பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 22, 2008

வலதுசாரிக் கருத்துள்ளவர் இட்லிவடை - பத்ரி

பத்ரி - இட்லிவடை மாதிரி அச்சு பிச்சு பதிவுகள் எழுதாமல் ஐந்து வருடத்துக்கு மேலாக ( காப்பி பேஸ்ட் ) இல்லாமல் தொடர்ந்து பல நல்ல பதிவுகளை எழுதியுள்ளார். ( அரசியல் சகவாசத்தினால் இட்லிவடை போஸ்டர் அடித்து பிறந்த நாள் கொண்டாடுகிறது )

"கல்லை மட்டும் கண்டால்" கல்லைக் கீழே போடுங்கள் என்று சந்திரனுக்கு போகும் விண்கலத்தை அழகாக விளக்கியுள்ளார் ( பார்க்க: லேட்டஸ்டாக எழுதிய சந்திரனுக்குப் போகும் விண்கலம் ) புரியாவிட்டாலும் நல்லா இருக்கு :-)

இவர் என்ன சொல்லுகிறார்..இட்லிவடை என்ற பெயர் தமிழ் வலைப்பதிவுகளில் மிகவும் பிரபலம். நான் வாரம் ஒருமுறையாவது தேடிப் படிக்கும் சில பதிவுகளில் இட்லிவடையும் ஒன்று.

இட்லிவடை யார்? அவரது வேலை என்ன? அவர் எந்த ஊரில் இருக்கிறார்? ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கிறாரா? தமிழ் ஊடகம் ஏதோ ஒன்றில் பணிபுரிகிறாரா? இவரா, அவரா என்று பல ஹேஷ்யங்கள்.

அவர் யாராக இருந்தாலும் அதுபற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை.

அரசியல் செய்திகளை நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்வது, சினிமா செய்திகளைத் தொகுத்து அளிப்பது, செய்தித்தாள்கள், வார இதழ்களிலிருந்து முக்கியமான விஷயங்களைத் தொகுத்துத் தருவது ஆகியவற்றில் இட்லிவடைக்கு நிகர் அவரேதான்.

பாடிகார்ட் முனீஸ்வரனுக்கு அவர் எழுதும் கடிதத்தில், தனது சொந்தக் கருத்துகளை முன்வைப்பது அவரது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் சொந்தக் கருத்து அதிகம் இல்லாமல், வெறும் கட் & பேஸ்டுகள் மட்டுமே அதிகமாக இருப்பது சோகம்.

இட்லிவடை, ஒரு வலதுசாரிக் கருத்துள்ளவர் என்பதே அவரது பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் காணப்படும் ஸ்லாண்டை வைத்துச் சொல்லிவிடலாம். ஆனால் அதுவும் இப்போது தெளிவாகக் காணப்படுவதில்லை.

***

இட்லிவடை தனது பதிவுகளை மேம்படுத்த சில ஆலோசனைகள்:

1. சொந்தக் கருத்தைத் தெளிவாக, ஓரிரு வாக்கியங்களிலாவது சொல்லிவிடுதல் நலம். (நான் புலி எதிரி. நான் விஜயகாந்த் ஆதரவாளன். இப்படி...) இதனால் வாசகர்கள் யாரும் ஓடிவிடப் போவதில்லை.

2. இட்லிவடையின் ஸ்பெஷாலிடி, அவரது ஹ்யூமர், நக்கல். இதை பஞ்ச் லைன்கள் மூலம் புகுத்தி ஒவ்வொரு பதிவிலும் கட்டம் கட்டி அடிக்கலாம். இதற்காகவே வாசகர் கூட்டம் பெருகும்.

3. பாடிகார்ட் முனீஸ்வரனுக்கு நீண்ட கடிதம் இல்லாவிட்டாலும் வாரம் ஒரு சிறு கடிதத்தையாவது அனுப்புதல் நலம். அதற்கு பாடிகார்ட் பதில் அனுப்பினால், மேலும் விசேஷம். நீண்ட இடைவெளி விடாமல் இதனைச் செய்தால், பதிவுகளுக்கு மேலும் மெருகு கூடும்.

4. அனானிமிடி (பெயரை மறைத்து இருப்பது) ஒருவிதத்தில் பலம் தரக்கூடியது. நன்கு தெரிந்த நண்பர்களை, முகம் காட்டுபவர்களால் விமரிசித்து எழுதுவது கஷ்டம். ஆனால் இட்லிவடை இதை தைரியமாகச் செய்யலாம். கடுமையான மொழியில்தான் விமரிசித்து எழுதவேண்டும் என்றில்லை. ஆனால் கடுமையான முறையில் செய்யலாம். உபயோகமாக இருக்கும். படிப்பவர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும்.

