பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 11, 2008

குசேலன் டைஜஸ்ட்

இட்லிவடையில் வேற டாப்பிக் போகலாம் என்றால் நம் ரஜினி ரசிகர்கள்(?) அதற்கு விடமாட்டேங்கிறாங்க.... எனக்கு வந்த செய்திகளை இங்கே தொகுத்து போட்டிருக்கேன். பெரிய பதிவுக்கு மன்னிக்கவும் ...


குசேலன் படத்தை வாங்கிய திரையரங்க உரிமையாளர்கள் ஆர்பாட்டம் ரஜினியால் வந்த வினை !


குசேலன் படத்தை வாங்கியதால் தாம் நட்டமடைந்துவிட்டதாகக் கூறி மதுரையில் உள்ள பிரமிட் சாய்மீரா நிறுவனத்தை முற்றுகையிட்ட, திரையரங்க உரிமையாளர் ஆர்பாட்டம் ஒன்றையும் நடாத்தியுள்ளார்கள். இப்படம் மதுரையில் ஐந்து திரையரங்குகளிலும், தென் மாவட்டங்களில் 26 திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ரஜினி படம், சிவாஜியை விட வசூலில் கொட்டோ கொட்டென்று கொட்டுமெனக்கூறி படத்தை மினிமம் கரன்ரிக்கு விற்றுள்ளார்கள். படம் வெளிவர முன்னர் பேசிய ரஜினியோ இப்படம் தனது படம் அல்ல என்றும், தனது பங்கு வெறும் 25 வீதமே என்றும் கூறியிருந்தார். பின்னர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இதன் காரணமாக படத்தின் வசூல் பெரிய வீழ்ச்சி கண்டுவிட்டது என்று கூறினார்கள்.

சுமார் 75 வீதம் கடன் வாங்கியே படத்தை திரையிட்டோம் இப்போது வட்டியோடு 90 வீதம் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறி பிரமிட்சாய்மீரா நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர். தமக்கு நஷ்டத்தை திருப்பி தர வேண்டும் என்றும், இல்லையேல் போராட்டம் நடக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் ரஜினி தலையிட்டு ஏதாவது அறிக்கைவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். குசேலன் படத்தை வெளிநாடுகளுக்கான உரிமை பெற்றவர்களும் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குசேலனின் சரிவு திரையுலகில் பலத்த சிக்கலை உருவாக்கியுள்ளது. ரஜினிக்குள்ள மக்கள் செல்வாக்கு ஒரு திரைக்கதைக்கு போதிய விடயமென ரஜினியின் அருகில் இருந்தவர்கள் கருதியிருப்பதையும் இந்த நிகழ்வுகள் கோடிகாட்டுகின்றன.



ரஜினிக்காக கதையை மாற்றி விட்டார்- டைரக்டர் வாசு மீது பிரியதர்ஷன் தாக்கு

தமிழ் குசேலன் பற்றி ஆதரவு கருத்துக்களும் எதிரான விமர்சனங்களும் கிளம்பிய வண்ணம் உள்ளன. அதுபோல் இப்படம் வெற்றிகரமாக ஓடுவதாக ஒரு பிரிவினரும் வசூல் எதிர்பார்த்தப்படி இல்லை என்று இன்னொரு சாராரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து குசேலன் படத்தை விலைக்கு வாங்கிய பிரிமிடு சாய்மீரா நிறுவன தலைவர் பி.எஸ். சாமிநாதன் கூறும்போது, தற்போதைய நிலவரப்படி குசேலன் ஹிட் படம்தான். ஒரு படத்தின் தலைவிதியை அப்படம் ரிலீசாகி 10 நாட்களுக்கு பிறகுதான் அறிய முடியும்.

குசேலன் ரூ. 20 கோடி வசூலித்து வெற்றிகரமாக இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் லாபம் ஈட்டித் தரும் என்று நம்புகிறோம் என்றார்.

இதற்கிடையில் மலையாள படத்தின் ஒரிஜினல் கதை குசேலனில் இல்லை என்று இயக்குனர் வாசுவை தாக்கி டைரக்டர் பிரியதர்ஷன் கருத்து வெளியிட்டுள்ளார். இவர் இதே படத்தை இந்தியில் பில்லு பார்பர் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியதர்ஷன் என்ன சொல்றார் ?

