பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 02, 2008

பூர்ணம்விஸ்வநாதன் உடல் தகனம்


இந்தியா விடுதலையான செய்தியை முதலில் அறிவித்த குரலுக்கு சொந்தக்காரரான நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் நேற்று காலமானார். அவருக்கு வயது 87.

சினிமாவுக்கு வரும்முன் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

இளைஞராக இருந்தபோது பூர்ணம் என்ற பெயரில் நாடக கம்பெனியை நடத்தியதால் அவரது பெயருடன் பூர்ணம் ஒட்டிக்கொண்டது.

எழுபதுகளில் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கியவர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார்.

அவர் குடும்பத்துக்கு இட்லிவ்டையின் அனுதாபங்கள்

அவருடைய பழைய பேட்டி கீழே...


'When Nehru himself cried while speaking, what about an ordinary news reader like me?'

Poornam Viswanathan Poornam Viswanathan cleared his throat, controlled his emotions and announced India's freedom to the outside world in a radio broadcast. At five thirty on the morning of August 15, 1947, young Viswanathan became the first Indian to make that external broadcast from All India Radio to East Asia.

That moment has stood still in his memory since. Fifty years after that historic event, 76-year-old Viswanathan spoke about those memories and the turbulence of pre-Independent days with Shobha Warrier.

When did you know that you were to broadcast the news of India's independence?

I was a news reader for All India Radio from 1945 onwards. You can call it a strange coincidence, rather a divine coincidence. When the duty list was announced, my name was scheduled for the night of August 14. The broadcast began at 5.30 in the morning for the East Asian listeners and I was to read the first bulletin. It was my great fortune, I must say. How did I feel then? I felt elated.

Was there a lump in your throat then?

As a news reader I am not supposed to feel any any lump at all. I controlled my feelings till I finished the news bulletin. Later I cried with joy.

Really?

Yes, I cried for two reasons. One, India was free; secondly, I was selected to read the news bulletin announcing India's independence.

Do you remember the first line?

"India is a free country," was the first sentence. This was followed by repeating Nehru's Tryst with destiny speech.

Jawaharlal Nehru Did you read Nehru's speech in English or in Tamil?

In Tamil.

What it difficult to translate Nehru's words?

No, no, not at all. For one thing, Nehru spoke in simple words. Gandhiji spoke in yet more simpler words. We had been translating Gandhiji's prayer speeches regularly. I translated Nehru's speech with great joy and read it with even greater joy.

We have heard that Nehru had tears in his eyes when he made the speech. Those who assembled there also wept. Did you feel the same way when you read the speech in Tamil?

It is true that all those assembled wept with joy. When Nehru himself cried while speaking, what about an ordinary news reader like me? But if I cried while I reading the news, the lines would have smeared. So, I controlled my emotions. I still cherish the moment, a moment that I will never experience again.

Did the bulletin begin with "India is a free country," or the regular, "This is All India Radio..?

Though it was such an important occasion and formal announcements were not required, the listeners needed to know where the broadcast was coming from. So, the "All India Radio" announcement was necessary.

Was that also in Hindi or Tamil?

In 1947, we only said, "All India Radio." Akashwani came only later. So I read, "All India Radio, seythikal vasippathu Poornam Viswanathan...

Where were you at midnight?

Mahatma Gandhi We were at home listening to Nehruji's speech over the radio. I knew I had to leave home at three in the morning for the five thirty bulletin. Normally, we used to go to Birla House, collect Gandhiji's previous day's speech at the prayer meeting and proceed to the radio station. There it would be translated into various Indian languages and read. But on the day of Independence, Gandhiji was not present in Delhi. He was in Naokhali. So, we went straight to the All India Radio station.

I stayed in Lodhi colony then. During the day, I used to go to the Broadcasting house via Birla Road. I could have chosen some other route but I went that way just for the pleasure seeing Gandhiji. Even during winter Gandhiji used to lie on a cot on the lawns of the Birla House. Whenever I passed the area, I could see him.

Did you ever go near him?

Yes, I did. I attended at least ten prayer meetings of Gandhiji.

What was the experience of those prayer meetings?

Gandhiji talked on very important subjects. He referred to many national issues, the duties and obligations of all Indian citizens, how we should behave, etc. One speech would not resemble any other. We could sense his sincerity in all the speeches.

You were very young then. How much did Gandhiji and his speeches influence your development?

When I first saw Gandhiji, I was pleasantly surprised to see that his skin was like the skin of a child. Soft and beautiful. There were no wrinkles on his skin or hands even though he was very old.

Did you ever touch his hands?

Oh, no. I only touched his feet. In those days, almost every educated young man wanted to join the freedom movement. If I had gone my way, I would have become freedom fighter. Since I was a student, my elders did not let me join the movement. But my mind was always there.

When I look back, the only regret I have is that I did not join the movement in a big way. All of us had only one thought in our mind, our country and its freedom. The kind of devotion we had for our country could not be explained.
( source: rediff )

6 Comments:

பாரதி மணி said...

