பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 15, 2008

ராஜிநாமா கூத்து

தமிழகத்தின் லேட்டஸ்ட் அரசியல் ஃபேஷன் 'ராஜிநாமா'

நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை உடனே நிறுத்தவேண்டும் 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன் வராவிட்டால் தமிழக அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் எனன உளபட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றபட்டன. இதை தொடர்ந்து கனிமொழி எம்.பி. தனது ராஜினாமா கடிதத்தை இன்று தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார்

தமிழர் நலன் காக்கவும், ஈழத்தமிழர் இனக் கொலையைத் தடுக்கவும், சர்வபரித் தியாகத்துக்கும் ஆயத்தமாக உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்துக்கு அதன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டோ அல்ல. - வைகோ

இலங்கைக்கு ஆயுத உதவி செய்வது மத்திய அரசு என்று தெரிந்த பின் அரசுக்கு ஆதரவு வாப்பஸ் என்று சொல்ல வேண்டியது தானே ? இந்த ராஜிநாமா எல்லாம் சும்மா பேப்பரில் தலைப்பு செய்தியாக வருவதற்கான நியூஸ். அவ்வளவு தான்.

அடுத்தது என்ன நடக்கும் ? பிரதமர், சோனியா காந்தி போனில் பேசினார்கள் வாக்களித்தார்கள் என்று சொல்லி இந்த ராஜிநாமா டிராமா முடிவுக்கு வரும்.

தயாநிதி மாறன் என்ன செய்வார் ? அவரும் ராஜிநாமா செய்வாரா ?

8 Comments:

பூச்சாண்டியார் said...

//தயாநிதி மாறன் என்ன செய்வார் ? அவரும் ராஜிநாமா செய்வாரா ?

கண்டிப்பா.. ராஜினாமா செய்றதுக்கு முன்னாடி பேட்டி குடுத்து, நான் கழகத்துக்கு கட்டுபட்டவன்னு சொலிட்டு அப்புறமா ராஜினாமா செய்வாரு..

ப்ரியா said...

//தயாநிதி மாறன் என்ன செய்வார் ? அவரும் ராஜிநாமா செய்வாரா ?

Enna solla vareenga?

Anonymous said...

The same thing that happened in Hogganekkal issue will happen here again.

Anonymous said...

with this issue in hand.. DMK will withdraw support just before a month of general election and they ll join hands with BJP....

caz BJP did well in state elections during last quarter... and they ll also do well in the coming months 5 state elections... so DMK will be sure BJP is gonna win general elections...

With out their MP power in central this DMK wont survive.. they do this stunt in every general election.

put the biggest question is.... will DMK get resonable MP seats this time... electricity power issue is enough to send out their MPs to home....

ipdi oru kevalamaana politicians kaila numma india....

enthiraney.. illa illaa.. aandavane naata kaappaathu....

---Vignes

நாகு (Nagu) said...

14ம் நாள் மத்திய அரசு இலங்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அனுப்புவதாக அறிவிக்கும். அனைவரும் வெற்றி, வெற்றி என்று பொதுக்கூட்டம் போடுவார்கள். Everybody wins. இலங்கைத் தமிழர்கள் தவிர...

Anonymous said...

கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து தப்பிக்கவே இந்த நாடகம்.

ஸ்பெக்டரம் ஊழலில் எப்படியும் பதவி இழக்கபோவது நிச்சயம் என்று தெரிந்தபின் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு துளியும் சம்பந்தமே இல்லாத கனிமொழி ஏன் பதவி விலகவேண்டும்?

விலைவாசி ஏற்றம், மின்சார பிரச்ச்னை, அமைச்சர்களின் ஊழல், என்று அரசுக்கு பெயர் கெட்டு கிடக்கும் இந்த வேளயில், இலங்கை பிரச்சனை கையில் எடுத்து அமைச்சர்களை பதவி விலக செய்து நல்ல பெயர் வாங்கி வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கதான்.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ...

geeyar said...

உங்களுக்கு எதில் விளையாடுவது என்றே தெரியாதா? நான் நம்புகிறேன் கழக எம்பிகள் அனைவரும் கனிமொழியைப் பின்பற்றி அவரவர் தந்தையிடம் தத்தம் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள்.

Anonymous said...

உண்மையிலே இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் கருணாநிதியும் அவரை சார்ந்த எம்எல்ஏக்களும் தான் ராஜினாமா செய்ய வேண்டும்.
------------------------------------------------

இதற்கு கருணாநிதி கூறுவதாவது :

ஜார்ஜ் புஷ் ராஜினாமா செய்தால் நானும் ராஜினாமா செய்வேன்.

அண்ணா சொன்னால் அன்றே ராஜினாமா செய்வேன்.

மன்மோகன் சொன்னால் மாலையே ராஜினாமா செய்வேன்.

சோனியா சொன்னால் சொன்ன உடனே ராஜினாமா செய்வேன்.

ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்லும் ராத்திரியே ராஜினாமா செய்வேன்.