ஒரிஜினல் "கத பறையும் போள்" படத்தின் ஜீவன் குசேலனில் இல்லை. இந்தியில் "பில்லு பார்பர்'' படத்தை ஒரிஜினல் கதை மாறாமல் நான் இயக்குகிறேன். ரஜினிக்கு வாசு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ரஜினி வாழ்க்கை பற்றி கூடுதலாக சொல்லி அவர் படம் மாதிரியே எடுத்துள்ளார்.

இதனால் முக்கிய கதாபாத்திரமான பசுபதியிடம் இருந்து கதையின் போக்கு நகர்ந்து விட்டது. இது படத்தின் கோளாறு ஆகும். மலையாள படத்தின் சீனிவாசன் புத்திசாலித்தனமான கதையை உருவாக்கி இருந்தார். குசேலன் கதாபாத்திரங்களின் அறிமுக காட்சிகளும் ஒரிஜினல் கதையில் இல்லை.

இந்தியில் ரீமேக் செய்யும் பில்லு பார்பர் படத்தில் சீனிவாசன் கேரக்டரில் இர்பான்கான் நடிக்கிறார். அவர்தான் கதாநாயகன் சூப்பர் ஸ்டராக வரும் ஷாருக்கான் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும்தான் தோன்றுவார்.




என்னைப்பற்றி மட்டமாக "பிரியதர்ஷன் அப்படி பேசியிருக்க மாட்டார்" - பி.வாசு பேட்டி

`குசேலன் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தவர்களில், டைரக்டர் பிரியதர்ஷனின் மனைவி லிசியும் ஒருவர். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர், என்னையும், படத்தையும் அப்படி பாராட்டினார். மலையாள படத்தின் அழகும், சாராம்சமும் குறையாமல் படமாக்கி இருக்கிறீர்கள் என்று கூறினார்.

அன்று இரவு 10 மணிக்கு மேல் லிசியின் கணவர் பிரியதர்ஷன் மும்பையில் இருந்து என்னுடன் போனில் பேசினார். ``என் மனைவி இதுவரை எத்தனையோ படங்களை பார்த்து இருக்கிறார். `குசேலன்' படத்தின் அளவுக்கு அவரை எந்த படமும் பாதிக்கவில்லை. அந்த அளவுக்கு படம் பிடித்து இருக்கிறது'' என்று லிசி சொன்னதாக, பிரியதர்ஷன் என்னை பாராட்டினார்.

அவர் என்னைப் பற்றி மட்டமாக ஒருபோதும் பேசமாட்டார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

ஒரு படத்தின் `ரிசல்ட்'டை 10 நாட்களுக்குள் கணிக்க முடியாது. 10 நாட்களுக்குப்பின், எத்தனையோ படங்கள் `சூப்பர்ஹிட்' ஆகியுள்ளன. பொதுவாக ஆடி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் வரும். பெண்கள் அனைவரும் கோவில் விசேஷங்களில் கலந்துகொள்வார்கள். ஆடி திருவிழாக்கள் எல்லாம் இப்போதுதான் முடிந்துள்ளன.

`குசேலன்' பெண்களுக்கான படம். இனிமேல்தான் பெண்கள் கூட்டம் `குசேலன்' படத்துக்கு திரண்டு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.''



சாரு நிவேதிதா சும்மா இருப்பாரா - தமிழர்களே - கிடைத்த சூடு போதும் என்று எழுதியுள்ளார் - பார்க்க இங்கே



நக்கீரன் பத்திரிக்கையும் பக்கங்கள் ஒக்கியுள்ளது. ( இவர்கள் தான் ரஜினி ரசிகன் என்ற பத்திரிக்கையும் வெளியிடுகிறார்கள் )

பக்கம் - 1
பக்கம் - 2



நல்லவரா இருக்கக் கூடாது - சோ
ரஜினியை வேண்டுமென்றே தாக்கும் கூட்டத்துக்கு இப்போது குஷியான நேரம். அதனால்தான் செய்யாத ஒரு செயலுக்காக அவர் குறி வைக்கப்படுகிறார். நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, ரொம்ப நல்லவரா எப்போதும் இருக்கக் கூடாது என்ற உண்மை மட்டும் நன்கு புரிகிறது என்று கூறியுள்ளார் துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

ஒகேனக்கல் விவகாரத்துக்காக உண்ணாவிரதம் இருந்தது ஒரு சினிமா காட்சி மாதிரிதான். மேடையில் இருந்தவர்களெல்லாம் ஓவராக உணர்ச்சி வசப்பட்டுப்பட்டு நடிக்க, ரஜினியும் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.

