பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 14, 2008

தமிழ் சினிமா - எனக்கு நானே :-)

'நமக்கு நாமே' திட்டம் மாதிரி இது 'எனக்கு நானே'(meme) அழைப்பு என்று சந்தேகபடுபவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது :-). பாஸ்டன் பாலா, ஹபி அழைப்பிற்கு நன்றி.

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

எனக்கு நினைவு தெரிந்த போது சினிமா பார்க்க ஆரம்பித்தேன். ஐந்து, ஆறு வயது என்று துல்லியமாக சொல்லத் தெரியவில்லை.

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

உத்தமபுத்திரன், ஆயிரத்தில் ஒருவன், கர்ணன் எது முதலில் பார்த்தேன் என்று தெரியவில்லை. உத்தமபுத்திரன் பார்த்த போது சிவாஜி ஏதோ கொடியை (மரக் கொடி கட்சி கொடி அல்ல) பிடித்துக்கொண்டு தாவும் போது ஃபிலிம் அறுந்தது ஞாபகம் இருக்கிறது. சரி செய்து படம் ஆரம்பித்த போது பாதி படம் காணாமல் போய்விட்டது.

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?
1. எந்த சினிமாவாக இருந்தாலும், அது ஆரம்பிக்கும் முன்பு நியூஸ் ரீல் போடுவார்கள் என்று உணர்ந்தேன். ( அந்த நியூஸ் ரீல் இதுவரை ஒரு முறை கூட அறுந்தது கிடையாது).
2. தமிழ் சினிமா ஹீரோயின்கள் எல்லாம்... சரி அந்த டாபிக் இப்ப வேண்டாம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

குசேலன். அதற்கு முன் தசாவதாரம், கமல் மடியில் அமர்ந்து பார்த்தேன் ( அவ்வளவு கிட்ட )

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தனம். நல்ல வேளை தியேட்டரில் பார்க்கவில்லை என்று உணர்ந்தேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

தண்ணீர் தண்ணீர்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

1. சிவாஜி - சினிமா ஹீரோ - அரசியல் ஸீரோ
( சிவாஜி - நடிகர் திலகம், நம்ம சூப்ப்ர் ஸ்டார் இல்லை )
2. கேப்டன் - ராமதாஸுக்கு கொடுத்த கடுக்காய்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

விக்ரம் - கடைசி காட்சியில் பாராசூட்டில் இறங்கும் கமல்-லிஸி...அந்த காட்சி ஒட்ட வைத்திருப்பது தெரியும். அட நமக்கு கூட தொழில்நுட்பம் தெரிகிறதே என்று வியந்தேன்..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பேசும்படம், பொம்மைக்கு பிறகு வாசிப்பதில்லை. தற்போது குமுதம் நடுபக்கம் - போட்டோ+கமெண்ட்ஸ் பார்ப்பதுண்டு. சிறு பத்திரிக்கையில் வரும் கட்டுரைகளை கவனமாக படிக்காமல் விட்டுவிடுகிறேன்.

7. தமிழ்ச்சினிமா இசை?

இளையராஜா வந்த பிறகு எம்.எஸ்.வியை ரசிக்க ஆரம்பித்தேன், ஏ.ஆர்.ரஹ்மான் வந்த பிறகு இளையராஜாவை ரசிக்க ஆரம்பித்தேன். ('ரீதி கெளளை' ராகத்தில் யார் இசையமைத்தாலும் பாடல் ஹிட் என்றும் தெரிந்துக்கொண்டேன்)

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு. அதிகம் தாக்கியது தெலுங்கு காஸ்ட்டியூம், சண்டையும்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இந்த கேள்வியை Choice-ல் விடுகிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்றைக்கும் தமிழ் சினிமாவின் success எது என்று யாருக்கும் தெரியாது. இந்த ஒரே காரணத்திற்காக தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் சினிமாவிற்கு கதை, வசனம், ஒரு பாட்டு, இல்லை யாரிடமாவது அட்லீஸ்ட் ஒரு போன் கால் வந்தால் போதும் என்று இருக்கிறார்கள். சினிமா முடியவில்லை என்றால் அவர்களின் அடுத்த இலக்கு 'சாகித்திய அகதெமி.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அப்துல் கலாம் கண்ட கனவு நனவாகும்.

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

இட்லிவ்டை Followers 94 பேரில் யார் வேண்டுமானாலும் :-)

6 Comments:

KaveriGanesh said...

யாருபா இந்த இட்லி வடை?

காவேரி கணேஷ்

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

Hope you won't release this comment:-)

Pa. Ra!!!!!!!!!!!!!!!!!!

too many calling cards.

இட்லி வடை ரசிகன் said...

தான் யாருங்கறத யார் கேட்டாலும் சொல்லமாட்டரு அதே சமயம் தான் யாருங்கறத யார் தடுத்தாலும் சொல்லணும்னா சொல்லாம விடமாட்டாரு. இட்லி வடை.

srinivasan said...

I love visiting Idlyvadai site first thing in the morning.

Anonymous said...

mokka

Anonymous said...

பாஸ்டன் பாலா இவகுழுவில் உண்டு என்பதால் இது நமக்கு நாமேதான்.