பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 05, 2008

ரஜினியை கண்டிப்பவர்கள் ஏன் கருணாநியை கண்டிக்க மறுக்கிறார்கள் - ராமகோபாலன் கேள்வி

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி மௌனம் சாதிப்பது ஏன் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பிரச்சனையில் காங்கிரசார் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவிக்காமல் ரஜினிகாந்தை விமர்சிப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராம கோபாலன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் திரையிடப்பட்ட குசேலன் படத்துக்கு அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

ரஜினிகாந்த் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை கண்டித்து ரஜினி படம் ஓடும் தியேட்டர்களை மற்றும் அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாக இளைஞர் காங். மற்றும் சில அமைப்புகள் முற்றுகையிடப் போவதாக அறிவித்து அறிவித்திருக்கிறார்கள். காவல் துறை தனது கடமையைச் செய்யும்.

ஒகேனக்கல் பிரச்சனைக்காக முதலமைச்சர் கருணாநிதி கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு இப்பிரச்சனைகள் பற்றி பேசலாம் என்று அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இது குறித்து கருணாநிதி வாய் திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?

தமிழர்களின் நலனுக்காக வீட்டை முற்றுகையிடுவதாக இருந்தால் காங்கிரசார் கருணாநிதி வீட்டைத் தானே முற்றுகையிட வேண்டும். அதை விட்டு விட்டு ஆவடிக்கு வரும் முதலமைச்சருக்கு காவடி தூக்கிகளான காங்கிரசார் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப் போவதாக அறிவித்திருப்பது வெட்கக் கேடு மட்டுமல்ல; ஏமாற்று வித்தையும் ஆகும்.

திருமாவளவன் பிறந்த நாள் ஆகஸ்ட் 17ஐ தமிழர் எழுச்சி நாளாக நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விளம்பரத்தில் வெளிநாட்டவர்களான சேகுவேரா, தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் படங்களை எல்லாம் போட்டு தங்களுடைய எல்லை கடந்த தேசபக்தியை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள்.

இதை எல்லாம் கண்டிக்க வக்கற்ற காங்கிரஸ் ரஜினிகாந்தை சாடுவது வெட்கக் கேடு, ராஜீவ் காந்தி கொலை சரிதான் என்று இவர்கள் ஒப்புக் கொள்வது போல இது அமைத்திருக்கிறது.

வன்னி அரசு என்பவர் இலங்கை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவியதாகப் பிடிபட்டு, அரசு ஆதரவுடன் கைது செய்யப்பட்ட உடனே விசாரணை ஏதுமின்றி ஜாமீனில் வெளி வந்த மாவீவரன்.

தமிழக அரசு இந்த விளம்பரத்தையாவது தடை செய்ய வேண்டும் என்று தேசபக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்கபாலு, இளங்கோவன், வாசன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சிக்காரர்கள் ஜனநாயக விரோதமாகச் செயல்படுவதை கண்டிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?
( மாலைசுடர் )

10 Comments:

முகமது பாருக் said...

அய்யா ராமகோபாலன் அவர்களே வணக்கம்..நீங்கள் குறிபிட்ட சேகுவேரா மற்றும் பிரபாகரன் பற்றி பேச உங்களுக்கு தகுதியல்லை..ஏனெனில் அவர்கள் வெளிநாட்டில் பிறந்தாலும் மானுடத்துக்கே சேவை செய்தார்கள்,செய்வார்கள்...உங்களை போல நமது பிறந்த மண்ணிலேயே பிறந்தவனை இவன் பார்ப்பான் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்த்தப்படவன், இவன் துலுக்கன் என்று பிரித்து பார்க்காத போராளிகள்...உங்களை மாதிரி சாமியார் வேடமிட்டு நடிக்கத்தெரியாதவர்கள்....
ரஜினி ஒரு கோமாளிக்கூத்தாடி சொந்த அறிவு இல்லாதவர்..ஏனென்றல் தன்னை கொண்டாடும் ரசிகனை விட்டுட்டு இமயமலைக்கு சாமியத்தேடிப்போகும் ஒரு முட்டாள்... அவருக்கு ஒத்தாசைக்கு நீங்கள் நல்ல நகைச்சுவை.....
காங்கிரஸ் கட்சியும் சரி உங்கள் கட்சியும் சரி ஒரு வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு திருட்டு மாடுகள் (மன்னிக்கவும் மாட்டுக்கு தெரிந்தால் கோவித்துக்கொள்ளும்)...ஆக நாட்டுபற்றைப்பற்றி பேச உங்களுக்குத்தகுதி இல்லை....நீங்கள் பொறுமையா பூஜை செய்தாலே போதும்....மற்றதை உங்கள் பேரில் உள்ளவரிடம் விட்டு விடுங்கள் அய்யா....வாழ்க பெரியார் புகழ் வளர்க திராவிட நாடு

