பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 20, 2008

எலி கறி உடல் நலத்துக்கு நல்லது - அமைச்சர்

தலைப்பை பார்த்துவிட்டு பயப்பட வேண்டாம், இது தமிழ்நாட்டில் இல்லை, பிகாரில்.

அரிசி உணவுக்கு பதில் எலிகறி சாப்பிடுங்கள்; பொதுமக்களுக்கு பீகார் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏழை மாநிலமான பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கடும் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.

நாளுக்கு நாள் உணவுப் பொருட்களின் விலை ஏறி வருவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கி றார்கள். மக்கள் பசியை போக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வந்த பீகார் அரசு அதிரடியாக புதிய திட்டம் ஒன்றை அறி வித்துள்ளது.

எலிகறி உணவை பீகார் முழுவதும் பிரபலப்படுத்து வதே அந்த திட்டமாகும். அரிசி உணவு சாப்பிடுவதை தவிருங்கள். அதற்கு பதில் எலி கறி உணவை சாப்பிடுங்கள் என்று பொது மக்களுக்கு பீகார் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. உணவு விடுதிகள் மற்றும் பெரிய ஓட்டல்களில் எலிகறி உணவை அதிகாரப்பூர்வ உணவு வகைகளில் ஒன்றாக அறிவிக்கவும் பீகார் அரசு முடிவு செய்துள்ளது.

பீகார் பழங்குடி இன மக்கள் நலத்துறை மந்திரி ஜிதன் ராம் கூறுகையில், "உணவு பொருட்கள் கிடைப் பது மிகவும் கஷ்டமாக உள் ளது. எனவே நான் எலி கறி சாப்பிட தொடங்கி விட் டேன். ஏழை மக்கள் எலி கறிக்கு முழுமையாக மாற வேண்டும். எலி கறி உடல் நலத்துக்கு மிக, மிக நல்லது'' என்றார்.

பீகார் நல்வாழ்வுத் துறை அதிகாரி விஜய் பிரகாஷ் கூறுகையில், "எலி கறி சாப்பிடுவதால் 2 நன்மை கிடைக்கும். ஒன்று உயிர் களை அழிக்கும் எலிகள் குறையும், மற்றொன்று நமது உணவு பொருட்கள் இருப்பை அதிகரித்துக் கொள்ள முடியும்'' என்றார். இந்தியாவில் உற்பத்தியாகும் விளை பொருட்களில் பாதியை எலிகள் தின்று நாசமாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிகு: ஊழல் பெரிச்சாலி லாலு கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.

7 Comments:

Kalaikovan said...

லல்லு போன்ற ஊழல் பெருச்சாலிகளால் ....
பிஹார் மக்கள்
இன்று
எலி திங்கும் நிலைமைக்கு ஆளாகி விட்டார்கள்.
மற்ற மாநிலங்களுக்கு ....
இது என்ன எச்சரிக்கை மணியா ?

Kalaikovan said...

இ.வ ....
ஒலிம்பிக்கில்
இன்னொரு மெடல் ...
வாழ்த்துக்கள் சுஷில் .......

Arun said...

என்ன சொன்னாலும் நம்மளால ஆதங்கப்பட மட்டும்தான் முடியும். வேரென்ன செய்ய?!

தமிழ்நெஞ்சம் said...


இதைச் சொல்லும் அவர் (அமைச்சர்) எலிக்கறி சாப்பிடுவாரா?

கவுண்டமணியைக் கூட்டி வந்து அவரது வாயிலே "அரசியல்ல இதெல்லாம் சகசமப்பா" அப்படின்னு சொல்ல வைக்கணும்.

Mani-bahrain said...

இப்படி எல்லாம் பேசுகிறவனை விட்டு வைப்பதே தவறு. இன்று பிஹாரில் நாளை நம் தமிழ் நாட்டிலும் நம் அரசியல் பன்னிகள் இப்படி எல்லாம் பேச மாட்டர்கள் என்று என்ன நிச்சயம்? இன்று விஜய் பிரகாஷ் பிஹாரில் நாளை நம் மூத்த தலைவர் கருனாநிநிதியே சொன்னாலும் ஆச்சயற்படுவதற்கு இல்லை.

ARUVAI BASKAR said...

எங்கள் முதல்வர் வேறு தமிழகத்தை பிஹார் போல் ஆக்குவதகக்கூறியுள்ளார் .
அய்யயய்யோ இனிமேல் எங்களுக்கும் எலிக்கறி தானா ?

Anonymous said...

கமல் ரசிகர்களுக்கு கமல் வீடியோ, ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி கார்ட்டூன் விடியோ ஆனால் ஹிந்து ஜிகாதிகளுக்கு ஹிந்து ஜிகாதி வெப்சைட்டுக்கு லிங்க் மட்டும்தானா? இது சரியான ஓரவஞ்சனை!