பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 24, 2008

இட்லி வடைன்னா யாரு? - ஐகாரஸ் பிரகாஷ்

ஐகாரஸ் யார் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லும் அது பிரகாஷ் தான் என்று.

சில வருடங்களுக்கு முன்பு இவர் பேரை கேட்ட போது அட இது என்ன புதுமையான பேரா இருக்கே என்று கூகிளில் தேடினேன்.

எனக்கு தெரிந்து ஐகாரஸ் என்ற பெயர் சென்னையில் இரண்டு இடத்தில் இருக்கிறது ஒன்று - நம்ம ஐகாரஸ் பிரகாஷ் இன்னொன்று கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சைடில் ( கலைஞர் டிவி எதிர் புறம் ) மேனகா கார்ட்ஸ் இருக்கும் அங்கே ஒரு போர்டில் ஐகாரஸ் என்று எழுதியிருக்கும். ( பிரகாஷ் தான் இந்த போர்டை வைத்தாரா என்றூ தெரியாது )

இட்லி வடைன்னா யாரு?

இப்பவெல்லாம் பரவாயில்லை, ரெண்டல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு, நீங்கதானே இட்லிவடை என்று முகத்துக்கு நேராகவே கேட்டவர்கள் அனேகம் பேர். இல்லை என்று சொல்லி போரடித்துப் போய், ஒரு ஜாலிக்காக, இட்லிவடை நானாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று பூடகமாகப் பேசிக் குழப்பி ( இப்ப, தலைவர், அர்சியலுக்கு வந்தாலும் தடுக்க முடியாது, வராட்டியும் பிடிக்க முடியாதுன்னு, பேரிக்கால உக்காந்துகினு ஸ்டண்ட் அடிக்கிறார் இல்லையா, அது போல ), விடுவதுண்டு. கடந்த ஒரு வருடமாக இந்த டார்ச்சர் இல்லை. எனக்குத் திருமணமாகி சோபனராத்திரி கொண்டாடின அன்றிரவு கூட, இட்லி வடைப் பதிவுகள் அப்லோட் ஆகிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த லாஜிக்கை கப்பென்று பிடித்துக் கொண்டவர்கள், 'ஓ அவனா நீய்யி?' என்று இப்போதெல்லாம் கேட்பதில்லை.

இட்லிவடையின் பதிவுகளை, அது துவங்கிய நாளன்றே படிக்கத் துவங்கியது நினைவில் இருக்கிறது. தொட்டுத் தொடைச்சுப் பார்த்தால், இருந்ததே,40 சொச்சம் பதிவுகள் தான். எல்லோரும் புனிதர்களாக இருந்த காலத்தில், மசாலாவுக்கு, அப்போது வேறு வழி இல்லை. அதே சீசனில் தான், பெயரிலி, ரமணீதரன் என்ற பெயரில் பட்டயைக் கிளப்பிக் கொண்டிருந்தார். என்றாலும், அவர் பதிவுகளில், தான் யாரென்ற தடயத்தை விட்டுச் செல்வார் ( நான் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்). பெயரில் என்பது அவரா இவரா என்று ஆளாளுக்கு ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில், தான் யார் என்பதை, புகைப்படத்துடன் பிரசுரம் செய்து, பின்னர் அந்த புனைப்பெயருடனேயே பதிவுலகில் தொடர்ந்தார்.

நன்கு அறியப்பட்ட ஒருவர், ஒரு புனைப்பெயரில் எழுதும் பொழுது, தான் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளும் உந்துதல் இருக்கும். முகமூடி போட்டுக் கொண்டு எழுதியவர்களுக்கு இந்த உளவியல் புரியும். :-)புனைப்பெயருக்குள் இருக்கும் பிரபலம் யார் என்ற விவாதங்கள் கிளம்பும் பொழுது, அந்த உந்துதல் அதிகரிக்கும். ஒரு நாளில் அதுவாகவே வெடித்து விடும். ஆனால் இந்த மாதிரி டெம்ப்ட் ஆகாமல், ஒரு மர்மயோகி போல, ச்சே... கர்மயோகி போல, என் பணி செய்திகள் கொடுப்பதே என்று இருக்கும் இட்லிவடையின் temperament அசாத்தியமானது. ஹாட்ஸ் ஆஃப். ( இட்லி வடையின் நிசப்பெயர், வெங்கடாசலம் அல்லது குப்புசாமி என்று இருந்தால், எனக்கு ஆச்சர்யம் ஏற்படாது )

