பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 30, 2008

இட்லிவடை செயற்குழு உறுப்பினர்கள் கூட்ட முடிவு

சின்ன வயசில் லீவுக்கு மும்பைக்கு போவதுண்டு. கிட்டத்தட்ட 2 நாள் பயணம்.(அப்பொழுதெல்லாம் ரயில் 5-6 மணி லேட் என்பது சர்வ சாதாரணம்). மும்பைக்கு சென்று பாத்ரூமில் உட்கார்ந்தால் கூட ரயிலில் போவது போன்ற ஒரு பிரமை ஏற்படும். கடந்த வாரம் இட்லிவடை பற்றி பலர்(?) எழுதியதை படித்தால் அதே போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது :-).

கலைஞருடன் ஒப்பிட்டு எழுதியதன் விளைவு - ஒரே பாராட்டு மழையில் நனைந்த எஃபெக்ட். நமிதா குத்தாட்டம் தான் பாக்கி.

நேற்று ராத்திரி சரக்கு மாஸ்டர் தலைமையில் நடந்த அனைத்து உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட உருப்படாத முடிவுகள் கீழே...

1. இட்லிவடைக்கு 'பந்த்' கிடையாது. தொடர்ந்து வேகும். யாரும் சந்தோஷப்பட வேண்டாம்.

2. கட் & பேஸ்ட் கம்மியாக இருக்கும் அல்லது இருக்காது ( சில முக்கிய பேட்டிகள், கட்டுரைகள் விதிவிலக்கு, செய்திகளை விமர்சிக்கும் பதிவுகள் அதிகம் வரும்). கட் & பேஸ்ட் வரும் பட்சத்தில், இப்போதே முன் தேதி குறிப்பிட்ட என் 'ராஜிநாமா' கடிதத்தை சரக்கு மாஸ்டரிடம் கொடுக்கிறேன்

3. தமிழ்நாட்டுக்கு வெளியிலும், இந்தியாவிற்கு வெளியிலும், உலகிற்கு வெளியிலும் நடக்கும் செய்திகளை கொடுக்க முயற்சி செய்கிறேன். வேலை வெட்டி இல்லாத சிலர் முன்வந்துள்ளார்கள், கூடிய சீக்கிரம் இது மாபெரும் 'மனித சங்கிலி'யாக மாறும் என்று நினைக்கிறேன்.

4. 'பாடி காட் முனி'க்கு வாரம் ஒரு கடிதமாவது போட இப்பொழுதே முனிக்கு 'தந்தி' அடிக்கிறேன். இட்லிவடை வாசகர்கள் எல்லோரும் போஸ்ட் ஆபீஸ் சென்று தந்தி அடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தந்தி அடிக்க காசு இல்லாதவர்கள் டாஸ்மார்க் சென்று அதையாவது அடிக்கவும்.

5. இனி நக்கல் பதிவுகள் 'பேரணி' போல் தொடர்ந்து வரும்.

6. எழுத்துபிலை இருந்தால் ஜெயலலிதா போல் தாராளமாக 'கண்டனம்' தெரிவிக்கலாம், கைது செய்யச் சொல்லலாம். தமிழர்கள் நலன் தான் எனக்கு முக்கியம்.

பிரணாப் முகர்ஜி சென்னை வந்து முதல்வரை சந்தித்துப் பேசிவிட்டு டில்லியில் டைப் அடித்து கொண்டு வந்த அறிக்கை மாதிரி இதையும் நினைக்க வேண்டாம் :-)

'இட்லிவடை 5 ஆண்டுகள்' தலைப்பில் இது கடைசி பதிவு. இனிமேல் என்னை திட்டி வரும் பதிவுகளுக்கு தான் இடமுண்டு.
இட்லிவடை வாசகர்களுக்கு நன்றி
( படம் உதவி: நண்பர் ராஜா, நன்றி )

24 Comments:

Raam said...

MEE THE FIRSTU...

Anonymous said...

adaa pandarangalaa. idly vadayaa mooditu pooi valaayaa parungaa

இளவஞ்சி said...

// கட் & பேஸ்ட் கம்மியாக இருக்கும் அல்லது இருக்காது ( சில முக்கிய பேட்டிகள், கட்டுரைகள் விதிவிலக்கு, செய்திகளை விமர்சிக்கும் பதிவுகள் அதிகம் வரும்).//

வன்மையாக கடுமையாக ஆதரிக்கிறேன். கட்&பேஸ்ட் போட்டே ஒப்பேத்தியதில் (அதுவும் சுட்ட இடத்தின் லிங்க் கூட கொடுக்காமல்! ) கடுப்பாகி இட்லிவடை பக்கம் வருவதை தவிர்த்து உங்க வாசகர் எண்ணிக்கை 11 லட்சத்து 99 ஆயிரத்து 999 ஆக காரணமாக இருந்தவன் நான் என்ற முறையில் இதனை சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்!! :)

Luthfullah Azeez said...

