பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 20, 2008

தாத்தாவுக்கு பேரன் கடிதம்

அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாநிதி மாறன் முடிவு செய்துள்ளார்.
.
ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைக்க வசதியாக தமக்கு நேரம் ஒதுக்குமாறு முதலமைச்சர் கருணாநிதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம் கீழே..

இந்த நிலையில் மத்திய சென்னை எம்.பி.யான தயாநிதி மாறன் முதல்-அமைச்சர் கருணாநிதியை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அவர் தனது எம்.பி. பதவி ராஜினாமா கடிதத்தை முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கொடுத்தார்.


தங்கள் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இலங்கை தமிழரின் வாழ்வுரிமை காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கையை இரு வார காலத்திற்குள் எடுக்காவிட்டால் தமிழகத்தின் அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்று எடுத்த முடிவினை ஏடுகள் வாயிலாக அறிந்தேன்.

இலங்கைவாழ் தமிழர்கள் இன்னல்களை களைய அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கேற்ப நானும், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் ஒப்படைத்தது போல் தங்களிடம் நேரடியாக ஒப்படைக்க விரும்புகிறேன்.

அதற்காக தாங்கள் எனக்கு ஒரு கால அவகாசம் ஒதுக்கி தர வேண்டுகிறேன்.

( இந்த கடிதம் அழகிரிக்கு fwd செய்யப்படும் என்று தெரிகிறது )

0 Comments: