பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 12, 2008

"ச முத்திரத்தில் நெடில் மிகுந்து" - கவிதை கருணாநிதி

நேற்று ஜன சத்தி நாளிதழில் சமுத்திரம் எழுதிய கட்டுரைக்கு( நான் அதை தேடிக்கொண்டிருக்கிறேன்), (வழக்கம் போல்) கலைஞர் கவிதை...


கருப்பாயி; கருப்பாயி; நீ சிவப்பாகிக்

கட்டுரை யொன்று தீட்டியதைக் கண்டேன் ஜன சக்தியிலே

கவிதை நான் எழுதுவதைக் கிண்டல் கேலி செய்துள்ளாய்-

"காலுக்கு செருப்புமில்லை; கால் வயிற்றுக் கூழுமில்லை

வீணுக்குழைத்தோமடா எந்தன் தோழா'' என்று அண்ணன் ஜீவா

எழுதியதும் கவிதை தானே!

"சொத்துரிமை இல்லாத மக்கள்

சொறி நாய்போல் எரி நெருப்பின்

பெரு நாக்கில் சிக்கிவிட்ட சீரழிவை

ஒரு நாக்கால் சொல்வதற்கா முடியுமய்யா?''

இப்படி நான் எழுதியது மட்டும் கவிதையல்ல; கத்தும் "கழுதை'' என்று!

செப்பிடுவீர்; இந்த ஜெகம் சிரிக்கட்டும் உமைப்பார்த்து

கனிமொழி என் கண்மணி நான் பெற்றெடுத்த பொன்மணி-

கம்யூனிஸ்ட் விழாக்களில் எல்லாம் அவர் கலந்து கொள்ள வேண்டுமென்று

கனிவுடனே அழைத்துச் சென்றீர்-இன்று அவர்

கழக நாடாளுமன்ற உறுப்பினர்-களைப்பின்றி அலுப்பின்றி

கடமை ஆற்றுகின்றார் சமூக சேவையில்-

கலை, இலக்கியம், கல்வித்துறைகளிலே

கடுமையாய் உழைக்கின்றார் மகளிர் சிறந்திடவே

கம்யூனிஸ்டு ஏடு ஜனசக்திக்கு அதேன் கசக்கிறதோ?

கனிமொழி காத்திருப்பது மந்திரி பதவிக்காக என்று

கம்யூனிஸ்ட் ஜனசக்தியில் கருப்பாயி கட்டுரை தீட்டுகிறார்-

அண்டை நாடு ஈழத்தில் இனச் சண்டை இன்னும்

அடங்காத காரணத்தால் - இங்குள்ள கட்சிகளிடை

அரசியல் மோதல் வேண்டாமென்று

அடக்கமாக இருப்போம் என்றால்

அம்மாவின் அடியொற்றி

ஆரம்பம் செய்கின்றார் அமளிக்கென்றால்;

பூகம்பம் ஒன்றும் வந்துவிடாது;-நாம்

பொறுமையாகத் தொடர்ந்து இருப்பதாலே;

ஆனாலும் அமைச்சர் பதவி குறித்து

அவதூறு கூறுவோர்க்கு அவர் வாய் மூட

அவர்கள் வரலாறே சான்று கூற வந்து நிற்குமய்யா!

குமாரமங்கலம் ஜமீன்தார் சுப்பராயன்

அமைச்சராக இருந்ததும்-பின்னர்

அவர் மகன் மோகன் குமாரமங்கலம்

அமைச்சராகப் பதவி பெற்றதும்-பிறகு

அவர் மகன் ரெங்கராஜன் குமாரமங்கலம்

அமைச்சராகப் பொறுப்பு வகித்ததும் அவரவர் திறமையினாலா?

அல்லால்; அவர் குடும்பப் பெருமையினாலா?

"ஜனசக்தியில் சமுத்திரம் கட்டுரை;''

"ச முத்திரத்தில் நெடில் மிகுந்து"

"நெடியேறும் விதமாக;'' எமைத் தாக்கி

வந்தது தான் அவலம், அவலம்!

(சேது) சமுத்திரம் என்றாலே கலைஞர் டென்ஷன் ஆகிவிடுவார் போல...

20 Comments:

Anonymous said...

Hats off to the CM Kalaigar M. Karunanithi. nalla kavithai....pirasuritamaiku nandri Idly Vadai

Anonymous said...

Its look like a "prose" not a poetry...

ரங்கதுரை said...

மறைந்த எழுத்தாளரும் தலித்துமான சமுத்திரத்துக்கு ஏதோ ஒன்றரை பைசா விருது ஒன்றைக் கொடுத்துத் தன்னுடைய காலில் விழவைத்து உச்சி குளிந்த வக்கிரம் பிடித்த வேளாள ஜாதி மேலாண்மைவாதியான கருணாநிதிக்கு அப்போது மட்டும் ச'மூ'த்திரம் இனித்தது. இப்போது இந்த சமுத்திரம் கரிக்கிறது.

