பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 03, 2008

முரசொலி x தமிழ்ஓசை

கல்கியில் வரும் கட்டுரை மட்டும் தான் கண்களுக்கு தெரியுமா ? எங்க முரசொலி சவுண்ட் எல்லாம் காதில் விழாதா என்பவர்களுக்காக இந்த கட்டுரை... மதுவிலக்கு கொள்கை(?) பற்றி பாமகவிற்கு திமுகவின் நெத்தியடி பதில்... 'ஏறுமுகமும் - இறங்குமுகமும்!' என்ற காட்டுரை

"படிப்படியாக முழுமையான மதுவிலக்கிற்கு இட்டுச் செல்லும் வகையில், மாநிலத்தில் வாங்கிப் பயன்படுத்தும் மதுவின் அளவைக் குறைப்பதற்காகவாவது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதை இந்திய அரசியல் சட்டத்தின் 47ஆவது விதி வகுத்துத் தந்துள்ள இந்தக் குறிக்கோளை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து

அரசுகள் ஆழ்ந்து சிந்திப்பதற்கான நேரம் வந்து விட்டது" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் 1.5.2006ல் வழங்கிய தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்"

- என்று பா.ம.க.வினர் நாளேடான ‘தமிழ்ஓசை’ எடுத்துக் காட்டியிருக்கிறது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் அரசுகள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் குஜராத் மாநிலம் தவிர ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் மது வணிகம் நடைபெற்று வருகிறது.

1.5.2006ல் வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால், தீர்ப்பின் அடிப்படையில் எந்தெந்த மாநிலங்கள் மதுவின் அளவைக் குறைப்பதற்காக இதுவரை என்னென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட ‘தமிழ்ஓசை’யால் முடியவில்லை! அரசுகள் என்று நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டிருந்த போதிலும் 2006 மே மாதம் 13ஆம் தேதி பொறுப்புக்கு வந்த தி.மு.கழக அரசுக்கு மட்டுமே உச்சநீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி,

வருவாய் கிடைக்கிறது என்பதற்காக கட்டுப்பாடற்ற மது வணிகத்திற்கு ஊக்கமளிப்பதா? என்று கேள்வி கேட்கிறது தமிழ்ஓசை!

மற்ற மாநிலங்களில் பா.ம.க. இல்லை என்று கூறி தப்பிக்க முடியாது தமிழ்ஓசை. பக்கத்திலுள்ள புதுவை மாநிலத்தில் பா.ம.க. இருக்கிறது.

2001 தேர்தலிலேயே புதுவையில் பா.ம.க. ஆட்சி அமைக்க ஜெயலலிதாவிடம் ஒப்பந்தம் போட்ட கட்சி பா.ம.க.

மதுக்கடைகளை மூடவேண்டும் என்று வலியுறுத்தி டாக்டர் அய்யா அவர்கள் ஐந்து நாட்களோ, ஆறு நாட்களோ ஊர்தி மூலம் பரப்புரைப் பயணம் நடத்தினார். அந்த மது எதிர்ப்புப் பயணப் பிரச்சாரத்தில் புதுவை மாநிலம் இடம் பெறாமல் சர்வ ஜாக்கிரதையாக பயணப் பாதையை நிர்ணயித்துக் கொண்ட கட்சிதான் பா.ம.க.

குறைந்தபட்சம் தமிழகம் தவிர புதுவையிலும் மதுக்கடைகளை மூடும் பிரச்சார இயக்கத்தைக் கூட பா.ம.க. நடத்திட முன்வரவில்லையே; ஏன்?

சரி ; வாதத்திற்காக அகில இந்திய அளவிலேயே பா.ம.க. மது ஒழிப்புப் போராட்டத்தை நடத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் மூலம் அகில இந்தியாவிலும் மது ஒழிந்து போய்விடுமா?

ஒரு உதாரணம் பார்ப்போம் :

டாக்டர் அய்யா

- மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிறார்

- அதன் ஆரம்பமாக மதுக்கடைகளின் விற்பனை நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்.

- மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைதான் கடை திறக்க வேண்டும் என்கிறார்.

- சனி, ஞாயிறுகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்கிறார்.

மத்திய அமைச்சர் அன்புமணி புகைபிடிக்கும் கொடிய பழக்கத்தை எதிர்த்து அகில இந்திய அளவில் பெருமுயற்சி ஒன்றில் ஈடுபட்டார். அதில்,

- பீடி குடிக்காதே என்று சொல்லவில்லை. அவர்.

- பீடி உற்பத்தி சாலைகளை மூடவேண்டும் என்று கூறவில்லை அவர்.

- பீடி விற்கும் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று கோரவில்லை அவர்.

