பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 05, 2008

காமெடியில் சிறந்தவர் - எஸ்.வி.சேகரா ? கலைஞரா ?

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கலைஞர் அறிக்கை

இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பதகாத நிகழ்வுகளை எல்லாம் இந்திய பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வழிகாண வேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பு போன்றதாக இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

"இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்' என்ற வாசகத்துடன் லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும்.எஸ்.வி.சேகர் ( ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடகத்தில் )
பத்திரிக்கையாளர் கேள்வி: இலங்கை பிரச்சனைக்கு என்ன தீர்வு ?
எஸ்.வி.சேகர் - எல்.கே.ஜிக்கு கிளாசுக்கு லீவு விடணும்.


11 Comments:

Krish said...

அனுப்புகிற தந்திஎல்லாம் குப்பைக்கு போய் சேரவா? முதல்வர் நினைத்தால் முடியுமே!
ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லலாம்.

enRenRum-anbudan.BALA said...

Actually that amount spent for (lakhs & lakhs) telegrams can be used for the srilankan refugees !

One purposeful call from TN CM is actually enough for some positive action by central Govt. ! Why this tamasha ????

enRenRum-anbudan.BALA said...

Actually that amount spent for (lakhs & lakhs) telegrams can be used for the srilankan refugees !

One purposeful call from TN CM is actually enough for some positive action by central Govt. ! Why this tamasha ????

மாயவரத்தான்.... said...

இவ்வளவு தந்தி அனுப்ப ஏற்பாடு பண்ணினா இம்புட்டு கமிஷன் கெடைக்கும்னு ஏதாவது புது ஸ்கீம் இருக்க போவுது.. ஒரு விசாரணைய போடுங்கப்பா!

panaiyeri said...

தந்தியும் சரிப்படலனா .. முரசொலி வணங்க சொல்வார் கலைஞர்
http://panaiyeri.blogspot.com/2008/10/blog-post.html

மதிபாலா said...

அட்டா...இங்கே மேதாவித்தனமா கருத்து சொல்றவங்கள பாக்கையில எனக்கு சிரிப்புத்தான் வருது...நேத்து வரைக்கும் கலிஞர் மெளனம் , மெளன்ம் நு கூப்பாடு போட்டுக்கினு இன்னிக்கு அவர் சொன்னதையும் கிண்டல் பண்ணிக்கினு...உங்கள பாக்கச்சோ நமக்கு ஏனோ சுப்ரமணியம் சுவாமி நியாபகத்துக்கு வர்றார்....அவுரு நடத்துற ஜனதா கட்சி போலவே இருக்கு இந்த இட்லி வடையும்........ஒரு ஒற்றுமை...அவுரு கட்சி கலரும் பச்சை...இங்க இட்லி வடை இலையும் பச்சை...!!!! அட.........அதிமுகவின் இரட்டை இலையும் பச்சை....!!!!

Kalaikovan said...

இந்த செய்தி கலைஞர் தொ.கா வில்
இன்றும் கூட FLASH NEWS ஆக ஓடிக்கொண்டு இருக்கிறது.
பேசாமல் கலைஞர் krish சொல்றதை செய்யலாமே.

என்ன கொடுமைன்னா ....
அனைத்து சன் குழும தொலைக்காட்சிகளிலும்
மூச்சிக்கு முன்னூறு முறை
காதலில் விழுந்தேன் விளம்பரம்

கலைஞர் தொ.கா விலோ FLASH NEWS
எரிச்சலாக வருகிறது.

இதையெல்லாம் தடுக்க எதாவது சட்டம் இல்லையா?
பத்திரிக்கை சுதந்திரம் போல
நேயர் சுதந்திரம் ஏதும் இல்லையா

முகமது பாருக் said...

பேரனுக்கு பதவி வேண்டும்போதும், தனக்கு கப்பல்துறையும் தொலைதொடர்புத் துறையும் கண்டிப்பாக வந்தேதீரவேண்டும் எனும்போதும் மகளுக்கு MP பதவி வாங்கும்போதும் டெல்லிக்கு போகும் மஞ்சள்துண்டு கவிஞர். தனக்குத் தானே பட்டம் கொடுத்துகிறது தமிழின காவலன், முத்தமிழ் வித்தகர் அப்படி இப்படின்னு ஆனால் தமிழன் இருபது வருடங்களாக தொடர்ந்து கொடூரமாக தாக்கப் படுகிறான், தன் மண்ணை விட்டு நம்ம தமிழ் மண்ணிலே அகதிகளாக வாழ்கிறான் ஈழத் தமிழன்.. அவனுக்காக டெல்லி செல்ல முடியவில்லை ஏனெனில் குடும்பத்துக்காக வாழ்ந்து குடும்பத்துக்காகவே பல போராட்டங்களை நடத்தும் நயவஞ்சக நாடகம் அனைவருக்கும் தெரியும்..

உங்கள் கண்முன்னேயே சென்னை தாதாவும், மதுரை ரவிடியும் அழியும்போதுதான் உங்களுக்கு வலிக்கும்..அப்பாவி எங்களைப் போல இளைஞர்களை உங்க குடும்பப் பிரச்சினைக்கு கொளுத்தி வேடிக்கை பார்க்கும் குணம் அப்போதுதான் தெரியும்.

