பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 25, 2008

கலைஞர் பெருமாள் விழா பேச்சு - ராமகோபாலன் கண்டனம்

பெருமாள்' திரைப்பட விழாவில் முதல்வர் கருணாநிதி இந்து மதம் குறித்து பேசிய பேச்சுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:

"பெருமாள்' என்ற திரைப்படத்தின் ஆடல், பாடல், காட்சிகள் சிடி வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் கருணாநிதி தமது வயதுக்கும், பொறுப்புக்கும் பொருந்தாத பேச்சை பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

விழாவில் நடிகை அரைகுறை ஆடையில் கடலில் குளித்து, நடிகருடன் நெளிந்து, உருண்டு, ஆடுகிற காட்சி திரையிடப்பட்டது. பெருமாள் இப்படி எல்லாம் செய்ததாக தாம் புராணத்தில் படித்திருப்பதாக அவர் கூறியிருப்பது, கோடானு கோடி இந்துக்கள் குறிப்பாக வைணவர்களின் உணர்வுகளை புண் படுத்தியுள்ளனர்.

அவருக்கென்று சில நம்பிக்கை களும், சில ஆசைகளும் இருக்கலாம். அதை எவரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால் பொது விழா ஒன்றில் இந்துக்களை குறி வைத்து தாக்குவதை வேடிக்கை பார்க்க முடியாது.

இந்துக்கள் சம்பந்தப்பட்ட எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதை கொச்சைப்படுத்துவது அவருக்கு மிகப்பிடித்தமான விஷயம். அதே நேரத்தில் மற்ற மதங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு அவருக்கு துணிச்சல் இல்லை.

அவர் பாரபட்சமற்ற பகுத்தறிவு வாதியாக இருந்தால் எல்லா மதங்களிலும் உள்ள குற்றம், குறைகளை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். கருணாநிதி பகுத்தறிவு வாதி அல்ல. சந்தர்ப்பவாதி, இந்து விரோதி.

இளைஞர்கள் இப்படிப்பட்ட படங்களைத்தான் விரும்புகிறார்கள் என்று பேசியிருப்பது, இளைஞர்களை அவமதிப்பதாகும். எல்லா இளைஞர்களும் காமவெறி பிடித்து அலையவில்லை. லட்சக் கணக்கான இளைஞர்கள் படிப்பு, தொழில் வளர்ச்சி, உடல் ஆரோக்யம், இசை, ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு வருவது அவருக்கு தெரியாது.


தொடர்புடைய லிங்க்: பெருமாள் கலைஞர்தான் !

12 Comments:

Anonymous said...

//இந்துக்கள் சம்பந்தப்பட்ட எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதை கொச்சைப்படுத்துவது அவருக்கு மிகப்பிடித்தமான விஷயம்.//
//அதே நேரத்தில் மற்ற மதங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு அவருக்கு துணிச்சல் இல்லை.//
என்னடா இன்னும் ராமகோபாலனைக் காணவில்லை என்று பார்த்தேன்

Anonymous said...

கருணாநிதி எங்காவது முருகனையோ சிவனையோ (சிவலிங்கம் பற்றி அசிங்கமாக பேச வாய்ப்பிருந்தும்) பேசியிருக்கிறாரா?

கிறித்துவ மதமோ, இஸ்லாமோ தமிழனை இழிவுபடுத்தியதில்லை . (அவர்கள் வேற்று இனத்தவர்களை இழிவுபடுத்தியிருக்கலாம்), தமிழனை இகழும் வைணவ கடவுள்களையும் புராணங்களையும் கேள்வி கேட்பதில் என்ன தவறு .

ராகவன் பாண்டியன் said...

உண்மையைத்தான் சொல்லிருக்கிறார்......எந்த காலத்தில் கலைஞர் மற்ற் மத மூடநம்பிக்கைகளை எடுத்துறைத்திருக்கிறார்?......

Mani-bahrain said...

Whatever thiru. ramagopalan said it is 100% true about our Urupadadha CM-MK. If he is having real guts let him talk about other religion. He never open his mouth to talk about other religion.
If our elect again this old guy Tamilnadu hindus nimmadhiyave irukka mudiyadhu..let c...

Seetha said...

"கிறித்துவ மதமோ, இஸ்லாமோ தமிழனை இழிவுபடுத்தியதில்லை" !!!!!!!!!!!


சரித்திரம் படிக்கவும்

Arun said...

2000th post la nalla topic dhan pottu irukkeenga.. vaazthukkal.

Navaneeth said...

வைணவமும் புராணமும் தமிழனையோ தமிழையோ இழிவு படுத்தவில்லை. இப்பொழுதும் வைணவக் கோவில்களில் தமிழ் பாசுரங்களை பாடி வழிபடுகிறார்கள். "பெரிய" தலைவர்கள் வேண்டுமானால் தமிழனை முட்டாள் என்று இழிவு படுத்தி இருக்கலாம்.

Mani-bahrain said...

நமக்குள்ளேயே இப்படி சண்டை போட்டால் ஹிந்துவை கேவலப்படுத்த ஒரு கருணாநிதி அல்ல ஆயிரம் கருநநிதி தோன்றினாலும் ஆச்சயற்படுவதற்கு இல்லை. எதுக்கையா நமக்குள்ள வைணவம் சைவம் என்று பிரிச்சிகிட்டு...எல்லா கடவுளும் ஒன்றுதானே. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நான் ஹிந்து அல்லா மற்றும் ஜீசுஸ் மூவரையும் வணங்குகிறேன். நான் எல்லரயயும் கும்பிட சொல்லலை பிரிக்காம இருக்க சொல்றேன். நன்றி

raj said...

well said mani.

Anonymous said...

மணி,

போய் உருப்படியா ஏதாவது வேலையப் பாருங்க.....

Anonymous said...

மணி, உங்களுக்கு என்ன மகாத்மா காந்தி என்று நினைப்போ?

Mani said...

Nalladhu sonna namma makkalukku pidikathu...God only help us