பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 14, 2008

இலங்கை பிரச்சனை - தமிழக எம்.பி.க்கள் கூண்டோடு ராஜிநாமா ?

இலங்கையில் 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா - அனைத்து கட்சி கூட்டத்தில் பரபரப்பான தீர்மானம்

இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் விவாதிப்பதற்காக, சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில், இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை 2 வாரத்துக்குள் கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்யப்படுவார்கள் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கையில் சுமுகமான நிலை ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு ராஜினாமா செய்யும் முடிவை நாங்களும் ஆதரிக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு கூறினார்.

தமிழக் சட்டசபை எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜிநாமா என்று சொல்லுவார்களா :-)

12 Comments:

bikki said...

//தமிழக் சட்டசபை எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜிநாமா என்று சொல்லுவார்களா :-)
//

கனவு காணும் வாழ்கையாவும் கலைந்து போகும் மேகங்கள்..

நீங்க நல்லா தானே இருக்கீங்க ஏன் இப்படி நடக்காததை எல்லாம் கேக்குறீங்க..?

பூச்சாண்டியார் said...

அதெப்படி சொல்லுவாங்க.. இப்ப ஆட்சிய இழந்தா அவ்ளோதான்.. இருக்குற பிரச்சனையில மீண்டும் டெபாசிட் வாங்கறதே கஷ்டம்.

Anonymous said...

நல்ல முயற்சி!! எதிபார்த்ததுதான்..ஏனெனில் மின்சாரப் பிரச்சினையை மறந்து மக்கள் ஓட்டு போடுவாங்கன்னு நினைகிராப்ல போல..

எது எப்படியோ நல்ல முடிவு, வரவேற்கத் தக்கது....

Anonymous said...

MP seat is going to go anyway within 6 months & by now whatever investment made would have been recovered by the MPs. So, MP Resignation Stunt Drama can be organised now.

But, MLA story is different. It has got another two & half years validity. It will take at least another year or so to RECOVER the investments made to get/win the MLA seat. How can that stunt be staged now?

Anonymous said...

மிக எச்சரிக்கையாக 39 தமிழக எம்பிக்கள் 1 பாண்டிச்சேரி எம்பி என 40 லோக் சபா மெம்பர்கள் ராஜினாமா என்று சொன்னார்களே

ராஜ்ஜிய சபா எம்பிக்கள் ஏன் ராஜினாமா செய்யக் கூடாது

கனிமொழி ராஜ்ய சபாவில் இருப்பதாலா

அதென்ன இரண்டுவாரம் கெடு. சண்டை முடிஞ்சிறும் அப்புறம் நான் தான் நிறுத்த சொன்னேன்னா

Kalyan said...

Kanimozhi has already submitted the resignation dated 29oct.. Atleast if some good thing is happening on this srilanka issue..

Be fair and support.. itz not that u have to criticize for every damn thing

அச்சுப்பிச்சு said...

கருணாநிதிக்கு எதெல்லாம் ஆகிவந்த கலையாயிற்றே! தேர்தலுக்கு தேதி குறிக்குமுன்பு தான் அவருக்கு ஆவேசம் வருவது வழக்கம். பி.ஜே.பி. அரசிலிருந்தும் இப்படித்தான் கடைசி நேரத்தில் கழட்டிக்கொண்டார். இப்போது நடக்கவிருப்பதற்கு இது அச்சாரம்.

எனது வருத்தம் இது தான். அண்ணாவைப்போல் இரு வருடங்களுக்குள் அற்பாயுசில் போகாமல் கடவுள் (?) இவருக்கு தீர்க்காயுசைக்கொடுத்திருக்கிறார். ஒண்டிக்கு ஒண்டி வரியா என்று கேட்கும் Petty Politician level-ல் இருந்து நாடு வியக்கும் ஒரு Statesman ஆவதற்கான வாய்ப்புகள் அநேகம் வந்தன அவர் வாழ்க்கையில். பலர் அப்படி மாறியிருக்கிறார்கள். ஆனால் இவரோ குடும்பநலனை விட்டு மாறுவேனா என்று அறுபதுகளிலேயே நின்றுகொண்டு, ச’மூத்திர’ நெடியில் கவிதைகளாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

மக்களைப்போன்ற தலைவன் தானே அமைவான்? We deserve only Karunanidhis and Jayalalithaas!

Anonymous said...

//Kanimozhi has already submitted the resignation dated 29oct.. Atleast if some good thing is happening on this srilanka issue.. //

Post dated resignation

good comedy

Ravi said...

Achipichu had made a very apt comment. What else can be said? I think he has summed it up. Thanks Achipichu for a very nice comment.

அச்சுப்பிச்சு said...

எனக்கு இந்த வயதானவர் மீது சிறிதும் காழ்ப்புணர்ச்சியில்லை.தனக்கு கிடைத்த வாய்ப்புகளைக்கொண்டு இன்னொரு லெவலுக்கு போக எந்த முயற்சியும் எடுக்கவில்லையே என்ற ஆதங்கம் தான்.

இந்தியாவில் வேறெங்காவது முதலமைச்சர் பேரில் சானல் இருக்கிறதா? அதில் மானாட மயிலாட போடுகிறார்களா? வேறெந்த அரசும் கேபிள்வாலாவாக மாறி கட்சித்தொண்டர்களுக்கு இலவச டி.வி. அளிக்கிறதா? ஒரு ரூபாய் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு பக்கத்து மாநிலங்களுக்கு கள்ளக்கடத்தல் செய்யப்படுகிறது. பலசரக்குக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகள் வாயிலடித்து விட்டு, அரசு மஞ்சள்பொடியும், ஜீரகமும் விற்கலாமா? He doesn't give a serious thought about what his people, who voted him to power, really want.

அதிகாலையில் எழுந்திருப்பவர், கண்டவர்களுக்கும் பதில் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கலாமா? He has to be above petty-politics. வருத்தமாக இருக்கிறது. இந்த வருடம் சாகித்ய அகாடெமி பரிசுக்காகவும் முயற்சிப்பதாகத் தெரிகிறது. Quo Vadis? நாம் எங்கே போகிறோம்?

Anonymous said...

//இந்த வருடம் சாகித்ய அகாடெமி பரிசுக்காகவும் முயற்சிப்பதாகத் தெரிகிறது//

Even a Barath Ratna

gopi said...

இருக்கிறது. இந்த வருடம் சாகித்ய அகாடெமி பரிசுக்காகவும் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

-----------------------------------

Aamaam, kudukkalenna, adhukkum oru KAVIDHAI ezhudhuvaar !!!