- பீடி குடிப்பவர்களுக்கு தண்டனை என்று அறிவிக்கவில்லை அவர்.

பீடி பிடிக்கும் - புகை பிடிக்கும் கொடிய பழக்கத்தால் ஏற்படும் தீமைகளைக் குறிக்கும் வகையில் பீடிக் கட்டுகளின் மேலுறையில் மண்டை ஓட்டுச் சின்னத்தைப் பொறிக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது முயற்சி!

பீடியை அடியோடு ஒழித்துக் கட்டுவதல்ல; அதன் மேலுறையில் மண்டை ஓட்டுச் சின்னம் பொறிக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தினார் அவர்.

அந்த சாதனையை அவரால் நிகழ்த்திக் காட்ட முடிந்ததா? இத்தனைக்கும் டாக்டர் அய்யா போல அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவரல்ல; மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கத்தினராக - அமைச்சராக பொறுப்பு வகிப்பவர்.

அவர் கொண்டு வந்த அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதே, ஏன்? தமிழ்ஓசையால் விளக்க முடியுமா? தவிர, இன்னொரு வாதத்தையும் - ஒரு புள்ளி விவரத் தொகுப்போடு எடுத்துக்கூறி இருக்கிறது ‘தமிழ்ஓசை’.

மதுவிலக்குக் குற்றங்கள் தி.மு.க. ஆட்சிக்கு முன்னால் எவ்வளவு - தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை என்பதை விளக்க ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அது:-

1961இல் - 1,12,889 குற்றங்கள்

1962இல் - 1,29,967 குற்றங்கள்

1963இல் - 1,23,006 குற்றங்கள்

1964இல் - 1,37,714 குற்றங்கள்

1965இல் - 1,65,052 குற்றங்கள்

1966இல் - 1,89,848 குற்றங்கள்

1967இல் - 1,90,713 குற்றங்கள்

1968இல் - 2,53,607 குற்றங்கள்

1969இல் - 3,06,555 குற்றங்கள்

1970இல் - 3,72,472 குற்றங்கள்

- என்று பட்டியலிட்டு விட்டு

"1961 முதல் 1966 வரையில் தமிழகத்தில் காங்கிரசுக் கட்சியின் ஆட்சி முழு மதுவிலக்கு செயல்படுத்தப்பட்டு வந்த காலம் அது. 1967ல் - தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு மதுவிலக்குக் குற்றங்கள் ஏறுமுகமாக இருப்பதை இந்தப் பட்டியலில் உள்ள புள்ளி விவரங்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது"

- என்று மனசாட்சிக்கு விரோதமாக விமர்சனம் எழுதியுள்ளது அது.

1961ல் 1 லட்சத்து 12 ஆயிரமாக இருந்த மது விலக்குக் குற்றங்கள்

62ல் - 29 ஆயிரம்,

63ல் - 23 ஆயிரம்,

64ல் - 37 ஆயிரம்,

65ல் - 65 ஆயிரம்,

66ல் - 89 ஆயிரம்

- என்று 1,29,000லிருந்து 1 லட்சத்து 89 ஆயிரமாக உயர்ந்திருப்பது

இறங்குமுகம் என்பது தமிழ்ஓசையின் கணக்குப்பாடமோ?

‘தமிழ்ஓசை’ தந்துள்ள புள்ளி விவரத்திலிருந்து வெளிப்படும் உண்மை என்ன?

பரிபூரண மதுவிலக்கு அமல் நடத்தினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விடாது என்பதுதானே?

இன்னொரு கேள்வியையும் அது கேட்டிருக்கிறது. அது என்ன?

"மதுவிலக்கைச் செயல்படுத்துங்கள் என்று பா.ம.க. நிறுவனர் அரசுக்குக் கருத்துரை சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழிப்பதற்கான கருத்துரைகளையும் வைத்திருக்கிறேன். அரசு விரும்பினால், அந்தக் கருத்துரைகளைத் தெரிவிக்கவும் காத்திருக்கிறேன் என்று மருத்துவர் இராமதாசு பலமுறை சொல்லி வந்திருக்கிறார். மக்கள் நல்வாழ்வு மீது, குறிப்பாக இளைஞர்களின் நல்வாழ்வு மீது அக்கறை கொண்டு இந்தக் கருத்துரைகளைத் தெரிவித்து வரும் பா.ம.க. நிறுவனரை, "புதிய மகாத்மா" என்றும், "மகாத்மாவின் பேரன்" என்றும் கிண்டலும், கேலியும் செய்கிற ஆட்சியாளர்கள், அவர் என்னதான் கருத்துரை சொல்கிறார் என்று கேட்டுப் பார்க்கலாமே? ஆட்சியாளர்களுக்கு அதில் என்ன சங்கடம்? கஜானாவுக்கு வரும் வருமானம் குறைந்து விடும் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?"