அப்பாடா...! ஒருவழியாக இட்லி வடை புராணம் முடிந்தது! அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

Narayanan said...

kadasila yarunnu sollaliye.

Narayanan said...

Kadasila yarunnu sollaliye?

ஹரன்பிரசன்னா said...

இதெல்லாம் ஒரு பொழப்பா?

IdlyVadai said...

//இதெல்லாம் ஒரு பொழப்பா?//

செய்ற்குழு உறுப்பினர் இப்படி பேசலாமா ?

ஹரன்பிரசன்னா said...

உங்க செயற்குழு உறுப்பினர்கள் தலையில இடி விழ. சொன்னா ஒரு சொல்லை காப்பாத்தணும். ஒழுங்கு மரியாதையா ஃபோட்டோவை போட்டுட்டுக் கடையை மூடுங்க. இல்லை, ஆறாவது வருஷத்துக்கு சங்குதான்.

Anonymous said...

request to all good supporters.
please stop your quarrels and unite under the leadership of our great tamil leader karunanithi.

it is the right time to donate liberally to chief minister's releif fund.

now in srilanka the tamils, our brothers are suffering .


please unite
please help

please forget the past.
please awake arise and unite to help the needy people.

both central and state government ruling parties are trying their best to do good to tamils of sri lanka.

now tamil nadu is standing as one man under the the great laeadership of our beloved.chief minister.


please request other polical leaders also to support our C.M in this case.

"onru paddaal uNdu vaazvu
nammil orrumai neenkiil
anaivarukkum thaazvu''

long live kalaigar
long live tamils

ப்ரியா said...

நல்லா சொன்னீங்க ஹரன்ப்ரசன்னா.

இட்லிவடை,
group போட்டோ போடறேன்னு சொன்னத வசதியா மறந்துட்டீங்க போலிருக்கு.
chat ல கேட்டா, 'wait and see' ன்னு பதில் சொல்றீங்க.
சொன்ன சொல்ல காப்பாத்துங்க....
ரொம்ப கடுப்பேத்துறீங்க.

சந்திரமௌளீஸ்வரன் said...

எனக்கென்னவோ இவர்கள் மீது சந்தேகமா இருக்கு. இவர்கள் தான் இட்லி வடையாக இருப்பரோ என

சந்தேகம் 1 : மு. கருணாநிதி, சி.எம்

சந்தேகம் 2 : ஜெ.ஜெ முன்னாள் சி.எம்

சந்தேகம் 3 : வி.காந்த்- என்ன்னிக்கு சி.எம்

சந்தேகம் 4 : தொ.தி- எப்பவுமே சி.எம் இல்லை

சந்தேகம் 5: இராமதாஸ்- நான் சொல்றவன் தாண்டா சிஎம்

IdlyVadai said...

பிரசன்னா அவர்களே குடும்ப போட்டோ இங்கெ
http://2.bp.blogspot.com/_9sqK6HwosiE/SQlo1a5NSgI/AAAAAAAABjg/NavTEMF6OwY/s320/group_photo.jpg

உங்களுக்கு மட்டும் தான் :-)

gopi said...

Point Nos.4 & 6 ...................

KALAKKALO KALAKKALlllllllllll

lok said...

இது நீங்க போட்ட மஞ்ச கோட்டு அறிக்கை போல இல்லாம உண்மையா இருந்த சரி

Anonymous said...

http://2.bp.blogspot.com/_9sqK6HwosiE/SQlo1a5NSgI/AAAAAAAABjg/NavTEMF6OwY/s320/group_photo.jpg


ராமதாஸ் குடும்பத்தில் விரீஈஈஈஈஈசல்!

சரஸ்வதி அம்மையாரும், சௌம்யா ஆண்டியும் மற்ற இரு மருமகள்களுடன் ஒத்துழைக்க மறுப்பு!

அதைப்போலவே பரசுராமனுக்கு மற்ற சகோதரருடனும் தன் தந்தையுடனும் உள்ள கருத்து மாறுபாடுகளை பட்டவர்தமாக தெரியப்படுத்தியுள்ளார்!

