பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 17, 2008

சிறீரங்கம்: ஆண்டுக்கு ரூ.5 கோடி கொள்ளை!

சிறீரங்கம்: ஆண்டுக்கு ரூ.5 கோடி கொள்ளை! - பார்ப்பனர்களின் உச்சக்கட்ட ஆட்டம்
(

திருச்சி அருகே இருப்பது சிறீரங்கம் அரங்கநாதசாமி கோவில். இக்கோவிலின் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக இருப்பவர் மா.கவிதா. நேர்மையான, செயல்திறன் மிக்க அதிகாரி எனப் பெயர் பெற்றவர்.
சென்னையில் இவர் உதவி ஆணையராக இருந்த போது, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் 15 நாள்கள் செயல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டார். தமிழ்நாட்டின் முதல் பெண் செயல் அலுவலர் என்ற பெருமையும் இவருக்குண்டு.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் சிறீரங்கம் கோவில் செயல் அலுவலராக கவிதா நியமிக்கப்பட்டார். இவரை உடனடியாக மாற்ற வேண்டும் என சிறீரங்கத்துப் பார்ப்பனர்கள் போராடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் இப்பிரச்சினையில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரும் சமரசம் பேசி வருகின்றனர். பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல் அலுவலர் கவிதாவுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள்? இப்பிரச்சினை திருச்சி முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுவதன் பின்னணி என்ன? என்பது குறித்து அறிய சிறீரங்கம் கோவிலுக்குச் சென்றோம். அங்கு கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் பேசிய போது நமக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் எனும் சட்டம், அமைதிப் புரட்சியாக இங்கே அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 இடங்களில் இப்பயிற்சிக் கூடம் உள்ளது. இதில் 3 சிவன் கோவிலிலும், 2 வைணவக் கோவிலிலும் உள்ளது. இதில் சிறீரங்கம் கோவிலும் ஒன்று.

