பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 05, 2008

நானோ கார் குஜராத் செல்கிறது

டாடாவின் நானோ கார் தொழிற்சாலையை மேற்கு வங்க மாநிலம் சிங்கூரிலிருந்து குஜராத்துக்கு செல்கிறது.

பேச்சு வார்த்தை மற்றும் இதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்துவிட்டது என்று செய்திகள் சொல்லுகிறது.

குஜராத்தின் தொழில் நகரமான முந்த்ராவில் இந்த ஆலையை நிறுவுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது அத்வானியின் காந்திநகர் தொகுதியில் வருகிறது.

அக்டோபர் 7 மோடி பதவிக்கு வந்து ஏழு ஆண்டு நிறைவு செய்கிறார். அன்று இதற்கான அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.

குஜராத்தில் உள்ள விவசாயிகள் இந்த முடிவை வரவேற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


குஜராத்தில் 2007 ஜனவரியில் நடந்த முதளீட்டாளர்கள் மாநாட்டில் டாடா இவ்வாறு கூறினார் "You are stupid if you are not in Gujarat" யார் புத்திசாலி ? மோடியா அல்லது டாடாவா ? விடை சொல்லுவது கஷ்டம். ஆனால் யார் முட்டாள் என்ற கேள்விக்கு விடை சுலபம் - கம்யூனிஸ்டுகள் தான்.


இந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுத்து விட்டு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். இவர் பிரதமாராக இருந்திருந்தால் தற்போது மன்மோகன் என்ன செய்தாரோ அதையே தான் இவரும் செய்திருப்பார். இது மோடியின் அரசியல் பேச்சு, தேவையற்றது.

2 Comments:

நல்லதந்தி said...

//இந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுத்து விட்டு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். இவர் பிரதமாராக இருந்திருந்தால் தற்போது மன்மோகன் என்ன செய்தாரோ அதையே தான் இவரும் செய்திருப்பார். இது மோடியின் அரசியல் பேச்சு, தேவையற்றது. விடுங்க சார்!.//

விடுங்க சார்,இந்த அரசியல் கூட செய்யாட்டி எல்லாரும் தப்பா நினைச்சிக்கு வாங்க!.எப்படிடா இந்த மனுஷன் இந்திய அரசியலுக்கு வந்தாரென்னு!:)

Kalaikovan said...

கர்நாடகா செல்கிறது என்று செய்தி பார்த்தேனே