இதில் பிரச்சினையே உதைக்க வேண்டாமா... என்று அவர் பேசியதுதான்.
இதன் பின் விளைவுகள் எப்படியிருக்கும், கர்நாடகத்தில் எந்தமாதிரி ரியாக்ஷன் இருக்கும் என்றெல்லாம் துக்ளக் கேள்வி - பதில் பகுதியில் அப்போதே விரிவாகக் கூறிவிட்டேன். இந்த இதழ் துக்ளக்கிலும் கூட எழுதியிருக்கிறேன்.

இதற்குப் பேசாமல் அவர் கட்சி ஆரம்பித்திருக்கலாம். அவர் பங்குக்கு காரசாரமாக பதிலாவது சொல்லியிருப்பார். பஸ்களைக் கொளுத்த அவருக்கும் ஏராளமாய் தொண்டர்கள் இருந்திருப்பார்கள்! நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, ரொம்ப நல்லவரா எப்போதும் இருக்கக் கூடாது என்ற உண்மை மட்டும் நன்கு புரிகிறது!!

இன்னொன்று, ரஜினி ஏற்கெனவே தனது பேச்சுக்கு கன்னட தொலைக்காட்சியில் விளக்கம் கூறிவிட்டார். அதே விளக்கத்தை இன்னொரு முறை சொல்லியிருக்கிறார். இதில் தமிழ்த் துரோகம் எங்கே வந்துவிட்டது!

ரஜினி என்ற நல்ல மனிதரின் குணம் தெரியாமல் இவர்களாகவே கற்பனை செய்து கொண்டு பேசுகிறார்கள். இதில் மீடியாவின் பங்கும், பரபரப்புக்காக தவறான செய்திகளைப் பரப்பும் அவர்களின் குணமும்கூட முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதுபோன்ற சூழலைத்தானே கருணாநிதி எதிர்பார்த்திருப்பார்... அவருக்கு சந்தோஷமாக இருக்கும்!( இந்த லைன் எதற்கு சொன்னார் என்றே தெரியலை )

ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் வேண்டும், அவரைத் தாக்கிப் பேச. இதிலிருந்தும் அவர் மீண்டு வருவார் என்று கூறியுள்ளார் சோ.



விகடன் நையாண்டி கார்ட்டூன்
http://i33.tinypic.com/2ytnw2v.jpg


இது உண்மை
தசாவதாரம், குசேலன் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள பல படங்களை முடக்கி போட்டுள்ளன. தசாவதாரம் ஓடும் தியேட்டர்கள் வேறு படங்களை திரையிட மறுக்கின்றன. இருபதாம் தேதிக்கு மேல் காலியாகும் தியேட்டர்களை குசேலன் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் ஜெயம் ரவியின் தாம்தூம் வினய், பாவனாநடிக்கும் ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்கள் தள்ளி போகின்றன

12 Comments:

Anonymous said...

"குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை"

//ஒரு படத்தின் தலைவிதியை அப்படம் ரிலீசாகி 10 நாட்களுக்கு பிறகுதான் அறிய முடியும்.

லாபம் ஈட்டித் தரும் என்று நம்புகிறோம் என்றார்.//

சுவாவிநாதன் நம்புகிறாராம் (அவரே உறுதியாக சொல்லவில்லை), "பீ".வாசுவோட ஸ்டேட்மன்ட் எல்லாம் சிரிப்பைத்தான் வரவைக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியை மேலும் மேலும் இவர்கள் அசிங்கப்படுத்துகிறார்கள் & அவமானப் படுத்துகிறார்கள்.

//ஒரு படத்தின் `ரிசல்ட்'டை 10 நாட்களுக்குள் கணிக்க முடியாது. 10 நாட்களுக்குப்பின், எத்தனையோ படங்கள் `சூப்பர்ஹிட்' ஆகியுள்ளன. பொதுவாக ஆடி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் வரும். பெண்கள் அனைவரும் கோவில் விசேஷங்களில் கலந்துகொள்வார்கள். ஆடி திருவிழாக்கள் எல்லாம் இப்போதுதான் முடிந்துள்ளன.