தமிழகத்தில் இருக்கும் பல லட்சக்கணக்கான அரசியல் பாமரர்கள் போல, நானும், ' மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக' என்ற நிலைப்பாடு கொண்டவனாதலால், இட்லிவடையின், அரசியல் inclination, எனக்கு அத்தனை உவப்பானதல்ல. பெரும்பான்மையான அரசியல் செய்திகளை சாய்ஸில் விட்டு விட்டு, அது தவிர்த்த, சினிமா வம்பு, இலக்கிய சர்ச்சை, விவகாரமான பேட்டிகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றைத்தான் விரும்பிப் படிப்பதுண்டு.

தமிழகத்தின் அரசியல் ஆர்வம் அபாரமானது. கலை, இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடு ஏதும் இல்லாமலிருப்பவர்கள் கூட, அரசியல் பேச்சுக்களில், தீவிரமாகக் கலந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அனேகமாக அனைவருக்குமே ( நல்ல துட்டு சம்பாதித்துச் செட்டில் ஆகி, எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன எனும் விட்டேத்திகள் மற்றும் பாலிடிக்ஸ்? யக்.. இட் சக்ஸ் மேன் என்று பீட்டர் விடும் சினிக்குகள் தவிர்த்து ) ஏதேனும் அரசியல் அபிப்ராயம் இருக்கிறது. உற்சாகமாகப் பேசுகிறார்கள், தேடித்தேடி தகவல்களைப் படித்து விட்டு, மணிக்கணக்காக விவாதிக்கிறார்கள், ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மென்னியைப் பிடிக்கிறார்கள், வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அமைதியாக இருந்துவிட்டு, ஓட்டுச்சாவடியில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை டிப்பாசிட் இழக்க வைக்கிறார்கள், தொங்கு சட்டசபை எல்லாம் அமையவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். தமிழனின் இந்தக் குணம் தான், பெரும்பான்மையாக அரசியல் மட்டுமே பேசும் இட்லி வடையின் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம்.

இட்லிவடையின் ஐந்தாண்டுகளில் நான், அத்தளத்துக்கு அடிக்கடிச் சென்று வாசித்தது, தமிழகத்தின் பொதுத் தேர்தலின் பொழுதுதான். அந்த உழைப்பு, அரசியல் ஆர்வமுள்ள புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு எத்தனை தூரம் உதவியாக இருந்தது என்று நண்பர்கள் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பொதுவாக வலைப்பதிவுகளில் ஆர்வமில்லாத என் நண்பர்கள் சிலர் கூட, இட்லிவடையை தொடர்ந்து வாசிப்பதை அறிவேன்.

விருந்தினர் பதிவு எழுதிப் பழக்கமில்லைங்கறதாலே, எப்படி முடிக்கிறதுன்னு தெரியலை.

என்னதான் இருந்தாலும், அஞ்சு வருஷம் என்பது அபார சாதனை. தொடர்ந்து சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்.

பிரகாஷ்

கொசுறு: Icarus is a very rare male first name and is not used as a surname (source: 1990 U.S. Census).

நன்றி very rare male - பிரகாஷ் :-)


5 Comments:

enRenRum-anbudan.BALA said...

As usual, ஐகாரஸ் நயமா எழுதியிருக்காரு.

இ.வ,
அப்றம், ஐகாரஸ்னா mythical being என்று ஒரு meaning இருக்கு.
(Greek mythology) son of Daedalus; while escaping from Crete with his father (using the wings Daedalus had made) he flew too close to the sun and the wax melted and he fell into the Aegean and drowned, ஆனா, நம்ம பிரகாஷ் மூழ்கற ஆள் கிடையாது. அல்லாருக்கும் பிடிச்ச பார்ட்டி கூட :)

Also,
1. Icarus is the official publication of the Division for Planetary Sciences of the American Astronomical Society !

