பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 18, 2008

தேமுதிக இளைஞரணி மாநாடி - சன் டிவி லைவ்

* கட்சி ஆரம்பிப்பது ரொம்ப கஷ்டம்.
* இது ஒரு கட்சியா என்று சொன்னவர்கள் இது தான் கட்சி என்று சொல்ல வைத்தவர் - நீங்கள்
* விஜயகாந்த் என்ன செய்வார் என்று திமுக கல்யாண மண்டபத்தை இடித்தது, வருமான வரி சோதனை இன்னும் பல பிரச்சனைகள்

* ஆட்சி பிடிப்பதற்கு தான் கட்சி ஆரம்பிக்கிறேன். எனக்கு ஆசை என்று திமுக சொல்லுகிறார்கள். +2 படிப்பது பாஸ் செய்யதான்

* நான் ஆட்சிக்கு வந்தால் அழுபவர்கள் சிரிப்பார்கள்.

* தேமுதிக வாழைமரம் மாதிரி வெட்ட வெட்ட வளரும்.

* சன் டிவியில் காமிப்பதால் தமிழ்நாடு முழுக்க கரண்ட் கட்

* அனைத்து கட்சி கூட்டம், ராஜிநாமா எல்லாம் டிராமா. எல்லாம் பவர் கட்டை மறக்க. இங்கே ஏதோ பீச் இருக்கு காத்து வருது. இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இல்லை.

* மந்திரி பதவி எல்லாம் காசு சம்பாதிக்கிற துறையாக வாங்கிகிறார்கள். பாலு கப்பலில் சம்பாதிக்கிறார். நான் எவ்வளவு பண்ணியிருக்கிறேன் என்று யாருக்கவது தெரியுமா ?

* இலங்கை தமிழனை காக்கும் மாதிரி நடிக்காதீர்கள் ( கலைஞரை).

* சீக்கிரம் (கலைஞர்) ஆட்சி போக போகிறது. தமிழனுக்காக ஆட்சி போனது என்று எல்லோரும் பேசிக்கொள்ளட்டுமே என்று இவ்வாறு செய்கிறார். கலைஞர் பசுத் தோல் போத்திய புலி

* கலைஞர், ஜெ இரண்டு போரும் திமுக.அதிமுகவின் இடைசொறுகல்

* மாநாடு லைட் எல்லாம் generator

* மாநாட்டில் மழை பெய்கிறது. தொண்டர்கள் எல்லாம் சலசலப்பு செய்கிறார்கள். "நானும் மழையில் வந்து நனையுட்டுமா ? - விஜயகாந்த்

* யாரும் பயபடாதீர்கள். நான் உங்கள் பின்னாடியே இருக்கிறேன்.

* இன்று இந்திய முழுக்க தேமுதிக என்று பேச வைத்தது இளைஞர் + மகளிர்

* என்னிடம் மின்சாரத்துக்கு திட்டம் இருக்கிறது அதை சொன்னால் கலைஞர் திருடிவிடுவார்.

* துரோகி வைகோ என்று சொன்னார், திண்டுகல் மாநாட்டில் தம்பி சொன்னார்.

* 1 ரூபாய் அரிசி எல்லாம் பூச்சியும் புழுவும். கலைஞர் பவரை மக்கள் ஃபுயூஸ் புடுங்குவார்கள் சீக்கிரம்.

* இருட்டாக இருப்பதால் இவர்களுக்கு லஞ்சம் வாங்க ஈஸியா இருக்கு

* இலங்கை பிரச்னையை வெளிக்காட்டுவதற்காக அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிய வேண்டும்.

( கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சி )

* கலைஞர் திட்டம் எல்லாம் பார்க்க நல்லது மாதிரி இருக்கும். ஆனால் எல்லாம் அவர் குடும்பத்துக்கு ஆதாயமாக இருக்கும்

* பத்திரிக்கையாளர்களை மிரட்டி விளம்ப்ரம் தரமாட்டேன் என்று சொல்லி ராஜா ஊழல் எல்லாம் வராமல் பார்த்துக்கொள்கிறார்.