சிறீரங்கத்தில் உள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பள்ளியைச் சட்டத்திற்கு உட்பட்டு திறன்பட செயற்படுத்தி வருபவர் செயல் அலுவலர் கவிதா. ஆடு மேய்த்த தமிழர் கூட, அழகழகாய் மந்திரம் சொல்கிறார் சிறீரங்கத்தில்! மொத்தம் 30 பேர் பயிலும் இப்பயிற்சிக் கூடத்தில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் 12, பார்ப்பனர் 1, மற்றவர்கள் 17 என்ற விகிதத்தில் பயின்று வருகின்றனர்.
இவர்கள் இன்னும் சில நாள்களில் பார்ப்பனர்களின் கோட்டையாகத் திகழும் அரங்கநாதசாமி கோவிலுக்குள் நுழைய இருக்கிறார்கள். அதற்குரிய ஏற்பாட்டை முனைப்புடன் செயல்படுத்தும் செயல் அலுவலர் கவிதா மீது குடுமிகளுக்குக் கோபம்.
இதுமட்டுமின்றி கவிதா அவர்கள் பணிக்குச் சேர்ந்தது முதலே பார்ப்பனர்களுக்கும், இவருக்கும் பனிப்போர் தொடங்கிவிட்டது.
அதாவது சாமியைத் தோளில் சுமந்து கொண்டு புறப்பாடு என்ற பெயரில் தெருத் தெருவாக வீதி உலா வருவார்கள். அப்போது பார்ப்பனர்கள் தீர்த்தம், திருநீறு, துளசி என அனைத்தும் கொடுப்பார்கள். ஆனால் பெண்களுக்கு மட்டும் கொடுக்க மாட்டார்கள்.
இதை முதன் முதலில் தட்டிக் கேட்டுள்ளார் கவிதா. ஆனால் பார்ப்பனர்கள் மறுத்துள்ளனர். எல்லோருக்குமுள்ள உரி மையைப் பெண்ணுக்கும் கொடு, இல்லையெனில் செயல் அலுவலர் என்பதற்காகவாவது கொடு எனக் கேட்டுள்ளார். ஆனால் பார்ப்பனர்கள், ஆகம விதி இடம் கொடுக்காது என மறுத்துவிட்டனர். அப்படியானால் 106 விதியின் படி (இந்து அறநிலையத்துறை சட்டம்) நடவடிக்கை எடுப்பேன் என்றதும் பார்ப்பனர்கள் அலறியடித்து இறங்கி வந்துள்ளனர்.
ஆகம விதி, ஆகம விதி என அடிக்கடி கூறும் பார்ப்பனர்கள் ஆகம விதிப்படி நடந்து கொள்வதில்லை என்கிறார் மற்றொரு கோவில் ஊழியர்.
ஆகம விதிப்படி சொந்தமாக (ளநடக) முகத்தை மழிக்கக் கூடாது, ஆனால் இவர்கள் மழிக்கிறார்கள். உடல் முழுவதும் உள்ள ரோமத்தை மழிக்க வேண்டும், இவர்கள் செய்வதில்லை. வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது, ஆனால் வளர்க்கிறார்கள்.
இவ்வளவு ஏன்? உண்மையான பார்ப்பனர் கடல் கடந்து வெளிநாடு போகக் கூடாது. ஆனால் குடும்பத்துக்கு ஒரு பார்ப்பனர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இதில் பெரிய கொடுமையும் ஸ்ரீரங்கத்தில் நடந்துள்ளது.
ரெ.நரசிம்ம பட்டர் என்பவர் ஸ்ரீரங்கத்தில் அர்ச்சகராக இருந்துள்ளார். பின்னர் கடல் கடந்து அமெரிக்கா சென்றுவிட்டார். ( ஆகம விதியை மீறியது வெட்கம் கெட்ட செயல் என்றால், கிறித்துவ நாட்டுக்கு சென்றது மானம் கெட்ட செயல்)
இவர் அமெரிக்காவில் வசித்தாலும் கோவிலில் வேலை செய்வதாகத் தினமும் நோட்டில் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த கவிதா இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
நரசிம்மா பட்டரின் இரண்டு சகோதரர்களான ரெ.நந்தகுமார் என்கிற சுரேஷ் பட்டர், ரெ.முரளி பட்டர் ஆகிய இருவரும் இதே கோவிலில் பட்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். ( இந்த இரண்டு பட்டர்கள் மட்டும் யோக்கியமா என்ன? இவர்கள் பட்டராக இருந்து கொண்டே, திருவெறும்பூர் பெல் தொழிற்சாலையில் வேலையும் பார்த்து வருகின்றனர்) இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வேலை பார்க்கும் நரசிம்ம பட்டரின் கையெழுத்தை மோசடியாகப் போட்டு வந்துள்ளனர். இது ஒரு கிரிமினல் குற்றமாகும். இதைக் கண்டுபிடித்து 15.04.2008 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் செயல் அலுவலர் கவிதா மீது நந்தகுமார் பட்டர் கடும் கோபத்தில் இருந்துள் ளார். இந்த இடத்திலிருந்து உங்களை வேறொரு இடத் திற்கு மாற்றுகிறேன் எனச் சபதமும் இட்டுள்ளார்.