அவனும் அவளும் said...

பாருக் அண்ணன்,

நீங்க கோவமா சொன்னாலும், ராமாகோபால பத்தி சொன்னது நிறைய விதத்துல உண்மையும் கூட.

*******இவன் துலுக்கன் என்று பிரித்து பார்க்காத போராளிகள்******

உண்மையாவா ? விடுதலைபுலிகள பத்தியா பேசறீங்க ?

Anonymous said...

///ஏனெனில் அவர்கள் வெளிநாட்டில் பிறந்தாலும் மானுடத்துக்கே சேவை செய்தார்கள்,செய்வார்கள்...///

பிரபாகரனின் சேவை எப்படிப் பட்ட சேவை எனத் தெரியாதா,என்ன?
பின் லேடனுக்கு அடுத்து இவர்தானே!

பூமி பாரத்தை குறைக்க என்னமா பாடுபடுறார்.

இலங்கைல சேவை செய்தது பத்தாது என்று இங்க வந்து ராஜிவோட சேர்த்து 17 பேரை மேலோகம் அனுப்பி வைத்தாரே!

//அய்யா....வாழ்க பெரியார் புகழ் வளர்க திராவிட நாடு//

ஆமாய்யா, உங்க கடை போணியாகுதான்னு மட்டும் பாருங்க்.

ராஜிவை மேலோகம் அனுப்பும் சேவையின் போது 15 தமிழன் அதுவும் தமிழ்நாட்டுத தமிழன் செத்தானே, அவன் உயிருக்கு யாரு பதில் சொல்லறது?

//இவன் துலுக்கன் என்று பிரித்து பார்க்காத போராளிகள்...//

ஏன்யா புலிகள் எத்தனை முஸ்லிமகளை வெட்டியும் சுட்டும் கொன்னு சேவை சேய்திருக்காங்க?

புலிகள் இயக்கத்தில் இருந்த 250க்கும் மேற்பட்ட முஸ்லிம் புலி இயக்க உறுப்பினர்களை படுகொலை செய்து செய்த சேவை.

காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம் (37 குழந்தைகள்,27 பெண்கள் உட்பட) மக்களை அல்லாவிடமே அனுப்பி வைத்து செய்து சேவை.

இன்னமும் முஸ்லிகளுக்கு பிரபாகரன் செய்த சேவைகள் எத்தனை எத்தனை!!! காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தான படுகொலை எனக் கணக்கில் அடங்குமா?

இதெல்லாம் இருந்தும் உம்ம பேரு முகமது பாரூக், யாருகிட்ட டகால்டி வேலை காட்டுற?

geeyar said...

அனானிக்காக

//இலங்கைல சேவை செய்தது பத்தாது என்று இங்க வந்து ராஜிவோட சேர்த்து 17 பேரை மேலோகம் அனுப்பி வைத்தாரே//

உங்க ராஜீவ் தன் வேலைய மட்டும் பார்த்துக்கொண்டிருந்தா எதுக்குய்யா அவங்க இங்க வந்திருக்கப் போராங்க. உங்களால அவங்க சண்டைய நிறுத்த முடியாது. அப்புறம் எதுக்கய்யா இங்கிருந்து ராணுவத்தை அனுப்புனிங்க. குறிப்பிட்ட ஒவ்வொரு வீரனும் செய்த காட்டுமிராண்டித் தனத்திற்கும் ராஜீவே பொருப்பு. தன்னை மிதிப்பவனை எறும்பு கூட கடிக்கும் பொழுது நளினி மட்டும் என்ன செய்வாள். முற்பகல் செயின் பிற்பகல் விளையும்னு சொல்லுவாங்க மத்தியானமே விளைஞ்சிடுச்சி.