* கைகடிகாரத்தில் டைம் பார்க்கிறார்.

* போன பிறந்த நாள் விழாவில் என்ன செய்தி சொன்னீர்கள். மதவாத சக்திக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொன்னீர்கள். அப்ப இலங்கை தமிழர்கள் நினைவில் இல்லையா ?

* என்ன் நெஞ்சை தலைநிமிர செய்ய வைத்த தொகுதி விருத்தாச்சலம்.

* காவல் துறை எல்லாம் கட்டபஞ்சாயத்து

* நான் ஆட்சிக்கு வந்தால் பழிதீர்க்க மாட்டேன். மக்களுக்கு நல்லது செய்ய தான் நான் வருவேன்.

* நேற்று பேனரை திமுக காரர்கள் கிழித்தார்கள். ஆனால் மக்கள் நெஞ்சிலிருந்து கிழிக்க முடியாது. கட்சி நிதி 5 கோடி வந்திருக்கிறது.

* எம்.ஜி.ஆர் எப்போதும் எழைகளை பற்றி சிந்திப்பார், அதே மாதிரி நீங்களும் சிந்திக்கிறீர்கள் என்று பன்ருட்டி சொல்லுவார்

* எல்லோருக்கும் நன்றி. இனிமேல் தான் நமக்கு சோதனை காலம். எல்லோரும் ஜாக்கிரதையாக ஊர் போய் சென்று வாருங்கள்.


எம்.ஜி.ஆருக்கு அப்புறம் மக்கள் தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி ஓட்டு போட்டார்கள். யாரும் நல்லது செய்யவில்லை. தி.மு.க. குடும்பத்துக்காக இருக்கு. அ.தி.மு.க. தோழிக்கக இருக்கு. மக்களுக்காக இருப்பது தே.மு,தி,.க. இவர்கள் எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கலாம். என்னிடம் இருக்கும் தைரியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. என்னுடைய தொண்டர்களை அடக்க பார்த்தார்கள். கோழை என்றார்கள். அவர்கள் வாழை, வெட்ட வெட்ட வளரும். துவளாது. இப்ப எழுதி கொடுத்தாங்க. சன்டிவி லைவ் பன்றாங்க தமிழ்நாடு முழுவதும் கரண்ட் கட்டாம். பொறுக்கலை, ஆத்திரம். அதனால் கரண்ட் கட். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். ஆத்திரபட்டு அவர்கள் அழிய போகிறார்கள்.


இலங்கை தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். சி.எம். நடிக்கிறார் நாடகமாடுகிறார். தந்தி கொடுங்கள் என்றார். அனைத்துக்கட்சி கூட்டம் எம்.பிக்கள் ராஜினாமா நாடகம். எம்.ஜி.ஆர் கறுப்பு சட்டை போட்ட போது நாங்கள் தனித்திருந்தீர்கள். கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் இருந்த போது ஒன்றும் செய்யவில்லை. தே.முதி.க. கலந்து கொண்டவுடன் கோபம் வந்து விட்டது. தினந்தோறும் பவர் கட். மக்கள் தூங்க முடியவில்லை. ஊர்ல எவ்வளவு நேரம் கரண்டு கட். 9 மணி நேரம் 12 மணி நேர கரண்டு கட்டை பார்க்க போகிறீர்கள். இதையெல்லாம் மறைப்பதற்காகத்தான் இலங்கை தமிழக்ரளுக்கு போராடுகிறேன். எம்.பிக்கள் ராஜினாமா? எவ்வளவு நாடகம் பாருங்கள். மற்ற எம்.பி.க்கள் சோம்நாத் சட்டர்ஜியிடம் கொடுத்து விட்டு கட்சித்தலைவரிடம் கொடுத்து இருக்கலாம். என்ன விலை கொடுத்து தீர்க்க போகிறார் என்று தெரியவில்லை