மானிடன். said...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20081012102433&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&ndate=10/13/2008&dName=No+Title&Dist=0

check this link about 123 agreement

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அய்யா ,
கருணாநிதி அவரை மூத்திரம் என்று சொல்கிறார் !.
அதை மோர்ந்து வேறு பார்த்தாராம் . நெடி வேறு பயங்கரமாய் இருக்கிறதாம் .
இன்பாக்சன் ஆகும் முன்னால் நல்ல மருத்துவரை பார்க்க சொல்லும் !

Anonymous said...

Nattukku romba thevai kalaignare.

sathappan said...

“Naythiaddi”

Klanger = kalanger only.

Sathappan

Anonymous said...

antha kilatu naayku vera velaiye illaya

gopi said...

MANJAL KAVI (Mu.Ka.) VIN MATRORU DAGALTI KAVIDHAI ???? ?!!!!

NOW HIS CHANNEL IS BUSY IN HOW TO ANNOUNCE DIWALI DAY ???

1. NARAGASURAN OZHIPPU DHINA SIRAPPU NIGAZHCHIGAL !!!

2. VAARA VIDUMURAI KONDATTA SIRAPPU NIGAZHCHIGAL

Vera ennenna solla chance irukku ??

சந்திரமௌளீஸ்வரன் said...

இந்த வலை கொஞ்சம் கொஞ்சமாக சுவாரசியம் இழந்து வருகிறது

கவனிக்கவும்

குப்பன்_யாஹூ said...

kuppan_yahoo says:

Hats of to Kalaignar.

Communists are real cheats. Last 4 years they dont have any concerns about LTTE, Tamil ppl in srilanka. Now they know in coming election DMK will not win and hence they want to go with Jayalalitha.

ADMK should not include communists in their alliance. Then the real strenght of communsits will be known. (already known,when they contested with MDMK).

This D.Raja MP 100 times requested Kalaignar for Rajyasaba MP post and now he shouts against Kalaignar.

Kanimozi is 100 times better. knowledgable. efficinet that D.Raja or Baradhan or Thaa.Paandiyan.

அமுதப்ரியன் said...

இவ்வளவு நீச்சத்தனமாக "முத்திரத்தில் நெடில் மிகுந்து" - கவிதை கருணாநிதி" முனா.கணா. வால் மட்டுமே சிந்திக்கமுடியும்.

--

Anonymous said...

யோவ், கரண்ட் கொடுங்கையா!!! அதை விட்டுட்டு கவிதை எழுதராராமா கவிதை

கோவை கண்ணன் said...

இது என்ன கவிதையா?

---------------------
"கனிமொழி என் கண்மணி நான் பெற்றெடுத்த பொன்மணி ..
திறமையினாலா?அல்லால்; அவர் குடும்பப் பெருமையினாலா?"
------------------------

அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லுவது தான் வழக்கம்.
அதுனால லுசுல விடு இதை.

இட்லி வடை ரசிகன் said...

யாரும் என்னை அரசியலுக்கு வரணும்னு கட்டாய படுத்தமுடியாது... நான் அரசியலுக்கு வருவதையும் யாரும் தடுக்க முடியாது..

அப்படீனு ரஜினி காரு குழப்பியிருக்காரு.. இ.வா தலிவா கொஞ்சம் செய்தி போடுங்க..

R A J A said...

ரஜினி அறிக்கையை இன்னும் பாக்கலையா பாஸ்

Anonymous said...

chk this out
http://www.tsgnet.com/pres.php?id=370743&altf=Lbsvobojeij&altl=Nvuivwfm

Nithya A.C.Palayam said...

இந்த வலை கொஞ்சம் கொஞ்சமாக சுவாரசியம் இழந்து வருகிறது

கவனிக்கவும்

Anonymous said...

கர்நாடக இசை கற்கிறார் ஐஸ்


மணிரத்னம் இயக்கும் படத்துக்காக கர்நாடக இசை கற்கிறார் ஐஸ்வர்யா ராய்.

மணிரத்னம் தயாரித்து, இயக்கும் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்விராஜ், பிரியாமணி, பிரபு நடிக்கின்றனர். இதில் பிராமணப் பெண்ணாக ஐஸ்வர்யா நடிக்கிறார். படத்தில் கர்நாடக இசை ஞானம் உள்ளவராக அவரது வேடம் உள்ளது. இதனால் கர்நாடக இசை குறித்து அறிந்துகொள்ளுமாறு ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளார் மணிரத்னம். இதையடுத்து கர்நாடக இசைக் கலைஞர் ஒருவர் மூலம் அந்த இசையை கற்று வருகிறார் ஐஸ்வர்யா. அமிதாப் பச்சன் உடல் நலம் குன்றியதால் இப்போது அவர் மும்பையில் உள்ளார். அமிதாப் வீடு திரும்பிய பின்பே அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

Anonymous said...

MK ithanai naal thanadu aatchiyai patri yaarenum edavadu sonnal adai patri kavithaiyil padil sollamattar. Aanal ipodu thanadu kudumbathai patri sollumbodu, kutramulla nenju kodithu ezhundu kavidai paada sollugiradu.