கடந்த ஐந்தாண்டுகள் மட்டுமல்ல, இனி வரும் நூற்றாண்டிலும் முகத்தை மறைத்து, இட்லிவடையாகவே பதிவை நடத்த வாழ்த்துகள்!

இடஒதிக்கீடு பற்றி எழுதாமல் இருந்ததற்கு ரொம்ப நன்றி பத்ரி சார் :-). நன்கு தெரிந்த நண்பர்களை விமர்சிக்க சொல்லுகிறீர்கள்.. கூடிய சீக்கிரம் உங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன்..

10 Comments:

BABU said...

Idly Vadai!
Keep up the good work!
Regards,
babu

ramachandranusha(உஷா) said...

அடுத்து யாரு, பாராவா அல்லது கிருபாவா :-)

gopi said...

இடஒதிக்கீடு பற்றி எழுதாமல் இருந்ததற்கு ரொம்ப நன்றி பத்ரி சார் :-). நன்கு தெரிந்த நண்பர்களை விமர்சிக்க சொல்லுகிறீர்கள்.. கூடிய சீக்கிரம் உங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன்..
-----------------------------------

Ha ha ha ha ha..... idhu thaan idlyvadaiyin super punch enbathu..

M Arunachalam said...

IV,

Congratulations on your blog's 5th Anniversary.

Your blog is doing fantastic service to Rajinifans like me, who don't want to spend & waste money on anti-Rajini Tamil mags & papers. Yes. Through your copy/paste service of selected articles, we are able to read (and ignore, where necessary) 'All important articles under One Roof and, most importantly, without spending a penny". Keep up the Good Work.

May I also invite you to read my blogpost "A Dummy's Guide To US Sub-Prime Crisis" in my blog KURATTAI ARANGAM in the following URL viz.,

http://hereisarun.blogspot.com/2008/10/dummys-guide-to-us-sub-prime-crisis.html

This is my attempt at knowledge-sharing on a contemporary topic of interest as to How & Why the current US Financial Crisis happened, which has been written in such a way that even non-finance & non-economics people/students can easily understand & relate to.

Arun

IdlyVadai said...

உஷா மேடம் - ஞாபக படுத்தியதற்கு நன்றி. கிருபா, பாராவிடம் அடுத்து கேட்கிறேன். :-) அனுப்பினால் போடுகிறேன்.

வேற யாரு உங்க லிஸ்டில் இருக்கிறார்கள் ?

Anonymous said...

வேறு யார் லிஸ்டில்- ரஜனிராம்கி.
இன்னும் சிலரிடமும் கேட்கலாம்:உதாரணம்
குழலி(பாமக),லக்கிலுக்,அசுரன்,
வித்யா

Anonymous said...

'இட்லிவடை என்ற பெயர் தமிழ் வலைப்பதிவுகளில் மிகவும் பிரபலம். நான் வாரம் ஒருமுறையாவது தேடிப் படிக்கும் சில பதிவுகளில் இட்லிவடையும் ஒன்று.'

இது எங்கேயோ குத்துதே :).

Anonymous said...

விஜயகாந்தைக் கேட்கலாம், ராமதாசை கேட்கலாம், நரேந்திர
மோடியை கேட்கலாம், மாறன்
பிரதர்சை கேட்கலாம்.
யாராவது இட்லி-வடையை
(நான் சாப்பிடுகிற இட்லி-வடையைச் சொன்னேன்) பிடிக்காது என்பார்களா.

இட்லி ஓகே வடை ஒகே இல்லை,எண்ணெய்
ஆகாது என்று அன்புமணி சொன்னாலும் சொல்லலாம்:).

கொடும்பாவி-Kodumpavi said...

இட்லி வடை ஸ்பெஷல் என்று கட்டம் கட்டி பதிவு போட்டுகிட்டு இருக்கீங்க..
மெகா சீரியல் பார்க்கும்போது சில விளம்பரம் வர்றது போல நடப்பு செய்தியும் போடுங்க..
ரொம்ப எல்லாரும் உங்கள உசத்தியா பேச பேச ‘தல'கனம் உங்களுக்கு தெரியாமலே உங்க தலைக்குள்ள ஏறிட போகுது..!
கட் & பேஸ்ட் பத்தி கூட ஒரு பதிவு போடுங்க..

மாலன் said...

வலதோ இடதோ கருத்துள்ளவர்கள் பாக்கியவான்கள்.காயங்களைப் பொருட்படுத்தாமல், அல்லது அவற்றிற்கு சிரிப்பூ பூசிக்கொண்டு ஐந்தாண்டுகள் விடாமல் பதிவு எழுதுவது டெண்டுல்கரின் சாதனைக்கு நிகரானது.தொடருங்கள்
அன்புடன்
மாலன்