விலைவாசி உயர்வினால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விலை ஏற்றத்துக்கு யார் காரணம் என்று குறை கூறுவதை விடுத்து விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். எனவே, விலைவாசி உயர்வின் விளைவில் இருந்து மக்களைக் கா�பாற்ற தவறிய மாநில அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கும் போருக்கு, ராணுவ உதவிகளை இந்திய அரசு செய்து வருகிறது. இலங்கைக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யப்படும் ராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்திய அரசில் அங்கம் வகிக்கின்ற தமிழக அரசியல் கட்சிகள், இந்திய அரசின் இத்தகைய போக்கு கண்டு, அதை கண்டிக்கின்ற வகையில் உடனடியாக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று மாநாடு கேட்டுக் கொள்கிறது. செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகவோ, ஐ.நா. சபை மூலமாகவோ இலங்கை தமிழர்களுக்கு தேவையான மருந்து, உணவு போன்றவற்றை உடனடியாக வழங்குவதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இம்மாநாடு வலிக்றுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

12 Comments:

VIJI said...

wow, super, thanks..

R A J A said...

Please publish few photos from the ralley.....

Kalaikovan said...

* வாழ்ந்தான் வாழ்ந்தான் விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான்.
(அடிங்கடா அடிங்கடா .......)
* மனைவி சொன்னா கேட்டுக்கணும்.(சம உரிமையாம் - மத்த எந்த அரசியல் கட்சி தலைவரும் செய்யாதது)
* அப்பா அம்மாவை ஒழுங்க வைச்சி காப்பத்தனும்.
(அப்ப அண்ணன் தம்பி எப்பிடி வேணாலும் போகலாம்.
விஜயராஜ் சகோதரர் பால்ராஜ் கூலி வேலை செய்யறாராம் -ல )

இதையெல்லாம் சேத்துக்கிங்க...


தி.மு.க -
கலைஞர் - அப்பா
ஸ்டாலின்- மகன் (தன்னை கழக போராட்டங்களில் ஈடுபடுத்தி கொண்டவர்)
கனிமொழி - மகள்
அழகிரி - மகன்
(வருங்காலம் இவர் கையில்....
மதுரைக்காரர் என்று விஜயகாந்தும்
மதுரை முதல்வர் என்று ஜெயலலிதாவும்
கூறுமளவு )

அ.தி.மு.க - சசிகலா குடும்பம்(மறைமுகம்)

தே.மு.தி.க
விஜயகாந்த் - கணவர்
பிரேமலதா - மனைவி
சுதிஷ் - மைத்துனர் (இளைஞர் அணி தலைவர் )
மகன்களுக்கு வாக்குரிமை இருக்கா என்று தெரியவில்லை.

ஆக இவர் மற்ற கட்சி தலைவர்களை விட
குடும்ப அரசியலில் கை தேர்ந்தவர் ....
இவர் மக்களுக்காக வாழ்வாராம் ....
எந்த மக்களுக்காக .

இவர் என்ன செய்வார் என்பதை மட்டும் சொல்லட்டும்,
அதைவிட்டு கலைஞர் சரியில்லை
ஜெயலலிதா சரியில்லை .. என்றால்
நாளை விஜயகாந்த் சரியில்லை
என்று சொல்ல ஒருவர் வருவார்.

கலைநருக்கும் , ஜெயலலிதாவிற்க்கும்
விழா எடுத்தது இவர்களின் நடிகர் சங்கம் தானே .
அப்போது தெரியவில்லையா.

குடும்ப அரசியல் மற்ற கட்சிகளில்
ஆட்சிக்கு அப்புறம் தான்
ஆனால்
இவரது கட்சியிலோ இப்போதே
ஏனென்றால் நாளை ஒருவர்
சொல்லிவிடக்கூடதல்ல்வா
கட்சிக்காக பிரேமலதா
சுதிஷோ என்ன செய்தார்கள் என்று.

