பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 01, 2008

பாஜக ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது

இஸ்லாமிய மக்களுக்கு தமிழக பாஜக ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

நாடு தற்போது ஒரு இக்கட்டான நிலைமையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பயங்கரவாத அமைப்புகளின் வலையில் இளைஞர்கள் வீழ்கிறார்கள்.

ஆனால், சமீபத்திய 2 சம்பவங்கள் ஆறுதலானவை. தனது மகன் பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்த, அவனது தாய் அவன் தவறு செய்திருந்தால் தூக்கில் இடுங்கள் என பேசியது ஊடகத்தில் வெளி வந்தது.

இதுபோலவே உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சார்ந்தவர் தனது மகன் சிமி அமைப்பில் சிக்கியதை அறிந்து அவனுக்கு சட்டரீதியான தண்டனை வழங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

பெற்ற தாயும், தகப்பனும் தனது மக்களின் பயங்கரவாத செயலை கண்டிக்கும்போது இஸ்லாமிய சமுதாயமா பயங்கரவாதத்தை ஆதரிக்கப் போகிறது?. அந்த பெற்றோர்களது நல் உதாரணம் ஒரு பானை சோற்றுக்கு இரு சோறு பதம் என ஆகட்டும்.

தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கணேசன்.
தேர்தல் நெருங்குகிறது...

1 Comment:

Anonymous said...

Oh !!Wolf is wishing Goat