பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 01, 2008

ஒரே மேடையில் அதிமுக, பாமக, தேமுதிக

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக அக்டோபர் 2ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக, தேமுதிக, பாமக, இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அனைத்தும் பங்கேற்கின்றன. இதில் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே கலந்து கொள்ளவில்லை.


இந்த அழைப்பை ஏற்று அதிமுக, தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்பு களும் திரையுலகத்தினர் பலரும் இந்த உண்ணா விரதத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பங்கேற் காது என்று தெரிகிறது. தங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து அழைப்பில்லை என்று அவ்விரு கட்சிகளும் தெரிவிக்கின்றன.

ஆனால், அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி

கூட்டணி 1 - திமுக, காங்கிரஸ்
கூட்டணி 2 - அதிமுக, பாமக, பா.ஜ.க, மதிமுக + சன் டிவி
கூட்டணி 3 - தேமுதிக, கம்யூனிஸ்ட் + சன் டிவி

8 Comments:

Ram said...

+ சன் டிவி twice...

What is the cue?

Kalaikovan said...

சன் டிவி.........?!

நிச்சயமாக தி.மு.க (& திரு.மு.க ) வின்
தோல்வியை உறுதி செய்ய பாடு பட்டு வருகிறது.

கலைஞரின்
அரசியல் சாணக்கியம் (குள்ள நரித்தனம் ),
சாதுரியம் (பச்சோந்தி) எதுவும் எடுபடாது.

கழக கண்மணிகள் (வஞ்சிக்கப்படும் தொண்டர்கள்) ..,
முடிந்தவரை வருகிற தேர்தலில் கவுரவம் காக்கட்டும் .

தமிழனின் வாழ்வோடு ஒன்றி விட்ட சன் டிவி ...
தி.மு.க வை திணறடிக்கிறது.

என்ன செய்ய ...
ராஜ் டிவி- எதிர்பாராத நேரத்தில் விளம்பரம், தெளிவில்லா ஒளிபரப்பு
ஜெயா டிவி - அதிக அம்மா முக்கியத்துவம்
விஜய் டிவி - சில நல்ல நிகழ்ச்சிகள் , குறைவான திரைப்பட நிகழ்ச்சிகள்.
மக்கள் டிவி - தூய தமிழ் ,தமிழ் ,தமிழ் ... தமிழ் மட்டுமே
கலைஞர் டிவி - சன் டிவியின் நகல்

சன் டிவி யோடு போட்டி போட முடியவில்லையே

Mukkodan said...

Two way fight in TN is very good for the state and the Nation. 3 way fight will benefit Manjal kavignar.

Indian National Team : BJP, ADMK, DMDK, MDMK

Paki-Italian Team: DMK, Congress, Commies, misc

அமுதப்ரியன் said...

இதுல சன் டி.வி. சார்பா யார் எம்.பி. தேர்தலில் நிற்பது?

Anonymous said...

கூட்டணி 2 - அதிமுக, பாமக, பா.ஜ.க, மதிமுக + சன் டிவி
கூட்டணி 3 - தேமுதிக, கம்யூனிஸ்ட் + சன் டிவி

No it is

அதிமுக, பாமக, பா.ஜ.க, மதிமுக + சன் டிவி+இட்லி வடை
தேமுதிக, கம்யூனிஸ்ட் + சன் டிவி+
இட்லி வடை

சந்திரமௌளீஸ்வரன் said...

அட இத்தனை காமெடி ஷோவா

Anonymous said...

Niyayama IdlyVadai...?

"ஒரே மேடையில் அதிமுக, பாமக, தேமுதிக" endru solli.. thalaippil மதிமுக-vai purakkanithathu ean...

பாமகvai vida மதிமுக enna kaevalalamaa?

Suyanalamillatha, Thiraimayana orae thalaivar Vaiko-vai purakkanippathu Ean???

Valai said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!