பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 15, 2008

பசியில் இந்தியா எந்த இடம் ?

உலக அளவில் இந்தியா உணவு தானிய உற்பத்தியில், அதை ஏற்றுமதி செய்வதிலும் முன்னனியில் இருக்கிறது. நடப்பு 2006-07-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 209.2 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே இந்தியா பசிகொடுமையில் உலக அளவில் 66 ஆம் இடத்தில் இருக்கிறது. ( 66th among 88 developing countries)
வாஷ்ங்டனில் 2008 Food Policy Research Institute (IFPRI) ரிப்போர்டில், 33 நாட்டில் பசி கொடுமை ஒரு முக்கிய பிரச்சனையாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் அடங்கும்.

இந்தியாவில் 17 முக்கிய மாநிலங்களில் மத்திய பிரதேசம் மிக மோசமான நிலமையில் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பசிக்கொடுமை முற்றிலும் இல்லாமல் இல்லை என்பது கசப்பான உண்மை.

தேர்தலில் நாம் தேர்ந்தடுக்கும் உறுப்பினர்கள் முக்கால்வாசி பேர் உருப்படியாக எதுவும் செய்வதில்லை, இவர்களை தேர்ந்தெடுக்க ஆகும் தேர்தல் செலவை இந்த மாதிரி பசியால் வாடுபவர்களுக்கு கொடுத்தால் அடுத்த ஜன்மத்தில் மினி இட்லி ஒரு பிளேட்டாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
( படங்கள் உதவி: DNA, தினமலர் )

3 Comments:

பூச்சாண்டியார் said...

பசிய ஒழிக்கிறேன், வறுமைய ஒழிகிறேன்னு சொல்லிக்கிட்டு ஓட்டு வாங்கி எந்த அரசியல்வாதியும் ஒன்னும் செய்யல.. அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்..

rakesh said...

எல்லாம் சரிதான்! இனிமேல் ஒரு நாளைக்கு இவ்ளோ தான் பதிவிடணும்னு ஒரு லிமிட் வச்சா நல்ல இருக்கும்!

TAMILKUDUMBAM said...

என்ன கொடுமை இது?
தமிழ்நாட்டில் 1ரூபாய் அரிசி கொடுத்துமா இந்த வருமையை ஒழிக்கமுடியவில்லை?

இவன்
WWW.TAMILKUDUMBAM.COM

பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க