பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 17, 2008

லாராவின் சாதனையை முறியடித்தார் டெண்டுல்கர்! வாழ்த்துகள்

பிரைன் லாராவின் உலக சாதனையை சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார்! வாழ்த்துகள்



வீடியோ காட்சி, மற்றும் ஜனாதிபதி வாழ்த்து செய்தி கீழே..



டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிகபட்சமாக 11,953 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா எடுத்து உள்ளார். இந்திய வீரர் சச்சின் தெ�டுல்கர் 11,939 ரன்கள் எடுத்து 2 வது இடத்தில் இருந்தார். மொகாலியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேலும் 15 ரன்கள் எடுத்து 11,953 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்து உலகசாதனை படைத்தார். சச்சினுக்கு இது 152 டெஸ்ட் போட்டியாகும். சாதனை புரிந்த தெண்டுல்கருக்கு இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும் போது எண்ணற்ற இந்தியர்கள் உங்கள் விளையாட்டை பார்த்து ரசிக்கிறார்கள்.என்று கூறி உள்ளார்


9 Comments:

ஹரன்பிரசன்னா said...

Excellent. Hats off to Sachin Tendulkar. He is our nation's pride.

Anonymous said...

சச்சினு, நீ எவ்வளவு மேட்சு இந்தியாவுக்கு விளையாடி இருக்காப்ல?

உன்னோட சொந்த ரெக்கார்ட், சாதனைக்காகத்தானே இந்திய கிரிக்கெட் அணியில் இன்னும் இருக்காப்ல.

போதுமான பணமோ, புகழோ அதிகமாக சம்பாத்தித்து சந்தோஷமாக் கீற. சட்டுப்புட்டுனு ரிட்டையர்மென்ட் அறிவித்து இடத்தைக் காலி செய்து விடு "பெரிசு". ஒரு இளைஞனுக்காவது டீமில் இடம் கிடக்கட்டும்.

M Arunachalam said...

Anony,

Very good point.

Why don't you tell the same thing to MK, who is holding on to CM's post even at a young age of 87 or so?

You won't tell. Because you are a MARA THAMIZHAN.

You will talk only against people who won't hit back like Sachin or Rajini, etc. But not against blood-sucking politicians. Because if you talk against them, you know your days will be numbered.

Vazhga Un Veeram.

Arun

நாகு (Nagu) said...

வாழ்த்துக்கள்!

இனிமேலாவது ரிடயர்மெண்ட் பண்ணுய்யா சீக்கிரம். நிறைய செஞ்சுரி ரிக்கார்ட் பாண்டிங் சீக்கிரம் காலி பண்ணிடுவார். அதுக்காக திரும்பயும் உக்காந்துராதீங்க!

Krish said...

Hats of sachin....
NO problem as long as he is in good touch!

gopi said...

Why don't you tell the same thing to MK, who is holding on to CM's post even at a young age of 87 or so?
-----------------------------------

Arunji, asathal kelvi......... No MARA TAMILAN will answer to this question........

Anonymous said...

Naagu,

You have done nothing to the country and still use to point fingers @ others.

Muthal la India irunga da... appuram inga irunkuravanga pathi comment adikalam.

Polappukaka natta vittu odittu, comment vera kaekutha unnaku???

Vekkam ketta NAGU, neenga yellathayum sathikoonga....
and anonymous also

Anonymous said...

வாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் எ எ எ எ எ சிக்ஸ்.....

பிரேசில் மக்களைக் கடவுள் என்று எழுதச் சொன்னால் P e l e என்றுதான் எழுதுவார்கள். கிரிக்கெட் எங்கள் மதம், சச்சின் எங்கள் கடவுள் என்று கடந்த இருபது வருடங்களாகக் ரசிகர்களைச் உச்சரிக்கவைத்து அவர்களை மயக்க நிலைக்குக் கொண்டு சென்றவர் சச்சின்.



தெண்டுல்கரை அவருடைய ஆரம்ப காலம் முதல் பார்த்துவரும் பாக்கியம் எனக்கும் உண்டு. 1989-ம் வருடம் வெளிச்சம் போதாமையால் நிறுத்தப்பட்ட ஒருநாள் ஆட்டம் பிறகு கண்காட்சி ஆட்டமாக மாற்றப்பட்டது. ஆளுக்கு இருபது ஓவர்கள் ஆடுவது என்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு முடிவுக்கு வந்தன. 20-20 கிரிக்கெட்டின் ஆரம்ப விதை அங்கு விதைக்கப்பட்டது.