(ஏன்னு கண்டுபிடியுங்க பார்ப்போம்! என்னது இ.வ வாசகர்களுக்கு அந்த அளவு மேல மேட்டர் இல்லையா? அப்படியே ஆகட்டும்!)

Anonymous said...

//எழுத்துபிலை//

எழுத்துபிழை ????????????

NEEYELLAM YEZUTHI !!!!!!!

கொடும்பாவி-Kodumpavi said...

இட்லி வடையின் ஆப்பு எல்லாரும் எப்போதோ அறிந்ததே..
இருந்தும் இ.வ யால் பலர் வலைபதிவிற்கு வர காரணமாய் இருந்தது பாரட்ட வேண்டியதே
இப்பவும் இ.வ யை எல்லோரும் புகழ்வதாக அவர் நினைப்பது சிரிப்பு வரவழைக்கிறது
தமிழில் வஞ்சப்புகழ்ச்சி அணி (தேர்தல் கூட்டணி அல்ல) என்று ஒன்று உண்டு அதற்கு ஒரு சிறந்த உதாரணம் இ.வ ஸ்பெஷல் பதிவுகள். மனசு ஒடிஞ்சிடக் கூடாதே என்று கொஞ்சம் ஓகே என்று சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவே.. இத வச்சிகிட்டு இ.வடையே ஒரு முடிவுக்கு வந்ததது போல செயற்குழு கூட்டினாங்களாம்.. முடிவு எடுத்தாங்களாம்.. இனி யாரும் பாராட்ட கூடாதாம்.. நீங்க மைக்ரோ வேவ்வுல வச்சாலும் இட்லி வேகுங்க.. ஆனா நீங்க வடையக் கூட மைக்ரோ வேவ்வுல வைக்குறீங்களே..! ஆனாலும் உங்க கிட்ட ஒரு (ரஜினி)காந்த சக்தி இருக்கு.. நானே பலருக்கு உங்க வலைப்பதிவை (கொலைப்பதிவை) அறிமுகம் செஞ்சிருக்கிறேனா பாருங்களேன்..

அன்பில்லா கொடும்பாவி

Anonymous said...

யோவ் அறிவுகெட்ட அநாநி

எழுத்துப் பிலை என்று எழுதியதே ஒரு நக்கலுக்குக்காக வேண்டுமென்றே எழுதியதுதான்யா? தமிழர்களுக்கு ஹ்யூமர் சென்ஸ் கம்மி என்று சுஜாதா சொல்வது சரிதான்.

Anonymous said...

ஹ பி

க்ரூப் ஃப்போட்டோவைத்தான் போட்டிருக்கிறாரே ஐயா? கண் தெரியவில்லையா? வி லவ் இட்லி வடை என்ற பேனருடன் வருவதுதான் இட்லி வடை க்ரூப் ஃபோட்டோ. நன்றாக உற்றுப் பாரும் ஐயா

யோசிப்பவர் said...

கடைசீல எம்.பி.க்கள் ராஜினாமா மாதிரி மேட்டரை முடிச்சுட்டீரே ஓய்!!

Anonymous said...

இட்லிவடை தொய்வுற்ற நேரத்தில் ஐந்தாண்டு நிறைவு அது இது என்று
கவனத்தினை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகள் இவை.இட்லிவடை வெட்டி ஒட்டும் பதிவாகவே பெரும்பாலும் இருக்கும் போது
செய்திகளை படிக்கவே பயன்படும்.
இட்லிவடை செய்வதை வேறுவகையில் செய்துவந்த சற்றுமுன்
உறங்கிவிட்டதால் இட்லிவடை காட்டில் மழை.மற்றப்படி
இட்லிவடையின் சொந்த சரக்கு
குறைவுதான்.இட்லிவடைக்கு
அரசியல் அறிவு,பொது அறிவும்
குறைவுதான்.சில பதிவர்களுக்கு தனித்துவம் உண்டு, குறைவாக எழுதினாலும் அவர்களின் தனித்துவம் அதில் தெரியும்.இட்லிவடைக்கு அப்படி
தனித்துவம் இல்லை.

அதனால்தான் வெட்டி ஒட்டி இடும்போது பதிவில்
value addition குறைவாக உள்ளது.
நாளைக்கே இட்லிவடை நின்று போனாலும் வாசகர்களுக்கு பெரிய இழப்பு இல்லை.

யோசிப்பவர் said...

//கட் & பேஸ்ட் கம்மியாக இருக்கும் அல்லது இருக்காது //
மொத்தத்துல இனிமே போஸ்ட்டே இருக்காதுன்னு சொல்லுங்க!!

Sharepoint the Great said...

செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் என்னையும் (!)