பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 23, 2008

சீமான், அமிர், சத்தியராஜ், பாரதிராஜா, வைகோ, ஜெ மற்றும் பலர்

படிக்கும் முன் சில வார்த்தைகள் - இலங்கையில் நடக்கும் பிரச்சனை பற்றிய பதிவு இல்லை. அதனால் தமிழனின் ரத்தம் கொதிக்கிறது போன்ற செண்டிமெண்ட் கமெண்ட்ஸ் எல்லாம் தேவையில்லை.

மத்திய அரசுக்கு எதிராக தந்தி, ஊர்வலம், சங்கலி என்று ஆரம்பித்த போது, திமுகவுடன், காங்கிரஸும் சேர்ந்து ஜால்ரா அடித்தது காமெடியின் உச்சக்கட்டம்.

ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும், பிரபாகரனை சப்போர்ட் செய்து பேசியிருப்பது கண்டு திடீர் என்று காங்கிரஸ்காரர்களுக்கு என்றோ சாப்பிட்ட அளவு சாப்பாட்டின் உப்பு வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது.

"நாங்களும், சிங்களவர்களும் சகோதரர்கள். எங்களுக்குள் நடக்கிற மோதலில், தலையிட அன்னியர்களான இந்தியர்களுக்கு உரிமை இல்லை' என்று விடுதலைப் புலிகள் பேசிய போது இந்த சிமானும், அமீரும் என்ன செய்துக்கொண்டிருந்தார்கள் ?

விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் என்றால், விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள் என்று ஜெயலலிதாவிற்கு உள்ள துணிவு காங்கிரஸ் காரர்களுக்கு கூட கிடையாது.

இந்த மாதிரி பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் காரர்கள் மனித சங்கலி போராட்டம்(சோனியாவிடம் பர்மிஷன் வாங்கிவிட்டு) நடத்த வேண்டும். அல்லது ஒரு தந்தியாவது அடிக்க வேண்டும். முடியவில்லை என்றால் தலையிலாவது அடித்துக்கொள்ள வேண்டும்.

அரசின் மாட்சிமையும், மேலான்மையும் காப்பாற்ற வேண்டியது ஒரு அரசனின் கடமை. இவர்கள் பண்ணும் அழிச்சாட்டியத்தை சகித்துக் கொண்டால் அது நாட்டுக்கு செய்யப்படும் பெரும் துரோகம். இந்த மாதிரி பேசுபவர்களை கலைஞர் உடனடியாக உளியை கொண்டு அவர்கள் மண்டையில் அடிக்க வேண்டும். இது நிஜமான உளியின் ஓசையாக இருக்கும். தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் பா எழுதியவரிடம் நாம் இதை எதிர்ப்பார்க்க முடியாது.

ராஜ்வி காந்தியின் கடைசி மணித்துளிகள்( எழுதியவர் தா.பாண்டியன்) என்ற புத்தகத்தில் ராஜிவ் கந்தியை சிறந்த நண்பர், தேசியத் தலைவர் என்று எல்லாம் எழுதியிருக்கும் தா பாண்டியன். இன்று விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுன்னு பலர் பேசும்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறார் ?


நேற்று 'லாடம்' படத்தின் சிடி வெளியீட்டு விழாவில் பேசிய சத்தியராஜ் சீமான், அமீருக்கு துணை நிற்போம் என்று கூறியிருக்கிறார். பிறகு "ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை என்து வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் என்னால் போக இயலவில்லை" என்றும் கூறியிருக்கிறார்.

ஆக வீட்டு நிகழ்ச்சி ஊர்வலத்தை அதைவிட முக்கியம். அதே போல் நமக்கு முதலில் தமிழ்நாடு முக்கியம், பிறகு ஈழத் தமிழர்களின் நலன் பற்றி பேசலாம். இங்கே ஒரு ஆயுத கலாச்சாரத்துக்கு வழி வகுத்திடக் கூடாது.

இந்த மாதிரி பேசிக்கொண்டிருந்தால் சத்தியராஜூக்கு நிஜமாகவே லாடம் அடிக்க வேண்டும்.

''ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்ற பெயரில் ராஜீவ் காந்தி கொலையைக் கொச்சைப்படுத்தி ராமேஸ்வரத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோருக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?'' என்று பாரதிராஜாவிடம் கேட்ட கேள்விக்கு

''அவர்கள் பேசியதில் என்ன தவறு? தேசியம் பேசுகிற தங்க பாலுவைக் கேட்கிறேன்... மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக கோட்சே இனத்தை அழித்தீர்களா? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றது சீக்கியர் என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா? சீக்கியனும் உணர்ச்சிவசப்பட்டான்.தமிழனும் உணர்ச்சிவசப்பட்டான். சீக்கியனைமட்டும் மன்னிச்சுடுவ... தமிழனைத் தண்டிச்சுக்கிட்டே இருப்பியா?'' என்று பதில் சொல்லியிருக்கிறார்.

ஆர் எஸ் எஸ் காந்தி கொலையை நியாயப்படுத்தவே இல்லை. அதுமட்டுமல்ல, பல்வேறு ஹிந்த்துத்வா வாதிகள் காந்தி கொலையை சரி என்று சொல்வதில்லை.
பின்னர் இதை எப்படி அதோடு ஒப்பிடமுடியும்? சரியான கிராமத்தானாக இருக்கிறார் பாரதிராஜா. சீக்கியன் உணர்ச்சிவசப்பட்டான் என்றால் அது ஒரு சிறிய கூட்டத்தின் உணர்ச்சிவசப்படுதல். ஆனால் எல் டி டி ஈ என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு. அதையும் இதையும் ஒன்றாகப் பார்க்கமுடியுமா ?

"போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ரஜினி, கமல் உங்களிடம் பேசினார்களா?''" என்ற கேள்விக்கு ''எதுவும் பேசவில்லை. ஒருத்தரை 'உலகநாயகன்' என்கி றார்கள்! இன்னொருத்தரை 'சூப்பர் ஸ்டார்' என்கிறார்கள்! என்று பதில் சொல்லியிருக்கிறார். கமல், ரஜினினியை இதற்காகவே பாராட்டணும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான் என்று பேசியுள்ளார் முதலில் ஜெ இவரை கூட்டணியிலிருந்து வெளியேற்றணும்.

பிரிவினை பேசுபவர்களை எல்லாம் மூட்டை பூச்சியை நசுக்குவது போல நசுக்கிவிட வேண்டும்.

25 Comments:

Krishnan said...

Well said !

Anonymous said...

STUPID COMMENT.
IDIOT

Ravi said...

IV avargalae... I just can't add anything else. Your post was too crisp and nachchu-nu irundhudhu - Hats off and my salutations to you! Eppo dhaan makkaL thirundhuvaangalo and eppo dhaan ippadi sambandame illamaa Tamizh Tamizh-nu ellaathukkum Tamizha izhukka nirutha poraangalao!!

I am not even trying to assess what LTTE did in India but atleast anga SL Tamil makkalukku nalladhu pannaangala? I definitely wish to write a very elaborate post about it. Am gathering all information.
Thanks!

ஆனந்த் said...

நல்ல கருத்து ..........

Kalyan said...

Great post..

Because of Non-compromise and stubborn attitude of both Sinhalese and LTTE this issue is extending.. First they should announce cease-fire which they do many time and resume at their convienient times..( like people quitting smoking )
Now LTTE is asking support to india because they are weak and close to defeat..


First we Tamils in TN should understand that we should not fight internally among overselves( that too film directors targeting film actors is a big joke) to support LTTE in SL that itself show patriotic we are..

LTTE is not the only face of Tamils in Srilanka..LTTE killed so many tamil leaders even one(forgot his name) leader in Kodambakkam. Where did this Tamil patru go?

I thought LTTE adviser Anton Balasinagam was the only sensisble person who had great ideas inspite of so many difference of opion with LTTE leader VP and did some good work.. After his death there is no hope..

The only solution is like what happened in Czech-slovika ( Velvet Divorce) and Automonous governance

அச்சுப்பிச்சு said...