`குசேலன்' பெண்களுக்கான படம். இனிமேல்தான் பெண்கள் கூட்டம் `குசேலன்' படத்துக்கு திரண்டு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.''
//

10 நாட்களுக்குப் பிறகு என்பது மற்றவர்கள் படங்களுக்குத்தான். தமிழகத்தின் ஒரே(!) சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இது பொருந்த்தாது. முதல் நாளிலிருந்து சும்மா நெத்தியடியாக கலெக்சன் இருக்கணும் பாஸு. பெண்கள் எல்லாம் டி.விப் பெட்டியில் சரண்டராகி எத்தினியோ வருடம் ஆகி விட்டது. யாருகிட்ட கதை உட்ற?

படம் ப்ளாப்பு. அதை முதலில் ஒத்துக் கொள்ளுங்கப்பா. இது ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் தெரியும்.

"Kuselan Box office performance "
http://i38.tinypic.com/1z3a3wx.jpg

Kuselan- Check Proof:The Biggest Flop of the Year & in Rajni’s career:
http://www.officialbrain.com/gt/kuselan-check-proofthe-biggest-flop-of-the-year-in-rajnis-career

உண்மையை யாரும் மறைக்க முடியாது.

சொல்ல முடியாது படத்தை ஓட வைக்க ரஜினியிடம் பேசி இன்னொரு முறை "கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டதும் தவறு என்று தமிழக மக்களிடமும் மன்னிப்புக் கேட்கச் சொன்னாலும் சொல்வாங்க".

இட்லி வடையாரே ! ரஜினியிடமிருந்து அறிக்கை விரைவில் எந்த நேரத்திலும் வரும் எதுக்கும் "அலர்டா" இருங்க.

Anonymous said...

நேற்று பேப்பரில் படிக்கும் போதே நினைத்தேன். சாருவின் கட்டுரையை நீங்க போட்ருவீங்கன்னு.

"லும்பன்" சாருவிடம் ஒரு கேள்வி:

நீங்க முதலில் தமிழனா? உங்க மூதாதையர்கள் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு பிழைக்க வந்தார்கள் என்று உங்க இணையதளத்தில் நீங்களே எழுதியிருக்கீங்க.

நீங்கெல்லாம், தமிழருக்கு கிடைத்த சூடுன்னு பேச வந்தீட்டீங்க. போங்கய்யா, எந்த பார்ல யாரு ஓசியில "தண்ணீ" வாங்கி கொடுப்பான்னு நாக்கைத் தொங்க போட்டு அலையற வேலையை மட்டும் பாரு. உனக்கு ஊத்தி கொடுக்கும் அந்துமணி "ரமேஷ்"ட்ட ஒரு கேள்வி: ஏன்யா! ரஜினி ப்ளோ-அப் தீபாவளி மலருக்கு போட்டு, எப்படியெல்லாம் அவர் பேரை யூஸ் செய்து சம்பாதித்திருக்கிறாய்? இந்த "மனநோயாளி" & குடிகாரப் பய சாருவோட கட்டுரையைப் போட்டு பிழைப்பு நடத்துற? இதெல்லாம் ஒரு பிழைப்பு!

த்தூ..த்தெறி...!

எரிகிற எண்ணெயில் நெய் ஊற்றி குளிர் காய்கிறது இந்த "தினமலம்". செய்திகள் முலமாக இப்ப அந்த "கேப்டனுக்குத்தான" நீ காவடி தூக்குற.

"ரஜினி ரசிகன்" என்று புத்தகம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த நன்றி மறந்து எழுதும் கோபாலே! உன்னோட மீசையை முதல்ல எடுத்துட்டு அப்புறம் பேசு. நன்றி மறந்த தமிழர்களே ! காலம் உங்களை மன்னிக்காது.

"லும்பன்" சாரு ! தில் இருந்தா இங்க வந்து கமென்ட் கொடு. அது சரி இன்னும் ஏன் இந்த கட்டுரையை உன்னோட சைட்ல அப்லோடு செய்யாம இருக்கிறாய். பயமா?

போய்யா, போய் ! ஜெயமோகனோட மட்டும் சன்டை போடுகிற வேலையை வைத்துக் கொள்.
தலைவர் ரஜினி & ரசிகர்களை சீண்டாதே !

Anonymous said...