ஒருநாட்டின் தலைவன் என்பவருக்கு தன்னுடைய நாட்டு மக்கள்தான் குழந்தைகள் ஆனால் நீங்கள் பெற்றப் புள்ளைகளைதான் அப்படி நினைத்து திராவிட நாட்டை நாசம் செய்துவிட்டீர்கள்..

பெரியார் என்ற மிகப் பெரிய போராளியின் கொள்கைகளை இரும்புப் பொட்டியில் போட்டு பூட்டி சாவியை பெரும் பச்சோந்தி அய்யா கீ. வீரமணி அவர்களிடம் கொடுத்துவிட்டீர்கள்.தந்தை பெரியாரிடம் உங்கள் வாரிசு யார் என்று கேட்டபோது அதற்கு அவர் என்னுடைய கொள்கைகளும் போராட்டங்களும்தான் என் வாரிசு என்றார்.ஆனால் இன்று பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய அவரது கொள்கைகள் அனைத்தும் ஒரே இடத்தில் மறைத்து வைத்துவிட்டீர்கள். அவரே வெறுத்த திரைப் படத்தின் மூலம் பல விசயங்களை மறைத்து எது மட்டும் சொன்னால் பிரச்சினை இல்லையோ அதை மட்டும் கூறி ஒரு கூத்தாடியை வைத்து வெளியிட்டிர்கள்...ராமர் பிரச்சினைக்கு மட்டும் அவரை இழுக்கும் நீங்கள் அவரின் கொள்கைகளை பொது உடைமை ஆக்குங்கள்..நல்லதோ கேட்டதோ வரும் தலைமுறை படித்து தெரிந்துகொள்ளட்டும். அவரே பலமுறை சொல்லியுள்ளார்..உங்களுடைய புத்தியைக் கொண்டு யோசித்துப் பார்த்து செயல் படுங்கள் நான் சொல்வதற்காக எதையும் செய்ய வேண்டாம் என்று..

மாண்புமிகு முதல்வர் அவர்களே இதை ஏன் உங்களிடம் சொல்கிறோம் என்றால் திராவிட அரசியலில் கடைசி தலைவர் என்பதனாலேயே அதுமட்டுமின்றி பெரியார் பேரறிஞர்,பொதுஉடைமைவாதி ஜீவா, சம்பத் போன்ற தலைவர்களுடன் நீங்கள் இருந்தீர்கள். அவர்களுக்கு கிடைக்காத ஒன்று உங்கள் கையில் மாறி மாறி வந்துள்ளது..இது உங்களுக்கு கடைசி தருணம் செய்ய வேண்டியதை தெளிவாகச் செய்யுங்கள் அது ஈழத் தமிழனுக்கும் சரி தமிழ்நாடுக்கும் சரி திராவிட நாட்டுக்கும் சரி...

இல்லை நான் குடும்பத்துக்க்காகவே வாழ்வேன் சாவேன் என்றால்....தமிழகத்தில் (தமிழக வரலாற்றில்) மட்டுமல்ல உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் எண்ணங்களில் நீங்கள்?........................... இடம்பிடிப்பீர்..

நன்றி

Anonymous said...

As long as Karunanidhi occupies CM gaddi, he will ask everybody else to do his talking for such matters as Sri Lanka which are sensitive & startegic from a defence/foreign affairs view point. If he doesn't, there is every chance that he may end up losing his Gaddi.

But, the moment he in opposition or about to lose the CM gaddi anyway (like impending elections), Karunanidhi will come to road & do all sorts of stunts & drama as if he is going to give his life yet another time for the Tamil cause.

I, as an Indian, has no qualms in Karunanidhi's present stand as CM since it goes well with what India, as a sovereign country & one affected by LTTE's terrorism by losing its former PM, and its strategic interests. As long as LTTE loses, India should not bother.

All this talk of Tamilians getting killed etc are nothing but bull-shit. Whenever LTTE is driven to the wall, it has become a routine to do all these kind of street drama & stunt in TN. That way, these politicaians want to bring pressure on Sri Lanka to go soft on their offensive against the LTTE to give them breather to re-coup & recover from their tremondous losses againt Sri Lankan army.

So, no right thinking Indian should fall a prey to this dangerous game being played by TN Politicians against India.

Anonymous said...

தந்தி அனுப்பினால் மத்திய அரசுக்கு வரவு.40 எம்பிக்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் ஒன்றாக டில்லி சென்று
ஒரு ஆர்ப்பாட்டம் செய்யலாம்,
பிரதமரைச் சந்திக்கலாம், உண்ணாவிரதம் இருக்கலாம்.தமிழ் நாட்டில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யலாம்.
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு
யோசிக்க விரும்பாத தமிழக
தலைவர்களை ஈழத் தமிழர்கள்
நம்ப வேண்டாம். முடியுமானால்
உங்களையே மகிந்தாவிடம்
விற்று கமிஷன் பார்த்து விடுவார்கள்.

krishna2607 said...

hi

pathivu super