பொதுவாக இக்கோவிலில் 18 பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் காலம் காலமாக இக்கோவிலின் சொத்துகளை அனுபவித்து வருகின்றனர். தந்தை அர்ச்சகராக இருந்தால் அவரின் பிள்ளையும் அர்ச்சகராக இருக்க முடியாது. இதற்குச் சட்டத்திலும் இடமில்லை. ஆனால் ஸ்ரீரங்கத்துப் பார்ப்பனர்கள் பல ஆண்டுகளாகக் குடும்பம் குடும்பமாக மக்கள் சொத்தைக் கொள்ளையடித்து வருகிறார்கள். அண்மையில் கூட கோவில் நிலங்களில் குடியிருப்பதற்கு வாடகை செலுத்த வேண்டும் என அரசு அறிவிப்பு செய்தது. அதுவும் 100 ரூபாய்க்கு 1 பைசாதான். இப்பணத்தை வாடகையாகக் கட்டுவதில் பார்ப்பனர்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் அவர்கள் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா?
நாங்கள் ஏன் வாடகை செலுத்த வேண்டும்? இது எங்கள் இடம், எங்களுக்கு உரிமையான இடம், காலம் காலமாக நாங்கள் வசித்து வருகிறோம், அதனால் நாங்கள் வரி செலுத்த மாட்டோம் என அடம்பிடித்து வருகின்றனர்.
கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள், குறைந்தபட்சம் வரியைக் கட்டிவிட்டு, தொடர்ந்து அங்கேயே இருக்கலாம் என்றுதான் அரசு அறிவித்தது. ஆனால் பார்ப்பனர்களோ, அது எங்கள் இடம், நாங்கள் வரி செலுத்த மாட்டோம் எனத் தலைவிரி கோலத்தில் ஆடியுள்ளனர் (தமிழ்நாட்டில் எந்த இடத்தையும் இது எங்கள் இடம் என்று சொல்லிக் கொள்வதற்குப் பார்ப்பனர்களுக்கு அருகதை கிடையாது) இதுமட்டுமின்றி, சிறீரங்கம் அரங்கநாதசாமி கோவிலில் மொத்தம் 52 சன்னதிகள் உண்டு. இதில் 35 சன்னதிகள் பார்ப்பனர்களின் தனி ராஜ்ஜியத்தில் செயல்படுகின்றன. அங்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செல்வதில்லை. அந்த 35 சன்னதிகளில் நடைபெறும் பூஜை, புனஸ்காரம், வசூல், இத்யாதிகள் அனைத்தும் பார்ப்பனர்களின் தனிக் கணக்கிற்குச் சென்றுவிடுகின்றன. இதில் தன்வந்திரி சன்னதி என்று ஒன்றுண்டு. தன்வந்திரி என்றால் மருத்துவக் கடவுள் என்று பெயர் ( ஆயுர்வேதம், சித்தா மற்றும் மருந்துக் கடைகளுக்குத் தன்வந்திரி என்ற பெயரை இதனால்தான் வைக்கின்றனர்)
இதுவரை இப்படி கொட்டமடித்த இவர்களுக்கு, இப்போது 35 சன்னதிகளுக்குரிய கணக்குகளை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றதும் மேலும் கோபமாகிவிட்டது. இது மட்டுமின்றி கோவிலுக்குள் உண்டியலை மக்கள் பார்வையில் படாதவாறு வைப்பார்களாம். அப்போதுதான் அதற்குள் பணத்தைப் போடாமல், தட்சணைத் தட்டில் போடுவார்களாம். இப்போது கோவில் நிருவாகத்தால் அந்த உண்டியலை மக்கள் பார்வையில் படுமாறு வைத்துள்ளார்களாம். ( உண்டியலில் இருந்து பல்வேறு வகைகளில் பணத்தை எடுப்பதில் கூட பலர் கில்லாடிகளாம்)