குசேலன், பாபாவை விட வசூலில் மோசம் என்பதே உண்மை.வாங்கிய விநியோகஸ்தர்கள்,திரையரங்க உரிமையாளர்களுக்கு குசேலன்
கொடுத்திருப்பது அல்வா.ரஜினி
அமெரிக்காவிற்கு பறந்துவிட்டார்.
ரோபாவும் ஊத்திக் கொண்டால்
தொழிலுக்கு கும்பிடு போடுவாரா?

அவனும் அவளும் said...

நானும் பொது சேவைல எறங்கி இது சம்பந்தமா என்னோட கருத்துக்கள தமிழ் பொதுமக்கள் கிட்ட வச்சி இருக்கேன். வாசிச்சு பாத்துட்டு பதில் சொல்லுங்க.

அமுதன் said...

"குசேலன், பாபாவை விட வசூலில் மோசம் என்பதே உண்மை.வாங்கிய விநியோகஸ்தர்கள்,திரையரங்க உரிமையாளர்களுக்கு குசேலன்
கொடுத்திருப்பது அல்வா.ரஜினி
அமெரிக்காவிற்கு பறந்துவிட்டார்.
ரோபாவும் ஊத்திக் கொண்டால்
தொழிலுக்கு கும்பிடு போடுவாரா?"
இப்படி ஒரு அனானி எழுதி இருக்கிறதே!!!

பைத்தியத்திலும் பைத்தியம், இது கடைஞ்செடுத்த பைத்தியம் போல!! ரஜினிக்கு இன்னும் ஒரு படம் ஊத்திக்கொண்டால் தொழிலுக்கு கும்பிடு போடுவாரா என்று கேட்கிறது. இந்த அனானி என்ன தொழில் செய்து என்ன சம்பாதிக்கிறதோ!! இந்த அனானி சொல்வதை பார்த்தால் கமல் மும்பை எக்ச்பிரஸ் தோல்விக்கு பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருக்கனும். விஜயகாந்த் சின்மாவைவிட்டே ஓடியிருக்கனும். விஜய் குருவிக்கு பின்னும், விக்ரம் பீமவுக்கு பின்னும் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருக்கனும்.

இந்த அனானி போல் பல அனானிக்கள் இருக்கிறார்கள். இவர்கள் சொந்த வாழ்க்கையில் என்னென்ன ஊத்தல்கள் இருக்கிறதோ. தனக்கு சம்பந்தமேயில்லாத ரஜினியை பற்றி இவ்வளவு வஞ்சனை வைத்திருக்கும் இவர்கள்... குரூரமானவர்கள்.

தமிழன் said...

ஐயா இட்லி வடை,

உமது சில கட்டுரைகள் சைடு பாரில் வர மாட்டிங்குது.


"முஸ்லிம் இந்தியன் - பெயர் மாறுகின்றது" இந்தக் கட்டுரை ஆகஸ்ட்' ஐ கிளிக் செய்தால் தெரியல.கூகுள் ஆண்டவர் மூலம் தான் தெரிந்தது.

இக்குறையை நீக்கவும் நன்றீ

Anonymous said...

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

See the FULL ATTACK of CHARU on his WEBSITE:

http://charuonline.com/aug08/kuselan.html

Where r U RAJNI FANS? Register ur CONEMNS via EMAIL TO CHARU.

Anonymous said...

"உதைப்பதுதான் ரஜினியின் ஆன்மீகம் அவருக்குக் கற்றுக் கொடுத்த பாடமா? இந்த நாட்டில் ஏன் ஆன்மீகவாதிகளெல்லாம் வன்முறையை அனுசரிப்பவர்களாக இருக்கிறார்கள்? அதே உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் எவ்வளவு நிதானமாகப் பேசினார்? ஒரு நாஸ்திகர் வன்முறையைக் கண்டிப்பதும், ஒரு ஆன்மீகவாதி வன்முறையைத் தூண்டுவதும் எவ்வளவு பெரிய வேடிக்கையான முரண்பாடு!"

சாரு கமல் சொம்பா ?!

