‘ஜீ பூம்பா’ என்று சொல்லி ஊழலை ஒழிக்க முடியாது' - விஜயகாந்த் பேட்டி
நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்குவதுபற்றி கேட்டபோது, Ôதமிழ்நாட்டில் நடிகர்கள் கட்சி தொடங்கும் வியாதி, ஆந்திராவிலும் பரவி விட்டதுÕ என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
நடிகர்கள் கட்சி தொடங்குவது வியாதி என்றால் அவருக்கென்ன பெருவியாதியா?
ஒகேனக்கல் பிரச்னையில் ரஜினி வருத்தம் தெரிவித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?
அவர் யாரைப்பற்றியும் எதுவும் சொல்வதில்லை. அதனால் நானும் அவரைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவரை உண்ணாவிரதத்துக்கு அழைத்தவர்களிடமே கருத்து கேளுங்கள். அவரை உண்ணாவிரதத்தில் உட்காரச் சொன்னவர்கள் இன்று அமைதியாக மறைந்திருக்கிறார்கள். அதிலும் அரசியல் இருக்கிறது.
அரசு கேபிள் டி.வி. தொடங்கியுள்ளது பற்றி?
தி.மு.க. உறுப்பினராக இருந்தால் உடனடியாக ஆபரேட்டர் உரிமை கிடைத்துவிடும்.
கூட்டணிக்கு அ.தி.மு.க. கதவு திறந்திருக்கிறது என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். அதி.மு.கவுடன் கூட்டணி வைப்பீர்களா?
அந்த கதவு திறந்திருக்கட்டும். அதுபற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. நிழலுக்கு நான் மாலை போட மாட்டேன். தேர்தல் அறிவிக்கட்டும். அதன்பிறகு கூட்டணியா? தனித்து போட்டியா என்று கூறுகிறேன். தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்த வரலாறு தமிழகத்தில் உண்டு. அப்படி ஆட்சியில் உட்கார்ந்தால்தான் ஊழலை ஒழிக்கலாம். கூட்டணி ஆட்சி அமைத்தால் ஊழல் ஒழியாது.
உங்கள் தலைமையில் மூன்றாவது அணி உருவாகுமா?
அது எனக்கு தெரியாது.
டி.வி. தொடங்கப் போகிறீர்களா?
சேட்டிலைட் டி.வி. சேனல் தொடங்க அனுமதி கேட்டிருக்கிறேன். எளிதில் அனுமதி கிடைக்காது என்பது தெரியும். எப்போது அனுமதி கிடைக்கிறதோ கிடைக்கட்டும்.
அரசியலுக்கு வந்தபின் நடிக்கப்போவதில்லை எனறு சிரஞ்சீவி கூறியிருக்கிறார். நீங்கள் நடித்துக்கொண்டிருக்கிறீர்களே?
அது அவர் விருப்பம். அரசியல் வேலை அதிகமாக இருப்பதால் நடிப்பதை குறைத்திருக்கிறேன்.
விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறதே?
விலை உயர்வு பற்றி பலமுறை கூறிவிட்டேன். கலைஞர் பதில் சொல்லவில்லை. ஊரக வளர்ச்சி திட்டத்துக்கு ஆயிரம் கோடி செலவிட்டதாக சொல்கிறார். மத்திய அரசிலிருந்து எவ்வளவு பணம் வந்தது; எவ்வளவுபணத்தை செலவிடாமல் திருப்பி அனுப்பினார் என்பதை அவர் கூறட்டும் பார்க்கலாம்.
நிலத்தை அபகரிக்கிறார்கள் என்று மற்றவர்களை திமுகவினர் கூறுகின்றனர். அந்த கட்சி மந்திரியே நிலம் அபகரித்தது பற்றி செய்திவெளியாகி இருக்கிறது. இவர்கள் மற்றவர்களை பற்றி பேசுகிறார்கள். யார் யாரோ அமைச்சராக இருக்கிறார்கள்.
நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதில் என்ன தவறு? நான் ஆட்சிக்கு வந்தாலும் ‘ஜி பூம் பா’ என்பதற்குள் ஊழலை ஒழித்துவிட முடியாது. அதற்கும் மூன்று, நான்கு ஆண்டுகள் ஆகும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, August 19, 2008
‘ஜீ பூம்பா’ என்று சொல்லி ஊழலை ஒழிக்க முடியாது - விஜயகாந்த்
Posted by IdlyVadai at 8/19/2008 11:35:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










7 Comments:
//அவரை உண்ணாவிரதத்தில் உட்காரச் சொன்னவர்கள் இன்று அமைதியாக மறைந்திருக்கிறார்கள். அதிலும் அரசியல் இருக்கிறது.//
What is the matter? & who r those people?
do u Know IV?
