பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 23, 2008

வைகோ கைது

இந்தியாவில் தடை செய்ய�பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார். இதேபோல் ம.தி.மு.க. அவைத்தலைவர் மு.கண்ணப்பன் பொள்ளாச்சி அருகே உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று மாலை கைது செய்யப்பட்டார்

ஏன் இந்த் கைது நாடகம் ?


'ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்து ஆவேசமாக பேசினார். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் முதல் ஆளாக வந்து களத்தில் நிற்பேன், நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன். இலங்கையில் தமிழ் ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் அதை தடுத்தது இந்தியாதான்



ஜெ அறிக்கை


பொடா சட்டம் இல்லாத தைரியத்தில் பிரிவினை பேசுகிறார்கள், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள், அவர்களை ஆதரிப்பவர்கள் தேச துரோகிகள், ராமேஸ்வரத்தில் திரைப்படத்துறையினர் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தனித்தமிழ்நாடு என்று துணிச்சலாக பேசியுள்ளனர். இப்போது தமிழகத்தில் எனது ஆட்சி இருந்திருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியவர்களை நிச்சயமாக கைது செய்து இருப்பேன். எனது ஆட்சியில் இதுபோல் பேசியவர்களை பொடா சட்டத்தில் சிறையில் அடைத்தேன். தற்போது பொடா இல்லாவிட்டாலும், இப்போதுள்ள சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்'


காவல்துறை தலைமை இயக்குநரின் எச்சரிக்கையை மீறி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில், விடுதலை புலிகள் அமைப்பை ஆதரித்து திருமாவளவன் பேசினார். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்கள் மறைவுக்கு இரங்கற்பா எழுதும் முதல்வர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.



தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பை மற்ற கட்சிகள் ஆதரித்து பேசும் நிலையில் காங்கிரசும், அ.தி.மு.க.வும் மட்டுமே எதிர்க்கின்றன.

விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசிய வைகோ அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். அவரது பேச்சுக்கும் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்யவேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவரது அறிக்கை வைகோவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருப்பதால் அ.தி.மு.க.-ம.தி.மு.க. உறவில் விரிசல் ஏற்படும்நிலை உருவாகியுள்ளது.

அதே சமயம் விடுதலைப்புலிகள் விஷயத்தில் காங்கிரசும்-அ.தி.மு.க.வும் ஒத்த கருத்துடன் உள்ளன. விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களுடன் கூட்டு சேர மாட்டோம் என்றும் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியிருக்கிறார்.

இலங்கை பிரச்சினை விசுவரூபம் எடுத்து இருப்பதால் தமிழக அரசியலிலும் அது கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பார்க்க வேண்டும்.

இந்த கைது ஏன் ?

விடுதலைப் புலிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில், விடுதலை புலிகள் அமைப்பை ஆதரித்து திருமாவளவன் பேசினார். அப்போது காவல் துறை சும்மா இருந்தது.

இயக்குனர் அமீர், சீமான் பேசினிர்கள் அப்போது காவல் துறை சும்மா இருந்தது.



ராமதாஸ் விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு இல்லை என்று காமெடி செய்தார் அதற்கும் காவல் துறை சும்மா இருந்தது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்கள் மறைவுக்கு இரங்கற்பா எழுதினார் அதற்கு காவல் துறை சும்மா இருந்தது

ஆனால் இப்ப வைகோ பேசியதற்கு கைது செய்திருக்கிறது.

இப்ப வைகோ கைதுக்கு ஜெ ஒன்றும் சொல்ல முடியாது, அவர் ஒன்றும் சொல்லவில்லை என்றால் கூட்டணி உடையும் வாய்ப்பு இருக்கிறது. ஆக வைகோ கைதால் கலைஞர் ஒரு கூட்டணியை உடைக்க பார்க்கிறார். வேற எந்த காரணமும் இல்லை.

சரி மிஸ்டர் கலைஞர் ராமதாஸ், திருமாவளவன் மற்றும் பலருக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ?

தலைவரே தமிழ்நாட்டில் மக்களுக்கு கரண்ட் இல்லை, அதையும் கொஞ்சம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்...

21 Comments:

யோசிப்பவர் said...

இன்னாபா ஈது? நூஸக் காணோம். தலீப்பு மட்ட்டுங்கீது!! அவ்ளோ அவ்சரமா

IdlyVadai said...

அட உடனே என்ன எழுத ? இப்ப பாருங்க

Kalyan said...

IV, Thirumalvalvan also Arrested

Anonymous said...

Neththi Adi....

Anonymous said...

இட்லி வடை ..நடுநிலை தவறி சட்னி சாம்பார் ஆகுதா .?..

அந்த கூட்டத்துல பேசுன தனி தமிழ்நாடு கோசம் ..அத பத்தி ஏம்பா சொல்லல ....