அதேபோல கோவிலுக்குள் புறப்பாடு என்ற ஏற்பாட்டை செய்வதிற்கு ஒருவரை நியமிப்பார்கள். அவருக்குப் பெயர் மணியக்காரர். இதை முறைப்படி ஏலத்தில்தான் விடவேண்டும். ஆனால் கடந்த 15 ஆண்டு காலமாக ஒரே நபர்தான் ஏலம் எடுத்து மணியக்காரராக இருந்துள்ளார். இதில் வரும் இலட்சக்கணக்கான பணத்தைப் பார்ப்பனர்களே பிரித்துக் கொண்டு, மீதமுள்ள சொற்ப பணத்தைக் கோவில் நிருவாகத்திடம் கொடுப்பார்களாம். அலுவலர் கவிதா பொறுப்பேற்றவுடன் முறைப்படி இதை ஏலம் விட்டுள்ளார்கள். அதற்கு முன்பு 15 இலட்சம் வரை ஏலம் போனது, சென்ற ஆண்டு 24 இலட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. இதையும் அதே பழைய மணியக்காரர்தான் எடுத்துள்ளார். நாளொன்றுக்கு ரூ.15000 வரை இதில் இலாபம் கிடைக்கும் என்கிறார்கள். இந்த மணியக்காரர் தெருவில் வடை சுட்டு வியாபாரம் செய்தவராம். இன்று மக்கள் பணத்தில் இலட்சாதிபதி.
அதேபோல தெருக்களில் புறப்பாடு போகும் போது முறைப்படி செல்ல வேண்டிய பாதைகளில் செல்லாமல், யார் அதிகம் பணம் தருவார்களே அப்பாதையில் சென்று, அப்பணத்தைச் சொந்தமாக வைத்துக் கொள்வது. அதுமட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கும், பணக்காரர் வீடுகளுக்கும் சென்று சிறீரங்கம் கோவில் பெயரைக் கூறி யாகம், பூஜை நடத்தி பலப்பல ஆயிரங்களை இவர்கள் சுருட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கவிதா பொறுப்பேற்றவுடன் பார்ப்பனர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்திற்குக் காசோலையாகக் கொடுத்துள்ளார். ஆனால் பல பார்ப்பனர்கள் காசோலையை வாங்க மறுத்துள்ளனர். காரணம் காசோலையை வாங்கினால் முறைப்படி கணக்குக் காட்ட வேண்டி வரும். அப்படி வரும் போது பலரும் வருமான வரி கட்ட வேண்டிய நிலை வரும்.
அதேபோல் அடையாள அட்டைக்காக அர்ச்சகப் பார்ப்பனர்களின் பெயர், வயது, முகவரி, பணிகள், மார்பளவுப் புகைப்படம் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. ஆனால் அவற்றைத் தர இன்று வரை அவர்கள் மறுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சிறீரங்கத்திற்கு அறங்காவலர் குழுத் தலைவர் இன்று வரை நியமிக்கப்படவில்லை. 60 வயதுக்கு மேல் அர்ச்ச கராக இருக்கக் கூடாது என்பதையும் இவர்கள் பின்பற்றுவதில்லை. கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியேயும் பார்ப்பனக் கொள்ளைகள் ஏராளம்! கோவில் நிலத்தில் குடியிருந்து, பின்னர் யாருக்கும் தெரியாமல் மோசடி வேலைகள் செய்து, அந்த இடத்தோடு சேர்த்து வீட்டையும் விற்ற பார்ப்பனர்கள் அதிகம் பேர். சற்றொப்ப 3300க்கும் மேற்பட்ட பார்ப்பனக் குடும்பங்கள் அங்கே ஆக்கிரமித்து வசிக்கின்றனர். ஒரே ஒரு பார்ப்பனரிடம் மட்டும் 1000 ஏக்கர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அண்மை யில் கோவில் இடத்தை ரூ. 40 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயலும் போது ஒரு பார்ப்பனர் பிடிபட்டுள்ளார். கட்டளைச் சொத்து, தர்மச் சொத்து, பட்டா சொத்து என ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இதுமட்டுமின்றி ஆந்திரா தொடங்கி தென்காசி முழுவதும் ஏராளமான சொத்துகள் பரவிக் கிடக்கின்றன.
இவையனைத்தையும் ஏக போகமாக அனுபவித்துக் கொண்டு, அரசாங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் உண்டு கொழுக்கின்றனர். ஆனால் இதே கோவில் நிலத்தில் பூ கட்டும் தொழிலாளர்கள் உரிய வாடகை, வரி செலுத்தி நாணயமாக வசித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் ஆக்கிரமிப்பை அகற்று கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு வேண்டு மாம். இக்கோவிலைச் சுற்றி 7 பிரகாரம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு மதில் சுவற்றின் ஓரத்திலும் பெரிய பெரிய வீடுகளைக் கட்டிக் கொண்டு, பார்ப்பனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புப் பகுதிகளில் எங்குமே