மறைந்த பூர்ணம் அவர்கள் எனக்கு ஐம்பது வருடகால நண்பர்.

தில்லி வானொலி செய்திப்பிரிவில் இவருடன் தர்மாம்பாள், ராமநாதன் (நடிகர் சரத்குமாரின் தந்தை),வெங்கட்ராமன் போன்றோர் பணியாற்றினர். டி.வி. வராத அந்தக்காலத்தில், தமிழ்நாட்டில் இவர்கள் குரல் பிரசித்தம். இவரது தங்கை பூர்ணம் லட்சுமி ஆ.இ. ரேடியோ தென்கிழக்காசிய ஒளிப்பரப்பில் தயாரிப்பாளராக இருந்தார்.

பூர்ணம் தில்லியில் செளத் இந்தியன் தியேட்டர்ஸ் குழுவில், நாலுவேலி நிலம், பிரஸிடென்ட் பஞ்சாட்சரம், கோமதியின் காதலன், அண்டர் செக்ரட்டரி போன்ற நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

இவருக்கு சகோதரர்கள் பூர்ணம் சோமசுந்தரம் (மாஸ்கோ ரேடியோ), எழுத்தாளர் உமாசந்திரன் (Father of DGP Nataraj IPS).

பூர்ணம் என்பது நெல்லை மாவட்டத்தில் பிறந்த இவரது குடும்பப்பெயர்.

எனக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. சுஜாதா எழுதிய எல்லா நாடகங்களிலும் இவர் சென்னையில் நடித்த பாத்திரங்களை நான் தில்லியில் செய்திருக்கிறேன்.

பலருக்கும் தெரியாத உண்மை: இவர் ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். தில்லியில் இவர் எழுதிய பல ஓரங்க நாடகங்களில் இவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டு வந்த ‘சுடர்’ இவரது ஒரங்க நாடகங்கள் இல்லாமல் வெளிவந்ததில்லை. சென்னை வந்தபின் அவர் ஏனோ எழுத்தைத் தொடரவில்லை.

பாரதி மணி

IdlyVadai said...

பாரதி மணி தகவலுக்கு நன்றி.

ஒரு டவுட்: பாரதி படத்தில் பாரதிக்கு அப்பாவாக நடித்தவரா நீங்கள் ?

Anonymous said...

"எனனதிது !" இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை.

"கேளடி கண்மணி" "வறுமையின் நிறம் சிவப்பு" "வருஷம் 16" (கார்த்திக்கின் தாத்தா) அப்புறம் கமலின் கிளாசிக் "மஹாநதி" மறக்க முடியுமா?

"அமரர்" சுஜாதா அவர்கள் இவருக்காகவே நாடகம் எழுதியது, எத்தனை உண்மையான பாத்திரங்களை கண் முன் நிறுத்தியுள்ளார்.

இவ்வருடம் 2008 ல், முதலில் சுஜாதா அவர்கள், தற்போது "பூர்ணம்" சார். "காலனே" உனது கொடூரத்தை நிறுத்திக் கொள்(!??)

போய்ட்டு வாங்க பூர்ணம் சார் ! நாடகமாக, நீங்கள் "வாழ்ந்திருக்கும்" திரைப் பாத்திரங்களாக எங்கள் நெஞ்சத்தில் நிலைத்திருப்பீர்கள்.

"அம்மா, பரதேவதை ! எங்கள் 'பூர்ணம்' விஸ்வநாதன் சாரை அங்கே "பத்திரமாக" பார்த்துக்கொள்.

இப்படிக்கு,

ஆழ்ந்த துக்கத்துடன் "பூர்ணம்" சார் ரசிகன்.

பாரதி மணி said...

ஆம் அவனே தான்! ‘நான் அவன் இல்லை’யென்று பொய் சொல்லமாட்டேன்!

பாரதி மணி

Cinema Virumbi said...

திரு பாரதி மணி அவர்களே,

தமிழ்நாட்டில் மெரீனாவின் 'தனிக்குடித்தனம்', 'ஊர் வம்பு ' போன்ற நாடகங்களுக்குப் பிறகு 'கும்பலே கொண்டாட்டம்' என்ற ஒரு நாடகத்தைப் பூர்ணம் தானே எழுதி கூத்தபிரானுடன் நடித்தார். நகரத்தார் குடும்பச் சூழலில் எழுதப்பட்ட அந்த நாடகம் ஏனோ அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லை!

சினிமா விரும்பி

பாரதி மணி said...

நன்றி, சினிமா விரும்பி. இந்தத்தகவல் எனக்குத் தெரியாது.

தொண்ணூறுகளில் மத்திய சங்கீத நாடக அகாடெமி இவருக்கு சிறந்த நாடக நடிகருக்கான விருதையளித்து, தன்னை கெளரவித்துக்கொண்டது.

ஏழு மாதங்கள் முன்பு மேலே போன சுஜாதா எழுதி, தயாராக வைத்திருக்கும் புது நாடகத்தில் நடிக்கத்தான் பூர்ணம் போயிருக்கிறார்!

பாரதி மணி