பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 06, 2008

தட்டிக்கேட்க தட்டாமல் வருகிறார் ரஜினிகாந்த் ?


மின்தடையால் இருண்ட தமிழகம் தட்டிக்கேட்க தட்டாமல் வருகிறார் ரஜினிகாந்த் என்ற தலைப்பில் வந்த தினகரன் செய்தி..


ஆந்திராவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி Ôபிரஜா ராஜ்யம்Õ கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் ரஜினியும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிரித்துள்ளது.

கோவையில் உள்ள ரஜினி ரசிகர்கள் 'ஆந்திராவில் பிரஜா ராஜ்யம், தமிழகத்தில் ரஜினி ராஜ்யம்' என போஸ்டர் ஒட்டி கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் 'கிலோ ரூ.2 ரூபாய் அரிசி, இப்போது 1 ரூபாய், 6 ரூபாய் பேருந்து கட்டணம் இப்போது 13 ரூபாய், மின் பற்றாக்குறையால் இருண்ட தமிழகம். தட்டிகேட்க தட்டாமல் வருகிறார் ரஜினி' என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மற்றொரு போஸ்டரில் 'இந்திய அரசியல் வானில் வரவேண்டிய நேரத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியே.. வருக சரித்திரம் படைக்க' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

வாடிப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ஆண்டிபட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
( நன்றி: தினகரன் )

பிகு: இந்த ஊர் எல்லாம் உங்களுக்கு தெரியுமா ?

3 Comments:

Anonymous said...

"தட்டிக்கேட்க தட்டாமல் வருகிறார்" -

இவரு எங்கய்யா வரப்போகிறார்? "கழுவுற மீனுல நழுவுற மீனாக" ஒடி ஒளிந்து கொள்வாரே தவிர எங்கிட்டு வரப்போகிறார்?

இதே மதுரை ரோட்டில், பா.ம.க ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்டிய
ரசிகர்களை ரத்தம் சொட்ட சொட்ட, 'சொறி நாய்களைப்' போல அடித்துப் போட்டபோதே இவர் கண்டு கொள்ளவில்லை.

நிலைமை இப்படி இருக்க, யாரை இவரு வந்து தட்டிக் கேட்கப் போகிறார்? சி.எம் மையா? ஆ.வீராசாமியையா? அல்லது "மதுரை குறுநில மன்னன்" - "அ" வையா?

இவரின் ரசிகர்கள் "முட்டாள்கள்" என்பது தெரியும். இப்படி "ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்களாக" இருப்பாய்ங்கன்னு நினைக்கவேயில்லை.

நிகழ்வதற்கு சாத்தியமே இல்லாத ஒன்றுக்கு, தமிழகம் முழுவதும், இப்படி போஸ்டர் அடித்து காசை கரியாக்குவதற்கு பதிலாக "ஏழைகளுக்கு" விலை ஏறிப் போன மெழுகுவர்த்திகளை தானமாகக் கொடுக்கலாம்.

இந்த வாரம் மிகச்சிறந்த வாரமாக "பதிவுலகில்" அமைய வாழ்த்துக்கள் இ.வ !

பி.கு:

குட்லாடம்பட்டி - இங்கு மலை மேல் இருக்கும் அருவி மிக அருமையானது. மதுரை காதலர்கள் & மற்றும் இளவட்டங்களின் சுற்றுலாத்தலம் இது. மதுரையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

டோரா & புஜ்ஜி.

Anonymous said...

enna kodumai sir iddu.....

நாரத முனி said...

this reminds me of kounda mani's SILVER SPOON SILPA KUMAR joke.