பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 22, 2008

இட்லி, வடை டாட் காம்யூகி சேதுவின் "நையாண்டி'

தினமலர் பக்கவாதியம் பகுதியில்....

சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில், "ஆடியோ - விஷுவல் மீடியாவில் எழுதுவது' குறித்த பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது. "நையாண்டி தர்பார்' புகழ் யூகி சேது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.தனது நிகழ்ச்சிகளில் நையாண்டி செய்த சேது, விழாவிலும் தனது நையாண்டியை தொடர்ந்தார்.தகவல் தொழில்நுட்பம் பெருமளவு வளர்ந்துள்ளது. குறிப்பாக இணையதளம் வெகுவாக வளர்ந்திருக்கிறது. இட்லி அட் இட்லி டாட் காம், வடை அட் வடை டாட் காம் வரை இணையதளங்கள் உள்ளன. நடிகை ரம்பாவிற்கு கூட தொடை அட் தொடை டாட் காம் எனவும், நடிகை சிம்ரனுக்கு இடை அட் இடை டாட் காம் எனவும், கமலுக்கு லிப் டு லிப் டாட் காம் எனவும் இணையதளங்கள் உள்ளன.

"முன்னாள் பிரதமர் நரசிம்மராவிற்கு கூட இணையதளம் உள்ளது. அதற்கு பெயர் "காம்' டாட் காம். நரசிம்ம ராவ் 24 மொழிகள் தெரிந்தவர். அவர் 24 மொழிகளில், மவுனமாக இருப்பது எப்படி என தெரிந்து வைத்திருந்தார்' என கலக்கிக்கொண்டே போனார்.யூகியின் இந்த நையாண்டி பேச்சு, மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தது.

யூகி சேது முன்பு நையாண்டி தர்பாரரில் ஒரு கலக்கு கலக்கினார். அப்பறம் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டார். சில மாதங்களுக்கு முன்னர் சிறந்த நடிகர், நடிகை, காமெடியன் யார் என்ற பொட்டலத்தை திறக்கும் திரைவிழாவில் காம்பெயரிங் செய்யதார். சிலசமயம் அவர் நகைச்சுவை கொஞ்சம் வரம்பு மீறும் ஆனால்
ரசிக்கலாம்.


3 Comments:

யோசிப்பவர் said...

தலைவரே,
லேட்டஸ் அரசியல் பதிவு எதுவும் கிடையாதா?
நானெல்லாம் அரசியல் கத்துக்கிட்டதே இட்லிவடை படிச்சுத்தானே!! கொஞ்ச நாளா படிச்ச அரசியலெல்லாம் சுத்தமா மறந்து போன மாதிரி ஒரு பிரம்மை!!

Anonymous said...

என்எச்எம் ரைட்டர் என்கிற அருமையான கண்டுபிடிப்பிற்காக பத்ரி சேஷாத்ரிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சில காலமாகவே நான் நினைத்த வண்ணமிருந்தேன். இந்த வலைப்பூ அதற்கு மிக நல்ல வாய்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.நன்றி நன்றி பத்ரி அவர்களே... சின்ன வயதில் தமிழ் தட்டெழுத்துப் பயிலாத என்னைப் போன்ற பலருக்கு என்எச்எம் ரைட்டர் உதவியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Anonymous said...

என்எச்எம் ரைட்டர் என்கிற அருமையான கண்டுபிடிப்பிற்காக பத்ரி சேஷாத்ரிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சில காலமாகவே நான் நினைத்த வண்ணமிருந்தேன். இந்த வலைப்பூ அதற்கு மிக நல்ல வாய்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.நன்றி நன்றி பத்ரி அவர்களே... சின்ன வயதில் தமிழ் தட்டெழுத்துப் பயிலாத என்னைப் போன்ற பலருக்கு என்எச்எம் ரைட்டர் உதவியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.