பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 15, 2008

விஜயகாந்த் பேட்டி

விஜயகாந்த் டிவிக்கு திமுக ஆட்சி இருக்கும் வரை வராது. அனுமதியும் கிடைக்காது. என்கிறார்...

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவீர்கள்?

கூட்டணி என்பது ரகசியம். தேர்தல் அறிவிக்கட்டும், பார்க்கலாம்.

ஒரு ரூபாய் அரிசி திட்டம் குறித்து...

அதை வரவேற்கிறேன். ஆனால், உப்பு 8 ரூபாய்க்கு விற்கிறது. மற்ற பொருட்களின் விலையை குறைக்காமல், அரிசி மட்டும் கொடுத்து என்ன பயன்?

அக்டோபர் 2ம் தேதி, ஏழைகளுக்காக புதிய திட்டத்தை கருணாநிதி அறிவிக்கவுள்ளாரே?

எத்தனை கவர்ச்சி திட்டங்களை அறிவித்தாலும் அவர்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஆட்சியாளர்கள் மீது வெறுப்பாக உள்ளனர்.

தீவிரவாதிகளை ஒடுக்க பொடா சட்டம் தேவையா?

பொடா சட்டம் தேவையில்லை. உளவுத்துறை செயல் இழந்ததால்தான் டெல்லியில் குண்டு வெடித்துள்ளது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்.

பா.ஜ.வுடன் கூட்டணி சேருவீர்களா?

கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸ் இருக்கிறது மாயாவதி கட்சி கூட இருக்கிறது. கூட்டணி பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர்களிடம் கேளுங்கள்.

உங்கள் கட்சி டி.வி. எப்போது வரும்?

திமுக ஆட்சி இருக்கும் வரை வராது. அனுமதியும் கிடைக்காது.

தேர்தலுக்கு தயாராகி விட்டீர்களா?

நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டப்பேரவை தேர்தலுக்கும் நான் தயாராக உள்ளேன். போட்டியிடுவர்களின் பட்டியல் கூட தயாராக உள்ளது.

(நன்றி: தினகரன் )

7 Comments:

A Blog for Short Films said...

விஜய்காந்த் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை.

Tamilish தளம் அருமையாக இருக்குங்க. நன்றிங்க

Anonymous said...

Why that "Maaberum Sakthi" has now changed tack & started saying that it will have alliance for the coming polls? Earlier "it" was firm that "it" will contest alone & will not forge alliance with anyone. So, the reality is, the so-called "Maaberum Sakthi" has now realised what its "TRUE" sakthi & potential are & thats why its giving sound-bytes & willing to forge alliances.

Anonymous said...

விஜயகாந்த் மீடியாக்களுக்கு தீனி போடுவதால் மீடியாக்கள் ஒரு நாளுக்கு
இரண்டு முறை அவரை ‘பேட்டி' காண்கின்றன.ஒரே மாதிரி கேள்விகள்,
ஒரே விளக்கெண்ணை பதில்கள்.
அடுத்த முறை நானே ‘பேட்டி'யை அனுப்பிவிடுகிறேன்.இட்லிவடையில்
போட்டுவிடுங்கள்.

gopi said...

Anonymous said...

விஜயகாந்த் மீடியாக்களுக்கு தீனி போடுவதால் மீடியாக்கள் ஒரு நாளுக்கு
இரண்டு முறை அவரை ‘பேட்டி' காண்கின்றன.ஒரே மாதிரி கேள்விகள்,
ஒரே விளக்கெண்ணை பதில்கள்.
அடுத்த முறை நானே ‘பேட்டி'யை அனுப்பிவிடுகிறேன்.இட்லிவடையில்
போட்டுவிடுங்கள்.
----------------------------------

hahahahahaaaaaaaaaaaaaa SUPER

Anonymous said...

முதல்ல நம்மள நல்ல படிப்போம்..அப்புறம் சமுதாயத்தை படிப்போம் பிறகு மாநிலம் மற்றும் நாடு..அதை விட்டுட்டு முதலமைச்சர் ஆகியே தீர்வேன் என்று அடம்பிடக்கப்படாது (hi hi hi)..சினிமா வேறு நிஜம் வேறு....இந்த பணனயாக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் போகலாம்..யாருக்கும் பிரச்சின இல்லை. சொந்தமா யோசிக்கணும் சொந்தமா பேசணும் இந்தமாதிரி பேசத் தெரியாததால் தான் உன்னொரு காந்த் நடிகர் அசிங்கப்பட்டார்..தயவுசெய்து நம்மோளோட தகுதியை வளத்துக்க முயற்சி பண்ணனும்...சும்மா காமராசர் மாதிரினு மலைக்கும் மயிருக்கும் ஒப்பிட கூடாது....காலமாற்றம் ஒன்றே பதில் பார்ப்போம்.

deva said...

i think sarathkumar is better than vijayakanth. some sort of clarity is there in his speech compared to vijaykanth.

lok said...

அவர் கட்சிக்கு கழகமுனு பெயர் வைக்கும் போதே எதிர் பார்த்ததுதான்