பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 06, 2008

மர்மயோகி விலகும் மர்மங்கள்

இன்று வெளிவந்திருக்கும் குங்குமத்தில் வந்த மர்மயோகி - எக்ஸ் க்ளூசிவ் கவரேஜ்

இதுவரை வெளியான அனைத்துப் படங்களின் உலக வசூலை முறியடித்து ஒடிக்கொண்டிருக்கும் "தசாவதாரம்", தமிழ் சினிமாவைத் தயாரிப்புரீதியாகவும், படைப்புத்திறன் சார்ந்தும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இதன்மூலம் உலக மொழிப் படங்களில் நடிக்காவிட்டாலும் "உலக நாயகன்" என்று தன் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கமலுக்கு அந்தப் பட்டம் பொருந்திப் போய் விடுகிறது.

"தசாவதாரம்" படத்தில் கமலின் பெரு முயற்சியால் படைப்பாளிக்கும், தயாரிப்பாளருக்கும் எப்போதுமிருக்கும் பட்ஜெட் முரண் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் பலனையும் அறுவடை செய்ய கமலுக்கே வாய்ப்புக் கிடைத்திருக்கிறது, "மர்மயோகி" படத்தின் மூலம். இதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இல்லாதவாறு மர்மயோகியின் பட்ஜெட் 150 கோடி என்று கணக்கிடப்பட்டிருப்பது தமிழை விரித்து, உலகைச் சுருக்கும் முயற்சியாகவே இருக்கிறது.

இன்னும் "மர்மயோகி" யின் தயாரிப்பும், படப்பிடிப்பும் முழுமையாக டிசைன் செய்யப்படாத நிலையில் அங்கே என்னதான் நடக்கிறது என்ற ரசிகக்கவலையில் கொஞ்சம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வியப்பானவை. அவை "மர்மயோகி"யின் மர்மத் திரையைக் கொஞ்சம் விலக்கிவைக்கவும் செய்பவை.

"மர்மயோகி" யைத் தயாரிக்க பிரமிட் சாய்மீராவுடன் ராஜ்கமலும் கைகோர்ப்பது ஒருபுறமிருக்க, படத்தின் அசாத்திய பட்ஜெட்டுக்குத் தோள்கொடுக்க ஹாலிவுட்டின் 'வால்ட்டிஸ்னி'யும் தமிழுக்குள் வரவிருக்கிறது.

கமலே இயக்கவிருப்பதால், படைப்பு சார்ந்தும் படத்தை ஹாலிவுட் படங்களின் நேர்த்திக்கு உருவாக்கும் முயற்சியிலிருக்கிறார் அவர். நவீன தொழில்நுட்பத்துடன் படம் தயாராவதால் லேட்டஸ்ட் வசதிகள் கொண்ட "ரெட்" என்ற ஹைடெமினிஷன் கேமராவை இந்தப்படத்தில் கமல் பயன்படுத்தவிருக்கிறார். "4கே ரெசொல்யூஷன்" திறன் கொண்ட அதன் ஒருநாள் வாடகை 30 ஆயிரம் ரூபாய் என்றிருக்க அந்தக் கேமராவை இந்தப்படத்துக்காக சொந்தமாக விலைகொடுத்தே வாங்கிவிட்டாராம் கமல். அதன் விலை 45 லட்சம்.

சரி....... கதை?

ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகச் சொல்லப்படும் "மர்மயோகி"யின் கதையில் அந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அரசவம்சததை வேரறுக்க நினைக்கும் இன்னொரு வம்ச அரசியாக ஹேமாமாலினி வருகிறார். அதாவது கதையின் வில்லி அவர்தான்.

அவரால் அழிக்கப்படும் வம்சத்தில் எஞ்சியிருக்கும் ஐந்து வயது வாரிசை மீண்டும் அரியணை ஏறவைக்க அந்த ராஜ்ஜியத்தின் தளபதி போராடும் கதையைத்தான் மர்மயோகியில் சொல்லப்போகிறாராம் கமல். தளபதி வேறு யாருமில்லை. கமலேதான்...! அதற்காக கருகருவென்று தாடி வளர்த்து கொண்டிருக்கிறார் அவர்.

