பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 16, 2008

ராமாயண தொடர் நடிகர் அம்பால் குத்திக்கொலை

படப்பிடிப்பின்போது ராமாயண தொடர் நடிகர் அம்பால் குத்திக்கொலை

ராமாயணம் மெகா தொடர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்சனில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. மீண்டும் அந்த தொடர் புதிதாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. ராமாயணம் தொடர் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்றிரவு ராவணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. ராவணண்படைகள் அணி வகுப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. ராவணனின் படை வீரர்களில் ஒருவராக மனு சிந்தா என்பவர் நடித்தார். அம்புடன் அவர் குதிரையில் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது சாஜித் என்ற துணை நடிகர் தன் காரை ஒரு இடத்தில் நிறுத்தி இருந்தார். அங்கிருந்து காரை அகற்றும்படி மனுசிந்தா கூறினார். இதனால் மனு சிந்தாவுக்கும் சாஜித்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சிந்தா தான் வைத்திருந்த அம்பால் சாஜித்தை குத்தினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சாஜித் படப்பிடிப்புத் தளத்துக்குள்ளேயே செத்தார். வதோதரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்தாவை கைது செய்தனர்
என்னத்த சொல்ல ? ராவணன் படையில் இருந்தால் இப்படி தான் ஆகுமா ?

2 Comments:

Anonymous said...

//என்னத்த சொல்ல ? ராவணன் படையில் இருந்தால் இப்படி தான் ஆகுமா ?//

பைத்தியக்காரங்க திரும்பும் குஜராத்தில் கலவரத்துக்கு தயார் ஆகிடாங்க போல. ராமனோ ராவணனோ செத்தது மனிசன்தானே பகுத்தறிவுக்கும் இவங்களுக்கும் சம்பந்தமே இல்லையா?..இருபது வருசத்துக்கு முன்னாடி போட்டதுக்கே ஒரு பாபர் மசூதி மற்றும் பல மதக் கலவரங்கள்..இப்போ என்ன ஆகப்போது?..

அதையும் பாப்போம்..

Anonymous said...

m.r.radha, m.g.r.