பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 22, 2008

நீங்க நல்லவரா கெட்டவரா ? - ப்ரியா கதிரவன்கல்யாணத்துக்கும் 'XOR' Gateக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு எல்லோரையும் சிந்திக்க வைப்பவர் ப்ரியா கதிரவன் இவர் இட்லிவடையை பற்றி என்ன சொல்லுகிறார் ?

மேலே உள்ள புதிருக்கு விடை அவர் பதிவிலே போய் பாருங்க :-)சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, அவரும் நானும் ஒரே ஆபீஸ் ல வேற வேற cubicle ல உக்காந்து வேலை பாத்துக்கிட்டு இருந்த ஒரு பிஸி(??)யான காலைப்பொழுது.

IM ல ஓரு ping.

"hey, look at this blogspot....its very interesting....."http://idlyvadai.blogspot.com/"

"blogspot ஆ?? அப்டின்னா?"

இப்படித்தான் பதிவுலகம் எனக்கு அறிமுகம் ஆனது. நான் படித்த முதல் பதிவு இட்லிவடை தான். பிறகு ரொம்ப நாளைக்கு silent டா, ஆனால் ஒரு பதிவு விடாமல், comments கூட விடாமல் follow பண்ணிட்டு, சில தடவைகள் 'அனானி' யாக கேள்வி எல்லாம் கேட்டுட்டு....சமீப காலமா தைர்யமா சொந்த பேர்லயே துரத்த ஆரம்பிச்சுருக்கேன்.

................

ஆரம்பத்துல பல பத்திரிக்கைகளில் இருந்து முக்யமான செய்திகளை தொகுத்து தரும் ஒரு பதிவாகவே நான் நினைத்த இட்லிவடை, எனக்கு personally சில விஷயங்கள் தந்து இருக்கு.

--தவலை வடை மேல தவளை படம் போட்டு ஜெயஸ்ரீயை சீண்டி, எனக்கு தாளிக்கும் ஓசையை அறிமுகம் செஞ்சது....(அவங்க இவரை உதிர்த்து போட்டு தாளிச்சு உப்புமா ஆக்கினது தனிக்கதை)

--இட்லிவடை ல கேள்வி கேட்டு ஒரு அனானி புண்யவான் பதில் சொல்லி தான் நான் தமிழ்ல டைப் பண்றது எப்டின்னு கத்துக்கிட்டேன்...

--இட்லிவடை comments section மூலமாக சில அருமையான பதிவுகளின் அறிமுகம்.

--இட்லிவடையில் சொந்த பேர்ல comment போட ஆரம்பிச்ச அப்றோம், என் 'synapse' இல் comments எண்ணிக்கை அதிகமானது...:-)
.......

'நமீதா கண்ணை கிளிக் பண்ணு... ஷாக் அடிக்கும்'

'ஸ்ரேயா மூக்கை கிளிக் பண்ணு...பவர் கட் ஆகும்'

இந்த ரீதியில் அப்பப்போ 'கமர்ஷியல் விஷமங்கள்' பண்ணாலும்....'மோகனப்ரியா' மாதிரி 'விஷயங்கள்' பண்ணி ரசிகைகளை தக்க வைத்துக் கொள்ளும் கில்லாடி.
.....

'பாடிகார்ட் முனிக்கு கடிதம்' இட்லிவடை பதிவில் எனக்கு ரொம்ப பிடிச்ச பகுதி இதான். அதிலும் ஒரு கடிதத்தில் வெச்சாங்களே ஒரு பஞ்ச்....'பவர் கட் ஆன தமிழகம்' .... செம பவர் புல்....

.......

அடுத்தது இட்லிவடை கேள்வி பதில் ...

ஒரு sample....

கேள்வி: ஏன் இட்லிவடையில் சனி ஞாயிறுகளில் பதிவு இல்லை...?அப்போல்லாம் நாட்டுல ஏதும் முக்யமா நடக்காதா?

பதில்: அதெல்லாம் இல்ல....அன்னைக்கு ஆபீஸ் லீவ்.

பல பேர் கிட்ட இதை சொல்லி சொல்லி சிரிச்சுருக்கேன்...
........

தசாவதாரம் ரிலீஸ் அப்போ ஸ்வீடன் ல இருந்தேன்....படம் தான் ரிலீஸ் அன்னைக்கு பாக்க முடியாம எங்கயோ இருக்கோம்... atleast விமர்சனம் உடனே படிச்சுடணும் னு நொடிக்கொரு தடவை IV யை refresh பண்ணி பாத்துட்டு இருந்தேன்....'குடுத்த காசு முதல் 15 நிமிஷ படத்துக்கே சரியா போச்சு..மிச்சமெல்லாம் ஓசி படம்' ன்னு படிச்சு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

ஆனா அப்பப்போ 'தலைவரை' வம்புக்கு இழுத்து எங்க வயித்தெரிச்சலை எல்லாம் கொட்டிக்கலைன்னா என்னவாம்? ஆனா 'எந்திரன்' stills, ரஜினி விகடன் லாம் போட்டு எங்களை கூல் பண்ணிடறீங்க...