ஏதோ சிலோன் மாநாட்டுக்கு போனவுடனே ராஜ்பக்சே வ கூப்பிட்டு விசாரிக்கிறேன்னு சொல்லிட்டுப் போனாரே மன்மோகன்சிங். உங்கள் யாருக்காவது ஞாபகம் இருக்கா? இருந்தா சொல்லுங்க மாநாடு முடிஞ்சி போச்சின்னு. தமிழ்நாட்ல எவன் செத்தா எனக்கென்னனு நினைக்கிறார்னு நான் நினைக்கேன். தமிழ்நாடும் இன்றுவரை இந்தியாவில்தான் இருக்குன்னு அந்த ஆளிடம் யாராச்சும் சொல்லுங்கப்பா.

Anonymous said...

\\உங்களை போல நமது பிறந்த மண்ணிலேயே பிறந்தவனை இவன் பார்ப்பான் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்த்தப்படவன், இவன் துலுக்கன் என்று பிரித்து பார்க்காத போராளிகள்...\\

Mr.Mohammad Farooq how many days you people are going to give a projection only Hinduism has discrimination. What about Shunni and Shia discrimination and the fight between them in Iraq. I came to know in Islam also equal number of partition is there when I happened to visit Pakistan. Only difference is when there is a statement defending Hinduism the first person to oppose will be a Hindu which is not there in other religion.

Please clarify why in the world wherever the problem is the other side is always muslim?????

Even in the pro-minority government (which is termed as secular government) ruling in State and Central all the terrorist arrested are followers of Islam?????

Why when there is a cricket match between India and Pakistan almost all (95% or above) Muslims) support Pakistan?????

If a good ruler comes to power may be we will get answer for all this questions.

Jai Hind.

Anonymous said...

//உங்க ராஜீவ் தன் வேலைய மட்டும் பார்த்துக்கொண்டிருந்தா எதுக்குய்யா அவங்க இங்க வந்திருக்கப் போராங்க. உங்களால அவங்க சண்டைய நிறுத்த முடியாது. அப்புறம் எதுக்கய்யா இங்கிருந்து ராணுவத்தை அனுப்புனிங்க. //

ராணுவத்தை அனுப்பு அனுப்பு நீங்கதாய்யா கூவுனீங்க.

அங்கேயும் முதல்ல தாக்குதல் நடத்தியது யார்? புலிகள் தானே.



//குறிப்பிட்ட ஒவ்வொரு வீரனும் செய்த காட்டுமிராண்டித் தனத்திற்கும் ராஜீவே பொருப்பு. //


ஆமாம் புலிக ரொமப நல்லவங்க, புலிகளை காட்டுமிராண்டிதனத்தில் எவனும் மிஞ்ச முடியாது.

http://www.spur.asn.au/kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.htm

க்கு போய் பார்க்கவும். புலிகள் எப்படி முஸ்லிம்களை கொடூரமாக கொன்று போட்டிருக்கிறார்கள் எனத் தெரியும்.


//தன்னை மிதிப்பவனை எறும்பு கூட கடிக்கும் பொழுது நளினி மட்டும் என்ன செய்வாள். முற்பகல் செயின் பிற்பகல் விளையும்னு சொல்லுவாங்க மத்தியானமே விளைஞ்சிடுச்சி.