2.There is something called Icarus effect which is related to Un-assisted Self- Levitation.
கீழுள்ள சுட்டியில் இருக்கும் வீடியோவைப் பார்க்கவும் !

http://www.icaruseffect.com/home.html

அதோடு, ஐகாரஸ் வெரிலாக் (Icarus Verilog) என்று ஒரு EDA மென்பொருள் கருவி உள்ளது. It is a simulation & synthesis tool used in Hardware circuit design. எனது இந்தப் பதிவை வாசித்தால், சிமுலேஷன் மற்றும் ஸின்தஸிஸ் ஆகியவற்றுக்கு சுமாரான விளக்கம் கிடைக்கும் :)

http://balaji_ammu.blogspot.com/2007/12/star10-chip.html

ஐகாரஸ் பெருமை போதுமென்று நினைக்கிறேன் ;-)

எ.அ.பாலா

இலவசக்கொத்தனார் said...

ஐயா ஐகாரஸாரே!!

//எனக்குத் திருமணமாகி சோபனராத்திரி கொண்டாடின அன்றிரவு கூட, இட்லி வடைப் பதிவுகள் அப்லோட் ஆகிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த லாஜிக்கை கப்பென்று பிடித்துக் கொண்டவர்கள், 'ஓ அவனா நீய்யி?' என்று இப்போதெல்லாம் கேட்பதில்லை.//

அதான் நாங்க இவ ஒரு குழுன்னு சொல்லறோமே. அன்னிக்கு ஒரு நாள் மட்டும் வேணா நீங்க இவ இல்லைன்னு நம்பறோம்.

//பெரும்பான்மையான அரசியல் செய்திகளை சாய்ஸில் விட்டு விட்டு, அது தவிர்த்த, சினிமா வம்பு, இலக்கிய சர்ச்சை, விவகாரமான பேட்டிகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றைத்தான் விரும்பிப் படிப்பதுண்டு.//

ஆக மொத்தம் இப்போ எல்லாம் இவ படிக்கிறது இல்லை அப்படின்னு நல்ல அழகா சொல்லிட்டீங்க!

//இட்லிவடையின் ஐந்தாண்டுகளில் நான், அத்தளத்துக்கு அடிக்கடிச் சென்று வாசித்தது, தமிழகத்தின் பொதுத் தேர்தலின் பொழுதுதான். //

அதாவது போன வரியோட சேர்த்துப் படிக்கும் பொழுது தேர்தல் டயத்தில் இவ தந்தது எல்லாம் அரசியல் பதிவு இல்லை சினிமா வம்பு அல்லது நகைச்சுவை துணுக்கு அப்படின்னு நல்லாப் புரியுது!

//விருந்தினர் பதிவு எழுதிப் பழக்கமில்லைங்கறதாலே, எப்படி முடிக்கிறதுன்னு தெரியலை.//

அவனவன் எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாம இருக்கான். நீர் எப்படி முடிக்கிறதுன்னு தெரியலைன்னு சொல்லறீரு. ஒரு வேளை நீர்தான் உண்மைத்தமிழனா?

கொடும்பாவி-Kodumpavi said...

அன்புடன் பாலா,
இப்படி ஒத்த வார்த்தைக்கு இம்புட்டு மெனகெட்டு அழகா விளக்கம் சொல்றீங்க. கைல எப்பவும் என்சைக்ளபிடியா வச்சிகிட்டு இருப்பீகளா?

ILA said...

//அதான் நாங்க இவ ஒரு குழுன்னு சொல்லறோமே//
அதுவும் இருக்கலாம், ஆனா Schedule பண்ணிட்டு கண்ணாலம் கட்டியிருக்கலாம். யார் கண்டா?

Sridhar Narayanan said...

இ.கொ.


நல்லாப் புடிக்கறீங்க லாஜிக்கை ----

//அதாவது போன வரியோட சேர்த்துப் படிக்கும் பொழுது தேர்தல் டயத்தில் இவ தந்தது எல்லாம் அரசியல் பதிவு இல்லை சினிமா வம்பு அல்லது நகைச்சுவை துணுக்கு அப்படின்னு நல்லாப் புரியுது!//

:-))