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களையும்,விடுதலைப்புலிகளையும் ஒரே நோக்கில் பார்ப்பதால்தான் இந்தக்குழப்பம். இதை பாகுபடுத்தி பார்க்க முடிந்தால் குழப்பமேயில்லை. ஈழத்தமிழர்களுக்கெதிராக தமிழ்நாட்டில் எந்தக்குரலும் எழும்பாது, இது உறுதி.புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம். தங்கள் கருத்தை ஆதரிக்காத ஈழத்தமிழர்களை, அவர்கள் பூண்டறுக்கவும் தயாராக இருப்பவர்கள். இதை தமிழ்நாட்டில் புரிந்துகொண்டால் போதும். மூளையுள்ளவர்களுக்கு இதில் குழப்பமேயில்லை.

பரமசிவம் said...

இதுவரை நீங்கள் காட்டிய புலி பூச்சாண்டி இனியும் எடுபடாது. ஊர்வலம் ஆர்பாட்டம் நடத்தவே வராத தமிழனா தமிழ்நாட்டை பிரிச்சி குடுன்னு போராட போறான்?

தமிழனின் பயம் தெளிய பதினெட்டு ஆண்டுகள் தேவைபடுகிறது.

ஏதோ கலைஞர் புண்ணியத்தில் மத்தியில் ஆட்சியை அனுபவித்து கொண்டுளார்கள்.

காங்கிரஸ்காரன் என்று ஊரில் எத்தனை பேர் இருப்பான்!

காங்கிரஸ் காரன் தனியா நின்னா டெப்பாசிட் வாங்குவானா? வெத்துவேட்டு ஞான சேகரனும் அட்ரஸ் தெரியாத ஞான தேசிகனும், மிஸ்டர் நைன் வள்ளல் பெருமானும் சும்மாவேனும் கொக்கரிகாம இருந்தா தேவலை!

பதினெட்டு வருசமா கொலை கொலைன்னு தமிழ்நாட்டை ஒப்பாரி களமா வைத்துருந்தது போதுமடா சாமிகளா!

புலி ஆதரவுன்னு பேசுறவங்களை புடிச்சி உள்ளே தள்ளனும்னா ஐந்து கோடி பேருக்கு ஜெயில்ல இடம் இருக்கா? அட்லீஸ்ட் பத்து கோடி இட்லியாவது ரெடி பண்ணனுமே, முடியுமா?

IdlyVadai said...

பரமசிவம் -

இதை படியுங்கள்

http://idlyvadai.blogspot.com/2006/07/2.html

திரைப்பட நடிகர்கள் ஊர்வலத்தில் அவர்களை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் தான் அதிகம். இதை ஆதரவு என்று எடுத்துக்க கூடாது.

எனக்கு தெரிந்த திரைப்படதுறையை சேர்ந்தவர்கள் ஏதோ compulsionல் கலந்துக்கொண்டதாக எனக்கு சொன்னார்கள்.

புலி ஆதரவு என்பது ராஜிவ் காந்திக்கு பின்பு குறைந்துவிட்டது. ஆதரவு இருப்பது தமிழ் இணையத்தில் மட்டும் தான். இது ஒரு மாயை.

ஆயா கடை said...

தமிழ் நாட்டில் மூளை உள்ளவன் ஒரு ஆயிரம் பேர் இருப்பீர்களா?!!

அய்யா அச்சுபிச்சு முனியாண்டி விலாசுக்கு மூளை தேவைபடுதாம்! இட்லி வடையும் சேத்து அனுப்பிவையுங்கோ!

கிரி said...

//மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக கோட்சே இனத்தை அழித்தீர்களா? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றது சீக்கியர் என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா? சீக்கியனும் உணர்ச்சிவசப்பட்டான்.தமிழனும் உணர்ச்சிவசப்பட்டான். சீக்கியனைமட்டும் மன்னிச்சுடுவ... தமிழனைத் தண்டிச்சுக்கிட்டே இருப்பியா?'' என்று பதில் சொல்லியிருக்கிறார். //

சரியாக தான் கேட்டு இருக்கிறார்.