பாதாளச் சாக்கடைத் திட்டம், மலத் தொட்டிகள் (செப்டிக் டேங்க்) கிடையாது. பெருமாள் இவ்வீதிகள் வழியாக வருவதால் இத்திட்டத்தைப் பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள். எனவே சற்றொப்ப 2000 பேரின் மனிதக் கழிவும் திறந்த வெளியில்தான் ஓடுகின்றன. ஒவ்வொரு மதில் சுவர் அருகிலும் சாக்கடை, மலம், சிறுநீர் எனச் சுகாதாரக் கேட்டின் முக்கிய ஸ்தலமாக சிறீரங்கம் விளங்குகிறது. மழைக் காலங்களில் தண்ணீரோடு சேர்ந்து இந்த மலக்கழிவுகள் தமிழர்கள் வாழும் பகுதிக்குப் போகிறது. அச்சமயங்களில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு அவர்களால் காரணம் அறிய முடியவில்லை. இப்போதுதான் இந்த அசிங்கங்கள் மெல்ல தெரியத் தொடங்கியுள்ளன.இதை விடக் கொடுமையும் இந்தப் புண்ணிய ஸ்தலத்தில் உண்டு. பெரும்பாலான பார்ப்பனர்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கும். கருவறைக்குள் எவ்வளவு நேரம் தான் அடக்க முடியும்? அதனால் கோவில் கருவறை அருகிலுள்ள மடப்பள்ளி என்ற இடத்தைச் சிறுநீர் கழிக்கப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல அச்சுவர் முழுக்கப் பான்பராக் கறைகளையும் பார்க்க முடியும். அண்மையில் கூட கோவிலின் பின்புறம் ஏராளமான மதுபாட்டில்கள் கண்டெடுக் கப்பட்டு, அப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.
இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு பார்ப்பனர் மதுபோதையில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க, அப்பகுதி மக்கள் அப்பார்ப்பனரை அடித்து உதைத்துள்ளனர்.
ஆக பார்ப்பனர்களின் மோசடி, பித்தலாட்டம், ஒழுங்கீனம், கேவலத்தன்மை மற்றும் ஏராளமான இத்யாதிகளின் கூடாரமாக அக்கோவில் உள்ளது. இப்படிப்பட்ட சுகபோகமான இடத்தில் கவிதா என்ற அதிகாரி வந்து ஆகம விதியை, அறநிலையத்துறைச் சட் டத்தை, ஒழுங்கை, நேர்மையைப் பறைசாற்றவதுப் பார்ப்பனர் களுக்கு அறவே பிடிக்கவில்லை.
இந்தச் சிரமங்கள் எல்லாம் இருப்பதால்தான் கோவில்களை பார்ப்பனர்களின் சொத்தாக்க வேண்டும் எனக் கொக்கரிக்கின்றனர். சிறீரங்கம் அரங்கநாதசாமி கோவில் செயல் அலுவலர் கவிதாவை உடனடியாக மாற்ற வேண்டும் எனப் பார்ப்பனர்கள் கொதித்துப் போயிருப்பதற்கு ஒரே வரியில் இப்படிக் கூட சொல்லலாம்.
2006 - 07-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவில் வருமானம் சுமார் 5 கோடி. இவர் பொறுப்பேற்றதும் 2007 - 08-ஆம் ஆண்டு சுமார் 10 கோடி. இரண்டு மடங்காகியுள்ளது. அதிகம் என்றால் என்ன பொருள்? பார்ப்பனர்கள் கொள்ளையடித்த 5 கோடியை அதிகாரி கவிதா தமிழ்நாடு அரசுக்கு ஈட்டித் தந்திருக்கிறார். ஆக அவர் மீட்டது இவ்வளவு என்றால், இதுதவிர மேற்சொன்ன, நடைமுறையிலுள்ள கொள்ளை மதிப்பையும் சேர்த்தால் எத்தனை கோடி வரும்?
தமிழ்நாட்டில் வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பணத்தை இப்படி கோடி, கோடியாகக் கொள்ளை அடிக்கிறது பார்ப்பனக் கூடாரம், அதில் போய் கை வைத்தால் அவர்களுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்?
அரசு, சட்டம், நீதிமன்றம் எதற்கும் நாங்களும், எங்கள் ஆகமமும் கட்டுப்படாது என்கிறார்கள். கோடி, கோடியாய் அள்ளிக் கொடுக்கும் பொது மக்கள்தான் இதற்குகொரு முடிவு கட்ட வேண்டும். இல்லையென்றால் பொது மக்களுக்காக பாடுபடும் கவிதா போன்ற அதிகாரிகளுக்கு அவர்கள் முடிவு கட்டிவிடுவார்கள்.