பம்மலில் உள்ள எனது நண்பர்களான லெனின், பால் வீட்டில் இந்த மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்திய அணியில் ஸ்ரீகாந்த், அசாரூதினைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியான வீரர்கள் ஒருவரும் இல்லை. மஞ்ச்ரேக்கர், ராமன் லம்பா, டபிள்யூவி ராமன், அஜய் சர்மா (முட்டி போட்டு சிக்ஸர் அடிக்கப் போகையில் பலமுறை இவர் ஆட்டம் இழந்திருக்கிறார்) விவேக் ரஸ்தான் போன்ற சொங்கி வீரர்கள்தான் இந்திய அணியை நிறைத்திருந்தார்கள். பாகிஸ்தான் அணி முதலில் ஆடி 20 ஓவரில் 157 ரன்கள் குவித்திருந்தது (20-20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி எடுத்ததும் இதே ரன்கள்தான்).



அப்போதெல்லாம் 50 ஓவர் ஆடி 200 ரன் அடித்தாலே அது பெரிய காரியம். 20 ஓவரில் பாகிஸ்தான் சர்வசாதாரணமாக 157 அடித்தது இந்திய டிரெஸிங் ரூமில் பேதியைக் கிளப்பியிருந்தது. டெண்டுல்கர் ஆடவரும்போது 5 ஓவரில் 69 ரன்கள் தேவைப்பட்டன. அசட்டுத் துணிச்சல் இருந்து பந்துகளை எதிர்கொண்டால் கூட இத்தனை ரன்களை குறுகிய ஓவர்களில் அடிக்கமுடியாது. அதுவும் எதிரே இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், அக்யூப் ஜாவத், அப்துல் காதர், முஷ்டாக் முகமது போனற பாகிஸ்தானின் சென்ற தலைமுறை, அன்றைய தலைமுறை, அடுத்த தலைமுறை என மூன்று பிரிவினரும் பந்துவீசிக்கொண்டிருக்கும்போது.



வந்த வேகத்தில் முஷ்டாக் முகமது பந்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார் சச்சின். பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். முஷ்டாக்கும் அப்போது பாகிஸ்தானுக்குப் புதிது. அப்துல் காதிர் நேரே சச்சினிடம் வந்தார். என்ன தம்பி, புது ஆள் பந்துல மட்டும்தான் சிக்ஸர் அடிப்பியா. முடிந்தால் என் பந்திலேயும் அடி என்று சும்மா இருந்த இளஞ்சங்கை ஊதிவிட்டுச் சென்றார். தெண்டுல்கரால் பதில் பேசமுடியவில்லை. பேசாமல் காதில் வாங்கிக்கொண்டார் சச்சின். துணைக்கு ஸ்ரீகாந்த் ஆடிக்கொண்டிருந்தார்.



அடுத்த ஓவரை அப்துல் காதர் வீசினார்.



6, 0, 4, 6, 6, 6


நானும் என் நண்பர்களும் எப்போதும் படுத்துக்கொண்டுதான் மேட்ச் பார்ப்போம். ஒவ்வொரு பந்துக்கும் கிரீஸை விட்டு எகிறி குதித்து சச்சின் ஆடியபோது டேய்ய்ய்... என்று கத்தி எல்லோரும் எழுந்துவிட்டோம். யார்ரா இவன், வெள்ளையும் தோளுமா முயல் குட்டி மாதிரி இருந்துட்டு அப்துல் காதரை இப்படிப் பொளக்கறான் என்று நான் என் அதிர்ச்சியை வெளிக் காட்டினேன். உலகக்கோப்பை இறுதி ஆட்டம்போல பிறகு அந்த ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினோம். அந்த க்ஷணத்தில் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் ஒரு வீரன் கண்முன்னே ஆடிக்கொண்டிருந்தான். மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றுப் போனது.



அதன்பின்பு தெண்டுல்கர்மீது தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்தேன். என்னைப் போலிருந்த பள்ளி மாணவர்களை வெகுவாகப் பாதித்திருந்தார் சச்சின். இந்திய அணியில் கபில்தேவ், ஸ்ரீகாந்த் என்று பாதி பேர் ரிடையர் ஆகும் தருணத்தில் இருந்தார்கள். இளமையாக இருந்த தெண்டுல்கருக்குத்தான் ராக் ஸ்டாருக்குரிய மகத்துவம் கிடைத்தது.


