பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 21, 2008

அஞ்சு - அஞ்சாதே: இ.வ. பஞ்சதந்திரம் - பாபா

முதுகுவலி, மூட்டுவலி என்று ஜகாவாங்க பார்த்தார் பாபா என்று அழைக்கபடும் பாஸ்டன் பாலா கடைசியில் எழுதி தந்துவிட்டார்....

முதலில் சில சுட்டிகள்:

1. நான்காண்டுகள் முடிவில் இ.வ. எழுதியது: IdlyVadai
- இட்லிவடை: அடிக்கடி கேட்கப்படாத கேள்விகள்


2. இட்லி-வடை 1008 பதிவு எழுதியவுடன் எனக்கு எழுந்த சந்தேகங்கள்: IdlyVadai -
இட்லிவடை: 1008


3. இட்லி-வடை சுடுவதில் அசல் சரக்கு: மைடியர்
பாடிகாட் முனீஸ்வரனே!


இடையில் சில கருத்துகள்:

1. கல்லூரி ஆண்டு புத்தகம், ஆனந்த விகடன் தீபாவளி மலர், நாரத கான சபா
விழா என்றால் கவர்னர் பிரபுதாஸ் பட்வாரியை அழைப்பார்கள். அவரும் நாலு
பத்தியில் நாலு விதமாய் எழுதி/பேசிக் கொடுத்து விடுவார். இன்றளவிலும்
இணையத்திலும் இந்த ஆதிகாலத்து நாகரிகம் தொடர்வது, வலை வந்தாலும் தமிழர்
பாரம்பரியம் மறக்க மாட்டார் என்று இரும்பூது எய்தவைக்கிறது.

2. ஜான் ஸ்டூவர்ட்டின் டெய்லி ஷோவாக நோகடிக்கும் செய்திகளை புண்படுத்தாத
புன்சிரிப்போடு கொடுத்த இட்லி-வடை, கேபிடலிஸ அமெரிக்கா தேய்ந்து ஷோலிஸக்
கட்டெறும்பாக ஆன கதையாக செய்திகளை ஹார்லிக்ஸாக அப்படியே லூ டாப்ஸ் ஆக தர ஆரம்பித்தது சமீபத்திய வருத்தம்.

3. அதிகாலையில் எழுந்தால் காபியும் பேஸ்ட்டும் என்பது போல் இட்லி-வடை
அன்றாட அங்கமாகிப் போன தருணத்தில், இ-வ. தவறுதலாக காபி/பேஸ்ட்
கலாச்சாரத்தில் மட்டுமே மூழ்கித் திளைப்பது அயர்ச்சி கலந்த அதிர்ச்சி.

கடைசியாக சில வாழ்த்துகள்:

1. இணையத்தாரை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: அ) ஓராண்டு சுறுசுறுப்பாக
பல்சுவை காட்டிவிட்டு, சரக்கு தீர்ந்தவுடன் பதிவர் வட்டப் பதிவுகளாக
போடும் மொக்கைசாமிகள். ஆ) மலர்தோறும் தாவும் வண்டாக ஆண்டொன்றுக்கு
திக்கொன்றாக திசை மாறும் கவனச்சிதறாளர்கள். இ) ஆரம்பத்தில் இருந்தே கவன
ஈர்ப்புத் தீர்மானங்களினூடே சிக்கிக் கொள்ளும் அதிர்ச்சி
மதிப்பீட்டாளர்கள்.

இந்த மூன்று வடிவமைப்புக்குள் சிக்காமல் பிழைத்திருப்பதற்கு ஆச்சரியங்கள்.

2. செய்திகளைத் தருவது; அதனை பல்வேறு ஊடகங்களில் இருந்து பிழிந்தெழுத்து
மஞ்ச வண்ணம் அடித்து கண்ணைப் பறிப்பது; கொஞ்சம் பின்னணி; நிறைய வம்பு;
துளியூண்டு நக்கல் கலப்பது - இதை ஐந்தாண்டுகள் செய்வது.

நடுநடுவே சொந்த இடைஞ்சல்கள் (இதை நிஜ வாழ்வென்று அழைப்பார்கள்)
குறுக்கிடும்; ஏசல்கள் சோர்வுறுத்தும்; கீபோர்டுக்கு வலிக்கும்; கூகிள்
களவாடும்.

நாய்களின் ஒராண்டு ஆயுட்காலத்தை மனிதனின் ஏழாண்டுகளாக சொல்வார்கள். அதே
போல் வலையில் ஐந்தாண்டுகள் பிழைப்பது புராதன ஊடகமான பத்திரிகையில் 35
ஆண்டுகள் சேவை செய்வதற்கு சமானம். ப்ரிட்னி ஸ்பியர்சாக மீண்டும் மீண்டும்
முளைக்கும் வீரியத்திற்கு பாராட்டுகள்.

3. குமுதம் ரிபோர்ட்டர் துவங்கி கூடுவாஞ்சேரி டைம்ஸ் வரை இணையத்தில்
ஒருங்குறியில் புழங்கும் காலம் இந்தக் காலம். இதில் காப்புரிமை, படத்தின்
மூலம் திருடப்பட்டது என்று வழக்குகள் குவிந்து கழுத்தை நெறிக்கும் சூழல்.
இந்த கலிகாலத்திலும் மாரீசன் என்னும் மாயமானாக எவருக்கும் சிக்காத
முகமூடியணிந்து தமிழ்ச்சேவையில் காலந்தள்ளும் அர்ப்பணிப்புக்கு என்னுடைய
பிரமிப்புகள் சமர்ப்பணம்.

இணையம் உள்ளவரை நீங்காதிருக்க எல்லாம்வல்ல இறைவரை வேண்டுகிறேன்.
நன்றி பாஸ்டன் பாலா :-)

6 Comments:

இலவசக்கொத்தனார் said...

பாபா, சூப்பரா எழுதி இருக்கீங்க! அதுவும் அந்த ஜான் ஸ்டூவர்ட் போய் ஹார்லிக்ஸ் வந்த கதை உதாரணம் க்ரேட். அந்த வருத்தம்தான் எல்லாருக்கும்!!

இதுக்கு மேல என்னை எழுதச் சொல்லறாரு. நான் என்னத்த எழுத!!

ஆனா மொத்தமா மூணே மூணு சுட்டிகள்தான் இருக்கு என்பதைப் பார்த்தால் தங்கள் பெயரில் யாரோ போலிப் பதிவு போட்ட மாதிரி இருக்கே!! :))

Boston Bala said...

நன்றி கொத்ஸ் :)

முரளிகண்ணன் said...

பாஸ்டன் பாலா அப்போ நீங்க இட்லிவடை இல்லையா?

enRenRum-anbudan.BALA said...

//பாஸ்டன் பாலா அப்போ நீங்க இட்லிவடை இல்லையா?
//
அவரு இல்லப்பா, அவரை ஏன் சத்தாய்க்கிறீங்க ? ஆனா வேற பேர்ல எழுதறாரு, தெரியுமா ? ;-)

பாபா,
நல்லா இருக்கு பதிவு !

Anonymous said...

பாபா இட்லிவ்டையைப் பற்றி எழுதுவது வலது கட்டைவிரல் வலது கையைப் பற்றி எழுதிய விமர்சனம் :)

யோசிப்பவர் said...

எ.அ.பாலா,
//அவரு இல்லப்பா, அவரை ஏன் சத்தாய்க்கிறீங்க ? //

சர்வ நிச்சயமா சொல்றீங்கன்னா, அப்ப நீங்களும் க்ரூப் ஃபோட்டோவுல ஒருத்தரா?!;-))