- என்கிறது அது!

துணை நகரம் அமைப்பு, விமான நிலைய விரிவாக்கம், டைட்டானியம் ஆலை, மின்சார உற்பத்தி நிலையம், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான நிலம் கையகப்படுத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளையும் நாள் தவறாமல் பத்திரிகைகள் மூலம் பகிரங்கமாகப் பேசித்தானே தடை ஏற்படுத்தி வந்திருக்கிறார் டாக்டர் அய்யா? அரசிடம் கலந்து ஆலோசித்தா அதையெல்லாம் செய்தார்?

கள்ளச்சாராய ஒழிப்பு பற்றி - தம்மிடமுள்ள திட்டங்களையும் பகிரங்கமாகவே வெளியிட லாமே? அதுமட்டும் என்ன, அரசிடம் மட்டுமே தெரிவிக்கப்பட வேண்டி பரம ரகசியமா என்ன?
( நன்றி: முரசொலி, 2-7-08 )மண்டை ஓடு பகுதி - சில விளக்கங்கள்...

பீடியை அடியோடு ஒழித்துக் கட்டுவதல்ல; அதன் மேலுறையில் மண்டை ஓட்டுச் சின்னம் பொறிக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தினார் அவர்.

அந்த சாதனையை அவரால் நிகழ்த்திக் காட்ட முடிந்ததா? இத்தனைக்கும் டாக்டர் அய்யா போல அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவரல்ல; மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கத்தினராக - அமைச்சராக பொறுப்பு வகிப்பவர்.


பீடிக்கட்டுகள் மீது மண்டை ஓடு சின்னம் அச்சிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்திரவை கைவிட்டு, லட்சக் கணக்கான பீடிக் தொழிலாளர்கள் குடும்பங்களை பாதுகாத்து, அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய உரிய நடாடிக்கை எடுக்குமாறு உங்களை கேட்டு கொள்கிறேன் ( பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கலைஞர் கடிதம், முரசொலி 7.5.2006).

மூன்று நாளைக்கு பிறகு அதே கலைஞர் ( ராமதாஸ் எஃபெக்ட் காரணமாக )
நான் ஒரு கடிதம் பிரதமருக்கும் மத்தியில் இருக்கின்ற மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணிக்கும் எழுதினேன்.
"அதில் நான் படம் ஓட்டுகின்ற இந்த உத்திரவை நிறுத்த வேண்டும் என்று மாத்திரமல்ல, அந்த உத்திரவே கூடாது என்று நான் அதில் குறிபிடவில்லை, இந்த முயற்சியால் பீடி பிடிப்பதை தடுக்க கூடாது என்றும் குறிப்பிடவில்லை. இப்போழுது ஏற்பட்டு இருக்கின்ற இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு உத்திரவை ரத்து செய்யக் கூட வேண்டியது இல்லை ஒத்தி வையுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இதை சரியாக படித்து இருந்தால் பாட்டாளி மக்கள் கட்சியிலேயிருந்து கூட எனக்கு எதிர்ப்பு வந்திருக்காது. நான் ஒத்தி வையுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ( சட்டசபையில் கலைஞர் 10.5.2007, தினந்தந்தி )

ஏறுமுகமும் - இறங்குமுகமும்! சில விளக்கங்கள்...
இறங்குமுகம் என்பது தமிழ்ஓசையின் கணக்குப்பாடமோ?
‘தமிழ்ஓசை’ தந்துள்ள புள்ளி விவரத்திலிருந்து வெளிப்படும் உண்மை என்ன?
பரிபூரண மதுவிலக்கு அமல் நடத்தினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விடாது என்பதுதானே?


ஆண்டு
1961 - 1962 15%
1962 - 1963 -5%
1963 - 1964 12%
1964 - 1965 20%
1965 - 1966 15%
1966 - 1967 0.46%
1967 - 1968 33%
1968 - 1969 21%
1969 - 1970 22%

காங்கிரஸ் ஆட்சி, திமுக ஆட்சி


முரசொலியாக இருந்தால் என்ன தமிழ்ஓசையாக இருந்தால் என்ன நல்ல ஒலியோ, ஓசையோ வந்தால் தாளம் போட்டு ரசிக்கனும் :-)


1 Comment:

Anonymous said...

யோவ் கொத்து பரோட்டா,இதுக்கப்புறம் வாதமும் விதண்டாவாதமும்னு தமிழ் ஓசை கட்டுரை வெளியிட்டு உள்ளது உம்ம கண்ணுக்கு படலியோ? பாமக எது சொன்னாலும் இலக்காரம்தானா?