பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 16, 2008

பலத்த மழை பெய்தாலும் - இளைஞரணி மாநாடு நடக்கும் - கேப்டன்

தே.மு.தி.க. இளைஞரணி மாநாடு: பலத்த மழை பெய்தாலும் வெற்றிகரமாக நடக்கும்: விஜயகாந்த் அறிவிப்பு

இளைஞர்கள் தங்களது ரசனைகேற்ப மேடையின் வலதுபுறமும் இடது புறமும் சட்டசபை மற்றும் பார்லி மெண்ட் முகப்பு தோற்றத்தை அமைத்துள்ளனர். மாநாட்டு மேடையில் மாநில நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், உள்ளிட்ட 500 பேர் உட்காருவார்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியும் மேடையில் இவ்வளவு பேரை அமர வைத்தது இல்லை. ( அப்ப கீழே கூட்டம் இருக்குமா ? ) மாநாடு நடைபெறும் போது பலத்த மழை பெய்தாலும் நானும் போக மாட்டேன். தொண்டர்களும் போகமாட்டார்கள். மாநாடு வெற்றிகரமாக நடக்கும். ( மழை பெய்தால் இலவச குடை என்று ஒரு போடு போடுங்க தலைவா ) இலங்கை பிரச்சினையில் எங்களது அறிக்கையை அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானமாக போட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ( அட அந்த வெத்து வேட்டு அறிக்கை உங்களுடையதா?) எம்.பி. பதவியை ராஜினாமா செய்வோம் என்கிறார்கள். அவர்கள் பதவி காலம் 6 மாதம் தான் உள்ளது. மத்திய மந்திரிகள் அப்படியே தான் இருப்பார்கள். இலங்கை பிரச்சினைக் காக ராமேஸ்வரத்தில் நடிகர்- நடிகைகள் நடத்தும் பேரணி பொதுக்கூட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். திடீரென அறிவித்திருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை.

2 Comments:

பாட்டாளி said...

அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானமாக தங்களது அறிக்கையை வெளியிட்டதாக கூறிக்கொண்ட விஜயகாந்த்தின் ஒரே ஒரு ஒப்பாரியோடு செய்தி வெளியிட்ட இட்லி வடைக்கு ஸ்பெசல் தேங்க்ஸ்ப்பா!

யோசிப்பவர் said...

போன வார துக்ளக்கில் வெளிவந்த தேமுதிக தலைவரின் பேட்டியில், எந்தவொரு விஷயத்திலும் தெளிவான சிந்தனை அவருக்கு இல்லை என்பதை கவனித்தீர்களா?

அப்பொழுதே பதிவு போடுவீர்கள் என்று நினைத்தேன். அப்பொழுது அப்ஸ்கான்ட் ஆகிவிட்டீர்கள்!