ஒன்றும் அறியா அப்பாவிகளை கொல்வது எந்த விதத்தில் நியாயம். அவர்கள் தவறு செய்து விட்டார்கள் என்றால் அதற்காக அவர்கள் ஒட்டு மொத்த பேரையும் எதிர்த்து இன்னும் எத்தனை நாள் இதே பாட்டை காங்கிரசார் பாடி கொண்டு இருப்பார்கள். ஒருவரின் கொலைக்கு ஒட்டு மொத்த இனத்தையே அழிக்க துணை போவது தான் நியாயமா? நல்ல இருக்குப்பா உங்கள் நியாயம்.

Anonymous said...

மன்னிக்கவும் இவ அவர்களே, விடுதலைப்புலி ஆதரவாளர்களை இந்திய அரசு தண்டிக்கக்கூடாது. அங்கே போய் ஆதரவு கொடுங்களடா என்று இவர்களையெல்லாம் வன்னிக்கோ யாழ்ப்பாணத்துக்கோ பண்ணிவிட வேண்டும் பார்சல்.

Ravi said...

நான் பார்த்த வரையில் LTTE-யை ஆதரிக்கும் பெரும்பாலோர், விவாதத்தில் முன் வைக்கும் வாதங்களை விட்டுவிட்டு ஏதேதோ சம்பந்தம் இல்லாத ஏசல்களை இறைக்கின்றனர் - IDIOT, பார்பனர், தமிழ் பற்று அற்றவர்கள், திரோகி இப்படி நிறைய. இப்படி பட்டவர்கள் LTTE போன்ற ஒரு கேவலமான அமைப்பை ஆதரிப்பது ஒன்னும் ஆச்சரியம் இல்லை. அவர்களுக்கு நான் கூறுவது: முடிந்தால் முன் வைக்க படுகின்ற வாதங்களுக்கு பதில் சொல்லுங்கள், இல்லையேன் பேசாமல் இருங்கள். அதை விட்டு இப்படி பேசுவது வானத்தை பார்த்து எச்சல் துப்புவதற்கு சமமாகும்.

ILA said...

in one simple word

BULLSHIT(prob two)

Anonymous said...

வி.பு தீவிரவாத இயக்கமா என்று மனசாட்சி உள்ளவர்கள் கேட்கொள்ளுங்கள். தன் தாய்குலத்தை பெண்களை இழிவு செய்து கொன்றவனைத் திருப்பி அடிப்பது வன்முறையா ?

இன்று நடத்தப்பட வேண்டிய விவாதம் இதுவே. இந்தியா தான் தலையிட வேண்டாம் என்று வி.பு கூறியுள்ளது. தமிழன் தலையிட வேண்டாம் என்று எங்காவது சொல்லியுள்ளதா ?

ஏன் சார், அந்த முண்டாசு காரங்க சின்ன இனமா ? சீக்கியன் இல்லாத ஊர் இருக்கா ? அப்படி என்றால் இ.கா. இறந்தவுடன் சீக்கிய கலவரம் ஏன் வரனும் ?

குருதுவாராக்குள் இராணுவத்தை ஏன் அனுப்பின என்று தானே மெய்காப்பாளன் தன் இன உணர்வால் சுட்டான். அவனுக்கு குருதுவாரா புண்ணிய பூமி.

ஈழத்துல அமைதிக்காக போன படைகள், பின்னர் அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லாத புலிகளுடன் மட்டும் சண்டையிடுவதை விட்டு பெண்களை இழிவு படுத்தியதால் தானே ரா.காவை இழந்தது இந்தியா.

இதெல்லாம் இருக்கட்டும்...இலங்கையில் அந்நாட்டு தமிழன் அதிபராக முடியாது என்பது எழுதப்படாத சட்டம். ஏற்றத் தாழ்வு சாதி மதத்திலிருந்தாலே அது தவறு என்று கருதும் இந்தியா தன் மக்களை இப்படி இழிவு படுத்தும் இலங்கை அரசை ஆதரிப்பது ஏன் ?