92-ம் வருட உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா ஆடியது. ஏதோ இரு நாடுகளின் போரை நேரில் பார்ப்பதுபோல விறுவிறுப்பாக அந்த ஆட்டத்தைப் பார்த்தேன். அந்த மேட்ச் பார்ப்பதற்காக பம்மல் சங்கரா வித்யாலயா பள்ளிக்கு நான் செல்லவில்லை. இனிமேல் உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் காணக்கிடக்காது என்கிற கிளர்ச்சியே அந்த மேட்சுக்காக எல்லாத் தியாகங்களையும் செய்யச் சொன்னது. குழந்தைபோல அழகாக இருந்த தெண்டுல்கர் அந்த ஆட்டத்தில் 50 ரன்கள் சொச்சம் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு சூத்திரதாரியாக இருந்தார். அன்றுமுதல் எப்போது கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் தெண்டுல்கரின் ஸ்கோரை மட்டும் தனியாகக் கேட்கத் தொடங்கினேன்.



96 உலகக்கோப்பை முதல் சச்சின் நட்சத்திரமாகிவிட்டார். அவருடைய ஒவ்வொரு அசைவும் மீடியாவால் கவனிக்கப்பட்டது. தெண்டுல்கரோடு ஆடத்தொடங்கிய மஞ்ச்ரேக்கரும் காம்பிளியும் சிறிது காலத்தில் மங்கத் தொடங்கி அணியை விட்டு வெளியேறினார்கள். சச்சின் அணையாவிளக்காக ஒவ்வொரு ஆட்டத்திலும் இந்தியாவின் மானத்தைக் காட்கும் ரட்சனாகப் பார்க்கப்பட்டார்.



98-ம் வருடம். ஷார்ஜாவில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கோக்கோ கோலா கப் இறுதி ஆட்டம். கடும் காய்ச்சலுக்கு மத்தியில் கொட்டக் கொட்ட கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.



'ஓஓஓஓஓ.... வாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் எ எ எ எ எ சிக்ஸ்..... வாட்ட்ட்ட் எ எ எ சிக்ஸ்...'



டோனி கிரேக் முழு வீச்சில் கத்தினார். பந்து பவுண்டரி கோட்டுக்கு வெளியே போய் விழுந்தது. எனக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. எழுந்துவிட்டேன். காஸ்பரோவிச் பந்தில் லாங் ஆனில் காட்டமான சிக்ஸர் ஒன்றை அடித்திருந்தார் சச்சின். ஸ்டீவ் வாகின் நெற்றிப் பொட்டில் புல்லட் பாய்ந்தது போலிருந்தது. பந்து கூரையின் மேல் விழுந்தது. கேமராவில் ஒரு நொடி அதைக் காட்டினார்கள். 134 ரன்கள் குவித்த சச்சின் இந்தியாவின் வெற்றியை நிச்சயமாக்கினார். இன்று வரைக்கும் அந்த ஷாட்டும் டோனி கிரேக்கின் அலறலும் என் நினைவுகளில் எப்போதும் அமர்ந்து கொண்டிருக்கின்றன.



பிராட்மேன் வாழும் காலத்தில் நீங்களும் நானும் இல்லை. பீலே வாழ்ந்த காலத்திலும் இதே நிலைமைதான். ஜான் போர்க்கை நாம் பேப்பரில் பார்த்துதான் தெரிந்துகொண்டோம். ஜெஸ்ஸி ஓவன்ஸைப் பற்றி ஒலிம்பிக் போட்டி நடக்கும் சமயங்களிதான் கேள்விப்படுகிறோம். ஆனால் சச்சினை நீங்களும் நானும் அவர் ஆடிய முதல் நாள் முதல் கவனித்து வருகிறோம். கொடுப்பினை.



இதே சச்சினை சகட்டு மேனிக்குத் திட்டியிருக்கிறோம். ஒருபோதும் சச்சினை மனிதனாக எண்ணியது கிடையாது. மிஷின். ரோபோ மிஷின். மைதானத்துக்குள் இறங்கிவிட்டால் இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தராமல் நீ திரும்பக்கூடாது என்று மனத்துக்குள் அவருக்குக் கட்டளையிடுகிறோம். சொற்ப ரன்னில் தெண்டுல்கர் அவுட் ஆனால் மட்டும் நமக்குக் காது புடைக்கிறது. வாயில் வந்ததைத் திட்டி டிவியை ஆஃப் செய்துவிடுவோம். வேறு எந்த வீரர்மீதாவது இப்படிப்பட்ட உரிமையை எடுத்துக்கொண்டிருக்கிறோமா?