.........

சமயத்துல ரொம்ப டூ மச்சா மொக்கை போடறதுலையும் இவங்களை அடிச்சுக்க ஆளே இல்ல...'அக்ஷய திருதயை' அன்னைக்கு போட்டாங்களே பாக்கணும்.....ஆனா அந்த மொக்கையோட மொக்கையா அவங்க தலைய promote பண்ற வேலையும் கரெக்டா பண்ணிட்டாங்க .....எத்தனை நாளைக்கு தான் நம்ம coding, testing, blogging னு பண்ணுறது....பேசாம 2011 ல கொள்கை பரப்பு செயலாளர்(கள்) ஆகிடலாம் னு முடிவே பண்ணிட்டாங்க.....கேப்டன் தலை('விக்'கை) சீவுனாரு, பல்லு((செட்டை) வெளக்குனாரு இந்த மாறி 'சப்ப' மேட்டர் ஏதோ ஒண்ணு போட்டுக்கிட்டே இருக்க வேண்டியது....முடியலைப்பா...

..........
'பதிவுலக அரசியல்' எனக்கு பழக்கமில்லை....அதனால் IV யில் சில பதிவுகள் எனக்கு புரிவதில்லை....எங்கயோ பத்த வெக்கறாங்கன்னு மட்டும் புரியும்...உதாரணத்துக்கு 'IV பே(ய்) site ஆகிறது'. இவங்களுக்கும் அவருக்கும் ஏதாவது 'பழைய' பகையா இல்ல இது சும்மா 'நக்கல்' மட்டுமா இல்ல IV அந்த online ஐ ரகசியமா promote பண்ராறான்னு நான் ரொம்ப கொழம்பிட்டேன்.
.......
காலைல வந்தோன outlook க்கு அப்றோம், சில நேரங்களில் அதுக்கும் முன்னாடி நான் open பண்ற site களில் முதலிடம் இட்லிவடைக்கு தான். அஞ்சு வருஷமா ஒரு பதிவை வெற்றிகரமா நடத்தி வருவது ரொம்ப பாராட்ட வேண்டிய விஷயம். வாழ்த்துக்கள். வளருங்கள்.

............

எல்லாம் நல்லாத்தான் இருக்கு....ஆனா என்ன? 'ரமணா ACF' மாறி மூஞ்சிய காட்ட மாட்றீங்க.......உங்க 5th anniversary யை முன்னிட்டு உங்க குரூப் போட்டோ ஒண்ணு போட்டீங்கன்னா ' ஓ! இவிங்க தானா அது???' ன்னு நாங்கள்லாம் பாத்துப்போம் இல்ல....?
'அந்நியன் மக்கள் முன் தோன்றுகிறார்' மாறி ஏதாவது ஐடியா இருக்கா ? எதுனாலும் கூடிய சீக்கிரம் பண்ணிட்டா உங்களுக்கு பொது மன்னிப்பு கெடைக்க வாய்ப்பு இருக்கு....இல்லாட்டி, கண்ணா! ஆட்டோல்லாம் பழைய பேஷன், உங்களுக்கு லாரி வரும்! ஜாக்ரதை.....

இட்லிவடையை பெண்கள் படிக்கிறார்களா ? என்ற கேள்வி எனக்கு அடிக்கடி வரும். புத்தக கடையில் பார்த்தால் குமுதத்தை பெண்களும், அவள் விகடனை ஆண்களும் வாங்குவார்கள்.
அதே போல் தான் இட்லிவ்டையும் :-).

அட இதற்காக ஆண்கள் படிக்காம இருக்காதீங்க :-)


3 Comments:

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//உங்க 5th anniversary யை முன்னிட்டு உங்க குரூப் போட்டோ ஒண்ணு போட்டீங்கன்னா ' ஓ! இவிங்க தானா அது???' ன்னு நாங்கள்லாம் பாத்துப்போம் இல்ல....?//


வழிமொழிகிறேன் !!!

வால்பையன் said...

உலகறிந்த விஷயம்
ஆனந்த விகடன் பார்த்து தான் என்னை போல் நிறைய பேர் பிளாக் என்பதையையே தெரிந்து கொண்டார்கள். நான் பார்த்த நாளிலிருந்து இன்று வரை ஒரு பதிவு கூட விடாமல் படித்து வருகிறேன்

கிரி said...

நல்லா சுவாராசியமா எழுதி இருக்கீங்க :-)