மொத்தத்தில் இவர்கள் எல்லாம்
கட்சி ஆரம்பித்து ....எல்லாம்
தமிழ் நாட்டின் விதி* வாழ்ந்தான் வாழ்ந்தான் விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான்.
(அடிங்கடா அடிங்கடா .......)
* மனைவி சொன்னா கேட்டுக்கணும்.(சம உரிமையாம் - மத்த எந்த அரசியல் கட்சி தலைவரும் செய்யாதது)
* அப்பா அம்மாவை ஒழுங்க வைச்சி காப்பத்தனும்.
(அப்ப அண்ணன் தம்பி எப்பிடி வேணாலும் போகலாம்.
விஜயராஜ் சகோதரர் பால்ராஜ் கூலி வேலை செய்யறாராம் -ல )

இதையெல்லாம் சேத்துக்கிங்க...


தி.மு.க -
கலைஞர் - அப்பா
ஸ்டாலின்- மகன் (தன்னை கழக போராட்டங்களில் ஈடுபடுத்தி கொண்டவர்)
கனிமொழி - மகள்
அழகிரி - மகன்
(வருங்காலம் இவர் கையில்....
மதுரைக்காரர் என்று விஜயகாந்தும்
மதுரை முதல்வர் என்று ஜெயலலிதாவும்
கூறுமளவு )

அ.தி.மு.க - சசிகலா குடும்பம்(மறைமுகம்)

தே.மு.தி.க
விஜயகாந்த் - கணவர்
பிரேமலதா - மனைவி
சுதிஷ் - மைத்துனர் (இளைஞர் அணி தலைவர் )
மகன்களுக்கு வாக்குரிமை இருக்கா என்று தெரியவில்லை.

ஆக இவர் மற்ற கட்சி தலைவர்களை விட
குடும்ப அரசியலில் கை தேர்ந்தவர் ....
இவர் மக்களுக்காக வாழ்வாராம் ....
எந்த மக்களுக்காக .

இவர் என்ன செய்வார் என்பதை மட்டும் சொல்லட்டும்,
அதைவிட்டு கலைஞர் சரியில்லை
ஜெயலலிதா சரியில்லை .. என்றால்
நாளை விஜயகாந்த் சரியில்லை
என்று சொல்ல ஒருவர் வருவார்.

கலைநருக்கும் , ஜெயலலிதாவிற்க்கும்
விழா எடுத்தது இவர்களின் நடிகர் சங்கம் தானே .
அப்போது தெரியவில்லையா.

குடும்ப அரசியல் மற்ற கட்சிகளில்
ஆட்சிக்கு அப்புறம் தான்
ஆனால்
இவரது கட்சியிலோ இப்போதே
ஏனென்றால் நாளை ஒருவர்
சொல்லிவிடக்கூடதல்ல்வா
கட்சிக்காக பிரேமலதா
சுதிஷோ என்ன செய்தார்கள் என்று.

மொத்தத்தில் இவர்கள் எல்லாம்
கட்சி ஆரம்பித்து ....எல்லாம்
தமிழ் நாட்டின் விதி

Anonymous said...

'எம்.ஜி.ஆர் எப்போதும் எழைகளை பற்றி சிந்திப்பார், அதே மாதிரி நீங்களும் சிந்திக்கிறீர்கள் என்று பன்ருட்டி சொல்லுவார்'

But he amassed crores through corruption and allowed his party men also to indulge in corruption
and acted as if he was the saviour
of the poor.In reality he did
very little for poor.
Perhpas that is what Panruti is
hinting at when he says that.

gopi said...

தேமுதிக மாநாட்டு 'சாதனை': பார்க்குமிடமெல்லாம் காலி மதுபாட்டில்கள்!
-----------------------------------

விஜய்காந்தின் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த தொண்டர்கள் குடித்துவிட்டுப் போட்ட பீர் பாட்டில்கள் மற்றும் மதுப் புட்டிகளால் மெரினா கடற்கரையும் அண்ணாசாலை, சிவானந்தா சாலை பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் நல்ல 'மப்'பில் வந்திருந்தனர்.