இன்று லாராவின் சாதனையை மிஞ்சிவிட்டார் தெண்டுல்கர். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த பெருமை இனி சச்சினுக்கே. சேப்பாக்கத்தில் நடந்த இரு ஆட்டங்களில் நான் சச்சினை நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது கல்கி நிருபர். சேப்பாக்கம் மைதானத்துக்குள் நுழைந்து பெவிலியனுக்கு அருகே சச்சின் பயிற்சி எடுப்பதை அருகில் சென்று பார்த்து புளங்காங்கிதம் அடைந்திருக்கிறேன். சச்சின் பயிற்சி எடுப்பதைப் பார்ப்பதற்கே சேப்பாக்கத்தில் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள். ஒருசமயம், காவலர்களின் உதவியோடு பாதுகாப்பாக பஸ் ஏறி அமந்தார் சச்சின். ஆனாலும் நானும் ஐம்பது பேரும் ஆட்டோகிராப் புக்கை எடுத்துக்கொண்டு பஸ்ஸின் முன்கதவு அருகே நின்றுகொண்டிருந்தோம். காவலர்கள் எங்களைத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.



பேருந்தின் முன்வரிசையில் அமர்ந்திருந்த சச்சினைப் பார்த்து நான் என் ஆட்டோகிராப் நோட்டை மேலே தூக்கி நீட்டினேன். சச்சின் அதைப் பார்த்துவிட்டு உடனே கீழே இறங்கினார். நடப்பதை என்னால் நம்பமுடியவில்லை. சச்சின் கீழே இறங்கி என் அருகே வந்தார். இதைப் பார்த்துவிட்டு எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு முன்னேறினார்கள். நேராக சச்சின் என் நோட்டை வாங்கி சைன் பண்ணினார். அவரால் முடிந்தவரை பத்து நோட்டுகளுக்கு கையெழுத்திட்டு மீண்டும் பேருந்தினுள் சென்றார். இருக்கையில் அமர்ந்த பிறகும் அவர் ரசிகர்களைப் பார்த்து கையசைத்துக்கொண்டுதான் இருந்தார். ஒருபோதும் தன் பார்வையைத் தாழ்த்திக்க்கொள்ளவோ வேறு திசையிலோ பார்க்கவோ இல்லை. அதை அவர் செய்யவேண்டும் என்பது கிடையாது. ஆனால் பேருந்து எங்களிடமிருந்து மறையும்வரை கையசைத்துக்கொண்டும் புன்னகை செய்துகொண்டும்தான் இருந்தார். பிறகு அந்த ஆட்டோகிராப் நோட் எங்கே காணாமல் போனது என்று எனக்குத் தெரியவில்லை.



உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் நான் இக்கட்டுரையை எழுதுகிறேன் என்று எனக்கு நன்றாகப் புரிகிறது. இதே சச்சின் மே.இ தீவில் நடந்த உலகக்கோப்பையில் மோசமாக ஆடியபோது அவரை அணியிலிருந்து வெளியேற்றும்படி கல்கியில் காட்டமாக ஒரு கட்டுரை எழுதினேன். அப்போது அந்த விமரிசனங்களுக்கான முழுத் தகுதியும் அவரிடமிருந்தது. சறுக்கல் என்பது வாழ்வின் நிகழ்வுகளில் ஒன்று. சாதிப்பவன் விமரிசனங்களுக்குக் காது கொடுக்கமாட்டான். அவனுக்குத் தெரியாதா அவனுடைய ஒவ்வொரு தவறும்? ஈகோ இல்லாமல் தோனியின் தலைமையில் சச்சின் கூடுதல் பொறுப்புடன் ஆடினார். இப்போதும் ஆடிக்கொண்டிருக்கிறார். தன் வாழ்க்கையில் சச்சின் சந்திக்காத விஷயம் என்று எதுவும் இல்லை.



இந்திய கிரிக்கெட் அணிக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை, அது பிசிசிஐ என்கிற ஒரு வாரியத்தின் அணியே என்று பிசிசிஐ கோர்ட்டில் தெரிவித்தபோதும் இன்றுவரைக்கும் தனது ஹெல்மட்டில் மூவர்ணக் கொடியைப் பதித்திருக்கும் ஒரே இந்திய வீரர் சச்சின்.



லாராவின் சாதனையை சச்சின் உடைத்ததுபோல நாளை இன்னொருவர் சச்சினின் ரன்களைக் கடக்கலாம். ஆனால் அவரும் தெய்வீகத்தன்மை கொண்டவராகக் கொண்டாடப்படுவார் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது.

http://www.sanakannan.com/sachin.html

WELL SAID SANA KANNAN SIR !

HATS OFF To U & CRICKET GOD SACHIN !

சார்ஜாவில் சச்சின் அடித்த வாட்ட்ட எ சிக்ஸர்

http://in.youtube.com/watch?v=AxyxI6E_ESM

smsvinoth said...

Watch online sports on
Cricket Live StreamingWatch online Cricket Live Video