பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 16, 2008

ச(மூக) சேவகர் எல். கணேசனுக்கு (முக)ப்பேரில் மனை

ம.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எல். கணேசனுக்கு "விருப்புரிமை' திட்டத்தின்கீழ் சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் மனை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பழைய நியூஸ்
கடந்த ஜூலை மாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், மதிமுக உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என வைகோ அறிவித்திருந்தார். ஆனால், கட்சியின் கொறடா உத்தரவை மீறி எல். கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து இவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

புதிய நியூஸ்
மனை ஒதுக்கீடு: இத்தகைய சூழலில் மதிமுகவின் மக்களவை உறுப்பினராக உள்ள எல். கணேசனுக்கு சென்னை முகப்பேர் ஏரித் திட்டத்தில் உயர் வருவாய்ப் பிரிவில் மனை (எண்: 1052) ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஒதுக்கீடு செய்யப்படுவதாக மார்ச் 8-ம் தேதியிட்ட வீட்டுவசதித் துறை அரசாணையில் (2 டி எம்.எஸ். எண்: 157) குறிப்பிடப்பட்டுள்ளது.

"முகப்பேர் ஏரி திட்டப்பகுதியில் உள்ள உயர் வருவாய்ப் பிரிவு மனை எண்: 1052-ஐ சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ், அரசு விருப்புரிமையில் எல். கணேசன் என்பவருக்கு தவணை முறையில் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்படுகிறது' என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனை ஒதுக்கீடு தொடர்பான எந்த ஆவணத்திலும் எல். கணேசன் மக்களவை உறுப்பினர் என்பதைக் குறிப்பிடாமல், சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவை உறுப்பினராக உள்ள ஒருவருக்கு அனைத்துச் சலுகைகளும் இருக்கும்போது அவர் தன்னை மக்களவை உறுப்பினராக அடையாளம் காட்டாமல், ஒரு சமூக சேவகர் என்று கூறி அரசின் மனை ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்சி மாறியதற்காகவா...: அரசியல் மற்றும் பொது வாழ்வில் நீண்ட நாள் அனுபவம் கொண்டவர் என்ற முறையில் அரசின் விருப்புரிமையின் கீழ் மனை ஒதுக்கீடு பெற எல். கணேசன் தகுதியுடையவர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், அவர் தற்போது மதிமுகவில் இருந்து திமுகவில் சேர்வது என்ற நிலைப்பாட்டை எடுத்த பின்னர், அரசியல் காரணங்களுக்காக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மூக சேவகர் எல். கணேசனுக்கு முகப்பேரில் மனை - இதில் முக என்ற எழுத்து வருவது தற்செயல்.

8 Comments:

பூச்சாண்டியார் said...

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா...

gopi said...

சமூக சேவகர் எல். கணேசனுக்கு முகப்பேரில் மனை - இதில் முக என்ற எழுத்து வருவது தற்செயல்.
-----------------------------------

Superrrrrr. Adhaiyum neengal manjal nirathil Mu.Ka vai sutti kaatti iruppathu, besh besh, romba nannaaa irukkuuuuuuuu.

யோசிப்பவர் said...

ச "மூக" சேவகருக்கு - குறில் குறைந்து - "முக"ப்பேரில் மனை

Sethu Raman said...

mu.ka.virku mattum thaan kavithai ezhutha varuma?? namma "yochippavar" sariya 'kural' sorry 'kuril' koduthirukkiraar!!

Anonymous said...

DMK cannot talk about TANSI case any more.
They have thrown shit on their own head.

பாட்டாளி said...

வாழ்க! கருணாநிதியின் பண( ஜன)நாயகம்!!

அச்சுப்பிச்சு said...

வாலாட்டிய நாய்களுக்கு ஒரு பிஸ்கட் துண்டைப்போட்டு, வாசலில் கட்டுவது தானே கலைஞர் தர்மம்! நிச்சயமாக உள்ளே விளையாட விடமாட்டார்!

Anonymous said...

கழக ஆட்சிகளில் இப்படி வேண்டியவர்களுக்கு அரசு மனைகள்
ஒதுக்கப்படுவதும், அவர்கள் அதை
விற்று லாபம் பார்ப்பதும் சாதாரணம்.
வைரமுத்துவிற்கு இப்படித்தான் பெசண்ட் நகரில் மனை ஒதுக்கினார்கள்.மார்கெட்
விலையை விட குறைவான தொகைக்கு ஒதுக்குவார்கள்.சந்தை விலை 70 ல்ட்சம் என்றால் அரசு அதை 30/40 லட்சத்திற்கு ஒதுக்கும். உடம்பு நோகாமல் 30 லட்சம் லாபம் பார்க்கலாம்.

அரசுக்கு வேண்டியவர்களுக்கு,
அதிகாரிகள் உட்பட இப்படி ஒதுக்குவது வழக்கம்தான்.
அதை தவணை முறையில்
செலுத்தலாம். இப்படி ஒதுக்கப்படும் மனைகளை விற்றுத்தர ஏஜெண்டுகள் உண்டு.அவர்கள் உங்களிடமிருந்து
பணத்தைப் பெற்று, ஹவுசிங் போர்டில் கட்டி பத்திரத்தை ஒதுக்கப்படவர் பெயரில் பதிவு செய்து கொள்வார்கள். பின்னர் உங்களுக்கு விற்றதாக பத்திர பதிவு நடக்கும்.
இதில் ஏஜெண்ட் சில லட்சம்
லாபம் பார்ப்பார், ஒதுக்கப்படவருக்கும்
நல்ல லாபம் இருக்கும்.இதில் வழக்கம்
போல் பிளாக் மணி, ஒயிட் மணி இரண்டும் உண்டு.

சமயங்களில் இப்படி மனை ஒதுக்க ஆணையிடப்பட்டாலும் அது நடைமுறைக்கு வர நாளாகும்.
அதற்குள் ஆட்சி மாறினால் அந்த ஆணையே ரத்தாகவும் கூடும்.

ஹவுசிங் போர்டில் கேட்டால்
கதை கதையாகச் சொல்வார்கள்.
எனவே எல்.கணேசன் விவகாரம் ஒரு ஜுஜுபி.மலைமுழுங்கிகளே இருக்கிறார்கள்.