கையோடு தாங்கள் கொண்டு வந்திருந்து டாஸ்மாக் ஐட்டங்களை நேற்று காலை முதலே அண்ணா சாலை, தீவுத் திடல், மெரினா கடற்கரைப் பகுதிகளில் 'கடை பரப்பி' விட்டனர்.

திறந்த வெளியில் குடித்துவிட்டு காலி மதுப் புட்டிகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றதால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் நாறிப் போய்விட்டதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்னைவாசிகளும், வெளியூர் பயணிகளும் வந்து குவியும் சென்னை மெரினா கடற்கரையில் எங்கும் பீர் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் காட்சி தந்தது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

மேலும் மணல் பகுதிகளில் உட்கார முடியாத அளவுக்கு தேமுதிக தொண்டர்கள் அசிங்கம் பண்ணி வைத்திருந்ததும், வார இறுதி நாளான நேற்று மக்களை மெரீனா பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.

இதுபோதாதென்று மஞ்சள் சட்டை அணிந்த சில இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதிலும், கடல் அலைகள் கரையைத் தொடும் பகுதியில் நின்றவண்ணம் அலையில் குளிக்கும் பெண்களைக் கிண்டலடித்தும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.

'தொண்டர்கள் எனும் பெயரில் இவர்கள் செய்திருந்த அசிங்கங்களைச் சுத்தம் செய்ய நியாயமாக சென்னை மாநகராட்சிக்கு பெரிய தொகையை வழங்கியிருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர். அரசியல் கட்சி என்ற பெயரில் இவர்களைப் போன்றவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்', என்று அதிருப்தி தெரிவித்தார் இந்த மண்டத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.

கடற்கரையே இப்படியென்றால் தீவுத்திடல்....?

அங்கு இதை விட பலமடங்கு மோசமான நிலை. இதையும் மாநகராட்சிதான் சுத்தம் செய்தாக வேண்டும்.
----------------------------------

ah haaa, enna oru saadhanaidaa....

Anonymous said...

தேமுதிக மாநாட்டு 'சாதனை': பார்க்குமிடமெல்லாம் காலி மதுபாட்டில்கள்!
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 19, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெறசென்னை: விஜய்காந்தின் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த தொண்டர்கள் குடித்துவிட்டுப் போட்ட பீர் பாட்டில்கள் மற்றும் மதுப் புட்டிகளால் மெரினா கடற்கரையும் அண்ணாசாலை, சிவானந்தா சாலை பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் நல்ல 'மப்'பில் வந்திருந்தனர்.

கையோடு தாங்கள் கொண்டு வந்திருந்து டாஸ்மாக் ஐட்டங்களை நேற்று காலை முதலே அண்ணா சாலை, தீவுத் திடல், மெரினா கடற்கரைப் பகுதிகளில் 'கடை பரப்பி' விட்டனர்.

திறந்த வெளியில் குடித்துவிட்டு காலி மதுப் புட்டிகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றதால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் நாறிப் போய்விட்டதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்னைவாசிகளும், வெளியூர் பயணிகளும் வந்து குவியும் சென்னை மெரினா கடற்கரையில் எங்கும் பீர் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் காட்சி தந்தது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

மேலும் மணல் பகுதிகளில் உட்கார முடியாத அளவுக்கு தேமுதிக தொண்டர்கள் அசிங்கம் பண்ணி வைத்திருந்ததும், வார இறுதி நாளான நேற்று மக்களை மெரீனா பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.