தனி தமிழ்நாடுங்க்றது பிரிவினை வாதம் இல்லையா ..இதுக்கு இவங்களை உள்ள வைக்காம கோபுர கலசத்திலேயா வைக்கணும்

IdlyVadai said...

kalyan - இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து ரெயில் மறியல்: திருமாவளவன் கைது. இதற்கும் வைகோ கைதுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பேசிய பேச்சுக்கு ஏன் கைது செய்யவில்லை என்பது தான் என் கேள்வி

IdlyVadai said...

//இட்லி வடை ..நடுநிலை தவறி சட்னி சாம்பார் ஆகுதா .?..

அந்த கூட்டத்துல பேசுன தனி தமிழ்நாடு கோசம் ..அத பத்தி ஏம்பா சொல்லல ....

தனி தமிழ்நாடுங்க்றது பிரிவினை வாதம் இல்லையா ..இதுக்கு இவங்களை உள்ள வைக்காம கோபுர கலசத்திலேயா வைக்கணும்//

நான் வைகோ கைது தப்பு என்று சொல்லவில்லையே..

சீமான் பேச்சை youtubeல் கேளுங்கள் தனிதமிழ் நாடு பற்றி எப்படி பேசுகிறார் என்று. ஏன் அவரை கைது செய்யவில்லை ?

கருப்பன் said...

ராமதாஸ் பேசுனது இந்திய தேசிய தலைநகரில். டெல்லியில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ். அங்கியே வைத்து அய்யா ராமதாசை நசுக்க வேண்டியதுதானே! அங்க பேசுனதுக்கு கலைஞர் நடவடிக்கை எடுக்கணுமா?

வினை விதைத்தால் வினை அறுப்பான் பழமொழி போல காங்கிரஸ் திமுக கூட்டணியை உடைக்க ஜெயலலிதா போட்ட திட்டம் - அவர் விட்ட ஈழ தமிழர் ஆதரவு அறிக்கை - கருணாநிதியை அவருக்கிணையாக செயல்பட செய்தது.

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது ஜெயாதான். ஜெயா செய்தால் அரசியல் ராஜதந்திரம். அதையே கருணாநிதி செய்தால் நாடகம்.என்ன நியாயம் மிஸ்டர் இட்லி வடை?

கோவை கண்ணன் said...

விடுதலைப்புலி பற்றி கருத்து சொன்னால் கைது செய்வது முட்டாள்தனம். பேச்சு உரிமை இந்த நாட்டில் இன்னமும் இருக்கு என்று நம்புகிறேன்.

தமிழக அரசை வண்மையாக கண்டிக்கிறேன். தமிழ் ஈழம் அமைந்தால்தான் இந்த பிரச்சனைக்கு திர்வு வரும்.

Anonymous said...

வைகோ கைது -வேதனை வெட்கம் அவமானம் தமிழினத்துக்கு!
எனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்!

இலவசக்கொத்தனார் said...

//Kalyan said...

IV, Thirumalvalvan also Arrested//

என்னாது? இட்லிவடையும் காலியா? கட் பேஸ்ட் பண்ணினாக்கூடவா கைது? என்ன அநியாயம்பா இது?! :)

அறி விழி எழு said...

வைகோ கைது செய்யப்பட்டது சரியா?

இன்று (23.10.2008) பிற்பகலில் வைகோ காவலர்களால் கைது செய்யப்பட்டார், மதிமுக பொது செயலாளர் மு.கண்ணப்பனும் கைது செய்யப்பட்டு உள்ளார்.


முதலில் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன் , இணையத்தில் பதிவர்கள் பலரும், கருதுவது போல வைகோ ஈழத் தமிழர்களயோ அல்லது விடுதலைப் புலிகளையோ ஆதரித்துப் பேசியதற்காக கைது செயப் படவில்லை,


அவர்கள் இருவரும் இந்தியாவில் வன்முறையைத் தூண்டி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயன்றதால் பிரிவினைவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டு உள்ளனர்.


21.10.2008 அன்று ஈழத்தமிழர் ஆதரவு கூட்டத்தில் வைகோ பேசிய போது கூறியவை,


இந்திய அரசே இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க முயற்சித்து இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுத்து விடாதே


இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டில் முதல் ஆளாக ஆயுதம் ஏந்துவேன்.


தமிழக இளைஞர்களை ஆயுதம் ஏந்துவதற்காக திரட்டுவேன்.


அந்தக் கூட்டத்தில் மு.கண்ணப்பன் பேசியவை,

தனித் தமிழ்நாடு மலர்ந்தே தீரும்,

இந்தியாவின் இறையாண்மையை முதல்வர், பிரதமர் போன்ற யாராலும் காக்க முடியாது.