ஏதோ சிலோன் மாநாட்டுக்கு போனவுடனே ராஜ்பக்சே வ கூப்பிட்டு விசாரிக்கிறேன்னு சொல்லிட்டுப் போனாரே மன்மோகன்சிங். உங்கள் யாருக்காவது ஞாபகம் இருக்கா? இருந்தா சொல்லுங்க மாநாடு முடிஞ்சி போச்சின்னு. தமிழ்நாட்ல எவன் செத்தா எனக்கென்னனு நினைக்கிறார்னு நான் நினைக்கேன். தமிழ்நாடும் இன்றுவரை இந்தியாவில்தான் இருக்குன்னு அந்த ஆளிடம் யாராச்சும் சொல்லுங்கப்பா.//


உமக்கு நீயூஸ் படிக்கும் வழக்கமே இல்லை போல.

நளீனி ஒரு இந்தியப் பெண். அவளை எந்த எறுப்பு கடிச்சது?

இலங்கையுடன் மன்மோகன் சிங் நடத்திய பேச்சில் மீனவர் குறித்து பேசினார்.இலங்கை அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.இம்மாதிரி சம்பவங்கள் மீண்டும் நடை பெறாமல் இருப்பதற்க்கான வழிமுறைகளைக் கண்டறியவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Ravi said...

Whatever I wanted to say "Avanum ALavum" and Anony have expressed the same. Anony, thanks for the wonderful details - chumma LTTE-ya support panravanga ippovavadhu thirundhattum.

Certain atrocities committed by IPKF are definitely condemnable. But adhai sollai LTTE-kku endha arugadhaiyum kedaiyadhu. LTTE did not respect the peace-accord and resorted to arms smuggling and fighting IPKF. What else can IPKF do to counter a ruthless and un-trustworthy group like LTTE? They even resorted to statements like "Naangalum, Singalaragalum sagodhargal, IPKF dhaan anniyargal" - something in these lines. Ippadi oru kaedu ketta gumbalukku support vera...

Ravi said...

Anony, the link fowarded by you was very informative and also gruesome! As some blogger rightly remarked on the web: "If someone were to list the atrocities of the LTTE, then the Srilankan army would appear saints!". How true!

Anonymous said...

If someone were to list the atrocities of the LTTE, then the Srilankan army would appear saints!". How true!//

Yes, it is, Ravi!

முகமது பாருக் said...

இங்க வந்து நிறைய நண்பர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...எந்த ஒரு தலைப்பை நாம விவாதிக்கிறோமோ அதிலிருந்து விலகி கருத்து சொல்வது நமது பரம்பரை குணம்...இங்கே நான் வைத்த கருத்து என்னுடைய பார்வையில் அய்யா ராமகோபாலன் கூறிய பெயர்களை வைத்தே...இங்கே சே வையும் பிரபாகரனையும் நிறைய நண்பர்கள் ஒப்பிட்டு பார்ப்பதாலும் என்னுடைய பெயரை குறித்தும் சிலர் கருத்து சொல்லிருக்கிறார்கள்...முதலில் என்னுடைய பெயரை குறித்து ஒரு நண்பர் வினா ஏழுப்பிள்ளார்...நான் மருது சகதோரர்கள் வாழ்ந்து மறைந்த மண்ணாகிய காரைக்குடியில் (சிலர் இதுக்கும் கேள்வி எழுப்புவார்கள் சிவகங்கை சீமை என்று) பிறந்தவன், ஆதலால் பெயரை மாற்றி பதிப்பு இட எனக்கு அவசியம் இல்லை...

