பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 03, 2008

போட்டோ அரசியல்

செ‌ன்னை அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌‌ற்று வரு‌ம் மா‌ர்‌க்‌‌சிஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் வரதராஜனை, ‌நி‌ர்வா‌கிகளுட‌ன் செ‌ன்று பா‌ர்‌க்க அனுமத‌ி மறு‌த்தது ஏ‌ன் எ‌ன்று எ‌ன‌க்கு பு‌ரிய‌வி‌ல்லை எ‌ன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை.


மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை 11.30 மணியளவில் அவரை நான் பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன்.

அவைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன், தலைமை நிலைய செயலர் பார்த்த சாரதி, தேர்தல் பிரிவு செயலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிலர் என்னுடன் வந்தார்கள்.

அப்பல்லோ மருத்துவமனையின் வாசலிலேயே என்னுடன் வந்தவர்களை மருத்துவமனைக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வேண்டுமானால் என்னை மட்டும் அனுமதிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. என்னுடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தடுத்தது ஏன் என்று எனக்கு புரியவில்லை.

கருணாநிதி பார்த்த செய்தி புகைப்படத்தோடு பத்திரிகையில் வந்துள்ளது. எனினும் நீண்ட நேரம் நான் வாதாடியும் கூட அனுமதி தரவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு விசித்திரமான மருத்துவமனை இருப்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது.

மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட் கட்சியைச் சேர்ந்த பெரியவர் என்.வரதராஜன் விரைவில் குணம் அடைய எனது வாழ்த்துக்களை தெரிவித் துக்கொள்கிறேன்''

தன்னுடன் புகைப்படக்காரரை மட்டுமாவது அழைத்துச் செல்ல அனுமதி கேட்டுள்ளார், ஆனால் மருத்துவமனைக்குள் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்று காவலாளி மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த விஜய்காந்த் வரதராஜனைச் சந்திக்காமலேயே வீடு திரும்பியுள்ளார்


புகைப்படகாரர் சினிமா படம் எடுக்க போகிறார் என்று மருத்துவமனை ஊழியர் மறுத்திருக்கலாம். மருத்துவமனை விதி என்றால் கலைஞர், தங்கபாலுவிற்கு எப்படி அனுமதி தந்தார்கள் ?

3 Comments:

வெண்பூ said...

//
மருத்துவமனைக்குள் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்று காவலாளி மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த விஜய்காந்த் வரதராஜனைச் சந்திக்காமலேயே வீடு திரும்பியுள்ளார்
//

அப்ப அவரு போனது வரதராஜனை பாக்குறதுக்கு இல்லை. போட்டோ எடுக்குறதுக்காகதானா?? என்னா அரசியலோ????

//
மருத்துவமனை விதி என்றால் கலைஞர், தங்கபாலுவிற்கு எப்படி அனுமதி தந்தார்கள் ?
//
ஹி..ஹி.. என்னா இப்படி கேள்வி கேக்குறீங்க?? உங்களுக்கும் அரசியல் தெரியலயா???

முகமது பாருக் said...

சின்னப் புள்ளதனமால இருக்கு இந்த லட்சனத்துல முதலமைச்சர் ஆகியே தீருவேன்னு அடம் வேற போப்பா புள்ள குட்டிகளோட சேர்ந்து படிங்க அப்புறம் பாக்கலாம் அரசியலை.

சந்திரமௌளீஸ்வரன் said...

அது தனியார் மருத்துவமனை. அனுமதி என்பது உரிமை இல்லை