பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 02, 2008

கொசுக்கடியும் காந்தி ஜெயந்தியும்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "சுதந்திர இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். நாட்டின் சுதந்திரத்திற்காக பல இன்னல்களை காந்தி அனுபவித்தார்.

அவர் வாங்கி தந்த சுதந்திரத்தால் இன்று சின்ன கொசுக்கடியை கூட மக்கள் தாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.....


ரஜினியும் ஐஸ்வர்யாராயும் பிரேசில், பெரு நாடுகளில் எந்திரன் படப்பாடல் காட்சிகளில் நடித்து முடித்து நாடுதிரும் பியுள்ளனர். இருவாரம் நடந்த இப்படப்பிடிப்பில் இருவரும் கொசுக்கடியால் அவதிப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆள்நடமாட்டம் இல்லாத மலைப்பகுதியிலும் காடுகளிலும் இரு பாடல் காட்சிகளை ஷங்கர் படமாக்கினார்.

இரண்டு மணி நேரம் ஜீப்களில் பயணம் செய்தே படப்படிப்பு நடந்த இடத்தை அடைந்தனர். வழிநெடுங்கிலும் அடர்ந்த மரங்களும் முட்புதர்களும் நிரம்பி இருந்தன. விஷப் பாம்புகள் நடமாட்டம் இருந்தது.

படப்பிடிப்பு நடந்த இடத்திலும் அடர்ந்த புதர்கள் காணப்பட்டன. கொசுக்கள் அதிகம் காணப்பட்டன. ஒவ்வொன்றும் பெரிய சைசில் இருந்ததாம். அவைகள் படை, படையாய் சுற்றிப்பறந்து ரஜினி, ஐஸ்வர்யாராயை கடித்தன.

இருவரும் கைகளால் விரட்டியும் அடித்தும் அவதிப்பட்டனர். கொசுக்கடியால் ஐஸ்வர்யாராய் தேகம் சிவந்து காணப்பட்டது. கொசுத்தொல்லை காரணமாக படப்பிடிப்பிலும் அவ்வப்போது தடங்கல் ஏற்பட்டதாக படப்பிடிப்பு குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
( ரஜினி ஐஸ் - தகவல் மாலைமலர் )

4 Comments:

ச.சங்கர் said...

//சின்ன கொசுக்கடியை கூட மக்கள் தாங்க முடியாத //

//கொசுக்கள் அதிகம் காணப்பட்டன. ஒவ்வொன்றும் பெரிய சைசில் இருந்ததாம்.//

contradicting :))

IdlyVadai said...

ச.சங்கர் அடுத்த முறை டாக்டர் பட்டம் கொடுக்க உங்க்ளுக்கு சிபாரிசு செய்கிறேன்.

Anonymous said...

சின்ன கொசுக்கடியை - Kosuvin kadi chinnathu

ஒவ்வொன்றும் பெரிய சைசில் - "Kosu" size perusu...

its not contradicting...

Anonymous said...

idly vadai....intha post la enna solla varinga..? Suthanthiram vaanginathu nalathan kosu kadi kashtam theriyutha...? Suthanthiram vaangama irunthituntha..Rajinikum Aishwarya raikum Soranayae irunthirukathu, athanala kosu kadiyila kashta pattirukka maatanganu solla varingala....Please clarify...