‘ பாபா ’ வின் படுதோல்விக்குப் பின்னர், பல வருடங்களுக்குப் பிறகு , மலையாள தழுவல் படமான ‘ சந்திரமுகி ' யில் நடித்தார் ரஜினி. பல வினியோகஸ்தர்கள் லாபம் அடைந்தனர். ஆனால் அந்தப் படத்தின் கதையை எழுதியவருக்குக் கொடுக்க வேண்டிய ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கூடக் கொடுக்கப் படவில்லை. காரணம், ரஜினி அப்போது இமயமலையில் ‘ தவம் ’ செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு , ‘ சிவாஜி ' என்ற பிரமாண்டமான படம் வினியோகஸ்தர்களுக்குப் பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் இப்போது நீதி மன்றத்தில் இருக்கிறது.

தற்போது , ‘ குசேலன் ' படத்தில் பல வினியோகஸ்தர்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்திருக்கிறார்கள். காரணம், இதன் மலையாள ஒரிஜினலான ‘கத பறயும் போள் ’ ஒரு குறைந்த பட்ஜெட் படம். தமிழிலும் இதன் தயாரிப்புச் செலவு ஆறரை கோடிதான். ஆனால் , சாய் மீரா நிறுவனம் , கிட்டத்தட்ட 65 கோடிக்கு இந்தப் படத்தை வாங்கியது. இவர்கள் சென்னை , மதுரை , சேலம் என்ற ஊர்களில் மட்டும் வினியோகம் செய்திருக்கின்றனர். செங்கல்பட்டில் இயக்குனர் பி.வாசுவின் அண்ணன் வித்யாசாகர் , எட்டே கால் கோடிக்கு வாங்கியிருக்கிறார் ; வட ஆற்காட்டில் இரண்டே கால் கோடி; கோவையில் ஐந்தரை கோடி; திருச்சியில் நாலரை கோடி; நெல்லையில் இரண்டே கால் கோடி என்று விற்பனை ஆகியிருக்கிறது படம்.

படத்தின் ஆடியோ இரண்டு கோடிக்கு போயிருக்கிறது. டிவி உரிமம் ஐந்தரை கோடி. இது தவிர , வெளிநாட்டு வினியோகம் , ஆந்திரா , கர்நாடகா , கேரளா என்று பல கோடிக்கு விற்பனை. இத்தனை கோடிகளுக்கு விற்பனை ஆகியிருக்கும் குசேலன் ரிலீசான மூன்றாவது நாளே , சென்னையைத் தவிர , அனைத்து இடங்களிலும் தியேட்டர் நிறையவில்லை.

ஆறரை கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படத்துக்கு ரஜினியின் சம்பளம் 26 கோடி. படத்தின் தயாரிப்பாளர்களான கே. பாலசந்தர், விஜயகுமார், அஸ்வினி தத் மூவருக்கும் தலா 12 கோடி. ஆனால் படத்தின் விநியோகஸ்தர்கள் இன்று பல கோடிகளை இழந்து கதி கலங்கிப் போயிருக்கின்றனர்.

கடைசி காட்சியில் ரஜினி ‘ என் நண்பனை இன்று வரை தேடுகிறேன் ; அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை ' என்று கண் கலங்கும் போது , தியேட்டரில் பல இடங்களில் சிரிப்பலை எழுகிறது. இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் , தமிழகத்தில் இருக்கும் ஒரு நண்பரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது , இன்றைய காலகட்டத்தில் கேலிக்கூத்தாக இருக்கிறது.

குசேலன் ரிலீசான அன்றே ஆந்திராவில் , ‘ உல்லாசங்கா உற்சாகங்கா ' என்ற புதுமுகங்கள் நடித்த திரைப்படம் , கருணாகரன் என்பவர் இயக்கி ரிலீசானது. அந்தப் படம் இன்று ஒரு சூப்பர் ஹிட். ஆனால் , ராஜமுந்திரி , விசாகபட்டினம் போன்ற இடங்களில் , பல தியேட்டர்களில் ‘ குசேலன் ' வெறிச்சோடிக் கிடக்கிறது."

இந்தக் கட்டுரையை முழுவதுமாக ஏன் தினமலரில் போடவில்லை? ஆட்டோ வருமா?
"இனி ரஜினி செய்ய வேண்டியது இரண்டே விஷயங்கள்தான். ஏ.ஆர். ரஹ்மான் பாணியில் பத்திரிகைகாரர்கள் என்ன கேட்டாலும் - அடுத்த தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு என்று கேட்டால் கூட – ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே ’ என்று பதில் சொல்ல வேண்டும். அடுத்து, தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதையே 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டிருக்காமல், சுப்ரமணியபுரம் சசிகுமார் போன்றவர்களின் படங்களிலும் ஒரு சாதாரண நடிகனாகப் பணியாற்ற வேண்டும். இதைச் செய்யாவிட்டால் சூப்பர் ஸ்டார் பதவியை அவரால் தக்க வைத்துக் கொள்வது கடினம்."


