ்சொற்பொருள் விளக்கம்
மேரி= மாதிரி

இலவசக்கொத்தனார் said...

ஆகா ஆகா! முனீஸ்வரின்னா முனீஸ்வரிதான். இன்னாமா டமில் பேசறாங்கப்பா!! சொம்மா அப்படியே காஞ்ச பாயில் கஞ்சி கொட்டின மாரி! நம்ம இவ மட்டும் சொம்மாவா? ஆனானப்பட்ட மூனீஸ்வரி கைல நீதாம்பா ஜூப்பருன்னு பேரு வாங்கிட்டாருபா!

முனீஸ்வரிக்கும் இந்த மாசம்தான் பர்த்டேவாம். அது ஆரம்பிச்சு ஆறு வருசமாவது இருக்காது? ஆனாலும் பொம்பள பிள்ளையாச்சா அதான் மூணு வருசமுன்னு வயசக் கொறைக்குது! உனக்கும் ஹேப்பி பொறந்தநாளுமே!!

ப்ரியா said...

ஒரு கவிஞர் பயங்கரமா ரசிச்சு ரசிச்சு,
"A drop of crocodile on the wall"
ன்னு இங்கிலீஷ் ல கவிதை எழுதினாராம்.
படிச்சவங்கள்ளாம் 'அது என்னங்க? எங்களுக்கு புரியலை' ன்னு கேட்டாங்களாம்.
'அட பாவிகளா...'பல்லிய'(lizard) தான் டா அவ்வளவு நுணுக்கமா எழுதி இருக்கேன்னு' சொல்லிட்டு ரொம்ப பீல் ஆயிட்டாராம்....

இங்க ஒருத்தங்க மாங்கு மாங்கு ன்னு எழுதி அனுப்பிருக்காங்க....அது பாத்து 'மேரி' யாருன்னு கேட்டுட்டீங்களே.......... :-((

'மாதிரி' ய தான் அவ்வளோ அழகா தமிழ் ல சொல்லுறாங்க.....

Super Muneeshwari...:-)

ஆயில்யன் said...

//ramachandranusha(உஷா) said...
மொத்தம் ஆறு "மேரி" வந்துடுச்சுபா. மன்னிச்சிக்க.
அருஞ்சொற்பொருள் விளக்கம்
மேரி= மாதிரி

///

ஆஹா இந்த மேரி பேசி பேசியே நான் பல இடங்கள்ல பிஸ்கட் வாங்கியிருக்கேன் :))))


நல்லா இருக்கு இட்லிவடைக்கு முனீஸ்வரி கடுதாசி :)))))

ஆயில்யன் said...

//முனீஸ்வரிக்கும் இந்த மாசம்தான் பர்த்டேவாம். அது ஆரம்பிச்சு ஆறு வருசமாவது இருக்காது? ஆனாலும் பொம்பள பிள்ளையாச்சா அதான் மூணு வருசமுன்னு வயசக் கொறைக்குது! உனக்கும் ஹேப்பி பொறந்தநாளுமே!!///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

:))

வல்லிசிம்ஹன் said...

முனீஸ்வரி, சூப்பராக் கொடுத்திட்டமே வால்த்துகளை. நாங்களும் இப்பவே இட்லிவடையும், முனீஸ்வரியும் இன்னும் அல்லாரும் சொகமா எழுதிகினு இருக்கோணும்னு அந்த முண்டாக் கண்ணி அம்மாவைக் கும்பிட்டுக்கறோம்.

முகமூடி said...

அன்பின் முனீஸ்வரி,

நா(ங்க)ந்தான் இட்லி வடைன்னு நீங்க நெனைக்கீறீங்களா? களா?? களா?? ளா??? ளா????

இப்டிக்கி,
பத்ரி (அ)
பாரா (அ)
க்ருபா (அ)
ஜெ.ராம்கி (அ)

முகமூடி

ramachandranusha(உஷா) said...

வாய்யா முகமூடி! காணாமல் போனர்கள் அறிவிப்பு ஒர்க் அவுட் ஆவுது போல :-)
சிலது அப்படிதான் ஊர் அறிஞ்ச ரகசியம் :-)))))

mugamoodi said...

காணாமல் போனர்கள் அறிவிப்பு ??

- mugamoodi (no tamil font)