கேப்டன் அம்மாவைப் பற்றி பேசிய கருத்து மிக மிக அசிங்கமாக உள்ளது. நீங்க ஹைலைட் செய்து வேறு காட்ட வேண்டுமா?
தனக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து "மமதையில்" பேசுகிறார். கலைஞர் சொன்னதுதான் நினைவு வருகிறது: மீட்டிங்ல கூட்டம் கூட்டமாக வந்து பேச்சை கேட்கிறாங்க. வோட்டு மட்டும் போடமாட்றாங்க.
சோ அவர்களும் துக்ளகில் எழுதி இருந்தார். இவர் பிரச்சாரம் செய்த வேட்பாளர் கூட்டங்களில் இவர் பேசியது போது கூட்டம் அள்ளியது. ஆனால் அவர் தேர்தலில் தோற்றுப் போய் விட்டார். யார் என்று நினைவில்லை. மீட்டிங் வரும் கூட்டத்தை நம்பக் கூடாது என்று எழுதிய நினைவு. யார் அது இட்லி வடை சொல்லுங்க.
வரும் சட்டமன்றத்தேர்தலில் வெறும் "சில" இடங்களை மட்டுமே கேப்டன் ஜெயிக்க இயலும். இவர் எந்த காலத்தில் இருக்கிறார். தனிக் கட்சி ஆட்சி எல்லாம் எம்.ஜி.ஆர் காலத்தோடு போய் விட்டது. இனி எல்லாம் மத்தியிலும்,மாநிலத்திலும் கூட்டணி ஆட்சிதான்.
கேப்டன் ஜெயை பற்றி சொல்லியிருக்கும் கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது.
வெட்கங்கெட்ட அரசியலில் இருவரும் கூட்டணி சேர்ந்தாலும் ஆச்சர்யமில்லை.
வாய் சவடாலில் இவரும் சளைத்தவரல்ல...
விஜயகாந்த் வேற யாருமில்ல,
கலைஞரோட க்ளோனிங் தான்....
பதில பாத்தாலே தெரியலையா.
புதுசா எதாவது பண்ணுவாருன்னு பாத்தா....
ஒவ்வொரு பேட்டியிலும்.....
நான் முதலமைச்சர் ஆவேன்
முதலமைச்சர் ஆவேன்னு அடம் பிடிக்கிறாரே...
ஏம்பா பொது ஜனங்களே .....
இவரை ஒரு தடவை முதலமைச்சர் ஆக்குங்கப்பா.
இவரிடம் எல்லா தகுதியும் இருக்கு...
சினிமா பின்னணி...
குடும்ப அரசியல் அனுபவம்
இது போதாதா..
வாங்க கேப்டன் வாங்க.. சீக்கிரம் முதல்வர் ஆகிடுங்க. அப்பவாச்சு நீங்க சினிமா-ல நடிக்காம மக்கள் நிம்மதியா இருப்பாங்க.
அப்புறம் நாட்டின் வறுமை ஒழிய உங்க பசங்க டயட் ல இருந்தாலே போதும்
can you post latest Ju.Vi survey on JJ.
Also the recent AV thalaiyangam (big book) on J.
thanks
யாருவேண்டுமனாலும் அரசியலுக்கு வரலாம் தப்பில்லை, ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆவேன், மந்திரி ஆவேன்னு சொல்லுங்க அதவிட்டுட்டு சின்னபுல்லங்க பலுன பாத்து ஆசைப்படுறமாதிரி முதலமைச்சர் ஆவேன் சொல்றது ரொம்ப நகைசுவையா இருக்கு!!!...
இதற்குமேல் உள்ள அனானியின் கருத்து //அப்புறம் நாட்டின் வறுமை ஒழிய உங்க பசங்க டயட் ல இருந்தாலே போதும்// மிகையும் அருமை.....
என்னவோ பிஜெபிகாரனுவுளும் காங்கரஸ் காரனுங்களும் இந்த ஆளு பின்னாடி அலையிறதா பீலா விடுறார். ஆனா டிவி லைசென்ஸ் கிடைக்காதுன்னு புலம்பறார்.ஒண்ணுமே புரிய மாட்டேன்குதுங்கோ!
Post a Comment