பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 16, 2008

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 21-ந்தேதி பிரமாண்ட மனிதச் சங்கிலி: கருணாநிதி அறிவிப்பு

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 21-ந்தேதி பிரமாண்ட மனிதச் சங்கிலி: கருணாநிதி அறிவிப்பு

நமது தமிழ் இன மக்கள் இலங்கையில் படும் தொல்லைகள், கொடிய துன்பங்களில் இருந்து விடுபட்டு-இனப் படுகொலை நிறுத்தப்பட்டு- நிலையான அமைதி காப்பதற்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஆறு தீர்மானங்களையும் நினைவூட்டி வலியுறுத்திட-அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன்-வரும் 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி முதல் சென்னையில் மாபெரும் மனிதச்சங்கிலி அணிவகுப்பு நடைபெறும். அந்த அணிவகுப்பில் சென்னையிலே உள்ளவர்கள் மாத்திரமல்லாமல், பிற மாவட்டங்களில் உள்ளவர்களும் கலந்து கொள்ளக் கூடிய பிரமாண்டப் பேரணியாக அது அமையும் என்பதால் எல்லா மாவட்டங்களிலு மிருந்து வந்து கலந்து கொண்டு மனிதச் சங்கிலியை பெரு மளவில் நடத்திட அனைத்துக் கட்சியினரும், குறிப்பாக மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டு மென்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இட்லிவடை அறிவிப்பு: 21ஆம் தேதி, டிராபிக்கில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஆபிஸிலிருந்து சீக்கிரம் புறப்படுங்கள்.. அப்படியே மின்சார பிரச்சனையை மறந்துவிடுங்கள்..

2 Comments:

Anonymous said...

வட இலங்கையில் தமிழர்கள் பகுதியை தனியாகப் பிரித்து இந்திய நாட்டோட சேர்த்துரலாம் தனி மாநிலமா

அதுக்கு அழகிரி முதல்வர். பிரபாகரனை டிஜிபியாக்கிரலாம்

Sethu Raman said...

Thuglak has already predicted the course of the actions of our beloved Minister, before the MPs actually resign -- and it has already come true with the announcementof a 'human chain'