மெல்கிப்ஸனின் 'கிளேடியேட்டர்', 'பிரேவ்ஹார்ட்' படங்களையொத்த உருவாக்கம் இருக்குமாம். கமல் தன்னுடன் நடிக்க பத்மபிரியாவைக் கேட்டிருக்கிறார். 'கமலுடன் நடிக்கக் கூலி' என்றால் கசக்குமா என்ன? ஒத்துக்கொண்டு அக்ரிமென்டில் கையெழுத்திட ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறார் பத்மபிரியா.

படப்பிடிப்பு இந்தியாவில் ராஜஸ்தானிலும், பெரும்பகுதி ஸ்விட்சர்லாந்திலும் எடுக்கப்படவிருக்கிறது. படப்பிடிப்பு இடைஞ்சல்லில்லாமல் நடைபெறுவதற்காகவும், ரம்மியமான ஒளிப்பதிவுக்காகவும் ஸ்விட்சர்லாநதைத் தேர்ந்தெடுத்திருக்கிறாராம் கமல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் உருவாகின்றன.

"மர்மயோகி" யின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் பாக்கியம்தான் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்குமோ இருக்காதோ தெரியவில்லை. ஆமாம்... படம் தொடங்கப் போவது மும்பையில். அந்த மர்மத்தையும் விரைவில் கமல் விலக்கினால் நலம்.

நன்றி: குங்குமம் ( 14. 08. 08 )

8 Comments:

மோகன்தாஸ் said...

//மெல்கிப்ஸனின் 'கிளேடியேட்டர்',//

இது மெல்கிப்ஸனுக்குத் தெரியுமா?

Anonymous said...

next Hey Ram is getting ready!!!!
Hey ram :)

amuthapriyan said...

Congrats, Padmashri KAMAL, We are very proud about you!!!!

Anonymous said...

good to read. But i guess that the story will not be this one. It looks like a simple one.

இட்லி வடையாரே ! மர்மயோகி டிஸ்கஸினில் யார் யாரெல்லாம் இருப்பதாக முனி கடிதத்தில் சொன்னது நீங்கதான். அப்படியே படத்தோட கதையையும் கேட்டுச் சொல்லுங்க.

Surely MARMAYOGI will be a blockbuster.

ROBOT VS MARMAYOGI. If both released in same day, it will be a superb one.

But I read somewhere that ROBOT will be released on 2010.

If KAMAL goes current speed then, MARMAYOGI will come onme atlease 2009 DIWALI.

Anonymous said...

ஒரு ரஜினி நியூஸ், ஒரு கமல் நியூஸ் மாற்றி மாற்றி பதிவாக போட்டு கலக்குங்க இட்லிவடை.

அதனால் உங்களுக்கு "நடுநிலை நாயகன்" என்ற பட்டத்தைக் கொடுக்கிறேன்.

Anonymous said...

ரஜினி - கமல் ரசிகர்களே !

இணையத்தில் அடித்துக் கொள்ளாதீர்கள்.

உங்க 2 தலைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்காங்க.

//ROBOT VS MARMAYOGI. If both released in same day, it will be a superb one//

இது வேறயா? கமல் - ரஜினி இருவரும் செம தெளிவு. ஒரே நாளில் 2 பேர் படத்தையும் மோத விட மாட்டார்கள். அது உறுதி.

Anonymous said...

150 crore! Summa dabaikathe mamu?
Kalai puli Thanu kitte kekanum ivarai pathi.

Anonymous said...

தசாவதாரம் படத்தின் காப்பி என ஒரு பதிவர் எழுதியுள்ளார்.

மர்மயோகியும் உலகத் தரத்தில் இருக்க
எந்த ஹாலிவுட் படத்தை உல்டா செய்கிறாரோ?