இப்போ அடுத்து நான் பிரபாகரன் அவர்கள் பெயரை குறிபிட்டதால் விடுதலை புலிகளுக்கு ஆதரவு அளிப்பதாக நினைகிறீர்கள்...இந்த அமைப்பு உருவாக நமது நாடு முக்கிய காரணம்..அது அன்று ஈழமக்களுக்கும் அவசியமானது (இன்றும்) ...நமது மண்ணிலேயே முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றது அன்று அவர்களுக்கு என்ன காரணமாக வேண்டுமானாலும் சொல்லலாம்..அது இந்தியாயோட வளர்ச்சியை முப்பது வருடத்திற்கு பின்னுக்குத்தள்ளியது...நம்பினார் கைவிடபடார் கைவிட்ட கதைகளில் ராஜிவின் மரணமும்....இதனாலேயே இந்த இயக்கத்தின் மதிப்பு மக்கள் மத்தியில் குறைந்தது...சரி அங்கே முஸ்லீம் எல்லாரையும் கொல்றாங்க என்று ஒரு நண்பர் சொன்னார், மனித படுகொலைகள் நடப்பது இன்று நேற்று அல்ல மனிதனுக்கு நாம் மனிதன் என்ற தெரிந்த பொழுதே, இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் அந்த கொலைகள் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் ஐரோப்பியர்களின் ஆதிக்க உணர்வாலும் நடந்ததே இன்றும் இனியும் நடக்கும்.....ஈழத்தில் தமிழனோ சிங்களனோ இல்லை முஸ்லிமோ கொல்லப்படுவதும் மிகுந்த வலியை ஏற்ப்படுத்துகிறது...அதற்கு சொல்லப்படும் காரணம் எதுவாக இருந்தாலும் ஈழம் ஒரு வலியே...மற்றொன்று தண்டனைக்காலம் முடிந்தும் இன்று வெளியில்வரமுடியாமல் போராடிக்கொண்டு இருக்கும் என் சகோதரி நளினியின் குரல் இந்த ஜனநாயகத்தில் (பணநாயகத்தில்) கேட்குமோ..தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஒரு திருடனும், கவிழ்க்க ஒரு திருடனும் விளையாடும் இந்த கேவல ஆட்டத்தில் நளினின் குரல் தமிழக முதலமைச்சரை கூட எட்டவில்லை என்பதுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது(அவருக்கு படம் பார்ப்பதற்கும் தன் மகனுக்கும் மகளுக்கும் பதிவி வாங்குவதற்குமே நேரம் சரியா உள்ளது)...நானும் எல்லாம் இருந்தும் ஊனமாக வாழ்ந்து கொண்டிருப்பது இன்னும் கேவலம்.....

தமிழ் என்ற மொழி இன்று உலகத்தில் பெருமளவு கணினிகளில் பயன்படுவதற்கு உலகம் முழுவதும் தன் மண்ணை பிரிந்து வாழும் என் ரத்தமான ஈழ தமிழர்களே அந்த வகையில் அவர்கள் பாதங்களுக்கு என் நன்றி....ஆனால் தமிழ் நாட்டில் தமிழை வளர்குறேனுசொல்லிக்கிட்டு தன் குடும்பத்தை வளக்குற தலைவர்கள் இருக்கும் வரை ஈழத்திற்கு விடிவேஇல்லை..நான் ராமேஸ்வரம் சென்ற போது நான் பார்த்த காட்சிகள் இன்றும் என் கண்களில்...அங்கே என்னை ஒரு துலுகக்கனகவோ தமிழனாகவோ இல்லை இந்தியனாகவோ பார்க்க என்னால் முடியவில்லை மனிதனாகவே நான் வாழ்ந்து மடிய விரும்புவேன்...
வாழ்க பெரியார் புகழ் என்று சொன்னதற்கு ஒரு நண்பர் கேட்ட கேள்விக்கு பதில் அன்று இந்தியா முழுவதும் மதக்கலவரம் வந்த பொழுதும் இன்று சேது சமுத்திரத்துக்கு வந்த கலவரங்கள் வட இந்தியாவில் மட்டுமே ஏனெனில் அங்கு பெரியார் போல் யாரும் தோன்றவில்லை அங்கே மக்கள் பக்குவபடவில்லை அதனாலே அங்கே எதற்கெடுத்தாலும் கலவரம்...அவர் மட்டும் இன்னும் பத்தாண்டு வாழ்ந்திருந்தால் கன்னியாகுமரியில் தொடங்கிய ஜாதிக்கலவரம் நடக்காமலே இருந்துருக்கும்....ஆனால் நமது துரதிஷ்டம் அவர் மறைந்தார் அவருக்கு பின்னால் அவர் வழிய பின்பற்ற வேண்டிய நாம் பல நிர்பந்தகளால் முடியாமல் நாடு நாடக அடிமைகளாக (படித்த மற்றும் படிக்காத) அலைகிறோம்....

மாற்றத்திற்காக காத்திருக்கும் அடிமை

முகமது பாருக்