வைகோவும் , மு.கண்ணப்பனும் இது போல பேசி இந்தியாவில் பிரிவினையை தூண்டி, இளைஞர்களிடம் வன்முறை உணர்வை ஏற்படுத்த முயற்சித்ததால் , இந்திய பிரிவினை தடுப்பு சட்டத்தில்தான் கைது செய்யப் பட்டுள்ளனர்.


இதை எல்லாம் உணராமல் ஆளாளுக்கு ஏன் ராமதாஸ்,திருமா வளவன், சீமான், பாரதிராஜா,ஆமீர் போன்றோரை எல்லாம் விட்டு விட்டு வைகோவை மட்டும் கைது செய்தனர் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர் .


ராமதாஸ்,திருமா வளவன், சீமான், பாரதிராஜா,ஆமீர் போன்றவர்கள் எப்போதும் தனித் தமிழ்நாடு வேண்டும் என்றோ , ஆயுதம் கடத்துவோம் என்றோ, இளைஞர்களைத் திரட்டி ஆயுதம் ஏந்துவோம் என்றோ பேசியதில்லை .


ஈழத் தமிழர் ஆதரவு என்பதற்கும் , இந்தியாவில் வன்முறையைத் தூண்டி பிரிவினையைக் கோருவது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Nokia Fan said...

Vai.Gopalasamy's calculation would prove partly wrong as always. He would be moving out of AIADMK as planned, to lick Vijaykanth's foot for few more seats, how ever only to see the later part to fail. Again, a wrong move by him. But I think this time his tail wouldnt stop that soon. There are more things to come fellows. This is just the beginning... What a waste he is....

--Nokia Fan

ஒப்பாரி said...

இட்லி வடை மட்டும்தான் சுடசுடவா! இதோ பார்த்து ஸிரித்திடுங்கள்!
http://tvpravi.blogspot.com/2008/10/blog-post_19.html

Anonymous said...

//ஈழத் தமிழர் ஆதரவு என்பதற்கும் , இந்தியாவில் வன்முறையைத் தூண்டி பிரிவினையைக் கோருவது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள வேண்டும்.//

அதுதானே எதற்கு இந்த தேவையில்லாத விளையாட்டு.

Anonymous said...

//பக்கி லுக்-இட்லி வடை ..நடுநிலை தவறி சட்னி சாம்பார் ஆகுதா?// என்னுடைய கேள்வியும் அது தான்.

Anonymous said...

நாட்டின் இறையாண்மை யை பத்தி பேச வந்துடங்கயா!!! கர்நாடகவில தமிழனை அடிக்கிறான், கேரளால தொரதறான், மும்பாயில கொல்றான்.... அப்பயெல்லாம் எங்கயா போனீங்கள்!!!! பிஹரி மக்களை மகாராஷ்டிரா ல அடிக்கிறான்.
இத்தாலிகாரி இருக்கற மரியாதைக் கூட தமிழனுக்கு இல்ல. தமிழ்நாட்ட விட்டு வெளிய போய் பாருங்க!! எங்கயாவது உங்கள மதிக்கிரனா? இந்தியன்னு ஒதுக்கறன?

Anonymous said...

IV,

I think, Supporting and speaking for a banned organization in India is not a crime in India.

This was the verdict of Supreme Court in some case, I think. Please correct if wrong.

விடுதலை said...

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக நடப்பவர்கள் யார் . இந்திய காங்கிரஸ் கட்சி இ
யும் மன்மோகன்சிங்தான். அவர்களைதான் முதலில் கைதுசெய்துஇருக்கவேண்டும். ஏன்னெனில் அமெரிக்காவிடம் இந்தியாவை அடகு வைத்தது .புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரில் .உலக பொருளாதார நெருக்கடியில் இந்தியாவை சிக்கவைத்தது.அவர்கள்தான். காந்தி.நேருவின் கொள்கைகளுக்கு எதிராக நடப்பவர்கள் தான் .மன்மோகன்சிங்கும் காங்கிரஸ் கட்சியும். வைகோவை கைதுசெய்தது என்பது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்களே

Anonymous said...

Hindu,TIMES NOW And many other media houses report that Jayalalithaa has condemned Vaiko's arrest and termed it as politically motivated.........

Anonymous said...

பாரதிராஜா செய்யும் காமெடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. எது பிரச்சனை, நாம் என்ன பேசவேண்டும், இது ஈழத்தமிழர்கள் பிரச்சனையா, இல்லை தமிழக நடிகர்கள் ராமேஸ்வரத்துக்கு வரும் பிரச்சனையா என்றெல்லாம் யோசிக்காமல் சும்மா 'யார்மீதோ இருக்கும் காழ்ப்புணர்ச்சியையெல்லாம் கொட்டிவிடவேண்டியது, அப்புறம் முதல்வரைப் பார்த்தேன், அம்மாவைப் பார்த்தேன், தாயுள்ளம், தந்தையுள்ளம், என்றெல்லாம் புலம்ப வேண்டியது....