எம்.ஜி.ஆர் மற்றும் இ.கா வி.புவிற்கு ஆயுத பயிற்சி அளித்து வந்தை மறந்து விட்டீர்களா ?

***

இதெல்லாம் இருந்தாலும் வை.கோ, சீமான் போன்றவர்கள் வீர வசனம் பேச வேண்டியது உலக அரங்குகளில். ஏன் வி.புவை தீவிரவாத இயக்கம் என்கிறீர்கள் என்ற கேள்வி இந்தியாவில் மட்டும் பேசினால் இது வேலைக்கு ஆகாது.

தென்றல் said...

அட சூப்பரா சொல்லிருக்கீங்க..
இந்த சன் டீவியில கால்மேல கால் போட்டுட்டு 'Lino dates வழங்கும் Top 10 மூவிஸ்' சொல்லுவாங்கல அதுபோல...

நேரம் இருக்குமின் இதயும் கொஞ்சம் பாருங்க...

http://www.youtube.com/watch?v=34QLZAX8mAI

(இது மாதிரி சிங்கள மக்களுக்கும் நடந்துருக்குமிலனு 'அறிவுபூர்வமா' கேக்கமாட்டீங்கனு நினைக்கிறேன்..)

Anonymous said...

Sabash, Netri Adi :) :P

Sethu Raman said...

ivangalaa pesaranga? puli kodukkira panam alla pesurathu!

Sethu Raman said...

ivangalaa pesuranga? puli kodutha panam alla pesurathu?

புஷ்பராஜ் said...

//என்று பாரதிராஜாவிடம் கேட்ட கேள்விக்கு

''அவர்கள் பேசியதில் என்ன தவறு? தேசியம் பேசுகிற தங்க பாலுவைக் கேட்கிறேன்... மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக கோட்சே இனத்தை அழித்தீர்களா? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றது சீக்கியர் என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா? சீக்கியனும் உணர்ச்சிவசப்பட்டான்.தமிழனும் உணர்ச்சிவசப்பட்டான். சீக்கியனைமட்டும் மன்னிச்சுடுவ... தமிழனைத் தண்டிச்சுக்கிட்டே இருப்பியா?'' என்று பதில் சொல்லியிருக்கிறார்.//

-- இப்படி சொன்னது சீமான். பாரதிராஜா அல்ல.

சந்திரபிரகாசம் said...

//கிரி said...
ஒருவரின் கொலைக்கு ஒட்டு மொத்த இனத்தையே அழிக்க துணை போவது தான் நியாயமா?
-
Anonymous said...
புலிகளுடன் மட்டும் சண்டையிடுவதை விட்டு பெண்களை இழிவு படுத்தியதால் தானே ரா.காவை இழந்தது இந்தியா.
//
----

ஒருவரின் கொலை? ரா.கா. வை மட்டும் தனியாக யாரும் கொல்லவில்லை. அவரோடு சேர்ந்து இருந்தவர்களும் கொல்லப்பட்டார்கள். இது ஒரு விடுதலைபோராட்ட இயக்கத்தின் செயலா, இல்லை தீவிரவாத குழுவின் செயலா? இராணுவ வீரர் போரிட்டு இறந்தால் அது அவருடைய தியாகம், ஆனால் தப்பு செய்தால் அப்போதைய பிரதமரின் தவறு, என்ன நியாயம் இது?
பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தீவிரவாதிகளை ஆதரித்தால் அது குற்றம், ஆனால் இனத்தின் பெயரால் நாம் தீவிரவாதிகளை ஆதரிக்கலாம் என்பது போல் உள்ளது உங்கள் வாதம். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காணக்கூடிய ஒரு அமைப்பு கிட்டும் வரை நீங்களும் நானும் அனுதாபம் மட்டுமே அவர்களுக்கு கொடுக்க முடியும். அப்படியொரு அமைப்பு உருவாக முயற்சி செய்தாலும், அதை சிங்கள அரசை விட தீவிரவாதிகள் அதிகம் விரும்ப மாட்டர்கள் என்பதே உண்மை.

IdlyVadai said...

//-- இப்படி சொன்னது சீமான். பாரதிராஜா அல்ல.//

புஷ்பராஜ் - இந்த் வார ஜூவி பாருங்கள். இதை சொன்னது பாரதிராஜாதான். ( சீனானும் அவர் பேச்சில் சொல்லியிருக்கிறார் )

muthu said...

போர் , இனப்படுகொலை எல்லாம் விட்டு விடுங்கள்..

ஒரே நாட்டில் இருக்கும் ஒரு பிரிவு மக்களை இனவெறி காரணமாக், நீங்கள் இரண்டாம் நிலை குடிமகன் என்று சட்டமிட்டு (only Singhlesee Law) ஒரு இன அழிப்பை நடத்தும் அரசை கண்டிக்க துப்பில்லையா எந்த உலக நாட்டுக்கும்?

இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்..

சயந்தன் said...

இலங்கையில் அந்நாட்டு தமிழன் அதிபராக முடியாது என்பது எழுதப்படாத சட்டம். //

அது எழுதப் பட்ட சட்டம். இலங்கையின் அரசியற் சட்டத்தின் படி ஒரு தமிழன் எதிர்க்கட்சித் தலைவனாக கூட வரமுடியாது.

மிகத்திட்டமிட்டு ஜெ ஆர் செய்த அரசியற் கொலை அது. விகிதாசார பிரிநிதித்துவம் - அதாவது பாராளுமன்றில் 75 சதவீதம் சிங்களவர். 25 சதவீதம் தமிழர்கள்.

அது மட்டுமல்ல - சுயாட்சியை வழங்கக் கூட அச் சட்டம் இடமளிக்காது. அச்சட்டத்தை மாற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவை. ஆக அதிலும் தமிழர்கள் செல்வாக்கு செலுத்த முடியாது.

ஆயுதம் எல்லாவற்றையும் போட்டு விட்டு அரசியல் வழியில் தீர்வு காணுங்கள் சுயாட்சியை பெற்றுக் கொள்ளுங்கள் என சொல்பவர்கள் இது பற்றியெல்லாம் ஏன் யோசிப்பதில்லை.

புலிகளின் ஆயுதம் ஆககுறைந்தது அந்த சட்டத்தை மாற்றும் அழுத்தத்தையாவது சிங்கள கட்சிகளுக்கு கொடுக்கும் என்பதுதான் இருக்கும் ஒரே நம்பிக்கை..

மற்றும்படி - கருத்து தெரிவிப்பவர்களை பூண்டோடு நசுக்குதல் தூக்கில் போடுதல் - கல்லால் எறிதல் - இதையெல்லாம் ஜனநாயக நாட்டில் உங்களால் சொல்ல முடிகிறது. விரும்பவும் முடிகிறது.

ஆனால் இதையே புலிகள் செய்தால் சர்வாதிகாரம் என முடிகிறது.

அதுவும் சரிதான் - மூன்றாம் உலக நாடுகளின் ஜனநாயகம் சர்வாதிகாரத்தின் கால்களில்தான் நிற்கிறது.

Selva said...

you don't publish the opposite views. so, there is no point in writing anything.

geeyar said...

சில மாதங்களுக்கு முன் ஒருபதிவில் இந்தியாவின் புதிய பாடத்திட்டம் என எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்கு வழங்கும் சலுகைகளை விமர்சித்தீர்கள். உண்மையான சிறுபான்மையினராக இருந்தும் உங்களால் அதை தாங்க முடியவில்லை. உங்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும் எங்கள் இன கரிசனத்தை. ஈழத்தமிழனும் எங்கள் சகோதரனே. தமிழ் பேசுகிறாய் என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு நானும் தமிழன்தான் என விதண்டாவாதம் பேசாதே இருக்கிற 2 சதவீதமும் இல்லாம போய்டுவீங்க. பிரபாகரனும் ராஜீவ்காந்தியும் அடுத்தடுத்த வீட்டீல் இருந்தாங்களா? இல்லை ஏதும் சொத்து தகறாறு இருந்ததா?