இதுபோதாதென்று மஞ்சள் சட்டை அணிந்த சில இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதிலும், கடல் அலைகள் கரையைத் தொடும் பகுதியில் நின்றவண்ணம் அலையில் குளிக்கும் பெண்களைக் கிண்டலடித்தும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

ஒரு நாட்டின் முதலமைச்சர் ஆவதற்கு - உழைப்புத் தேவையில்லை, தியாகம் தேவையில்லை, தொண்டு தேவையில்லை - ஆற்றல்கள் தேவையில்லை, அறிவும் தேவையில்லை, வெறும் சினிமா கவர்ச்சி - அதன்மூலம் கிடைக்கும் பாமரத்தனமான விளம்பரம் மட்டுமே போதும் என்கிற ஒன்றையே முதலீடாக வைத்து அரசியல் துரைத்தனம் நடத்த ஆசை கொண்டு நிற்கும் விஜயகாந்த் என்ற நடிகர் ஒரு தவறான முன்னு தாரணத்துக்கு முன்னோடி இந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரவில்லையா - முதல் அமைச்சர் ஆகவில்லையா என்று சமாதானம் கூறும் சமர்த்தர்கள் உண்டு.

அந்த எம்.ஜி.ஆர். நேற்று பெய்த மழையில் உடனே முளைத்த காளான் இல்லை. தி.மு.க.வில் பல ஆண்டுகள் இருந்து, பிரச்சாரம் செய்தவர். கொடை உள்ளம் கொண்டவர். ஒரு கட்டத்தில் கட்சியின் பொருளாளராக இருந்தவர். இந்தப் பின்னணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா?, அவருக்கு சினிமா ரசிகர் மன்றங்கள் இருந்தன. கவர்ச்சியும் இருந்தது என்பதும் இந்தப் பின்னணிக்கு மேலும் இருந்த கூடுதல் பலம் அவ்வளவுதான்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச் சிறந்த நடிகர்தான். அவருக்கு ரசிகர் மன்றங்கள் உண்டு என்றாலும் கூட அவர் அரசியலில் பரிணமிக்கவில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் காரணத்தைக் கொஞ்சம் ஆழமாகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு கட்சியின் மாநில மாநாட்டுக்கு மக்கள் திரள்வது என்பது ஒன்று - திரட்டப்படுவது என்பது இன்னொன்று. இந்த இரண்டாவது வகையில் பெரும்பாலும் செலவு செய்து மக்களைத் திரட்டி - அந்த மக்கள் எண்ணிக்கையின் மூலம் இதோபார் எனக்கும் மக்கள் கடல் - நான்தான் அடுத்த முதல்அமைச்சர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் தேவை? என்று மார்தட்டி, தொண்டர்களை உற்சாகப்படுத்துவது என்பது புரிந்துகொள்ள முடிந்த ஒன்றுதான். இவர் கட்சியைத் தொடங்கிய நாள் முதல் அவர் கூறிவந்த கருத்துகளைத் தொகுத்துப் படித்துப் பார்த்தால் அப்படிப் படிக்கிறவர்கள் பைத்தியம் பிடிக்காமல் போனால் ஆச்சரியம்தான்!

விருதை ரவி said...

கருணாநிதி ஜெயலலிதா இருவரையும் கம்பேர் செய்யும்போது விஜயகாந்த் மிக மிக டேஞ்சரான ஆள்.

மற்றவர்களாவது வேலை வாங்கிவிட்டு கூலி கேட்பார்கள்.ஆனால் விஜயகாந்தோ மூட்டை தூக்கிவிடுவதற்கு முன்பே கூலி கேட்பவர்.

சொந்த(?) காசை அள்ளி கொடுப்பதாக காட்டிக்கொண்டு அதற்கான கூலியாக ஆட்சியை கேட்பவர்!

அரசு துறையிலிருந்து போராடி மக்களுக்கு அடிப்படை உரிமைகளை பெற்று தந்தால் இவரை நல்ல மக்கள் சேவகனாக கருதலாம்.

ஆனால் உண்மையில் ஷூட்டிங் சொல்வதுபோல விருதாசலம் சென்று அங்கு கூடும் மக்களிடம் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஐநூறு என அள்ளி தெளித்துவிட்டு எகைன் சென்னை.அப்புறம் அறிக்கை அது இது ஆர்பாட்டம் முழக்கம் இவனெல்லாம் (ஸாரி) ஒரு ஆளென்று தமிழகத்தின் அப்பாவி கூட்டங்கள் அலைவதை நினைத்தால் இந்த நாட்டின் நிலையை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.