Well said charu. see full article in his site.

Anonymous said...

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-2/top-ten-movies/tamil-cinema-topten-movie-kuselan.html

kalaikovan said...

அன்பு இட்லிவடை அவர்களுக்கு,
ஒரு வேண்டுகோள் ....
நீங்கள் பின்னுட்டத்தில் வரும் கடிதங்களை திருத்தி வெளியிடலாமே....
எடுத்துகாட்டு :-
பின்னூட்டத்தில் ஒரு அனானி & அமுதன் இருவரின் எண்ணங்கள்....
சில இடங்கள் சகிக்க முடியவில்லை.......
கருத்துக்களை மட்டுமல்ல
இரு தமிழர்கள் சண்டையும் கூட

Anonymous said...

குசேலன் லாஸூக்கு தீர்வு

Anonymous said...

குசேலன் - விமர்சனம்
ஆகஸ்ட் முதல் நாள், அட்லாண்டாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தோம்.
அதற்குப் பிறகு இன்று தான், கணினியின் முன் அமரும் வாய்ப்பு வந்தது. அதற்குள் படம் ஒரு குப்பை என்கிற விமர்சனம் இணையம் முழுக்க எதிரொலிப்பதைக் கேட்க முடிந்தது.


படத்தின் இறுதிக்கட்டத்தில் பசுபதியின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் ரஜினி.
“அப்படியே அந்த பி.வாசு கன்னத்திலயும் ஒன்னு போடு தலைவா” என ஒரு ரசிகர் குரல் கொடுக்கிறார். தியேட்டரே கை தட்டி ஆமோதிக்கிறது.
படம் முழுக்க காமெடி நடிகர்கள் [வடிவேல், சந்தானம், லிவிங்ஸ்டன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர்] என அனைவரும் வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.
அதற்கெல்லாம் சிரிக்காத மக்களும், பசுபதி ஓடி வந்து கொடுக்கும் கடலை மிட்டாயில் சிரித்து விடுகிறார்கள்.
அதே போல திரையில் தோன்றியவுடனே சிரிப்பை ஏற்படுத்திய மற்றொரு நடிகர் பிரபு. அது என்னவோ தெரியவில்லை, அவர் பேசுவதற்கு முன்பே மக்கள் சிரித்துவிடுகிறார்கள். “என்ன கொடுமை சரவணன் இது”.
இவர்கள் எல்லோரையும் விட சந்தான பாரதியின் காமெடி பரவாயில்லை.
வடிவேல் காமெடி என்கிற பெயரில் அடிக்கும் சில கூத்துக்களைப் பார்த்தும் “U” சர்டிபிகேட் கொடுத்த சென்சார் போர்டு என்ன செய்து கொண்டு இருக்கிறது எனப் புரியவில்லை.
படம் எடுப்பதற்கு முன் நடந்திருக்கக் கூடிய ஓர் உரையாடல்.
பசுபதி : “டைரக்டர் சார், இந்தப் படத்தில என்னொட ரோல் என்ன சார்?”
பி.வாசு: “அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லைய்யா…சும்மா வந்துட்டுப் போ, போதும்”
பசுபதி : “அது எப்படி சார், சும்மா வந்துட்டுப் போனா, ஒரே விளக்கெண்ணை மூஞ்சியா இருக்குமே சார்…”
பி.வாசு: “அதுக்காகத் தானேய்யா உன்னை செலக்ட் பண்ணினதே…சும்மா தொணதொணக்காம இருய்யா…”
பசுபதி : “சார், மக்களைப் பத்தி உங்களுக்கு கவலையே இல்லையா?”
பி.வாசு: “மக்களைப் பத்தியெல்லாம் உனக்கென்னைய்யா கவலை…பிரபுவுக்குத் தாலின்னா என்னன்னே தெரியாதுன்னு ‘சின்னதம்பி’ யில ஒரு கதை விட்டேன், அதையே இந்த மக்கள் ஒரு வருஷத்துக்கு ஓட வைக்கலையா?…”