சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசி யலுக்கு வரவேண்டும் என்று பிஜேபி தேசிய செயலளார் சு.திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சமீபகாலமாக பல இடங்களில் இதனை வலியுறுத்தி குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். எனவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும். அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது.
தேசியத்திலும், தெய்வீகத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளவர் அவர். அவர் அரசியலில் ஈடுபட்டால் அதற்கு மக்கள் வரவேற்பு கிடைக்கும். தனிக்கட்சி துவங்கி அரசியலில் ஈடுபடுவதா அல்லது ஏதேனும் ஒரு கட்சியில் இணைந்து செயல்படுவதா என்பது குறித்து அவர்தான் முடிவு செய்யவேண்டும்.
இன்று வந்த தினகரன் செய்தி
‘தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்' ரஜினி ரசிகர்கள் தனி கட்சி துவக்கினர்
கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒன்றுகூடி ‘தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற கட்சியை தெடாங்கினர். இதற்கு ரஜினி அனுமதி கொடுக்காவிட்டால் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதை ரஜினி இதுவரை ஏற்கவில்லை. இந்நிலையில், வரும் 15ம்தேதி முதல் சென்னையில் அனைத்து மாவட்ட ரசிகர்களையும் சந்தித்து கருத்து கேட்கிறார். இதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ‘தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று மாலை தொடங்கினர். மேலே சிவப்பு, நடுவில் வெள்ளை, அடியில் கறுப்பு என்ற மூவர்ண கொடியையும் அறிமுகப்படுத்தினர். நடுவில் உள்ள வெள்ளை நிறத்தில் ரஜினி உருவம் பொறித்த நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.
இது, ரஜினியின் அருணாச்சலம் படத்தில் வெளியான ஸ்டில். கட்சி கொடியில் உள்ள சிவப்பு நிறம் உடலில் ஓடும் ரத்தம், வெள்ளை நிறம் ரஜினியின் இதயம், கறுப்பு நிறம் அவரது முடி என ரசிகர்கள் விளக்கம் அளித்தனர். கட்சிக்கு சின்னம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கட்சி பெயரை பதிவு செய்வதற்கான ஏற்பாடு நடந்துவருகிறது என்றும் அவர்கள் கூறினர். பெரிய அளவிலான பிளக்ஸ் போர்டு தயாரித்து முக்கிய சந்திப்புகளில் வைத்துள்ளனர். பேட்ஜ் வடிவிலான கொடி அச்சடித்து அனைத்து ரசிகர்களும் தங்களது சட்டையில்
குத்தியுள்ளனர். இன்னும் ஒருசில தினங்களில் போஸ்டர் அச்சடித்து வீதி வீதியாக ஒட்ட உள்ளனர். இதுபற்றி, தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட துணை செயலாளர் அபு, மதுக்கரை பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ரஜினி பாபு, பொதுக்குழு உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் கூறியதாவது:
ரஜினி அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து, ஏமாற்றம் அடைந்து விட்டோம். அவர் அரசியலுக்கு வருவார் என காத்திருந்து நொந்து போய்விட்டோம். ரசிகர் மன்றங்களில் உள்ள பலர் புதிய கட்சிகளுக்கு சென்றுவிட்டனர்.
ரசிகர்களை சிதறவிடாமல் தடுக்க நாமும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் மவுனம் சாதிக்கிறார். அவர் காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு ஆபத்து. நாங்கள் சுமார் 15 வயதில் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தோம். இன்று 40 வயதை தாண்டி விட்டோம். எத்தனை நாளைக்குத்தான் ரஜினி ரசிகராகவே இருப்பது. அரசியல் முத்திரை இருந்தால் மட்டுமே மக்களுக்கு மிக எளிதாக சேவை செய்ய முடியும்.
அரசு அலுவலகங்களுக்கு சென்று மக்களுக்கு தேவையான திட்டங்கள், பயன்களை பெற்று கொடுக்க முடியும். அதனால், நாங்களாகவே இன்று முதல் புதிய கட்சியை துவக்கிவிட்டோம். சின்னம் விரைவில் தேர்வு செய்வோம்.
தலைவர், வரும் 15ம்தேதி முதல் சென்னையில் ரசிகர்களை சந்திக்கிறார். எங்களை அக்டோபர் 18 முதல் 21ம்தேதிக்குள் சந்திப்பார். அன்றையதினம் கட்சி பெயர், கொடி, பேனர், போஸ்டர், பேட்ஜ், உறுப்பினர் சேர்க்கை படிவம், நாங்கள் நடத்திய கருத்து கணிப்பு ரிசல்ட், தீர்மானம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் சமர்ப்பிப்போம். அதை ஏற்றுக்கொண்டு, கட்சி துவங்குவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடும்படி வலியுறுத்துவோம்.
மறுத்தால், அனைத்து மாவட்ட ரசிகர்களும் ஒன்றுகூடி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.
கட்சி பெயரை ரஜினி ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் இனி கோவை மாவட்டத்தில் தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயர்தான் ஒலிக்கும். கோவை மாவட்டத்தில் இனி ரஜினி ரசிகர் மன்றம் கிடையாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, October 07, 2008
ரஜினி சார் அரசியலுக்கு வாங்க - பி.ஜே.பி அழைப்பு
Posted by IdlyVadai at 10/07/2008 03:19:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










5 Comments:
வர வர இட்லிவடை போரடிக்கிறது. ஏதாவது செய்யவும்(தேசிய திராவிட இட்லிவடை முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கலாமா?!).
Ayayooo...Paithiyam muthiduchu pola irukku...
// கறுப்பு நிறம் அவரது முடி என ரசிகர்கள் விளக்கம் அளித்தனர்.//
:D
:D
வர வர கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனா கதையா போச்சு இட்லிவடை..இந்த கூத்தாடிக்கு நீங்க நல்ல கைத்தடி..ஆனந்த விகடனுக்கும் உங்களுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லைனு நினைக்கிறேன்...
அப்புறம் நம்ம ஊர்ல யாரும் கட்சி ஆரம்பிச்சாலும் திராவிடத்த விடமாட்டேன்குறாங்க, அதுக்கு என்ன அர்த்தம்னு இந்த கூத்தாடி பயபுள்ளைகளுக்கு தெரியலை..தமிழன், கன்னடன், தெலுங்கன் மற்றும் மலையாளியை சேர்த்துதான்..அதுக்காகத்தான் தந்தை பெரியார் தேசியத்தை விட திராவிடத்தை முன்னிறுத்தி போராடினார்.. அதற்குப் பிறகு வந்த அண்ணா தமிழை முன்னுருத்தினார்.. ஆனால் இப்ப உள்ள கூத்தாடிகளுக்கு எதற்கு திராவிடத்தை சேர்க்குரோமுனும் தெரியல..(நானும் பொலப்பத்துப் போய் உங்களுக்கு பின்னூட்டம் போடுறேன் பாருங்க அது இதவிட கேவலம்)
Farrooq
I like your Attitude!!! Great Points..
--Nethaji
Post a Comment