இவர் உண்மையிலேயே நல்லது செய்பவராக இருந்தால் அரசியல் எனும் சாக்கடைக்கு வராமலேயே பணியாற்றிடலாம். ஆனால் இங்கு நடப்பதென்ன?
பொண்டாட்டி ராஜியம்மும் மச்சான் ராஜியமும்தானே! படத்தை பார்த்து சோத்துக்கு வழி செஞ்ச பாவத்துக்கு முதல்வர் பதவி வேணுமோ! எல்லாம் நம் தலை எழுத்து.
ஒவ்வொருத்தனும் ஒரு வேனுக்கு நாலாயிரம் ரூபாய் மொய் வைத்துருப்பான்.
பாவம்தான்.அவனவன் கழ்டபட்டு சம்பாதித்தது.
வூர்வலம் நடத்துவதை ஒரு காலத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் என்று சொன்னதாகவும் ஞாபகம்.

பொண்டாட்டி மச்சானை தவிர பண்ருட்டி மட்டும் அவ்வபோது தெரிகிறார். பொது செயலாளர் ராமு வசந்தன் என்றொரு ஜடம் இருந்ததாகவும் ஞாபகம். இருக்காரா?

யோசிப்பவர் said...

இட்லிவடை,
நேற்று இந்த பதிவுக்கு ஒரு பின்னூட்டமிட்டிருந்தேனே? அதை ஏன் பிரசுரிக்கவில்லை? தனி மனித தாக்குதல் என்று மட்டுறுத்தி விட்டீர்களா? இல்லை வேறு ஏதாவது பிரச்சினையா?

IdlyVadai said...

//இட்லிவடை,
நேற்று இந்த பதிவுக்கு ஒரு பின்னூட்டமிட்டிருந்தேனே? அதை ஏன் பிரசுரிக்கவில்லை? தனி மனித தாக்குதல் என்று மட்டுறுத்தி விட்டீர்களா? இல்லை வேறு ஏதாவது பிரச்சினையா?//

யோசிப்பவரே எனக்கு உங்க பின்னூட்டம் வரவில்லை. நான் இந்த பதிவுக்கு எந்த பின்னூட்டத்தையும் ரிஜக்ட் செய்யவில்லை.

இதற்கு முன் நீங்க போட்ட பின்னூட்டம் இது

[ போன வார துக்ளக்கில் வெளிவந்த தேமுதிக தலைவரின் பேட்டியில், எந்தவொரு விஷயத்திலும் தெளிவான சிந்தனை அவருக்கு இல்லை என்பதை கவனித்தீர்களா?

அப்பொழுதே பதிவு போடுவீர்கள் என்று நினைத்தேன். அப்பொழுது அப்ஸ்கான்ட் ஆகிவிட்டீர்கள்! ]

ஆனால் இது வேற பதிவுக்கு வந்த பின்னூட்டம்.

யோசிப்பவர் said...

பதிலுக்கு நன்றி இட்லிவடை,
பின்னூட்டம் எப்படியோ மிஸ்ஸாகிவிட்டது. சப்மிட் பட்டனை கிளிக் செய்தபோது கனக்ஷன் பெயிலாகியிருக்கும். நான் கவனிக்கத் தவறியிருப்பேன்.:(

Anonymous said...

>>>>>>
இவர் உண்மையிலேயே நல்லது செய்பவராக இருந்தால் அரசியல் எனும் சாக்கடைக்கு வராமலேயே பணியாற்றிடலாம். ஆனால் இங்கு நடப்பதென்ன
>>>>

appadeena enna artham..
nalavanga yarum arasiyalukku vara koodathu..
appadi vantha
"ivan nallavana iruntha ..natham pidicha arasiyalukku yen varanum"
appadeenu kaepeenga..
appo ayokiyangalae arasiyalukku vanthu innum nara adikanum..
romba nallla irukku unga logic
- Raji