- வி.சி. வில்வம்
( நன்றி: விடுதலை )

11 Comments:

Anonymous said...

This is nothing compared to what MK, T.R.Baalu & Raja are getting as their commission in each deal in both Central & TN Govt.

மணிகண்டன் said...

பார்ப்பன - count 39 தான். இன்னும் கொஞ்சம் அதிகமா இருந்து இருக்கலாம்.

Anonymous said...

இங்கு மட்டும் அல்ல, திருப்பதி, பழனி, சபரி மலை போன்ற இடங்களிலும் இது போன்று நடக்கிறது. கோவில் ஊழியர்களைத் தவிர, சில 'பெரிய' மனிதர்களும் இதன் பின்னணியில் இருப்பார்கள்.
ஆனால் கவிதா 'ஈட்டி' தந்த ஐந்து கோடி எந்த அமைச்சரின் பாக்கெட் க்கு சென்றதோ?

அச்சுப்பிச்சு said...

வில்வம் அவர்களே, அர்ச்சகரின் மகன் நிச்சயமாக அர்ச்சகராக முடியாது. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முதல்வர் மகன் முதல்வர் ஆக முடியுமா?

Navaneeth said...

மேலே சொன்ன குற்றசாட்டுக்கள் உண்மை என்கிற பட்சத்தில் நடவடிக்கை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனால், அது கோவிலோடு முடியக்கூடாது. அனைத்து இடங்களிலும் தொடரவேண்டும். மற்ற மத வழிபாட்டு தலங்கள், பகுத்தறிவு கூடாரமா இருந்தாலும் சரி, தலைமை செயலகமானாலும் சரி,
ஆனால் விடுதலை போன்ற ஏடுகள் போராடுமா?

Anonymous said...

உலகத்திலேயே பார்ப்பனக்கூட்டம் மட்டும்தான் போக்கிரிக் கும்பல். மு.க. & கோ ரொம்ப யோக்கியமானவர்கள். Veera(?)மணி மணியை ரொம்ப ஆட்டாதே!!!

Anonymous said...

are there any laws like this for mosques and churches...I am just trying to understand whether its only for temples

Anonymous said...

Churches and Mosques are not under HR & CE. Only Hindus are innocent idiots, and so only there Govt will interfere. Just imagine if the govt has to ask every church to submit their balance sheet.
Govt does not have the guts to do so also. And that is because we are secular. Secular = "Anti Hindu" is the dictionary definition of these spineless political bastards.

Prasanna said...

Kovilgal ara nilya thuraiyin kattupaattirkul irukka vendum yenbathil maatru karuthu yedhuvum illai. Paarpanargal yen ippadi nadandhu kolgiraargal? Periyaarai paarthum thirundha villaiye. Avaradhu kudumba kovilukku (erode) makkal selvadheyillai. angu panam puzhanguvadhe illai. Avaradhu vamsam angu dharma garthaavaaga illai. avaradhu kovil aranilyathurai keel varavum illai.

Periyaarai paarthu paarpanargal katru kollattum saamarthiyathai. Oorukku upadesam seiyum koothaadithanathai.

Renu said...

sirragam kovilil rs10 potal upacharam, 5rs potal than pirasatham, rs2 potal po po, onrum potamal vital atithu viratatha kathai than. ithil ithu veraiya. SAMY RAGANATHAR THUKIKOTU IRUKARA THERIYAVILAI.

Anonymous said...

Useless article. I would appreciate if such articles are not re-published in IV. The very reason I feel, "the so called dravidan/tamil kaavala kazhahanghal NEVER did anything useful to the mankind/society, to deserve the quality of making allegations on others. They themselves are TOP rated FRAUDS"..

Really, SAD to know that IV re-publishes such articles of those useless fellow.